அத்தியாயம்-40 ஆஸ்வதி தன் அறையில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.. ஆதியும் அவளை தான் கடந்த 1வாரமாக பார்த்துக்கொண்டு இருந்தான். இவனை பார்ப்பதும் பின் முகத்தை திருப்புவதுமாக இருந்தாள் அவள். அதிலே அவளுக்கு தன் மீது கோவம் என்று புரிந்துக்கொண்ட ஆதி அது எதனால் என்றும் தெரிந்துக்கொண்டான்.. பின் ஆஸ்வதி ஆதியை கடந்து செல்ல…. ஆதி அவளது கையை இறுக்க பிடித்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி அசையாமல் அப்படியே நிற்க….. ஆதி தலை குனிந்துக்கொண்டே.. “வது.”என்று அழைக்க… அதில் ஆஸ்வதியின் உடல் இறுகியது. அதை ஆதியும் உணர….. அவள் புறம் திரும்பினான். “வது.. அது…”என்று ஆதி இழுக்க… “வேணாம் ஆதி.. நீங்க எதும் சொல்ல வேணாம் எனக்கு எதுக்கும் காரணம் தெரிய வேணாம்..”என்றாள் மெல்லிய குரலில் அதில் ஆதி அதிர்ந்து அவளை பார்க்க….. ஆஸ்வதி இன்னும் அவன் பக்கம் திரும்பாமல் “இப்போ இருந்து இல்ல ஆதி.. இந்த வீட்டுக்கு வந்த அடுத்த நாளே எனக்கு தெரிஞ்சிட்டு.. நீங்க நடிக்கிறீங்கனு.”என்று ஆஸ்வதி மேலும் அவனை அதிர்ச்சியாக்க… இவள் வீட்டிற்கு வந்ததும் தெரியுமா.. என்று அதிர்ச்சியாக அவளை காண… அவளோ அவனை இன்னும் கூட பார்க்காமல் நிற்க… எப்படி என்று ஆதி யோசிக்க…. “நாலு வருஷக்காதல் ஆதி.”என்றாள் ஆஸ்வதி.. அதில் ஆதி இன்பமாக அதிர்ந்தான்…”என்ன சொன்ன வது..”என்றான் அவள் இருபக்க தோள்களையும் இறுக்கப்பிடித்துக்கொண்டு “ம்ம்ம்.. எஸ். இந்த நாலு வருஷமா நா உங்கள தான் நினைச்சிட்டு இருந்தேன் அதும் நா உங்கள பார்த்து உருகி லவ் பண்ணுன அந்த ஒரு வருஷத்த சேர்க்காம……”என்றாள் ஆஸ்வதி அவனை உறுதியாக பார்த்தவாறு அதில் ஆதி குழப்பமாக அவளை பார்க்க….”அப்புறம் ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேனு கேட்குறீங்களா.”என்றாள் அவனை உறுத்து விழித்தவாறு. அவன் ஆம். என்று தலை ஆட்ட…. “இந்த கல்யாணத்துக்கு யாரும் எங்கிட்ட சம்மதம் கேட்கல ஆதி…”என்றாள் வருத்தமான குரலில். அதில் ஆதி அவளை வருத்தமாக காண… “நீங்க இல்லனா வேற வாழ்க்கையினு நா என்னிக்கும் நினைச்சதே இல்ல… ஆனா என் சித்தி என் தங்கையோட படிப்ப பனையமா வச்சிதான் இந்த கல்யாணத்த எங்கிட்ட கொண்டு வந்தாங்க……அப்போ கூட நா உங்கள தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எனக்கு தான் என் தகுதி தெரியுமே உங்க அந்தஸ்துக்கு நான்லா உங்க பக்கத்துல கூட நிற்க முடியாதே அதான் என் லவ்வ கூட நா உங்ககிட்ட சொல்லல… ஆனா அதுக்கு அப்புறம் நீங்க காலேஜ் விட்டு போனதும் எனக்கு நரக வேதனையா இருந்துச்சி.. கடவுளே இந்த உலகத்துல எதுமே எனக்கு நிலைக்கவே விடமாட்டியானு கதறனும் போல இருந்துச்சி முதல அம்மா அப்புறம் பாட்டி அடுத்து அப்பா அதுக்கு அப்புறம் நீங்க….”என்று கண்கலங்க ஆஸ்வதி பேச… ஆதி அவள் அருகில் இன்னும் நெருங்கி நின்று அவள் கன்னத்தை கைகளில் தாங்கி.”வது..”என்று அவளுக்கு வலிக்குமோ என்ற எண்ணத்தில் அழைக்க….. அதில் அவள் உடல் சிலிர்த்தது “நா பேசனும் ஆதி…”என்றவள் காலேஜில் அவனை பார்த்தது முதல் தான் காதலித்ததை அவனிடம் கூற… அவனும் அவள் அட்மிஷன் போட வந்ததில் இருந்து என் மனதில் நீ அட்மின் ஆகிவிட்டாய் என்று அவளிடம் கூற…. ஆஸ்வதி அவனின் காதலில் மெய்மறந்து போனாள்…பின் அவனை பார்க்காமல்..”இன்னும் பேசனும்..”என்றாள் அவனும் சரி என்று தலை ஆட்டிவிட்டு அவளை தன் பக்கத்தில் அமரவைக்க… “நா உங்க அப்பாவ பார்த்தேன்..”என்றாள் ஆஸ்வதி ஆதி என்ன சொல்கிறாள் என்பது போல அவளை பார்க்க… ஆம் என்று தலை ஆட்டியவள்…”நா காலேஜ் படிக்கும் போது உங்களுக்கு அது லாஸ்ட் இயர் அப்போ. உங்க அப்பா நம்ம காலேஜ்க்கு ஒருநாள் வந்தாங்க….. வந்தவங்க என்னை பார்த்து நா உங்கிட்ட பேசனும் நாம காபி ஷாப்ல மீட் பண்லாம்னு சொன்னாரு. ஆனா நா தான் அவரு யாருனே தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் அப்போதான் அவரு உங்க அப்பானு சொன்னாரு..உடனே சரினு சொல்லிட்டேன்…”என்றவள் ஆதியை காண… அவன் மேலே சொல் என்பது போல் அவளை பார்த்துக்கொண்டு இருந்தான். ஆம் என்று அவளிடம் பேச வந்தவர் ஆதியின் தந்தை தான். அவர் தான் ஆதியை பார்க்க அடிக்கடி அவன் காலேஜிற்கு வருவாறே… அப்போதெல்லாம் ஆதியின் பார்வை ஆஸ்வதி மேலே இருப்பதை பார்த்தவர் அவனிடம் என்ன என்று கேட்க… ஆதி தன் தந்தையிடம் எதையும் மறைத்து பழக்கம் இல்லாதவன். ஆஸ்வதி பற்றி அனைத்தையும் கூறி அவளை விரும்புவதாக கூற…. உடனே விஷ்ணு அவள் வீட்டில் போய் பேசவா என்று கிளம்பியவரை அவள் படிக்க வேண்டும்.. நானும் பாரின் போய் படிக்க வேண்டும் என்று கூறியவன் அதனை அப்படியே விட சொன்னான். ஆனால் விஷ்ணுவிற்கு ஆஸ்வதியை பார்க்க ஆசை வர உடனே கிளம்பி விட்டார் அவளை பார்க்க…. அப்படிதான் அவளை பார்த்து காபி ஷாப்பிற்கு கூப்பிட…. வந்தவளிடம் தன் மகனை பற்றி கூறியவர் தன் மகன் அவளை காதலிப்பதையும் கூறினார். முதல் முதலில் மகனின் காதலை தந்தை போய் சொன்னது இதுதான் முதலாக இருக்கும் என்று மனதில் கூறி சிரித்துக்கொண்டாள் ஆஸ்வதி. “உன் விருப்பம் இப்போ நீ சொல்ல வேண்டாம்மா ஆதி உங்கிட்ட இதப்பத்தி பேச கூடாதுனு சொல்லிருந்தான் நீ படி அவனும் அதுக்குள்ள படிப்ப முடிச்சிட்டு வந்துடுவான் அதுக்கப்புறம் உங்க கல்யாணம் வச்சிக்கலாம்..”என்று கூறியவர் அவளை அடிக்கடி வந்து பார்ப்பதாக கூறிக்கொண்டு சென்றார். வீட்டிற்கு சென்றதும் தன் தந்தையிடம் அனைத்தையும் கூறிய விஷ்ணு. அவ தான்ப்பா இந்த வீட்டு மருமக…..என்றார் உறுதியாக… அதனை பெரியவரும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.. இதை எல்லாம் கூறிய ஆஸ்வதி ஆதியை காண…. அவன் கண்கள் கலங்கி போய் உட்கார்ந்திருந்தான் “வது என் அப்பா..”என்று அவன் கலங்க…. அவனை இழுத்து தன் வயிற்றில் புதைத்துக்கொண்டாள் அவனுக்கும் அது இதமாக இருக்க….. கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான்.. அதன் பின் இப்படியாக இவர்கள் வாழ்க்கை எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்போ அப்போ முத்தம், அணைப்பு என்று போக… அதற்கு மேல் இருவரும் முன்னேற வில்லை. அதன் பின் மாதங்கள் அப்படியே ஓட….. இருவருக்கும் இன்னும் இரண்டு நாட்களில் முதல் வருட திருமண நாள். ஆதி இப்போதெல்லாம் தன் தாத்தாவுடன் ஆபிஸிற்கு சென்று வருகிறான்.. இன்னும் சிறிது நாளில் அவருக்கு முழு ஓய்வையும் கொடுத்துவிட்டு தன் குடும்பத்தின் பொறுப்பை ஆதி ஏற்க உள்ளான். அவனுக்கு துணையாக விஷாலும் இணைந்துக்கொள்ள தயாராக இருக்கிறான் ஆதி தன் தங்கை அனிஷாவை அழைத்து…”சாரிடா.. அம்மா இல்லனு ஆனதுக்கு அப்புறம் நானாவது உன்ன நல்லா பார்த்து இருந்துருக்கனும்.. ஆனா”என்று அவன் வருந்த “அதலா இல்லணா.. நீ என்னை நல்லாதா பார்த்துக்கிட்ட….. நா தான் சின்ன பிள்ளையில இஷானாவோட பேச்ச கேட்டுட்டு விதுவ ஏதோ பேசிட்டேன்.. அதுல இருந்து தானே நமக்குள்ள அவ்வளவா பேச்சி இல்லாம போச்சி.ஆனா அது தப்புனு நா அப்போவே புரிஞ்சிக்கிட்டேன்…ஆனா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்ணா. “என்று அவனை கட்டிக்கொள்ள…. அதனை பார்த்த ஆஸ்வதியும், விதுவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர். “டேய் விட்றா.. அவ என் அனி பேபிடா.”என்று விதுன் ஆதியிடம் இருந்து அனியை பிரித்தவாறே சண்டை போட….. அதை முறைத்து பார்த்த ஆதி.”எவ்வளவு தைரியம் இருந்தா எனக்கு முன்னாடியே என் தங்கைய பேபினு கூப்டுவ……”என்று விதுன் மேல் ஆதி பாய… அதில் பயந்த அனிஷா கட்டி உருளும் தன் அண்ணனையும், தன் விதுவையும் பார்த்தவள். அவர்களை பிரிக்க முயல…. ஆனால் அவளால் முடியவில்லை இதனை பக்கத்தின் நின்று வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்வதியை பார்த்து. “அண்ணி.. என்ன அண்ணி வேடிக்கை பாக்குறீங்க…. வந்து இவங்கள பிடிங்க….”என்றாள் அனி அதில் புன்னகைத்த ஆஸ்வதி இருவரின் பக்கமும் வந்தவள்..”கட்டிப்பிடிச்சி உருண்டது போதும் வாங்க சாப்பிட….”என்று கூறிவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து சென்றுவிட்டாள். அதனை கேட்ட அனி முழிக்க… ஆதியும், விதுனும் ஆஸ்வதியை திடிக்கிட்டு பார்த்தவாறே. “ஏன்டா நம்ம சண்டதானே போட்டோம். இவ என்னடா கட்டிப்பிடிச்சி உருண்டது போதும்னு அசிங்கப்படித்திட்டு போறா..”என்றான் ஆதி “அதாடா ஆதித் மச்சான் எனக்கும் புரில…..”என்றவன் ஆஸ்வதியை பார்க்க அவளோ அவர்கள் யாரையும் காணாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.. ஆஸ்வதி இதே போல் தான் ஆதியையும் அவன் நடிக்கிறான் என்று கண்டுப்பிடித்தாள் விதுனையும் அப்படி தான்.”உங்களுக்கு முன்னமே ஆதி நடிக்கிறாருனு தெரியும்னு எனக்கு தெரியும்..”என்று பொசுக்கென்று ரகசியத்தை உடைத்துவிட்டு போய்விட்டாள் ஆம் விதுன் படித்த படிப்பிற்கு அவனுக்கு தெரியாதா ஆதி உண்மையிலும் பைத்தியமா, இல்லை நடிக்கிறானா என்று.. தன் நண்பன் எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்பது விதுனின் கூற்று அது போல ஆதி நடிப்பதற்கு பின்னால் உள்ள நியாயம் அவனுக்கு போலீஸ் வந்த அன்று தான் தெரிந்தது.. “இவள ஏமாத்தவே முடிலடா.”என்றான் ஆதி “இன்னும் சாப்ட வராம என்ன அங்க பேச்சி…”என்று ஆஸ்வதி அதட்ட… “தோ வந்துட்டோம் வது.. தோ வந்துட்டோம் மா.. தோ வந்துட்டோம் அண்ணி,…”என்று கூறிக்கொண்டே அனைவரும் ஓடினர் அவளை நோக்கி. அதே போல் தாத்தா ஆதியையும், ஆஸ்வதியையும் ஒருநாள் கூப்பிட்டு வைத்து.”உங்க கல்யாணத்த நல்லா க்ராண்டா செய்யனும்னு நானும் உன் அப்பா விஷ்ணுவும் ஆசைப்பட்டோம்.. ஆனா சூழ்நிலை அப்போ சரி இல்லை ஆனா இப்போ உங்க ரெண்டு பேரோட முதல் வருஷ கல்யாண நாள் வருதே அத நா உங்களுக்கு மறுபடி கிராண்டா கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன் கண்ணா. மா ஆஸ்வதி நீ என்னடா சொல்ற…..”என்றார் தாத்தா.. ஆம்.. ஆதிக்கும், ஆஸ்வதிக்கும் கூட தங்களுக்கு நடந்த கல்யாணத்தை ரசிக்க முடியாத சூழலில் நடந்தது.. அதனால் அதற்கு இருவரும் உடனே சரி என்றுவிட்டனர்.. அது போல இருவருக்கும் திருமண நாள் அன்று பெரிய திருமண மண்டபத்தில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடை பெற்றது ஆதி இந்த நேரம் சிவப்பு நிற கற்கள் வைத்த சர்வானி அணிந்து அதற்கு மேட்காக தலையில் தலை பாகை அணிந்து கம்பீரமாக நிற்க… அவனை விதுன் ஆகாய நிறத்தில் சர்வானி அணிந்துக்கொண்டு, விஷால் இளம் பிங்க் நிறத்தில் சர்வானி அணிந்துக்கொண்டு .. ஆதியை மணமேடைக்கு அழைத்துவந்தனர். அவர் அவர் ஜோடிகளுக்கு ஏற்ற நிறத்தில் பெண்களும் அவன் அருகில் அவனின் கம்பீரத்திற்கு இணையான அழகுடன் அவன் நிறத்திலே லெஹங்கா ஒன்று அணிந்துக்கொண்டு, அழகு மயில் போல காட்சி அளித்தாள் ஆஸ்வதி.. ஆஸ்வதியை அவள் தங்கை விஷாலி அழகாக மஞ்சள் நிற லெஹங்கா அணிந்துக்கொண்டும், அனிஷாவும் அழகாக ஆகாய நிறத்தில் லெஹங்கா அனிந்துக்கொண்டும்,ராக்ஷி இளம் பிங் நிறத்தில் லெஹங்கா அணிந்துக்கொண்டு, அதிதி வெளிர் பச்சை நிறத்தில் லெஹங்கா அணிந்துக்கொண்டு ஆஸ்வதியை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.. மேடையில் இருவரையும் உட்கார வைத்து தாத்தாவின் முழு மனதுடனும்.. இருவரின் காதலுடனும்,. மறுபடி ஆஸ்வதி கழுத்தில் தாலி கட்டினான் ஆதி.. அப்போது தான் அபினவ் க்ருஷ் மஞ்சள் நிற சர்வானி அணிந்துக்கொண்டு கையில் பரிசு பொருளுடன் மேடைக்கு வந்தான்.. அவனை இரு கண்கள் ரசனையுடன் பார்த்துக்கொண்டு இருந்தது. அன்று இரவே ஆதி தன்னவளை அழைத்துக்கொண்டு மொரிஸியஸ் சென்றுவிட்டான். அங்கு கடலின் நடுவில் இருந்த ஒரு ஹோட்டலில் ஆஸ்வதி நின்றுக்கொண்டு கடலை ரசித்துக்கொண்டு இருக்க…. அங்கு ஒருவனோ அவளை கண்களால் பருகிக்கொண்டு இருந்தான் “ஆதி இந்த ப்ளேஸ் எல்லாம் சூப்பரா இருக்கு நாம எப்போ வெளில சுத்த போறோம்…”என்று ஆஸ்வதி கேட்க… ஆனால் அவனிடம் இருந்து தான் பதில் வரவில்லை என்னவென்று திரும்பி பார்க்க ஆதியோ ஆஸ்வதியின் மிக அருகில் நின்றவாறே அவளின் நெற்றியில் விழுந்த முடியை காதில் ஒதுக்கியவாறே “உன்ன வெளில கூட்டுட்டு போகவா இங்க வந்தேன்.”என்றவன் அவளின் முகத்தை தன் இரு கைகளிலும் தாங்கியவன்.. அவளின் முகத்தையே ஆழ்ந்து பார்க்க… அதில் ஆஸ்வதி சிவந்து போனாள். “ஆ….ஆதி.”என்று அவள் அவனின் தோள்ப்பட்டையை அழுத்தி பிடித்தவாறே திணற….. “வது..”என்றவன். தன்னை சமாளித்துக்கொண்டு தன் கையில் உள்ள ஒரு பார்சலை அவள் கையில் திணித்தவன்.. “உனக்கும் இன்னும் 1மணி நேரம் டைம் அதுக்குள்ள ரெடி ஆகி கீழே இருக்க பீச்சுக்கு வந்துடு நாம அங்க மீட் பண்லாம்…”என்று அங்கிருந்து ஓடிவிட்டான் ஆதி.. அவன் போவதையே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்வதி பார்சலை பிரித்து பார்க்க….. அதில் அன்று ஒரு நாள் இருவரும் ஷாப்பிங் போகும் போது ஒரு கடையில் டிஸ்ப்ளேயில் அழகாக இளம் ஆரஞ்ச் நிறத்தில் புடவையும் அதற்கு மேட்ஷாக கோல்டன் கலர் ஸ்லீவ் லேஸ் ப்ளவுஸும் இருக்க…. அதில் ஆஸ்வதி ஒருநிமிடம் அசந்து போனாள். அப்போது ஆதி மனநிலை சரி இல்லாதவன் போல இருந்ததால் அவனை கையில் பிடித்தவாறெ இந்த புடவையை அவள் சரிக்க இதை ஆதி மனதில் குறித்துக்கொண்டான் அதை தான் இப்போது அந்த பார்சலில் பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தவள் அதனை தன்னவன் காதலுடன் வாங்கி தந்திருப்பதை உணர்ந்துக்கொண்டாள்.பின் மகிழ்ச்சியுடன் அதனை அணிந்துக்கொண்டவள்..மிதமான மேக்கப் போட்டு பீச்சிற்கு சென்றவள் அப்படியே அதிர்ந்து நின்றாள்.. ஏனெனில் அங்கு பீச்சில் ஒரு பக்கத்தில் அழகாக ரெமோ லைட்டினால் டெக்கரேட் செய்து அதன் நடுவில் இருவர் மட்டும் அமரும் படி டைனிங் டேபிள் போடப்பட்டு அதன் முன்னால் கையில் சிவப்பு ரோஜாவுடன் நின்றிருந்தான் ஆதி. அதனை பார்த்தவள் கண்கள் கலங்க….. அவனை நோக்கி மெல்ல நடந்தவள் அவன் அருகே போனதும். “ஐ லவ் யூ ஆதி..”என்றாள் அவன் சொல்வதற்கு முன் அவனின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டு அதனை கண்கள் மூடி அனுபவித்தவன் அவளை தன் உயரத்திற்கு தூக்கி..”போங்கு நா தானே உனக்கு முதல ப்ரோபோஸ் பண்ண நினைச்சென் ஆனா நீ இப்டி என்னை கவுத்திட்டியே.”என்றான் அவள் காது மடலை உரசியவாறே.. அதில் ஆஸ்வதி உடல் சிலிர்த்தது.பின் இருவரும் அங்கேயே இரவு சாப்பாட்டினை முடித்துவிட்டு தங்கள் அறைக்கு செல்ல… அறைக்கு உள்ளே ஆஸ்வதி சென்றது அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள். ஏனென்றால் அவர்கள்ம் அறையில் அழகாக பூக்களால் அலங்கரிக்கப்பட்டு. ஆஸ்வதியின் போட்டோ ஒன்றை பெரிது படுத்தி. கட்டிலின் மேல் மாட்டப்பட்டு இருந்தது.. அதை பார்த்ததும் ஆஸ்வதி அசந்து போனவள் திரும்பி தன்னவனை பார்த்து எதோ சொல்ல போக… அதற்குள் அவள் இதழ்கள் அவனிடம் புதைந்து போய் இருந்தது.. ஆஸ்வதி அதனை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவள் உடல் நடுக்கத்திலே தெரிய… ஆதி இன்னும் அவளை தன்னுடன் நெருக்கிக்கொண்டான் பின் சிறிது அவள் இதழை விட்டவன்.”ஐ லவ் யூ.இப்போ நா தான் ஜெயிச்சென்..”என்றவன் திரும்ப அவள் இதழில் ஆழ்ந்து போனான் எவ்வளவு நேரம் இதழ்கள் சண்டை போட்டனவோ.. இருவருக்கும் கால்கள் வலிக்க ஆதி அவளை குழந்தை போல தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தவன் தன் தாக்குதலை ஆரம்பித்தான்.. தன்னவள்..தன் வது 6வருடமாக காதலித்த தன் வது.. அதும் முதல் பார்வையிலே தன்னை அடியோடு சாய்த்தவள். அவனுக்காக இல்லாத பேச்சை எல்லாம் தாங்கிக்கொண்டு அந்த வீட்டில் இருந்தவள்.அவளிடம் காலம் முழுவதும் விழுந்து கிடக்க அவனுக்கு கோடி ஆசை. அவனின் காதலில் ஆஸ்வதி இரவு முழுதும் திண்டாடி போனாள். அவனோ.. அவள் புதையல் போல கட்டிக்கொண்டே நாட்களை ஓட்டினான் 15நாள் ஹனிமூனை முடித்தவன் தன்னவளை ஒரு வழி ஆக்கிவிட்டு தான் மும்பைக்கே வந்தான்..