என் தேடலின் முடிவு நீயா – 17

4.8
(43)

தேடல் 17

இருவரும் ஒரே வேகத்தில் நீரில் குதித்தனர்…

அவள் அரைவாசி தூரம் நீந்தி விட்டு முன்னால் பார்க்க அவனை காணவில்லை…

சட்டென பின்னால் திரும்பிப் பார்த்தாள்…

அபின்ஞான் இறுதிக் கோட்டை நெருங்கி விட்டான்….

அவள் அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டாள்…

அவளோ இன்னும் ஆரம்ப புள்ளியை தாண்டாத நிலையில் அவன் போட்டியையே முடித்து விட்டான்…

அவனிடம் இவ்வாறான ஒரு வேகத்தை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை…

அவளோ நீச்சல் தடாகத்தில் நடுவே நின்று இருக்க அபின்ஞானே அவள் அருகே வந்தான்…

“நான் வின் பண்ணிட்டேன்” என்றபடி அவளை எப்போது மயக்கும் பழுப்பு நிற விழிகளால் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“ச்சே… நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டேன்” என நினைத்தவள் அவனைப் பார்த்து, “என்ன வேண்டும்” என்று கேட்டாள்…

அவளை அவன் நெருங்க… அவன் தன்னை நெருங்குவதை உணர்ந்து ஓர் அடி பின்னே வைப்பதற்கு முன்னே அவள் பின் கழுத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான்…

அவன் இழுத்த வேகத்தில் அவள் மேனியோ அவன் இரும்பு போன்ற தேகத்துடன் அழுத்தமாக மோதி நின்றது…

இருவரது மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து வெளியேறியது…

அவன் மேனியின் கதகதப்பு அவள் அணிந்திருந்த டி-ஷர்டை தாண்டியும் அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது…

அவன் நெருக்கம் அவளுல் பூகம்பத்தை கிளப்பிக் கொண்டிருந்தது…

அவளோ அவன் அதீதமான நெருக்கத்தில், தன்னையே மறந்து அவனிடத்தில் மயங்கியிருந்தாள்…

தன் பெருவிரலால் அவள் இதழ்களின் ரேகைகளை அழுத்தமாக வருடியவன், “உன் லிப்ஸ் லிப்ஸ்டிக் பூசாமலே பிங்காயிருக்கு” என்றவன், அவன் என்ன சொன்னான் என்பதை அவள் உணர முன்பே அவள் மென்இதழ்களை தன் முரட்டு ஆதரங்களால் கவ்வி அவள் கேட்ட வினாவுக்கு அவள் இதழிலே விடை எழுத ஆரம்பித்தான்…

ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த முத்தம்… நேரம் செல்ல செல்ல ஆழமான அழுத்தமான இதழ் யுத்தமாக மாறத் தொடங்கியது.

அவன் தன் உணர்வுகளின் தாக்கத்தால் அவள் இடையில் தன் கைகளின் அழுத்தத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டிருந்தான்…

அவன் இதழ் முத்தத்தால் நிற்க கூட சக்தி அற்று… அவன் மேனியிலே முழுமையாக சாய்ந்து நின்றாள் மகிமா…

அவர்களது முத்தம் எவ்வளவு நேரம் நீடித்ததோ… முதலில் சுய உணர்வுக்கு வந்ததென்னவோ அபின்ஞான் தான்…

மெதுவாக அவள் இதழ்களிலிருந்து தன் இதழை பிரிக்க… அவளோ இன்னும் விழிகளை மூடி அந்த மயக்கத்திலே நின்றிருந்தாள்…

அவள் விரிந்திருந்த அதரங்களோ அவனை முத்தமிட அழைப்பது போலவே இருந்தது…

தன்னை மீறி ஒரு முறை அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டு விலகியவன்… அவள் கன்னத்தை மென்மையாக வருடியபடி, “மகி” என்று அழைத்தான்…

அவன் பேசியது அவளுக்கு கேட்கவில்லை…

இதழ்களுக்குள் புன்னகைத்தவன், அழுத்தமாக அழைக்கவும், சட்டென கண்ணை விரித்தவள் என்ன செய்வதென்று தெரியாத பதற்றத்தில் அவனிடமிருந்து விலக பார்க்க… நீரில் சமநிலையின்றி கால் தடுமாறி விழப்போக… அபின்ஞானும் அவளைப் பிடிக்க கையை நீட்ட… மகிமாவோ அவன் கையைப் பிடித்து தன்னை சமநிலை படுத்த முயன்ற நேரத்தில் இருவருமே நீரில் விழுந்து விட்டனர்.

நீரின் ஆழத்துக்கு சென்றவர்கள் திரும்பி மேலே வரும் போது… இருவரது தேகங்கள் மட்டுமில்லது… இதழ்களுமே இணைந்து தான் இருந்தன…

சிரித்தபடியே அவளிடமிருந்து விலகி அவளைப் பார்க்க… மகிமாவின் அதரங்களோ நன்றாகவே சிவந்து வீங்கி இருந்தன…

“என்ன பிடிக்கலன்னு சொன்ன… ஒரு முத்தத்துக்கே முழுசா மயங்கிட்ட…” என்று தன் நாவால் உற்கன்னத்தை வருடியபடி கேட்க,

அவளுக்கோ அவன் முகத்தைப் பார்க்கவே சங்கடம்…

உண்மையிலுமே அவன் ஒற்றை முத்தத்திற்கே மயங்கி விட்டாள் அல்லவா அவள்…

“ஐயோ பார்த்தாலே தெரியுதுதானே… அத சொல்லிக் காட்டணுமா… மானத்த வாங்குகிறான்… ராட்சஷன்” என நினைத்தவளது முகமோ செவ்வானம் போல் சிவந்து போனது…

“மகி ஆர் யூ பிளசிங்…” என்று அவன் கன்னத்தை வருட…

அவன் கையைத் தட்டி விட்டவள் வேகமாக ஸ்விம்மிங் பூலில் இருந்து வெளியே வந்தவள், குளியலறைக்குள் சென்று சவரின் கீழ் நின்றாள்…

அவளுக்கு இன்னும் அவன் அளித்த புது விதமான உணர்வுகளிலிருந்து விடுபடத்தான் முடியவில்லை…

ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் செய்து விட்டான்…

நினைக்கவே கூச்சமாக இருந்தது…

மகிமாவுக்கு உணர்வுகள் இவ்வாறு இருக்க நீச்சல் தடாகத்தில் இருந்த அபின்ஞானுக்கோ… நீரின் குளிர்ச்சியாலும் அவன் உடலின் வெம்மையை தகிக்க முடியவில்லை…

அவனுக்கோ உணர்வுகள் பேயாட்டம் போட்டது…

அவன் மனதும் உடலும் இப்போதே அவள் வேண்டுமென்று அடம் பிடித்துக் கொண்டிருந்தன…

உடல் கலைக்க நீந்தியவன் கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அறைக்குள் வந்தான்…

ஆனால் அவன் உணர்வுகளை இன்னும் தூண்டி விடும் விதமாக நின்றிருந்தாள் மகிமா…

மகிமா குளியலறைக்குள் தன் உடைகளை கொண்டு சென்றிருக்காததால் குளித்துவிட்டு டவல் ஒன்றை கட்டிக் கொண்டு வந்தவள்… உடைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது அபின்ஞான் அறைக்குள் வந்து விட்டான்…

அவன் பார்வையோ எந்த கூச்சமுமின்றி அவளை மேய்ந்து கொண்டிருந்தது…

அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே அடி மேல் அடி வைத்து அவளை நெருங்கினான்…

அவன் பார்வையில் வீரியத்தில் அவளுடலோ பலமிழந்து நடுங்கத் தொடங்கி விட அருகிலிருந்த கபோர்டிலே சாய்ந்து நின்றாள்…

அவனோ தன் கட்டுப்பாட்டை மறந்து அவளுக்கு இரு பக்கமும் கபோர்டில் கை வைத்த படி நின்றான்…

அவன் பழுப்பு நிற கண்களில் மயங்காமல் தன்னை கட்டுப்படுத்தியவள்… அவன் தன்னை முழுமையாக நெருங்காமல் இருக்க அவன் வெற்று மார்பில் இரு கைகளையும் ஊன்றி இருவருக்கு இடையிலும் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனையால்…

அவன் ஒரு ஷாட்ஸுடன் நின்றிருக்க, அவளோ ஒற்றை டவலுடன் இருக்க… இருவரது வெற்று தோல்களும் தாராளமாகவே உரசி கொண்டன…

அவனை முறைத்துப் பார்த்தவள், “அபி இது சரியில்ல” என்று கூறியது அவளுக்கே கேட்கவில்லை…

ஆனால் அவளது ராட்சஷனோ அவள் உதட்டசைவை வைத்தே கண்டுபிடித்து விட்டான்…

“எது சரியில்ல” என்று கரகரப்பான குரலில் அவள் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து உரசியப்படி கேட்டான்…

அவனின் டிரீம் பண்ணிய தாடி, மீசையோ அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்த… கூச்சம் தாங்காது நிலத்தில் கால்களை ஊன்றி தன்னை தன் உணர்வுகளை அடக்க முயன்றாள்…

தன்னை மீறி அவன் தொடுகையை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்… அது அவளே மறுக்க முடியாத உண்மை…

“அபி” என்றவள் அவன் மார்பில் வைத்திருந்த கையை எடுத்து அவன் முகத்தை அவள் முகத்திலிருந்து விலக்க பார்க்க, இருவருக்கும் இடையே காற்று கூட போக முடியாத அளவுக்கு நெருக்கம்…

அவளைப் பார்க்காமலே அவளை முழுதாகவே உணர்ந்து கொண்டான் அவன்…

அவனுக்கோ அவளை என்னென்னவோ செய்ய வேண்டும் போல் இருந்தது…

அவனுக்குத்தான் அவள் தடை விதித்து கொண்டு இருக்கிறாளே…

தலையை நிமிர்த்தி சலிப்பாக அவளை பார்த்தான்…

“அபி இங்கிருந்து போனதுக்கு அப்புறம் நமக்கு டிவோஸ் ஆயிடும்… இது ரொம்ப தப்பு” என்று அவள் கூற,

அவள் முகத்தை முரட்டுத்தனமாக அவன் பற்ற, அதிர்ச்சியில் அவள் கண்களும் இதழ்களும் ஒருங்கே விரிந்து கொண்டன…

“நீ ஏற்கனவே என் பொண்டாட்டி தான்மா… இப்ப இது நமக்குள்ள நடக்கலன்னா தான் ரொம்ப தப்பு… நாம டிவோச பத்தி பிறகு பேசிக்கலாம்” என்று அவள் இதழ்களில் கவி பாட ஆரம்பிக்க,

அவளோ அவனிடமிருந்து இருந்து இதை எதிர்பார்க்கவில்லை…

அவன் மார்பில் கையை வைத்து தள்ள முயன்றாள்… இரும்பு போன்ற ஆண்மகனை பஞ்சு போன்ற பெண்ணால் அசைக்க முடியுமா என்ன?

அந்நேரம் அவர்களது அறைக் கதவை யாரோ தட்டவும் அவளிடம் இருந்து அவன் விலக… அச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள் மகிமா…

அபின்ஞான் சென்று கதவை திறக்க, ஒரு ஊழியன் தான் அவன் ஆர்டர் பண்ணி இருந்த உணவைக் கொண்டு வந்திருந்தான்…

“கரடி வேல பார்த்திருக்கான்” என நினைத்தபடி உணவை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான்…

அவள் குளியலறையிலிருந்து வெளியே வரும் போது அவன் அறையில் இல்லை…

நிம்மதியாக மூச்சு விட்டவள் சாப்பிட்டு விட்டு சத்தமில்லாமல் படுத்துக் கொண்டாள்…

அவனை நேருக்கு நேர் பார்க்க தயக்கமாக இருந்தது…

அபின்ஞான் தாமதமாகத்தான் வர மகிமாவோ தூங்கி இருந்தாள்…

பெரு மூச்சுடன் அவளை அணைத்த படியே படுத்தான்…

அடுத்த நாள் விடியல் அபின்ஞானுக்கு அழகான விடியலாக அமைந்தது….

அவன் மனையாலோ சேலை அணிந்து சுற்றிக் கொண்டிருக்கும், தெய்வீகமான காட்சிதான் கண்களுக்கு புலப்பட்டது…

கையை மடக்கி தலைக்கு அடியில் வைத்து படித்த படி, அவளைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான்…

அவள் அலை அலையான கூந்தலோ, முகத்தில் விழுந்து நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன…

அவனுக்கோ தான் காண்பது கனவு போன்ற ஒரு உணர்வு…

அவள் நடவடிக்கையே அதிசயமாக இருந்தது…

மகிமா சேலை உடுத்துவது இல்லை…

அவனுக்கு எது பிடிக்குமோ அதற்கு எதிராகவே நடப்பாள்…

அதனால் அவன் அதை செய்… இதை செய்… என்பதை சொல்வதை நிறுத்தியிருந்தான்.

இன்று அவன் ஆசைப்படியே சேலையில் வலம் வந்து கொண்டிருக்க, அவனுக்குத்தான் தன் உணர்வுகளை தான் கட்டுப்படுத்த முடியவில்லை…

அவளைப் பார்க்கும் பொழுது எங்கிருந்துதான் இவ்வளவு உணர்வுகள் மேல் எழுகின்றன என்று அவனுக்கே தெரியவில்லை…

அவனே அறியாமல் அவனுள் அவள் மீதான காதல், மோகம் இரண்டும் துளிர்த்து விட்டதை அவனே அறியவில்லை…

“காலையிலே மனுசன டெம்ப்ட் பண்றா” என்று முணுமுணுத்த படி குளியலறைக்குள் செல்ல,

“என்ன சொல்லிட்டு போறான்…” என அவனை புருவம் சுருக்கி பார்த்தவள், “அது நமக்கு எதுக்கு” என்று எண்ணிய படி மகிமாவும் வெளியே செல்ல, கரனும் சஞ்சனாவும் டைனிங் ஹோலில் அமர்ந்து பேசியபடி இருந்தனர்…

“அட இவ இங்கயா இருக்கா” என நினைத்தபடி அவர்களை நோக்கி சென்றாள்…

மகிமா வருவதை கண்ட கரன், “மகிமா தேவ் தங்கச்சியா இருந்தாலும்… அபி எதிர்பார்த்த பொண்ணு மாதிரியே இருக்கால்ல” என்றவனுக்கு அவள் முழுசா அவனுக்கு அவள் நேர் எதிரானவள் என்று இன்னும் தெரியாதே…

“அரை கிறுக்காடா நீ…” என கரனைப் பார்த்து சஞ்சனா நினைக்க…

“மேச் ஃபார் ஈச் அதர்… ரெண்டு பேரும்” என்று கரன் மேலும் கூறிக் கொண்டிருக்க,

“மேட்ச் மேச் ஃபார் ஈச் அதர் ரா… விளங்கிடும்” என்று முணுமுணுக்கவும் மகிமா அங்க வரவும் நேரம் சரியாக இருந்தது…

மகிமா சஞ்சனா அருகில் அமர்ந்து கொள்ள, அவர்களை நோக்கி வந்த அபின்ஞான், “கான்ஃபரன்ஸ் ஹால்க்கு வாங்க…” என்றபடி செல்ல,

 மற்றவர்களும் அவனைப் பின்தொடர்ந்தனர்…

அறைக்குள் வந்தவர்கள் தத்தம் இருக்கையில் அமர்ந்து கொள்ள அங்கு வந்த மகிமாவை பார்த்தவன், “உனக்கு இங்க என்ன வேல” என்று கேட்டு விட,

அவள் எதுவும் பேசாமல் அவனை அழுத்தமாக பார்த்தபடி இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளவும், “வந்துட்டேல்ல இனி இந்த ரூம விட்டு போக முடியாது… இங்கேயே இரு” என்றவன், “நாம இன்னும் டூ டேஸ்ல பசிபிக் ஓஷனுக்கு போயிடுவோம்… நாம அங்க இருக்கிற சூழ்நிலய முதல்ல நல்லா கண்காணிக்கனும்… அதே நேரம் இங்க புதுசா என்ன விஷயம் நடக்குதுன்னு பார்த்துட்டு தான் நம்ம வேலைய ஆரம்பிக்கனும்…” என்று அபின்ஞான் கூறிக் கொண்டிருந்தாலும் அவனது விழிகளோ தன்னை மீறி அடிக்கடி மகிமாவை நோக்கியே சென்றது…

தொண்டையை செருமி கொண்டவன், பார்வையை மாற்றி, “இங்க நிலம நமக்கு சாதகமா இருந்தா தான் கடல் ஆழத்துக்கு போகலாம்…” என்றவன் அவர்களைப் பார்த்து, “எனி டவுட்ஸ்” என்று கேட்டான்… அங்கிருந்த மூவரும் ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்ட,

“நாம பசிபிக் ஓஷனுக்கு வந்த பிறகு அங்க ஒரு சேஃபான ஒரு இடத்தை பார்த்து தான் நம்ம ஷிப்ப நிறுத்துவோம்…. நாம இங்க வாக்கிடோக்கி தான் இனி யூஸ் பண்ணனும்…” என்றவன் “இனி டய்ம் வேஸ்ட் பண்ணாம வேலய பாருங்க” என்று அபின்ஞான் கூறிக்கொண்டு இருக்கும் போது… நீர் அருந்திக் கொண்டிருந்த மகிமாவுக்கு புரை ஏறி விட்டது…

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “யாரு டைம் வேஸ்ட் பண்றது…”என்று மகிமா இருமிய படி சொல்ல, அவளை முறைத்துப் பார்த்தவன் கரனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்…

“நீ தான் டா டைம்ம வேஸ்ட் பண்ணிட்டிருக்க” என நினைத்தவள் தலையில் தட்டிக் கொண்டாள்…

இதே சமயம் மகாதேவும் ராகவும் இதைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தனர்…

“ஃபஸ்ட்டுக்கு நாம கேமரா மூலம் இந்த இடத்த பத்தி பாக்கலாம் ராகவ்… அதுக்கு பிறகு மீதி வேலய யோசிக்கலாம்” என்று மகாதேவ் கூறிக் கொண்டிருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!