அபின்ஞானும் மகாதேவும் ஒருவருக்கு முன் ஒருவர் நின்றிருந்தனர்…
கரன் கட்டிலில் படித்தபடியே இவர்களை பார்த்துக் கொண்டிருக்க, அவன் அருகே கட்டிலில் ஒரு ஓரத்தில் ராகவும் அமர்ந்திருந்தான்.
சண்டை பிடிப்பதற்காக வாயை திறந்தவர்களுக்கு சாதாரணமாக ஒரு வார்த்தை பேச வாயை திறக்க முடியவில்லை…
சலிப்பாக தலையை ஆட்டிய மகிமா, “இவனுங்க பேச மாட்டானுங்க” என்று சஞ்சனாவிடம் கூறிவிட்டு, “அண்ணா உன்கிட்ட இவர் ஒன்னு கேட்க வந்திருக்கிறார்… நீயா அந்த சயின்ஸ் டீச்சருக்கு லெட்டர் கொடுத்தது” என்று மகிமாவே கேட்டுவிட…
அபின்ஞானை முறைத்து பார்த்து விட்டு மகிமாவை பார்த்த மகாதேவ், “உன் புருஷன் மாதிரி பொறுக்கி வேலயெல்லாம் நான் செய்ய மாட்டேன்” என்று எப்பொழுதும் தன் மீதே பழி சொல்லும் அபின்ஞான் மீது கோபப்பட்டபடி சொல்ல…
“ஏய் யாருடா பொறுக்கி? நீ செஞ்சிட்டு என்ன சொல்ல வரியா?” என்று மீண்டும் சண்டைக்கு தயாராக….
இரு பெண்களும் அவரவர் துணையை முறைத்துப் பார்த்தனர்…
ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்ட மகாதேவ், “இங்க பாரு அபி… நான் யாருக்குமே இதுவர எந்த லெட்டரும் போடல… இது உண்மை… என் அம்மா மேல நான் சத்தியமே பண்ண மாட்டேன்… வேணும்டா மகிமா கிட்ட கேட்டு பாரு… என்ன நிரூபிக்கிறதுக்காக சொல்றேன்… என் அம்மா சத்தியமா எந்த டீச்சருக்கும் சரி பொண்ணுங்களுக்கும் சரி லவ் லெட்டர் கொடுத்ததும் இல்ல… லவ் சொன்னது கூட இல்ல…” என்று கூறினான் வேதனையாக…
‘டேய்… நானும் சத்தியமா சொல்றேன்டா நானும் குடுக்கல… ஆனா அதுல எப்படி என் பெயர் வந்துச்சு… உனக்கு அந்த டீச்சரை பிடிச்சதுனால நீ கொடுத்திருப்பேன்னு நான் நினைச்சேன்” என்று அபின்ஞான் கூற,
“டேய் பொதுவா பசங்களுக்கு இரக்கம் காட்ற டீச்சர்ஸ பிடிக்கும் டா…அந்த மாதிரி பிடித்தம் எனக்கு… எந்த ஒரு தவறான எண்ணத்திலுமே நான் டீச்சர்ஸ பார்த்ததில்லை…” என்றான் மகாதேவ்.
“சரி நானும் போடல… நீயும் போடலன்னு வச்சுக்குவோம்… என் பேர்ல லெட்டர் போட்டது யாரு??” என்று அபி கேட்க…
“எனக்கும் இப்ப அது தான் புரியல” என்று தாடியை நீவியபடி சொல்லிக் கொண்டான் மகாதேவ்…
இப்பொழுதுதான் இரு பெண்களுக்கும் மற்ற ஆண்களுக்கும் மூச்சு வந்தது…
அடித்துக் கொள்ளாமல் பேசி விட்டனரே…
“நம்மள பிரிக்கத்தான் இதை யாரோ பண்ணி இருக்கணும்னு நினைச்சிறேன்… யாரா இருக்கும்னு தான் புரியல” என்று அபின்ஞான் கூற,
நாம இங்க இருந்து போனதும் முதல்ல இத கண்டுபிடிக்கலாம்… என்றான் மகாதேவ்…
“அத கண்டுபிடிக்க இவனுங்களுக்கு பதினஞ்சு வருஷமாச்சு… அதக்கூட மத்தாவங்க சொல்லித்தான் புரியுது… என்ன ஒரு பிசினஸ் மேக்னட்ஸ்…” என்று மகிமா சொல்ல…
“ம்ம்… சின்ன பசங்க மாதிரி சண்டை போட்டுக்க தான் இவனுங்களுக்கு தெரியும்” என்று சிரித்தபடி சொன்னாள் சஞ்சனா…
“அப்ப நாம எக்ஸ் த்ரீ (x3) பாக்ஸ சேர்ந்துதானே தேட போறோம்” என்று கரன் கேட்க…
“இதுல உனக்கு எதுக்குடா சந்தேகம்” என்று கேட்டாள் சஞ்சனா…
“இனி யாரும் தனித்தனியா செய்ய தேவயில்லை… எப்படி யுனிவர்சிட்டில சேர்ந்து ப்ரொஜெக்டர் செஞ்சோமோ அதே மாதிரி சேர்ந்தே செய்யலாம்” என்று ராகவ் சொல்ல…
“டேய் என்னடா சொல்ற… யுனிவர்சிட்டில செஞ்ச மாதிரி செய்யவா? வேணாம் சாமி அந்த விளையாட்டுக்கு நான் வரல… மறந்துட்டியாடா… இவனுங்க ரெண்டு பேரும் எப்படி அடிச்சிட்டு செத்தானுங்க… ஒரு மாச வேலய செய்ய மாசக் கணக்குல இங்க குடி இருக்க வேண்டிவரும்” கிண்டலடித்தான் கரன்…
“என்னடா சந்தர்ப்பம் பார்த்து கலாய்க்கிறீயா” என்று கேட்டான் அபின்ஞான்…
“ச்சே… சே… உன்ன போய் கலாய்பேனா மச்சி…” என்றான் கரன்.
“விளங்குது வாய மூடிட்டு படு” என்ற அபின்ஞான், “சரியா யோசிச்சி சொல்லு கரன்… என்ன நடந்தது” என்று கேட்க,
“ஷார்க் மாதிரி இருந்துச்சுடா… ஆனா அது சுறாவும் இல்ல… ரொம்ப டிஃபரென்டா பெருசா இருந்துச்சு… இதுவரை நான் அப்படி ஒரு மீன நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்ல…
அதுமட்டுமில்லாம நான் அன்னைக்கு போன இடம் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு…. அதே இடத்தில் மூன்று கேமராவ போட்டுட்டு வந்து இருக்கேன்… கையிலிந்த மீதி ரெண்டு கேமராவும் அந்த சுறா கிட்ட இருந்து தப்பிச்ச கிட்ட விழுந்துடுச்சு… அதுல எல்லாமே ரெக்கார்டு ஆகும்… நாம அந்த கேமராட வீடியோ பார்த்தோம்னா ஏதாவது கண்டுபிடிக்கலாம்” என்றான் கரன்.
“ஓகேடா நீ எத பத்தியும் யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகாம ரிலாக்ஸா இரு… பிறகு மீதியை பார்க்கலாம்” என்று விட்டு அங்கிருந்து சென்றார்கள் ராகவ் அவனுடனே கூட இருந்தான்…
அன்றோ அவர்களுக்கு வேலை பார்க்கும் மனநிலையே இல்லை…
பல பிரச்சினைகளை தீர்த்து முடியும் போதே இரவு ஒன்பது மணியாகி விட்டிருந்தது…
பல வருடங்களுக்குப் பின் ஏனோ சகஜமாக பேசிக்கொள்ள அபின்ஞானுக்கும் மகாதேவுக்கும் சங்கடமாக இருந்தது…
சம்பிரதாயமாக ஓரிரு வார்த்தைகள் பேசினர்களே தவிர ஒதுங்கியே இருந்து கொண்டனர்…
இரவு உணவை ஆறு பேரும் சேர்ந்து கரன் அறையிலே உண்டார்கள்…
சாப்பிட்டுவிட்டு மகிமாவை தன் கையுடனே அழைத்துச் சென்றான் அபின்ஞான்…
அவள் கதவை மூடிய அடுத்த கனமே அவள் இதழ்களில் முரட்டுத்தனமாக முத்தமிட ஆரம்பித்து விட்டிருந்தான்…
அவன் மார்பில் கையை வைத்து தள்ளி விட்ட மகிமா, இதழ்களை வருடியப்படியே, “ஸ்ஸ்ஸ் வலிக்குது… எதுக்கு இப்படி கிஸ் பண்றீங்க” என்று கேட்க,
“தேங்க்ஸ் சொன்னேன் டி” என்றான் அவள் கன்னத்தில் இதழ்களை உரசியப்படியே…
“என்னது… உதட்டுல ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சா தேங்க்ஸ் சொல்லுவாங்க” என்று கேட்க…
“எனக்கு இப்படி சொல்லத்தான் புடிக்கும்” என்று கூற,
தலையில் அடித்துக் கொண்டவள், “உங்களோட பேசி ஜெயிக்க முடியுமா” என்றபடி படுக்கப் பார்க்க…
“மகி இன்னக்கி ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்கு…” என்றான் அவள் கன்னத்தை வருடியபடியே,
அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து விட்டது…
“அதுக்கு…” என்று அவளும் புரியாதது போலவே கேட்டாள்.
“வேணும்னே நடிக்கிறா ராட்சஷி” என்று முணுமுணுக்க… மகிமாவுக்கும் தெளிவாகவே கேட்டது…
இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டவள், “உங்களுக்கு நான் வேணும் அதுக்கு ஏதாவது சாக்கு சொல்றீங்க தானே” என அவன் கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்தபடி கேட்க,
“இல்லையே…’ என்று அவளை இழுத்துக் கொண்டே கட்டிலில் விழுந்தவன்… அவள் அணிந்திருந்த ஷேர்டின் பட்டன்களை கழட்ட… அவள் அதை உணர்ந்து விலக முன்பே அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தான் அபின்ஞான்.
“அபி என்ன பண்றீங்க” என்று தன் இரு கைகளாலும் உடலை மறைத்துக் கொள்ள,
“ப்ச்… கையை எடுடி” என்று கரகரப்பான குரலில் கூறியவாறு அவள் கை விரல்களுடன் தன் விரல்களை கோர்த்தபடி அவள் கையை கட்டிலில் அழுத்தியவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க…. அவளும் மோகமாக கண்களை மூடிக்கொண்டாள்.
இருவரும் தத்தம் துணைகளில் இன்பக்கடலில் மூழ்க ஆரம்பித்து விட்டனர்…
சஞ்சனாவுக்கு தான் தூக்கம் வரவில்லை…
தன் அறை ஸ்விம்மிங் பூலுக்கு வெளியே வந்தவள் அங்கிருந்த கம்பியில் கையை வைத்த படி கடலை வெறித்தபடி நின்று இருந்தாள்…
கரனை ரத்தம் வழிய பார்த்த கோர நிகழ்ச்சி ஒரு பக்கம்… தேவ் தன்னை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்திய வலி என்று அவளை மனக்குழப்பத்திற்கு தள்ளி விட்டிருந்தது…
கண்ணை மூடினாலே ரத்தக் காட்சிதான் வந்து கொண்டிருந்தது…
இன்னும் அவள் மனம் சமாதானம் அடையவில்லை… வெளியே அமைதியாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் அவள் மனதோ இன்னும் பதறிக் கொண்டுதான் இருந்தது.
அந்நேரம் அவள் கழுத்தில் சூடான மூச்சுக்காற்று ப்பட்டது…
கண்களை மூடி திறந்தாள் சஞ்சனா…
அந்த மூச்சுக்காற்றை வைத்தே புரிந்து விட்டது அவன் தேவ்தான் என்று…
அவள் பின்னால் வந்து நின்ற மகாதேவ் அவள் கழுத்தில் தன் நாடியை அழுத்தமாக வைத்து, அவளுக்கு முன்னால் இருந்த கம்பியை பற்றிய படி நின்றான்…
அவள் எதுவுமே பேசவில்லை….
“சஞ்சு உனக்கு என்ன பிரச்சின… ஒன்னும் இல்லன்னு மட்டும் சொல்லாதே” என்று மென்மையாக கேட்டான்…
அவளுக்கும் திரும்பத் திரும்ப என்ன விஷயம் என்று கேட்டுக் கொண்டிருப்பவனிடம் இதற்கு மேல் மறைக்க முடியவில்லை…
“தேவ்… நான் அன்னைக்கு உன் டைரிய வாசிச்சேன்… நீங்க பழிவாங்க என்ன யூஸ் பண்ணிக்கிட்டீங்க தானே” என்று அவள் வேதனையுடன் கேட்க,
அவள் தோள்களைப் பற்றி தன்னை நோக்கித் திருப்பியவன் அவளை கோபமாக பார்த்தபடி, “பைத்தியமாடி உனக்கு… அபி கதைச்சத கேட்டு கோபம் வந்துச்சு தான்… எப்படியாவது உன்ன என்கிட்டயே வச்சுக் கொள்ளனும்ன்னு தான் தோணிச்சு… உன்ன பழிவாங்குற ஐடியா எனக்கு சுத்தமாவே இல்ல…” என்றான் அழுத்தமாக…
“பொய் சொல்லாதடா” என்றாள் விம்மியபடி,
“நான் எதுக்குடி உன்கிட்ட பொய் சொல்லணும்… நேத்து உன்னை சாரியில பார்த்ததும் ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ப்… அதனாலதான் உன்னை போக சொன்னேன்… நீ போகவே இல்ல, என்னால அதுக்கு மேல என்ன கண்ட்ரோல் பண்ண முடியாம உன்னை நெருங்கிட்டேன்… நீ போகாம இருந்தது உன் தப்பு தான் ” என்றான்.
“நீங்க பாவம்னு கூட இருந்தா தப்ப என் மேல தூக்கி போட பாக்குறீங்களா?” என்று அவள் கேட்க…
“என்னடி பிரச்சின உனக்கு… எத சொன்னாலும் தலைகீழாவே பாக்குற” என்று பாவமாக கேட்க,
“உங்க மாதிரிக்கு உங்களை அப்படித்தான் பார்க்க முடியும்” அவன் பேச்சை கேட்டதும் தன்னை மீறி சிரிப்பு வர அதை அவன் பார்க்காமல் மறைத்துக் கொண்டே கூற,
அவனும் அதை கண்டு கொண்டான்… “அப்படி இருந்த தேவ தானே நீ பின்னால சுத்தி சுத்தி காதலிச்ச… இப்ப பெருசா பேச வந்துட்ட” என்று அவன் கேட்க,
“அது தெரியாம பண்ணிட்டேன்” என்றாள் அவள்…
“என்னடி சொல்ற” என்று கேட்டான் அதிர்ச்சியாக…
“அது அப்படித்தான்” என்று கூறிக் கொண்டிருந்தவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்…”நம்ம பாஸ்ட் எப்படி வேணும்னாலும் இருந்துட்டு பபோகட்டும்… ஆனா இனி லைஃப்ல நீ என்கூட தான் இருக்கணும்” என்றான் மகாதேவ்…
“யாரு முடியாதுன்னு சொன்னது” என்று சஞ்சனா அடுத்த வார்த்தை பேச முன்னே அவளது இதழ்களை கவ்விக் கொண்டான் அவளது தேவ்…