கிரீட்டிங் கார்டு ஒரு காலத்தில் பிறந்த நாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, காதலர் தினம் வாழ்த்து இப்படி எல்லா விசேஷ தினங்களில் தங்களுடைய அன்பை பகிர்ந்து கொள்ள அதிகம் பகிரப் பட்டது இந்த கிரீட்டிங் கார்டு மட்டும் தான். இப்போ மொபைல் போன் அதுவும் ஸ்மார்ட் போன் எல்லாம் வரவும் இந்த கிரீட்டிங் கார்டு கல்ச்சர் சுத்தமா மறந்தே போச்சு என்று கூட சொல்லலாம் என்று நினைத்த படி தனது அலமாரியில் ஒரு அட்டைப் பெட்டி முழுவதும் நிறைந்திருந்த அந்த கிரீட்டிங் கார்டுகள் எல்லாவற்றையும் எடுத்து பார்த்தான் நம் நாயகன் துருவநேத்ரன்.
அநேக கிரீட்டிங் கார்டுகள் ஒரே பெயரை தாங்கிக் கொண்டு இருந்தது. மூன்ஃபையர். அந்த பெயரை வாசித்த மறு நிமிடமே அவனது இதழோரம் சிறு புன்னகை மலர்ந்தது.
அது ஒரு அழகிய நகரம். வைகை ஆற்றின் படுகையில் அமைந்த அந்த சிறிய நகரத்தில் தான் நம் கதையும் நகர்கிறது. நாயகன் துருவநேத்ரன் அந்த நகரத்தில் பொன் விழா கண்ட ஒரு தனியார் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்.
அவன் கண்ணில் பட்டது அந்த தீபாவளி வாழ்த்துக்கள் கிரீட்டிங் கார்டு. அதைக் கையில் எடுத்துப் பார்த்தவனது நினைவு சில வருடங்களுக்கு முன்பு சென்றது.
இந்த கதை நடக்கும் கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் எல்லாம் கிடையாது. நோக்கியா போன் மட்டுமே.
என்ன இது என்ற துருவநேத்ரனிடம் தெரியலையா சார் கிரீட்டிங் கார்டு என்றாள் நிலவேனில். அவளை முறைத்துக் கொண்டு அவன் அமர்ந்திருக்க என்ன இந்த முறை முறைக்கிறாரு நான் என்ன இவருக்கு லவ் லெட்டரா கொடுத்தேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு நின்றிருந்தாள் நிலவேனில்.
இப்போ எதற்கு இந்த கிரீட்டிங் கார்டு என்ற துருவனிடம் தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறினாள் நிலவேனில். என்ன என்றவனிடம் ஆமாம் நிஜமாவே தான் சார் உங்களுக்கு மட்டும் இல்லை எங்க கிளாஸ்க்கு வர எல்லா டீச்சர்ஸ்க்குமே கொடுத்தேன். உங்களுக்கு மட்டும் தான் கடைசியாக கொடுக்கிறேன் என்ற நிலவேனிலை பார்த்து பெரு மூச்சு விட்டவன் சரி கொடுத்து விட்ட தானே கிளம்பு என்று கூறிவிட்டு அவள் கொடுத்த கிரீட்டிங் கார்டை பிரித்தான்.
தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி கீழே அவள் பெயருக்கு பதிலாக மூன்ஃபையர் என்று இருக்கவும் ஏய் நிலா இங்கே வா என்றான் துருவநேத்ரன்.
சொல்லுங்க சார் என்றவளிடம் அது என்ன மூன்ஃபையர் என்றான். என்னோட பெயர் தான் என்று சிரித்தாள் நிலவேனில்.
எதேய் உன் பெயரா என்றவனிடம் ஆமாம் நிலா என்றால் மூன். வேனில் என்றால் வெயில் காலம். வெயில் காலத்தில் சூரியன் வரும். சூரியன் என்றால் நெருப்பு சோ ஃபையர். இரண்டையும் சேர்த்து மூன்ஃபையர் என்று சிரித்தாள் நிலவேனில்.
அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்கு தான் பிபி எகிறியது.
அன்றைய தினம் அவளது பேச்சும், நடவடிக்கைகள் எல்லாம் கோபத்தை தான் கொடுத்தது. ஆனால் இன்றோ நினைக்க நினைக்க அவன் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் தோன்றியது.
இந்த காதல் தான் எத்தனை மாயம் செய்கிறது. அது நம்மை விரட்டும் பொழுது நாம் அதை விரட்டினாலும் என்றாவது ஒரு நாள் அதை நினைத்தால் மனதும் தித்திக்கின்றது.
என்றோ எழுதிய தனது நாட்குறிப்பை அவன் புரட்டிட அதிலோ எங்கும் நிறைந்திருந்தாள் அவனது மூன்ஃபையர் நிலவேனில்.
இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டே வொர்க் போகிறாய் அதனால் கோவிலுக்கு போயி சாமி கும்பிட்டு அப்பறம் ஸ்கூலுக்கு போ துருவா என்றார் அவனது அன்னை சுடர்விழி. சரிங்கம்மா என்று சொல்லி விட்டு அவனும் கோவிலுக்கு சென்று விட்டு பிறகு பள்ளிக்கு சென்றான்.
அங்கு தான் அவளை முதல் முறையாக பார்த்தான். அன்று ஒரு வகுப்பில் லெஸர் பீரியட் என்று அவன் சென்றான். யாருடி இந்த கொக்கு என்ற நிலவேனிலிடம் தெரியலையே இது லெஸர் பீரியட் தானே அதான் புதுசா யாராவது ஸ்டாப் வந்துருப்பாங்க என்ற கனிஷ்கா அந்த ஆளு நம்மளை தான் பார்க்கிறார் பேசாமல் இரு டீ என்றாள்.
எதனாலும் ரைட்டிங் வொர்க் இருந்தால் அதை பண்ணுங்க என்று சொல்லி விட்டு அமர்ந்து கொண்டான். ரைட்டிங் வொர்க்கா நமக்கா அப்படி எதுவும் இருக்கா மச்சி என்று சிரித்தாள் நிலவேனில்.
இந்த சார் புதுசு போல நிலா அதான் அப்படி சொல்லிட்டு இருக்காரு என்ற கனிஷ்கா சரி இந்த சோசியல் சைன்ஸ் புக்கை எடுத்து படிக்கிற மாதிரி சீன் போடுவோம். புதுசா வந்திருக்கிற இந்த சாராவது நம்மளை படிக்கிற பிள்ளைகள்னு நம்பட்டும் என்று கூறிவிட்டு கனிஷ்கா புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிப்பது போல் பாவணை செய்தாள்.
மற்ற மாணவிகளும் படிப்பது, எழுதுவது இப்படி ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டிருக்க துருவநேத்ரன் எழுந்து வந்து இவர்களின் டெஸ்க் முன்பு கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு நிற்கவும் நிமிர்ந்து பார்த்தாள் நிலவேனில்.
என்ன இந்த ஆளு நம்ம டெஸ்க் முன்பு நிற்கிறாரு என்று யோசித்தபடி அவள் அவனை பார்த்து கொண்டு இருக்க அவனோ கனிஷ்காவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
அப்பொழுது தான் அவளும் தன் தோழியை பார்க்க அந்த ஆர்வக் கோளாறு படிப்பது போல் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு புத்தகத்தை தலை கீழாக வைத்து படிப்பது போல ஜன்னலோரம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.
அடியே ஆர்வம் இப்படி தொக்கா மாட்டிக்கிட்டியே என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்க ஏய் நிலா அங்கே பாரு அந்த சிட்டுக்குருவி என்று கூறிக் கொண்டே அவள் திரும்பிட அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் துருவநேத்ரன்.
என்ன படிக்கிறிங்க மேடம் என்று அவன் அதிகாரமான குரலில் கேட்டிட கனிஷ்கா பயத்தில் திரு திருவென விழிக்க அவன் அவளது புத்தகத்தை காட்டி தலைகீழாக வச்சு என்னத்த படிக்க போறிங்களோ என்று அவன் கூறிட வகுப்பில் அனைவரும் சிரித்து விட்டனர்.
என்ன சிரிப்பு இந்த பொண்ணு மட்டும் இல்லை இந்த கிளாஸ் ரூம்ல யாருமே படிக்கவே இல்லை என்று அவன் கேட்டிட அனைவரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து கொண்டு இருக்க அதை பார்த்தவன் சரி நீங்க படிக்க வேண்டாம் வேற என்ன பண்ணலாம் என்று கேட்டான் துருவன்.
சார் நிலாவை பாட சொல்லுங்க என்றாள் கவிதா. நிலாவா அது யாரு என்ற துருவனிடம் நான் தான் சார் நிலவேனில் என்று எழுந்து நின்றாள்.
பாடுங்கள் என்று அவன் சொல்ல இல்லை சார் வேண்டாம் என்று அவள் கூறிட ஏய் நிலா ப்ளீஸ் பாடு என்று எல்லோரும் கூறிட என்ன நிலா அக்கா உங்களுக்கு இத்தனை விசிறிகளா என்ற துருவன் இத்தனை நேயர் விருப்பம் வரும் போது நிராகரிக்க கூடாது பாடுங்கள் என்று அவன் கூற அவளோ மௌனமாக நின்றிருந்தாள்.
அவள் அமைதியாக நிற்க அவனோ சரிப்பா உங்க ஃப்ரண்டு பாட மாட்டேன் என்று சொல்லும் போது கட்டாயப் படுத்த கூடாது அதனால் வேற எதாவது செய்யலாம் என்று அவன் சொல்லி முடிக்க பெல் அடித்தது. அவனும் அந்த வகுப்பில் இருந்து வெளியில் சென்று விட கனிஷ்கா நிலாவை அடிக்க ஆரம்பித்தாள்.
ஏய் குரங்கு அந்த ஆளு பக்கத்துல வந்து அனகோண்டா குரலில் என்னை அதட்டிக் கொண்டு இருக்கு நீயும் எல்லோரை போலவும் சிரிக்கிற என்ற கனிஷ்காவை முறைத்தவள் அடியே ஆர்வம் உன் அரை வேக்காடு தனத்தை மறைக்க என்னை அடிக்கிறியா ஏன் டீ எருமை புத்தகத்தை தலை கீழாக வைத்து எவளாவது படிப்பாளா சிட்டுக்குருவி ரசிக்கிறாங்க மேடம் இப்போ தான் என்ற நிலவேனில் சரி கிளம்பு எல்லோரும் பிடி பீரியடுக்கு கிரவுண்டுக்கு கிளம்பிட்டாளுங்க நாம் தான் லேட் என்றாள் நிலவேனில்.
உனக்கு தான் பாடுவது ரொம்ப பிடிக்குமே எந்த வாத்தி பாட சொன்னாலும் பாட்டை எடுத்து விடுவியே இப்போ மட்டும் என்ன என்றாள் கனிஷ்கா.
உன்னோட அந்த அனகோன்டா குரலு கேட்டு எல்லாம் என்னால பாட முடியாது என்றவளிடம் எது என்னோட அனகோண்டா குரலா ஏன் டீ என் குரல் சின்னக் குயில் சித்ரா மாதிரி இருக்கும் டீ என்ற கனிஷ்காவிடம் இந்த விஷயம் சித்ராவுக்கு தெரியுமா என்று சிரித்தாள் நிலவேனில். என்னை ஓட்டுறியாடீ என்ற கனிஷ்கா விடம் ஆமாம் இவள் பெரிய இன்னோவா காரு இவளை ஓட்டுறாங்க மவளே பேசி பேசி நேரத்தை போக்கிட்டு இருக்க கிரவுண்டுக்கு ஏன் லேட்டுன்னு சொல்லி டெய்சி மேம் மட்டும் கிரவுண்டை சுத்தி ஒட சொன்னுச்சுன்னு வை உனக்கு இன்னைக்கு கொல்லாமல் விட மாட்டேன் என்று சொல்லி விட்டு கடகடவென படிக்கட்டில் இறங்கினாள் நிலவேனில்.
கடைசி படியில் கால் வைக்கும் பொழுது கால் இடறி அவள் விழுந்து விட்டாள். ஆ ஆ அம்மா என்று அவள் அலறிட எதார்த்தமாக அந்த பக்கம் ஸ்டாப் ரூமிற்கு சென்ற துருவன் அவளது அலறல் சத்தத்தை கேட்டு என்னாச்சுமா எப்படி விழுந்த என்றான்.
வேகமாக ஓடி வந்தவள் கால் இடறி விழுந்து விட்டாள் சார் என்று கனிஷ்கா கூறிட படிக்கட்டில் வரும் போது பார்த்து வர வேண்டாமா என்றவன் எழுந்திரு என்றான்.
முடிய வில்லை சார் என்று கண்ணீர் வடித்தாள் நிலவேனில். ட்ரை பண்ணுமா என்று அவன் கூற முடிய வில்லை என்று சொல்லுறேனே என்று அவள் கத்திட அவளது பாதத்தில் சுளுக்கு பிடித்த இடத்தை மெல்ல நீவி விட்டு சடாரென சொடுக்கு போட்டது போல் திருப்பினான் மடங்கிய அவளது பாதம் இப்பொழுது சரியாகிட ரொம்ப தேங்க்ஸ் சார் என்றாள் நிலவேனில்.
தேங்க்ஸ் சொல்லுவது எல்லாம் இருக்கட்டும் கவனம் எங்கே இருக்கிறது. அதுவும் படிக்கட்டில் நடந்து வரும் போது ஏன் இந்த அவசரம் என்றான் துருவநேத்ரன். சாரி சார் என்று கூறிவிட்டு அவள் சென்று விட்டாள்.
என்ன மச்சி அந்த அனகோண்டா கால் எல்லாம் பிடிச்சு சுளுக்கு எடுத்து விடுது என்ற கனிஷ்காவிடம் அனகோண்டா குரலா இல்லை ஆளே அனகோண்டாவா என்று தனக்கு இருந்த சந்தேகத்தை ஆவலுடன் கேட்டாள் நிலா வேனில்.
உனக்கு எல்லாம் கால் சுளுக்கி இருக்க கூடாது உடைஞ்சு இருக்கனும் ஒரு பேச்சுக்கு அனகோண்டா என்று சொன்னால் உனக்கு சந்தேகம் வேற வருதாடீ என்று அவளது காதை திருகினாள் கனிஷ்கா. பாருடா உன் ஆளை சொன்னதும் கோபமா என்று கூறிவிட்டு நிலவேனில் நிற்காமல் சிட்டாக பறந்து விட்டாள்.
…. தொடரும்….