என் நெஞ்சில் நீ தந்த காயம்…(10)

4.8
(4)

 

நாட்கள் அழகாக கடந்தது .கனிஷ்கா, நிலவேனில் இருவரும் பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி அடைந்து பதினோராம் வகுப்பிற்குள் அடி எடுத்து வைத்தனர் . இருவருமே கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் தான்  எடுத்திருந்தார்கள்.

“என்ன மச்சி ஒரு வழியாக ஃபர்ஸ்ட் குரூப் எடுத்து இன்னைக்கு பர்ஸ்ட் டே ஸ்கூலுக்கும் வந்து விட்டோம் . அப்புறமும் நீ ஏன் உம்முனு இருக்க ” என்ற கனிஷ்காவிடம் , “நான் என் மம்மி கிட்ட சொன்னேன் இல்லை நான் தேர்ட் குரூப் எடுக்கிறேன் என்று ஆனால் அவங்க தான் ஃபர்ஸ்ட் க்ரூப் தான் எடுக்கணும். அப்பதான் இன்ஜினியரிங் படிக்க முடியும் என்று சொல்லி ஃபர்ஸ்ட் குரூப் எடுக்க வச்சுட்டாங்க” என்று புலம்பிக் கொண்டிருந்தாள் நிலவேனில்.

” ஏன் டி புலம்பிட்டு இருக்க ஏன் உனக்கு இன்ஜினியர் ஆகிறது பிடிக்கலையா?” என்றாள் கனிஷ்கா. நான் இன்ஜினியர் ஆகிறேனோ! இல்லை எருமை மாடு மேய்க்கிறனோ! இப்ப அது பிரச்சனை இல்லை ஃபர்ஸ்ட் குரூப்புல மேத்ஸ் இருக்கு ஆல்ரெடி டென்த் ல மேக்ஸ்ல ஏதோ 60 மார்க் எடுத்து தப்பிச்சுட்டேன். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மேத்ஸ் ரொம்ப கஷ்டமா இருக்குமுன்னு  கேள்வி பட்டு இருக்கேன். அதனால தான் பயமா இருக்கு பிசிக்ஸ்ல கூட மேத்ஸ் வருமாம் அதுதான் ரொம்ப ரொம்ப பயமா இருக்கு” என்றாள் நிலவேனில்.

“டியூஷன் போகலாமே செல்லம்” என்ற கனிஷ்காவிடம்,  “டியூஷன் போனால் மட்டும் புரியிற அளவுக்கு நம்ம என்ன பெரிய ஜீனியஸா நீயும் சரி ,நானும் சரி கடைந்தெடுத்த மக்கு.  எப்படியோ டென்த் அடிச்சு புடிச்சு மார்க் வாங்கி தப்பிச்சுட்டோம். 11த் ,12 த் தான் பெயில் ஆயிடுவேன் என்று பயமா இருக்கு” என்று புலம்பி கொண்டிருந்தாள் நிலவேனில்.

“ஏன் நிலா புலம்பிட்டே இருக்க, தேர்ட் குரூப்ல அக்கவுண்டன்சி, காமர்ஸ் இப்படி புரியாத சப்ஜெக்ட்லாம் இருக்கும்.  ஆனால் ஃபர்ஸ்ட் க்ரூப்ல நம்ம சயின்ஸ்லயே பிசிக்ஸ் ,கெமிஸ்ட்ரி எல்லாமே வந்திருக்கும் . அதனால இது கொஞ்சம் ஈஸிதானே” என்றாள் கனிஷ்கா .

“இன்னைக்கு ஈஸினு சொல்லுற வாய் இன்னும் ஒரு மாசத்துல நீ சொன்னதுதான் நிலா கரெக்ட். ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு சொல்லும் சொல்லலைனா என் பெயரை நான் மாத்திக்கிறேன்” என்றாள் நிலவேனில்.

“நிலவேனில் என்ற பெயரை நிரந்தரமா மூன்ஃபையர் என்று வச்சிக்க போறியா செல்லம்” என்று கனிஷ்கா சிரிக்க அடடா ஆச்சர்யக்குறி இது கூட நல்லா இருக்கே” என்றாள் நிலவேனில் .

அன்றைய வகுப்புகள் இருவருக்குமே மகிழ்ச்சியாகவே இருந்தது. “என்னடி பர்ஸ்ட் நாளே லேபுக்கு வர சொல்லி இருக்காங்க” என்ற கனிஷ்காவிடம் இப்படி ஆச்சும் போய் கம்ப்யூட்டர் நம்ம ஸ்கூலில் இருக்குன்னு எட்டி பாத்துட்டு வருவோம் டி டென்த் வரைக்கும் கம்ப்யூட்டர் பீரியடுக்கு  டீச்சர் கிளாஸில் வந்து கம்ப்யூட்டர் படத்த வரைந்து இதுதான் கம்ப்யூட்டர் என்று சொல்லி ஏமாத்திட்டாங்க‌ . அட்லீஸ்ட் இனிமேலாவது லேபுக்குள் அனுப்பி இதுதான் கம்ப்யூட்டர் இப்போ பாருங்கடா டேய் அப்படின்னு கம்ப்யூட்டரை கிட்டக்க இருந்து பார்க்க வைப்பாங்களான்னு பார்ப்போம்” என்றாள் நிலவேனில்.

” இருந்தாலும் உனக்கு இம்புட்டு குசும்பு ஆகாது , ஏன் இதுக்கு முன்னாடி இந்த லேப்குள்ள போனதில்லை ” என்ற கனிஷ்காவிடம் “போய் இருக்கோம் பேபி,  இது தான் கம்ப்யூட்டர் அப்படின்னு காட்டினாய்ங்க. அது பக்கத்துல உட்கார்ந்து அட்லீஸ்ட் அதை தொட்டுப் பார்க்க வைத்துவிட்டார்களா? இனிமேல் தொட விடுறாங்களான்னு பார்ப்போம்” என்று சிரித்தாள் நிலவேனில்.

“இந்த அனகோண்டா குரலு  கம்ப்யூட்டர் வாத்தியார் டி” என்ற கனிஷ்காவிடம் “என்னது  கம்ப்யூட்டர் வாத்தியாரா நமக்கு எல்ஓஈ தானே வந்துச்சு” என்றாள் நிலவேனில்.

” ஏதாவது பாடம் எடுத்தால் எதுனாலும் தெரிஞ்சு இருக்கும். அவரு உர்ருனு நம்ம முகரையை பார்க்க, நாம உர்ருனு அந்த ஆளு முகரையை பார்க்க இது தானே நடந்துச்சு. அதனால் தான் அந்த ஆளு என்ன வாத்தியார் என்றே தெரியவில்லை ” என்றாள் கனிஷ்கா.

நல்லவேளை இந்த அனகோண்டா நம்ம கிளாஸ்க்கு வர வில்லை . இது குரலை கேட்டாளே பாடம் எல்லாம் சும்மா அதிரும் , நானும் மயங்கி விழுந்து விடுவேன் ” என்று சிரித்த கனிஷ்காவை பார்த்து , “நீ வேண்டும் என்றால் பாரு இந்த மேடத்துக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னா அடுத்து அந்த ஆளு தான் நம்ம கிளாஸ்க்கு வரப்போறாரு .நீ நெஜமாவே மயங்கி தான் விழப்போற. பட் அவரு குரலில் மயங்கி விழப் போறியா, இல்லை அழகில் மயங்கி விழப் போறியா” என்று கேட்டு  சிரித்தாள் நிலவேனில்.

“அம்மா தாயே நான் தான் அன்னைக்கே சொல்லிட்டேனே இந்த வாத்தியார் சகவாசம் எல்லாம் எனக்கு வேண்டாம். நீ வேண்டும் என்றால் கரெக்ட் பண்ணிக்கோ” என்றவள்,  “ஆமாம் உன் ஆளுகிட்ட பேசிட்டு இருக்கியா?” என்று கேட்டிட,  “அது எதுக்கு உனக்கு நான் பேசுறேன்,  பேசாமல் போகிறேன் அது என்னோட பர்சனல்” என்ற நிலவேனிலின் தலையில் கொட்டியவள் “அது என்னடி எனக்கு தெரியாமல் உனக்கு பர்சனல் ஒழுங்கு மரியாதையா சொல்லு” என்றாள் கனிஷ்கா .

“இல்லை எப்பவாச்சு  தான் பேசுவோம்” என்ற நிலா விடம் , “என்ன பேசினீங்க” என்றாள் கனிஷ்கா. “என்னவோ பேசிகிட்டோம் விடு டீ “, என்ற நிலா “ஒழுங்கா கிளாஸை கவனி இல்லைனா உன்னோட சேர்த்து என்னையும் அந்த மேடம் வெளியே விரட்டி விடப் போகுது” என்றாள் .

“கிளாஸ்லாம் எப்படி போச்சு அம்மு” வெண்மதியிடம் அதெல்லாம் நல்லா தான் மம்மி போச்சு . ஆனால் இந்த மேத்ஸ் தான் என்று அவள் இழுத்துக் கொண்டிருக்க ஒன்னும் பிரச்சனை எல்லாம் படிச்சுருவ விடு சரி என்ன சாப்பிடுற ” என்றார் வெண்மதி.

“நான் ஆல்ரெடி உப்புமா செஞ்சிட்டேன் அதையே நம்ம ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கலாம்” என்ற நிலவேனிலிடம் “உப்புமாவா அது நீ செய்தால் ரொம்ப தப்புமா மாதிரில  இருக்கும்” என்ற வெண்மதியிடம்,  “ரொம்ப ஓட்டாதீங்க மம்மி நான் ரவையில் செய்ய வில்லை . சேமியாவில் தான் செய்தேன் “என்று அவள் கூறிட சரி என்று இருவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றனர்.

“என்ன மேடம் இன்னைக்கு இவ்வளவு நேரம் கழிச்சு மெசேஜ் பண்ணி இருக்கீங்க” என்ற துருவனிடம், “இப்போ தான் உங்க மெசேஜ் பார்த்தேன் அதனாலதான் நான் ரிப்ளை பண்ணேன். பகல்ல கொஞ்சம் பிசி” என்றாள் நிலவேனில்.

” ஓ பிஸியா அப்போ மேடத்தை இனிமேல் பகலில் பிடிக்கவே முடியாது போல” என்றான் . “மூன் பகலில் எல்லாம் வராது மிஸ்டர் முனி” என்றாள் நிலா.

அவனும் சிரித்து விட “பகலில் என் கூட பேசணும்னு ரொம்ப ஆசையோ” என்றாள்.

“ஆசை இல்லைன்னு சொல்ல முடியாது ஆனாலும் இட்ஸ் ஓகே எனக்கும் பகலில் கொஞ்சம் வேலை இருக்கு” என்றான் அவன். “வேலை இருக்கா நான் கூட நீங்க வேலை வெட்டிக்கே போகாத வெட்டிப் பையன்னு நினைச்சுட்டேன்” என்றாள் நிலவேனில் .

“மூன்ஃபையர்

உனக்கு வாய் ரொம்ப திமிர்” என்றான் அவன் .

“ஏன் அப்படி சொல்லுறீங்க எப்போ பாத்தாலும் என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க அப்ப நான் எப்படி நினைக்க முடியும்” என்றவளிடம் , “நீ கூட தான் பொழுதும் என்கிட்ட பேசிட்டு இருக்க அப்ப நீயும் வேலை வெட்டி இல்லாத வெட்டி முண்டம் வீணா போனதாண்டம் அப்படி நான் சொன்னால் நீ ஒத்துக்குவியா” என்றான் அவன் .

“அதான் சொல்லிட்டீங்களே வேட்டி முண்டம் வீணா போன தாண்டம்னு ஒத்துக்குவியாங்கிற மாதிரி என்னை என்ன எல்லாம் திட்டனும்னு மனசுல இருந்துச்சோ அதெல்லாம் பேசியாச்சு அப்படித்தானே” என்றாள் நிலவேனில்.

” பச்சையா சொல்ல முடியாது ஆனால் அப்படித்தான் என்று அவன் கூறிட அவளோ அப்படியா அப்போ இனிமேல் இந்த வெட்டி முண்டம் வீணா போன தண்டத்துக்கு நீங்க எதுக்கு போன் பண்ணி , நீங்களும் வெட்டியா உங்க டைம் வேஸ்ட் பண்ணுறீங்க என்றாள் நிலவேனில்.

” உடனே கோபமா மேடம் . சரி ஓகே கூல் கூல் மூன்ஃபையர் ரொம்ப ஃபையர் ஆகாதே கொஞ்சம் கூல் ஆயிடு என்றவன் சும்மா நீ ஒரு கவுண்டர் கொடுத்த பதிலுக்கு நான் ஒரு கவுண்டர் கொடுக்கணும்னு சொல்லி சொன்னேன் அதுக்குள்ள மேடம் இவ்ளோ சீரியஸ் ஆயிட்டீங்க சில் பேபி” என்றான் அவன்.

” டோன்ட் கால் மீ பேபி நான் ஒன்னும் பேபி கிடையாது” என்ற நிலவேனிலிடம், “ஆமாம் நீ பேபி கிடையாது .நான் தான் உனக்கு பேபி அதனால தானே எனக்கு ஐ லவ் யூ பேபி னு சொன்ன என்றான் துருவன்.

“இப்பவும் சொல்கிறேன் ஐ லவ் யூ பேபி போதுமா?” என்றாள் அவள். “சீரியஸா சொல்கிறியா?” என்ற துருவனிடம், “சீரியஸா சொல்றதுக்கு நான் என்ன ஐசியுலையா  படுத்து கிடக்கிறேன். நான் என் வீட்டில் தான் படுத்து இருக்கேன்” என்றாள் அவள் .

“இப்போ மேடம் காமெடிகள் பண்ணுனீங்க அதுக்கு நாங்க கலகலன்னு சிரிக்கணும் , அப்படித்தானே” என்று அவனும் பதிலுக்கு வாரினான்.

“சரி சரி போதும் ரொம்ப பேசாதீங்க எனக்கு தூக்கம் வருது என்றாள் . எட்டரை மணிக்கே தூக்கமா என்றவனிடம் என் அம்மா தூங்கிட்டு இருக்காங்க. நான் தூங்காமல் போன் பேசுவதை பார்த்து அவங்க முழிச்சுட்டு வந்து திட்டுவாங்கல்ல அப்போ நான் தூங்க தானே வேண்டும் ” என்றாள் அவள் .

“என்ன உங்க அம்மா அதுக்குள்ள தூங்கிட்டாங்களா? ஏன் இவ்வளவு சீக்கிரம் என்றவனிடம் “எங்க அம்மா ஒரு ஹார்ட் பேஷண்ட். அவங்க டேப்லட்ஸ் எல்லாம் சாப்பிடுறதுனால ஏர்லியராவே தூங்கிடுவாங்க,  காலைல சீக்கிரம் எந்திரிச்சு எனக்கு சமைத்து வைத்துவிட்டு ஆபீஸ் போகணும்ல அதனால அவங்க கொஞ்சம் சீக்கிரமாகவே தூங்கி சீக்கிரமே எந்திரிச்சிடுவாங்க” என்றாள் நிலவேனில்.

“சாரி” என்றான்  துருவன். “எதுக்கு சாரி” என்றவளிடம், “இல்லை உங்க அம்மா” என்று அவன் தயங்கிட, “அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க அது எங்க அம்மாவோட விதி.  சரி ஓகே ரொம்ப பீலிங்ஸா எல்லாம் பேச வேண்டாம் நம்ம எப்பவுமே ஒரு டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுட்டு பேசலாம் அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு” என்ற நிலா விடம் “எனக்கு கூட அப்படித்தான் புடிச்சிருக்கு மூனு”  என்றவன் சரி ஓகே மூனு எனக்கும் பசிக்குது நான் போய் சாப்பிட்டு தூங்குறேன் பாய் ” என்று கூறிவிட்டு அவன் போனை வைத்துவிட, அவளும் போனை வைத்து விட்டாள்.

….. தொடரும்…..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!