என் நெஞ்சில் நீ தந்த காயம்…(11)

4.7
(3)

“என்னடி உம்முனு இருக்க ” என்ற கனிஷ்காவிடம், “மேத்ஸ் ஒன்றுமே புரிய மாட்டேங்குது கனி” என்றாள் நிலவேனில்.

” அதுதான் நமக்கு புரியாதே இதை நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமா” என்ற கனிஷ்காவிடம், “மெண்டல் கிறுக்கி நானே எனக்கு மேத்ஸ் புரிய மாட்டேங்குதுனு கடுப்புல இருக்கேன் நீ வேற வந்து ஏண்டி இப்படி உயிரை வாங்குற” என்றாள் நிலா.

“மேத்ஸ் புரியலைன்னா என் கூட ரெண்டு பேரும் டியூஷன் வாங்க டி” என்றாள் பிரியா. “டியூசனா  டியூஷன் எல்லாம் போனா நம்ம கெத்து என்ன ஆகிறது” என்ற கனிஷ்காவின் தலையில் நங்கென்று கொட்டினாள் நிலவேனில்.

“என்ன பெரிய கெத்து நீயே ஒரு வெத்து வேட்டு உனக்கு கெத்து ஒரு கேடு எருமை மாடு டியூஷன் வரலாம் பிரியா ஸ்பெஷல் கிளாஸ் முடியவே ஆறு மணி ஆயிடுது. அதுக்கப்புறம் வீட்டுக்கு போயிட்டு திரும்ப டியூஷன் வர்றதெல்லாம் கொஞ்சம் ரிஸ்க்” என்றாள் நிலவேனில்.

எதுக்கு வீட்டுக்கு போற ஸ்ட்ரைட்டா டியூஷன் வர வேண்டியது தானே என்றாள்  பிரியா .எங்க அம்மாவோட ஹெல்த் பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும் தானே அவங்களுக்கு கரெக்ட் டைம்க்கு டேப்லெட் கொடுக்கணும் நான் இருந்தால் தான் அவங்க ஒழுங்கா டேப்லட்ஸ் எடுத்துக்குவாங்க இல்லைனா மறந்துருவாங்க. அவங்க கூடவே நான் இருந்து தான் ஆகணும் என்ன பண்ணுறது என்றாள் நிலவேனில்.

சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம் என்ற கனிஷ்கா பேசாமல் ஒன்று பண்ணலாமா.  உன்கிட்ட தான் மொபைல் போன் இருக்கே கரெக்ட்டா ஏழு மணி ஆனதும் நீ அத்தைக்கு போன் பண்ணி மாத்திரை எடுத்துக்கோங்கனு சொல்லு என்று கனிஷ்கா கூறினாள் .

இது கூட நல்லா ஐடியாவா தான் இருக்கு என்றாள் பிரியா. ஐடியா நல்லா இருக்கு பட் டெய்லி 7 ஓ கிளாக் போன் பண்றதுக்கு டியூஷன் மாஸ்டர் அலோவ் பண்ணனுமே என்றாள் நிலவேனில்.

அட அவர் என்ன அலோவ் பண்ணுறது ரெஸ்ட் ரூம் வருதுன்னு டெய்லி 7 மணிக்கு எந்திரிச்சிடு ரெஸ்ட் ரூம் போற சாக்குல போன் பண்ணி அத்தை கிட்ட மாத்திரை போட சொல்லு அவ்வளவுதான் முடிஞ்சிடுச்சு என்று பிரியாவும் கூறிட இரண்டு பேருமே இன்னைக்கு தாண்டி எனக்கு பிரண்டா வாச்சதுக்கு உருப்படியான ஐடியா கொடுத்திருக்கீங்க என்றாள் நிலவேனில்.

எப்படியாச்சும் பாஸ் ஆகணும் செல்லம் அதுக்கு தான் இந்த ஐடியா என்று கனிஷ்கா கூறிட சரி சரி அடுத்த பீரியட் யாரு என்றாள் நிலவேனில்.

பிஇடி பீரியட் தான் விளையாடலாம் என்று மூவரும் கிரவுண்டிற்கு சென்றனர்.  வாங்கடி நாமளும் போய் விளையாடலாம் என்றாள் கனிஷ்கா.

விளையாட வா அதுவும் உன் கூடவா விளங்கிடும் ஓடி புடிச்சு விளையாட கூப்பிடுவ அதுக்கு எதுக்கு விளையாடனும்.  பாஸ்கெட் பால் விளையாடலாம்னா நான் குள்ளமா இருக்கேன்னு சொல்லுவ, சரி வாலிபால்  விளையாடலாம்னா அதுக்கும் எனக்கு ஹைட் தான் பிரச்சனைனு சொல்லுவ போடி லூசு என்றாள் நிலா .

நிலா பேசாமல் நம்ம ரெண்டு பேரும் பேட்மிட்டன் விளையாடலாமா என்றால் பிரியா. நம்ம தோழி வர மாட்டாளே. நம்ம ரெண்டு பேரும் மட்டும் விளையாடிட்டு என்ன பண்ண கனியை விட்டுட்டு நான் விளையாட மாட்டேன்பா என்ற நிலாவின் தலையில் நங்கென்று கொட்டிய பிரியா நீங்க ரெண்டு பேரும் ரெட்டை பிறவியாடி விட்டால்  ரெண்டு பேரும் ஒருத்தனை கட்டி கொள்வார்கள் போல எப்ப பார்த்தாலும் ஒட்டிக்கிட்டு ச்சீ போ நான் போறேன் என்று ஓடினாள் பிரியா.
ஏய் நில்லு டி என்று அவளை பிடித்து இழுத்து மூவரும் விளையாட ஆரம்பித்தனர்.

என்ன அம்மு சிரிச்சுக்கிட்டே வர என்ற வெண்மதியிடம் ஒன்றும் இல்ல மம்மி நான் டியூஷன் போகலாம்னு இருக்கேன் என்றாள் நிலவேனில். நல்ல விஷயம் நானும் அதை பத்தி தான் உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன். ஆப்போசிட் வீட்ல இருக்காங்க இல்ல என்று வெண்மதி கேட்டிட ஆமா சாந்தி அக்கா என்றாள் நிலவேனில். அவங்க கூட டீச்சராம் நீ பேசாமல் அவங்க கிட்ட டியூஷன் போறியா என்றார் வெண்மதி.

இல்ல மம்மி என் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து டியூஷன் சென்டர் போகலாம்னு இருக்கோம் இங்கே வேண்டாமே என்று நிலவேனில் கூறிட சரிடா உன்னுடைய இஷ்டம் என்றார் வெண்மதி.

நான் டியூஷன் போறேன் நீங்க ஒழுங்கா டைமுக்கு டேப்லட் சாப்பிடணும் சாப்பிட வில்லை அப்படின்னா அவ்வளவுதான் பாத்துக்கோங்க என்ற நிலவேனிலிடம் என் உடம்பை எனக்கு பார்த்துக்க தெரியும் டி என்னமோ இவள் தான் என்னை பெத்தவள் மாதிரி ஓவரா பண்ணுவாள். என் அம்மா கூட என்னை இவ்ளோ டார்ச்சர் பண்ணுனது இல்லை நீ வந்து எனக்கு மாமியார் என்றார் வெண்மதி.

எஸ் நான்தான் உன்னோட மாமியார் வெண்மதி ஒழுங்கு மரியாதையா மாமியார் பேச்சைக் கேட்டு பொறுப்பான மருமகளா நடந்துக்கோ சரியா என்ற நிலவேனிலின் தலையில் கொட்டினார். வாயாடி கழுதை, நீ என் மாமியாரா என் மாமியாராடி என்று அவளது கன்னத்தை கிள்ளினார் வெண்மதி.

ஆத்தி நீ ரொம்ப மோசமான மருமகள் வெண்மதி மாமியாரையே கொடுமைப்படுத்துற நான் தான் மாமியார் நான் சொல்றதுதான் நீ கேட்கணும் ஒழுங்கு மரியாதையா நான் டியூஷன் போயிட்டு வரதுக்குள்ள மாத்திரை எல்லாம் சாப்பிட்டு தூங்கு நான் வேண்டும் என்றால் ஸ்பேர் கீ எடுத்துட்டு போகிறேன் என்றாள்  நிலவேனில்.

உத்தரவு மாமியார் அம்மா இப்போ சாப்பிடலாமா வரீங்களா என்று வெண்மதி கேட்டிட சரி சரி வாங்க சாப்பிடலாம் என்று நிலவேனில் தன் தாயுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவருக்கு தேவையான மாத்திரைகளை கொடுத்து உறங்க வைத்துவிட்டு தன் அறைக்கு வந்தாள் .தனது மொபைல் போனை பார்த்திட அவனிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.

வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் தன் அறைக்குள் சென்று அவளுக்கு ஒரு மெசேஜை தட்டி விட்டான் ஹாய் மூன்  என்று.  அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருக்க அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. என்ன இவள் ரிப்ளை பண்ண வில்லை என்று நினைத்தவன் கண்ணாடியை பார்த்துக் கொண்டிருக்க அவனது மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தது .

அந்த பொண்ணு மெசேஜ் அனுப்பலைனா இப்போ என்ன நீ ஏன் சோகமாகுற என்ற மனசாட்சியிடம் என்னவோ தெரியலை அவள் கிட்ட பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றான் .

அந்த பொண்ணை லவ் பண்ணுறியா என்ற மனசாட்சியிடம் தெரியலை ஆனால் எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.  அவள் கிட்ட பேசும் போது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்னையே புதுசா பார்க்கிற மாதிரி ஒரு ஃபீலிங் என்னன்னு தெரியலை . இதுவரை எந்த பொண்ணு கிட்டயும் பேசினதில்லை அம்மா ,அக்கா தவிர வேற பொண்ணுங்க கிட்ட இந்த அளவுக்கு டீப்பா நான் பேசுனது இல்லை .

ஏனோ தினமும் அவள்கிட்ட ஒரு பத்து நிமிஷம் பேசினால் தான் மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு என்றான் துருவன்.

அந்த பொண்ணு யாரு என்ன எதுவுமே தெரியாது அவளோட ஒரிஜினல் பெயர் கூட தெரியாது. பெயர் கூட தெரியாத ஒரு பொண்ணு மேல உனக்கு ஒரு ஃபீலிங்ஸ் அப்படின்னா இது கேட்கிறவன் சிரிக்க போறான் என்று கூறிய மனசாட்சியிடம் மத்தவங்க எப்படியோ எனக்கு அவளை பிடிச்சிருக்கு அவள் பெயர் என்னவா வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும் அவள் யாரா வேண்டுமானாலும் இருந்துட்டு போகிறாள் . எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்கு அவள் கிட்ட பேசுறது புடிச்சிருக்கு இது காதலான்னு கேட்டால் எனக்கு தெரியலை . ஆனால் லைப் லாங் அவள் கூட இந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கிறது கூட ஒரு சுகமான விஷயம் என்றான் துருவன்.

லைஃப் லாங் இப்படி பேசிக்கிட்டே இருந்தா போதுமா. உங்க லைப்ல ரெண்டு பேருக்குமே வேற வேற வாழ்க்கை இருக்கு அந்த பொண்ணு யாரு என்ன எதுவுமே தெரியாமல் தேவையில்லாத ஆசைகளை மனசுக்குள்ள வளர்த்துக்காதே. அவள் மனசுல உனக்கான இடம் என்னன்னு தெரியாத போது நீ தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்க வேண்டாம் என்று எனக்கு தோணுது புரிஞ்சு நடந்துக்கோ என்ற மனசாட்சியிடம்  அதெல்லாம் எனக்கு தெரியும் நீ உன் வேலையை மட்டும் பாரு மனசாட்சியா மட்டும் இரு எனக்கு அட்வைஸ் பண்ணாதே என்று கூறிவிட்டு அவன் அமைதியானவன் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளிடம் இருந்து எந்த ஒரு எந்த ஒரு பதிலும் வராமல் போக அவனுக்கு மனம் லேசாக வலித்தது.

அவனது மெசேஜை கண்டவளுக்கு முகத்தில் ஒரு சந்தோஷம் தோன்றிட ஹாய் என்று அவள் பதிலுக்கு மெசேஜ் அனுப்பினாள் .

கால் பண்ணலாமா என்று அவனிடமிருந்து மெசேஜ் வர ஓகே என்று இவளும் பதிலுக்கு மெசேஜ் அனுப்பினாள். உடனே துருவன் அவளுக்கு போன் செய்ய ஆரம்பித்தான்.

என்ன மேடம் மெசேஜ் பார்க்க இவ்வளவு நேரம் ஆகுமா என்றான் துருவன்.  கொஞ்சம் பிஸி அதனால தான் மெசேஜ் பார்க்க முடியலை இப்போ தான் பார்த்தேன். பார்த்த உடனே நான் ரிப்ளை பண்ணிட்டேன் என்றாள் நிலா.

பிஸியா மேடம் என்ன வேலை எதுவும் பார்க்கிறீங்களா என்றான் துருவன். ஆமாம் வீட்டில் வேலை இருக்கும் அதுவும் பொம்பளை பிள்ளைன்னு இருக்கும் போது வீட்டில் வேலை பார்க்க தானே வேண்டும் .என் அம்மா பாவம் அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது இல்லையா என்றாள் நிலவேனில்.

அம்மாவ கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு வீட்டு வேலை பார்க்கிறது நான் கேட்க வில்லை பகல் பூராவும் ரொம்ப பிசியா இருக்கீங்களே அதுதான் வேலை பாக்கறீங்களான்னு கேட்டேன் என்றான் துருவன்.

என்ன புதுசா என்னை பத்தின டீடெயில்ஸ் எல்லாம் கேட்கிறீங்க போல சொல்ல மாட்டேனே என்றாள் நிலா .

நான் ஒன்றும் உன்னை பத்தின டீடெயில்ஸ் கேட்கலையே என்று அவன் கூறிட பார்ரா சமாளிக்கிறீங்க நீங்க என்னை பத்தின டீடெயில்ஸ் தான் கேட்டீங்க நான் பகல் நேரத்துல என்ன பண்றேன் ஏது பண்றேன்னு அதை தெரிஞ்சுக்க நினைக்கிறீங்க அதானே என்றாள் நிலா.

ஆமாம் அப்படித்தான்னு வச்சுக்கோயேன் ஏன் உன்னை பத்தின டீடெயில்ஸ் நான் தெரிஞ்சுக்க கூடாதா என்றான் துருவன். தாராளமா தெரிஞ்சிக்கலாமே ஆனால் இப்போ இல்லை கொஞ்ச நாள் ஆகட்டும் நம்ம ரெண்டு பேரும் இப்போ தான் கொஞ்ச நாளா பேச ஆரம்பித்திருக்கோம் உடனே  என்னை பத்தி நான் எப்படி சொல்லுவேன் என்றாள் நிலா.

எப்போ தான் சொல்லுவ என்றவனிடம் சொல்கிறேன் என்று அவள் ஏதோ சொல்ல வரும் போதே அவன் பட்டென்று போனை வைத்து விட்டான் .

என்ன இது பேசிட்டு இருக்கும் போதே போனை வச்சுட்டாரு என்று நினைத்தவள் அவனது எண்ணிற்கு ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவே இல்லை அவளும் இரண்டு முறைக்கு மேல் அடித்து பார்க்க அவன் எடுக்காது போக என்ன ஆச்சு என்று மெசேஜ் தட்டி விட்டாள். அதுக்கும் அவன் எந்த பதிலும் சொல்லவில்லை உங்களிடம் தான் கேட்டுட்டு இருக்கேன் என்ன ஆச்சு எதுக்கு பேசிட்டு இருக்கும்போது போன வச்சீங்க என்று அவள் மீண்டும் மெசேஜ் அனுப்பினாள் .அதற்கும் எந்த பதிலும் வராமல் போக என்ன இவன் லூசா இருப்பானோ  பேசிட்டு இருக்கும்போதே போனை வச்சுட்டான் என்று நினைத்தவள் ஃபோனை ஓரமாக வைத்து விட்டு தூங்க ஆரம்பித்தாள் .

உறங்கிக் கொண்டிருந்தவளது மொபைல் போன் ஒலித்திட தூக்க கலக்கத்திலே அதை அட்டென்ட் செய்தாள் நிலவேனில்.  ஹலோ யாரு என்ற நிலவேனிலிடம் என்ன மூன் தூங்கிட்டியா என்ற குரலை கேட்டதும் அடித்து பிடித்து எழுந்து விட்டாள்.

…. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!