என் நெஞ்சில் நீ தந்த காயம்…(12)

5
(3)

ஹலோ என்ன இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்கீங்க என்றாள் நிலா.

உன்கிட்ட பேசணும்னு தோணுச்சு அதான் போன் பண்ணினேன் இந்த நேரம் போன் பண்ணினால் நீ என்கிட்ட பேச மாட்டியா என்றான் துருவன். மணி எத்தனை தெரியுமா பதினோரு மணி இந்த டைம்ல நீங்க போன் பண்றீங்க இந்த டைம்ல நான் உங்ககிட்ட பேசுறதை எங்க அம்மா பார்த்தால் என்ன நினைப்பாங்க என்றாள் நிலவேனில்.

ஏழு மணிக்கு பேசுறதை உங்க அம்மா பார்த்தால் அப்ப மட்டும் என்ன உன்னை கொஞ்சுவாங்களா  எத்தனை மணியா இருந்தாலும் நீ ஒரு பையன் கிட்ட  பேசுறது தெரிஞ்சா உங்க அம்மா உன்னை செருப்பால தான் அடிப்பாங்க எனக்காக நீ செருப்படி எல்லாம் வாங்க மாட்டியா மூனு என்றான் துருவன்.

அடடா இது என்ன வம்பா போச்சு உங்களுக்காக நான் ஏன் செருப்படி வாங்கணும் ஆமாம் அப்போ  எதுக்கு பேசிட்டு இருக்கும் போதே நீங்க போனை வச்சிட்டு போனீங்க என்றாள் நிலவேனில்.

இயற்கை அழைத்து விட்டது, அப்புறம் எங்க அம்மா சாப்பிடுப்பான்னு சொன்னாங்க போன்ல வேற சார்ஜ் இல்லை அதனால போன் ஆப் ஆயிடுச்சு சரி என்று போனை சார்ஜ்ல போட்டுட்டு சாப்பிட்டு அப்புறம் கொஞ்சம் வேலை இருந்துச்சு அதெல்லாம் முடிச்சிட்டு இப்போ தான் போனை எடுத்தேன்.  போன் சார்ஜ் ஃபுல் ஆயிடுச்சு .சரி பேசிட்டு இருக்கும்போதே போனை வச்சிட்டோமே அந்த பிள்ளை நம்மள பத்தி என்ன நினைக்கிதோ அப்படின்னு யோசிச்சு தான் இப்போ உனக்கு போன் பண்ணினேன் என்றான் துருவன்.

இயற்கை அழைக்கிறது என்றால் ஒரு வார்த்தை நான் அப்புறமா பேசறேன் மூனு அப்படின்னு நீங்க சொல்லிட்டீங்கன்னா நான் சரின்னு சொல்லி இருப்பேன். என்ன இந்த மனுஷன் பேசிட்டு இருக்கும்போது திடீர்னு போன் வச்சிட்டு போயிட்டாரு அப்படின்னு நான் குழம்பி போயிட்டேன். நெக்ஸ்ட் டைம் இயற்கையை அழைத்தாலும் சரி,  செயற்கை அழைத்தாலும் சரி பேசிட்டு இருக்கும் போது ஒரு கர்ட்டசிக்காக நான் போனை வைக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு வைங்க என்றாள் நிலா.

சரிங்க மேடம்.  மகாராணி சொல்லி விட்டால் மறு பேச்சு உண்டா என்று அவன் கூறிட அவளும் சிரித்தாள்.

உன் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு மூனு என்றான் துருவன். உங்க வாய்ஸ் கூட ரொம்ப மேன்லியா இருக்கு. ஒரு மாதிரி டெரரா இருக்கும் போலையே என்று சிரித்தவள் அப்புறம் என்றிட  அப்புறம் என்ன நீ தான் சொல்லணும் என்றான் துருவன்.

எனக்கு தூக்கம் வருது என்றாள் அவள்.  என்னை விட உனக்கு தூக்கம் தான் முக்கியம் என்று அவன் கேட்டிட உங்களை விட தூக்கம் பெரிசா வா இது என்ன வம்பா போச்சு தூக்கம் வருதுன்னா தூக்கம் வருதுன்னு தான் சொல்ல முடியும் என்னை  விட தூக்க முக்கியமான்னு கேட்டால் என்ன சொல்ல என்னை விட உங்களுக்கு இயற்கையோட அழைப்பு தானே முக்கியமா இருந்துச்சு அது மாதிரி தான் என்று அவள் கூறிட அடிப்பாவி ஒரு மனுஷனுக்கு பாத்ரூம் போறதும் ,தூங்குவதும் ஒன்றாம்மா என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்றான் அவன் .

எப்படி பண்றாங்க சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன் என்று அவள் கேட்டிட சரி சரி நீ போய் தூங்கு அப்புறம் உன் தூக்கத்தை நான் கெடுத்துட்டேன்னு  சொல்லிக் காட்டினாலும் காட்டுவ என்றான் துருவன்.

நான் ஏன் சொல்லி காட்ட போறேன் என்று அவள் கூறிட அப்ப பேசு என்றான். பேசு பேசுனா என்ன பேசுறது நீங்க ஏதாச்சும் கேளுங்க நான் பதில் சொல்கிறேன் என்றால் அவள்.

நான் தான் கேட்டேனே நான் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்ல வில்லை .நீ என்ன வேலைக்கு போறியா இல்லை  ஏதாவது படிக்கிறியா இப்படி உன்ன பத்தி எதுவுமே நீ சொல்ல மாட்டேங்கறியே என்றான் அவன்.

என்ன சொல்லணும் என்னை பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு ஆசைப்பட்டால் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க நானே சொல்கிறேன். இப்போதைக்கு எனக்கு சொல்லுற ஐடியா இல்லை என்றாள் நிலா .

அது தான் ஏன் என்றவனிடம் நீங்க கூட தான் உங்களை பத்தி எதுவுமே சொன்னதில்லை. நான் எதாச்சும் கேட்டனா . நாம யாரு என்ன இதெல்லாம் தெரிஞ்சுக்கிறதை விட தெரியாமலே இருப்போமே.  உங்களுக்கு தெரியுமா தேடல் தான் சுகமானது . நான் யாரு என்னன்னு தெரியாத வரைக்கும் தான் உங்களுக்கு என் மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கும். அதே மாதிரி நீங்க யாருன்னு தெரியாத நேரத்தில் தான் எனக்கும் உங்க மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கும். நம்மளோட இந்த நட்பு ஒரு தேடலோடவே இருக்கட்டும் என்றாள் நிலவேனில்.

உன் கூட பேசும் போது உண்மையிலேயே ரொம்ப புடிச்சிருக்கு மூனு என்றான் துருவன்.  சரி எனக்கு தூக்கம் வருது தூங்கலாமா மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாமா என்றவளிடம் நீ எங்கே பேசுற நாலு வார்த்தை பேசும்போதே சரி வைத்துவிடட்டுமா அப்படித்தான் கேட்கிற.  இப்போ உனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லுற சரி ஓகே போய் தூங்கு என்றவன் ஃபோனை வைக்கப் போக பரவாயில்லை ஹலோ ஹலோ ஒரு நிமிஷம் என்றாள் நிலா.

  என்ன என்றவனிடம் இப்ப எதுக்கு நீங்க சோகமா இருக்கீங்க சரி நான் தூங்க வில்லை நீங்க பேசுங்க என்றாள் அவள். இல்லைம்மா பரவாயில்ல நீ தூங்கு நம்ம நாளைக்கு பேசிக்கலாம் தூக்கத்தை கண்ட்ரோல் பண்ண கூடாது அதுவே பெரிய பிரச்சினையாகும் நீ தூங்கு நம்ம நாளைக்கு பேசலாம் என்று கூறிவிட்டு அவன் போனை வைத்து விட்டான்.

மெத்தையில் சரிந்தாலும் அவனுக்கு உறக்கம் வரவில்லை அவளது நினைவாகவே இருந்தது .என்ன இது நான் ஏன் இப்படி பைத்தியக்காரன் மாதிரி நடந்துக்கிறேன் அந்த பொண்ணு யாரு என்ன எதுவுமே தெரியாது. அப்படி இருந்தும் அவ கிட்ட பேசும் போது என்னவோ தெரியல ஷீ வாஸ் வெரி ஸ்பெஷல் இன் மை லைஃப் என்று கூறிவிட்டு அவளது நினைவிலே கண்ணயர்ந்தான்.

என்னடி இங்க இருந்து என்ன பார்த்துட்டு இருக்க என்ற நிலவேனிலிடம் நம்ம கம்ப்யூட்டர் சாரைத்  தான்டி சைட் அடிச்சிட்டு இருக்கேன் என்றாள் பிரியா.

சைட் அடிக்கிறதுக்கு அப்படி என்ன இருக்கு என்ற நிலாவை முறைத்தவள் என்ன இருக்கா அந்த ஆளுக்கு என்னடி குறைச்சல் நல்லா ஹேண்ட்ஸமா இருக்காரு வாய்ஸ் பார்த்தியா சும்மா டெர்ரர் வாய்ஸ் எவனா இருந்தாலும் பயப்படுற மாதிரி கணீர் என்று கம்பீரமான குரல் என்ற பிரியாவிடம் அதெல்லாம் ஒரு குரல்  அதை போய் புடிச்சிருக்குன்னு சொல்லுற நீ சுத்த வேஸ்ட் ப்ரியா என்றாள் நிலா .

அந்த வாய்ஸ்க்கு என்ன உனக்கு என்ன எஸ்பிபி வாய்ஸ்ல பாடம் நடத்தினால் தான் பாடம் புரியுமா என்ன என்ற ப்ரியாவிடம் எந்த வாய்ஸ்ல எடுத்தாலும் பாடம் புரியம் ஆனால் அதுக்காலாம் அந்த ஆளை சைட் அடிக்கிற பாரேன் அதுதான் கொஞ்சம் மனசு வலிக்குது என்றாள் நிலா .

ஏன் நீ அவருக்கு ரூட்டு விட ட்ரை பண்ணுறியா என்ற பிரியாவிடம் ஐயையோ வேண்டப்பா நீயே வச்சுக்கோ எனக்கு வேண்டாம் என்று சிரித்தாள் நிலவேனில். என்னடி என்னை விட்டுட்டு ரெண்டு பேரும் என்னமோ ரகசியம் பேசுறீங்க என்று வந்த கனிஷ்காவிடம் உன் ஆளு அனகோண்டா குரலை பிரியா அவளோட ஆளா பிக்ஸ் பண்ண போறாளாம் என்றாள் நிலவேனில்.

என்னது என் ஆளா நான் எப்படி ஃபிக்ஸ் பண்ணினேன் சும்மா சைட் அடிச்சேன் ஆள் நல்லா இருக்காரேனு   என்றாள் பிரியா .

என்னது சைட் அடிச்சியா அப்போ உன் ஆள் இல்லையா என்ற நிலவேனிலிடம்,  நிலா அவளுக்கு  தான் சிபி இருக்கிறானே என்றாள் கனிஷ்கா.

சிபி யா அது யாரு என்ற நிலவேனிலிடம் நம்ம கிளாஸ் பையன் தாண்டி நம்ம கிளாஸ்  பசங்க பெயர் கூட உனக்கு தெரியல நீ எல்லாம் எங்கிட்டு உருப்பட போற என்றாள் பிரியா.

நம்ம கிளாஸ்ல சிபினு எவன்டீ இருக்கான் என்ற நிலாவிடம் சிவப்பிரகாஷ்  இவள் செல்லமா சிபினு கூப்பிடவாள் என்றாள் கனிஷ்கா.

அடியே குள்ளச்சி உனக்கே இவ்ளோ மேட்டர் தெரிஞ்சு இருக்கா நீ கூட என்கிட்ட சொல்லவே இல்லை என்ற நிலாவிடம் நீ கூட தான் இப்போ எல்லாம் உன் ஆளு கிட்ட என்ன பேசுறேன்னு என்கிட்ட சொல்ல மாட்டேங்குற என்றாள் கனிஷ்கா.

என்னடி சொல்றீங்க நிலாவுக்கு ஆளா யாரடி அவன் என்று ஆர்வமாக கேட்டாள் பிரியா. ஆளும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது .ஒரு ராங் கால் அவன் ஃப்ரெண்ட் ஆயிட்டான். அவன் கூட டெய்லி நான் பேசுவேன் இவன் அவனை என்னோட ஆள் என்று சொல்லி ஓவரா ஓட்டுவா அவ்ளோதான் என்றாள் நிலவேனில்.

ராங்க் நம்பர்ல வந்த ஒருத்தனை கரெக்ட் பண்ணிட்டியா எப்படி நிலா எப்படி இந்த டெக்னிக் எல்லாம் இந்த காதல் கோட்டை படம் மாதிரி பார்க்காமலே காதல் அந்த மாதிரியா என்ற பிரியாவிடம் அம்மா தாயே இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டி காதல் கோட்டையைவே ஓட்டுவீங்க . வேற ஏதாவது படம் இருந்தால் சொல்லு சும்மா காதல் கோட்டை காதல் கோட்டைன்னுட்டு,  காதல் கோட்டையும் இல்லை ஜமீன் கோட்டையும் கிடையாது.

அவன் என்ன பொறுத்த அளவுல யாரோ,  நான் அவனுக்கு யாரோ ரெண்டு பேருக்கும் டைம்பாஸுக்காக பேசுறோம் அவ்வளவுதான் என்றாள் நிலவேனில்.

இவள் இப்படித்தான் சொல்லுவா நீ வேண்டும் என்றால் பாரேன் நம்ம ஸ்கூல் முடிகிறதுக்குள்ள நான் அந்த போன் கால் பேசுறவனை லவ் பண்றேன்னு நம்ம கிட்ட தான் வந்து நிற்பாள். அன்னைக்கு இவளை டீல் பண்ணிக்கலாம்.  இப்ப தான் நானும் வந்துட்டேனே  அனகோண்டா குரலை உன் கூட சேர்ந்து சைட் அடிக்கிறேன் என்று கூறினாள் கனிஷ்கா. அவரு போயி ஆறு மாசம் ஆச்சு இப்போ தான் சைட் அடிக்கிறாளாம். போடி இவளே என்றாள் ப்ரியா.

சரியான பைத்தியங்கள் என்று தலையில் அடித்து விட்டு நிலவேனில் வெளியே செல்ல அந்த நேரம் துருவநேத்ரன் வகுப்பறைக்குள் நுழைந்தான் .

ஏண்டி குரங்குகளா யாரைடி இவ்ளோ நேரம் சைட் அடிச்சிட்டு இருந்தீங்க இந்த ஆளு  உள்ளே வந்துட்டு இருக்கு என்று நிலவேனில் கேட்டிட அவரு தான் தான் நம்ம பேச ஆரம்பிச்ச உடனே பைக் நிப்பாட்டிட்டு போயிட்டாரே சும்மா தானே பேசிட்டு இருந்தோம்.   என்று பிரியா கூறிட கடவுளே எனக்கு வாய்த்த பிரண்ட்ல பூராவும் எப்படி தான் பைத்தியங்களா இருக்கோ என்று புலம்பியபடி வகுப்பறையில் அமர்ந்து விட்டாள் .

இனிமேல் உங்க கிளாஸ்க்கு நான் தான் கம்ப்யூட்டர் டீச்சர். ரேணுகா மேடத்துக்கு மேரேஜ் ஆனதுனால அவங்க இனிமேல் வர மாட்டாங்க என்று துருவன் கூறிட நிலா உனக்கு கரு நாக்குடி எந்த நேரத்துல சொன்னியோ இப்ப இந்த ஆளே நம்ம கிளாசுக்கு டீச்சரா வந்துட்டாரு என்றால் கனிஷ்கா.

ஜன்னல் வழியாக நின்று சைட்

அடிக்கிறது கண்ணெல்லாம் வலிக்குது கிளாஸ் ரூம்லையே இருக்கட்டும் அப்பப்போ சைட் அடிச்சுக்கலாம் சார் ரொம்ப ஹேன்ட்சம் தானே கனி என்றாள் பிரியா. சிபி கூட இதே கிளாஸ் ரூம்ல தான் இருக்கிறான். அங்கே பாரு அவன் உன்ன முறைச்சிக்கிட்டே இருக்கான் கொஞ்சம் எட்டி பார்த்துட்டு அப்புறமா சைட் அடி என்று கனிஷ்கா கூறிட ஏன் டி என்று தலையில் அடித்துக் கொண்டாள் நிலவேனில்.

…. தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!