என்னமா இது என்ற துருவனிடம் உனக்கு வந்த பார்சல் பாண்டி நீயே பிரிச்சு பாரு அம்மா பிரிக்க வில்லை என்று சொல்லிவிட்டு சுடர்விழி சென்று விட அந்த பார்சலை அவன் பிரித்துப் பார்த்தான் .
அதில் ஒரு கிரீட்டிங் கார்டுடன் ஒரு கடிதமும் இருந்தது. அவன் பிரித்துப் படிக்க ஹாய் டியர் முனி நான் தான் உங்க மூனு. எப்படி இருக்கீங்க, இது என்னோட ஃபர்ஸ்ட் கிரீட்டிங் கார்டு இன்னைக்கு ஃப்ரெண்ட்ஷிப் டே அதனால நம்மளோட ஃபர்ஸ்ட் பிரண்ட்ஷிப் டேவோட கிரீட்டிங் கார்டு இது. அதோட ஒரு பிரண்ட்ஷிப் பேண்ட் வச்சிருக்கேன் அதை எடுத்து உங்க கையில போட்டுக்கோங்க இல்லை என்னை நேரில் பார்க்கிற அன்னைக்குன்னு நான் தான் கட்டி விடணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்க அப்படின்னா பத்திரமா வச்சுக்கோங்க என்று ஒரு கடிதம் இருந்தது. அதை பார்த்து புன்னகைத்தவன் அவள் கொடுத்த கிரீட்டிங் கார்டை வாசித்தான். அதில் அழகான கவிதை ஒன்றை எழுதி வைத்திருந்தாள் அவனது மூன்ஃபையர்.
யாரென்று உனை அறியேன்
நண்பனே…
நின் பெயர் கூட அறியேன்
நண்பனே…
இருந்தும் நமக்குள் பூத்த
மலராக நம் நட்பு…
இதை படிக்கும் போது
உன் முகத்தில் வரும்
சிரிப்பு….
இப்படிக்கு…
மூன்ஃபையர்…
இன்று எழுதி இருக்க அதை படித்தவன் புன்னகைத்த விட்டு அதை பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தான். அவளது எண்ணிற்கு ஒரு மெசேஜை தட்டி விட்டான் உன்னுடைய கவிதை ரொம்ப அழகா இருக்கு மூனு என்று அவன் அனுப்பி வைத்துவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்தான் .
அவள் வழக்கம் போல் இரவு எட்டு மணிக்கு மேல் அவனது மெசேஜை பார்த்து புன்னகைத்து விட்டு பதில் அனுப்பினாள் .அது கவிதைன்னு நீங்க மட்டும் தான் சொல்லணும் கண்டிப்பா நானே ஒதுக்க மாட்டேன் அவ்வளவு கேவலமா நான் எழுதியும் அதை நல்லா இருக்குன்னு என் மனசு ஆறுதலுக்காக சொல்றீங்க பாத்தீங்களா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு முனி என்று அவள் டைப் செய்து அனுப்பி வைத்தாள்.
நீ அனுப்பி இருக்கிற பிரண்ட்ஷிப் பேண்ட நான் இன்னும் என் கையில போட வில்லை என்று அவனும் பதில் அனுப்பினான்.
ஏன் என்று அவள் அனுப்ப கால் பண்ணவா என்று அவன் கேட்டான். சரி என்று அவளும் கூறினாள் .உடனே அவன் போன் செய்து விட்டான்.
நீதான் அதில் சொல்லி இருந்தியே நீங்க கைல போட்டுக்கிட்டாலும் சரி இல்லை நம்ம நேர்ல பார்க்கும்போது என் கையால உங்க கையில போட சொன்னாலும் சரின்னு அதனாலதான் நான் போட வில்லை என்று அவன் கூறிட ஓ அப்படியா சரி சரி என்றாள் நிலவேனில் .
என்ன சரி சரி நீ எதுவும் நினைச்சுக்கிட்டியா என்றான் துருவன். நான் என்ன நினைக்க போகிறேன் என்ற நிலாவிடம் பிரண்ட்ஷிப் பேண்ட் போட்டால் நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட் மட்டும் தான். உனக்கு என் மேல தான் லவ் இருக்கே அதனால நான் இந்த பேண்டை போடக்கூடாது அப்படின்னு நீ நினைச்சிருப்பியோ என்றான் துருவன்.
உங்க மேல எனக்கு லவ்வு நல்லா சொல்லுவீங்க போங்க போங்க ஆசை தான் என்று அவள் கூறினாள் .
ஆமாம் ஆசை தான் என்றான் துருவன். நல்ல பிளர்ட் பண்றீங்க நீங்க சரியான கேடி என்றாள் நிலவேனில்.
நான் கேடி எல்லாம் கிடையாது நான் ரொம்ப தங்கமான பையன் அதனாலதான் உன்கிட்ட இவ்வளவு சாப்டா பேசிட்டு இருக்கேன் என்றான் துருவன் .
ஆமாம் ரொம்ப சாப்ட் தான் . ஆத்தாடி தெரியாத்தனமா பொறுக்கின்னு சொல்லிட்டு உங்க கிட்ட நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் என்று அவள் சிரித்திட இப்பவும் சொல்கிறேன் நீ பொறுக்கின்னு சொன்னது பெரிய தப்பு நீ மட்டும் சாரி கேட்காமல் இருந்திருந்த அப்படின்னா உன்னை நேரில் பார்க்கிற அன்னைக்கு கண்டிப்பா பளார் பளார்னு உன் கன்னத்துல நான்கு அறை கொடுப்பேன் என்றான் துருவன்.
ஆத்தி பயங்கரமான ஆளா இருப்பீங்க போலயே அப்படினா உங்க கண்ணுல நான் படவே கூடாது என்று சிரித்தாள் நிலவேனில்.
என் கண்ணில் படாமல் தப்பிச்சிடுவியா தப்பிக்க விட்டு விடுவேனா. கண்டிப்பா நீ யாருன்னு நான் கண்டுபிடிச்சிடுவேன் என்றான் துருவன். அப்படியா சரி கண்டுபிடிங்க பார்க்கலாம் என்ற நிலவேனிலிடம் நீ பார்சல் அனுப்பி இருந்தியே அதில் உன்னோட அட்ரஸ் ஒரிஜினல் நேம் எல்லாம் இருக்க தானே செய்யும் என்று அந்த பார்சல் கவரை அவன் தேடிப் பார்த்தான். அதில் ஃப்ரம் அட்ரஸ் இல்லாமல் இருக்கவும் நீ தான் கேடி என்ன கேடினு சொன்னில நீ பயங்கரமான கேடியா இருப்ப போல உன்னோட அட்ரஸ் இதுல மென்ஷன் பண்ணி இருந்தால் நான் கண்டுபிடிச்சிடுவேன்னு ஃப்ரம் அட்ரஸே இல்லாமல் மேடம் பார்சல் அனுப்புறீங்க நல்ல ஆளு தான் போ என்றான் துருவன்.
என்னை கன்னத்தில் ஏறே அறைவேன்னு சொல்லுறீங்க அதுவும் ஒரு அறை கிடையாது பளார் பளார் என்று நான்கு அறைன்னு சொல்றீங்க ஏன் அட்ரஸ் கொடுத்து என்னை வந்து அறைஞ்சிட்டு போங்க சார்னா சொல்ல முடியும். நான் ரொம்ப உசாருப்பா என்றாள் நிலவேனில்.
நல்ல உசாரு தான் போ என்றான் துருவன். சரி சாப்பிட்டீங்களா என்றாள் நிலவேனில். என்னோட மூணு வந்து வானத்தில் தெரிகிற மூனைக் காட்டி எனக்கு சோறு ஊட்டணும். அப்போ தான் நான் சாப்பிடுவேன் என்றான் துருவன்.
ஆத்தி இது பொல்லாத ஆசையாவுல இருக்கு நீங்க என்ன ஆறு மாச குழந்தையா உங்களை தூக்கி இடுப்புல வச்சு செல்ல குட்டி ,தங்க குட்டி உங்கா சாப்பிடுங்க ,மம்மு சாப்பிடுங்கன்னு சொல்லி ஊட்டி விடறதுக்கு என்றாள் நிலவேனில்.
ஊட்டி விட இடுப்பில் உட்கார வைத்து எனக்கு ஓகே தான் பா என்றான் துருவன். என்னத்துக்கு என் இடுப்பு உடைஞ்சு ஹாஸ்பிடல்ல கிடக்கிறதுக்கா என்றாள் அவள்.
ஒரு லவ்வர் ஆசைக்காக ஊட்டி விட்டால் என்ன தப்பா என்றான் துருவன். உங்களோட ஒரே வம்பா போச்சு ஏதோ நம்ம ரெண்டு பேரும் பேசுறது லவ்வர்ஸ் பேசுகிற மாதிரி எனக்கே பீல் ஆகுது என்றாள் நிலவேனில். ஆமாம் நீயும், நானும் லவ்வர்ஸ் தானே என்றான் தருவன் .
நீங்க யாரு என்ன எதுவுமே எனக்கு தெரியாது அப்படி இருக்கும்போது எப்படி உங்களை லவ் பண்ணுறது. நான் யாரு என்னன்னு உங்களுக்கு தெரியாது அப்புறம் எப்படி லவ் எல்லாம் நமக்குள்ள செட்டாகாது தலைவரே நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸாவே இருக்கலாம் என்றாள் நிலவேனில். சரி வேற என்ன என்ற துருவனிடம் வேற என்ன வேற ஒன்னும் இல்லையே என்றாள் நிலா .
சரி நீ சாப்டியா என்ற துருவனிடம் இன்னிக்கி எங்க மம்மி பணியாரம் செஞ்சு கொடுத்தாங்க பால் பணியாரம் என்றாள் நிலவேனில் .
மேடத்துக்கு பால் பணியாரம் ரொம்ப பிடிக்குமோ என்ற துருவனிடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சூப்பரா இருக்கும் அதுவும் எங்க மம்மியோட கையால எது செஞ்சாலும் தேவாமிர்தம் மாதிரி இருக்கும் என்றாள் நிலவேனில்.
அப்போ உங்க மம்மி கையால ஒரு நாள் எனக்கு சாப்பாடு செய்து கொண்டு வருவியா என்றான் துருவன். என் கையால வேண்டும் என்றால் செஞ்சு கொண்டாந்து தரேன் . என் மம்மி செய்யும் சாப்பாடு எல்லாம் உங்களுக்கு கிடையவே கிடையாது என்று அவள் சிரித்துக் கொண்டே கூறினாள்.
உனக்கு சமைக்க தெரியுமா என்றான் துருவன். சூப்பரா சமைப்பேன் . என் அம்மாவை விட நல்லா சமைப்பேன்னு எங்க அம்மாச்சி சொல்லுவாங்க என்றாள் நிலா. சரி மூனு எனக்கே தூக்கம் வந்துருச்சு இன்னைக்கு நீ போய் தூங்கு பாய் என்று அவன் போனை வைத்துவிட அவளும் பாய் என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.
நாட்கள் அழகாக சென்றது இருவரும் தினமும் போனில் உரையாடாமல் உறங்கிய நாட்களே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு ஒருவர் மீது ஒருவர் இனம் புரியாத உணர்வில் லயித்திருந்தனர். இருவருக்குமே இருவருடைய பேச்சும் மிகவும் பிடித்திருந்தது இது நட்பா, காதலா என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. அவனுடன் பேசுவது அவளுக்கு பிடித்திருக்கிறது. அவனுக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான் இதை காதல் என்று அடுத்த நிலைக்கு கொண்டு செல்லலாமா என்ற தவிப்பு அவனுள் இருந்தாலும் அவளிடம் அதை அவன் கூறவில்லை. எங்கு நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறிவிட்டால் அவள் பேசாமல் போய்விடுவாளோ என்ற பயத்திலே அவன் தனது காதலை அவளிடம் கூறாமலே இருந்தான். அவளைப் பற்றி அவனும் ஒவ்வொரு முறையும் விசாரித்துக் கொண்டே இருந்தான். ஆனால் அவள் தான் ஒரு நாளும் தன்னைப் பற்றிய எந்த தகவலையும் அவனிடம் கூறாமலே தவிர்த்து வந்தாள் .
என்னாச்சு நிலா டல்லா இருக்க என்ற கனிஷ்காவிடம் ஒன்னுமில்லை கனி எக்ஸாம்ல மார்க் எல்லாம் ரொம்ப பூவரா இருக்கு அதுதான் அம்மா திட்டுவாங்களே என்றாள் . ஏன் பூவரா இருக்கு என்ற கனிஷ்காவிடம் இந்த மேத்ஸ் டியூஷன் போனாலும் புரிய மாட்டேங்குது நான் என்ன பண்ணட்டும் என்றாள் நிலவேனில். நிஜமாவே புரியலையா என்ற கனிஷ்காவிடம் புரியுது ஆனா புரியாத மாதிரி இருக்கு எங்கேயோ சொதப்புகிறேன். சரி ஓகே பாத்துக்கலாம் என்றாள் நிலவேனில் .நிலா என்ற குரலில் அவள் திரும்பிட துருவன் நின்றிருந்தான்.
என்னங்க சார் என்றவளிடம் கொஞ்சம் இங்கே வரீங்களா மேடம் என்றான் துருவன். அய்யய்யோ என்னடி பண்ணி தொலைஞ்ச என்ற கனியிடம் தெரியலையே இரு கேட்டுட்டு வரேன் என்று கூறிவிட்டு அவள் அவனருகில் செல்ல என்னது இது என்றான் அவன்.
செல்போன் சார் என்ற நிலாவை முறைத்தவன் ஸ்கூலுக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது உங்களுக்கு தெரியாதா என்றான் துருவன். பிரின்சிபால் கிட்ட பர்மிஷன் வாங்கி தான் எடுத்துட்டு வரேன் சார். கிளாஸ் டீச்சர் கிட்ட எப்போதும் கொடுத்து வச்சுருப்பேன். ஈவ்னிங் வீட்டுக்கு போகும் போது வாங்கிப்பேன். இன்னைக்கு என்னோட கிளாஸ் டீச்சர் மகேஸ்வரி மேடம் வர வில்லை அதனால தான் நானே வெச்சிருந்தேன் என்றாள் நிலவேனில். பர்மிஷன் வாங்கி யூஸ் பண்றீங்களா எனக்கு புரிய வில்லை என்றவனிடம் சார் எங்க அம்மா ஹார்ட் பேஷண்ட் .வீட்லயும் வேற யாரும் கிடையாது நானும் , அம்மாவும் மட்டும் தான். தாத்தா ,பாட்டி, மாமா எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க அம்மாவுக்கு ஏதாவது எமர்ஜென்சி அப்படின்னா எனக்கு கால் பண்ணி சொல்லுவாங்க . அதுக்காக தான் போன் எப்பவுமே என் கூடவே வச்சிருப்பேன். பிரின்சிபல் கிட்ட பர்மிஷன் வாங்கி தான் வச்சிருக்கேன் டெய்லி கிளாஸ் டீச்சர் கிட்ட கொடுத்து வைத்துவிடுவேன் இன்னைக்கு மேடம் லீவ்னால மறந்துட்டேன் சாரி என்று அவள் கூறினாள். சரி ஓகே இந்தாங்க என்று அவளிடம் அதை கொடுத்தான் துருவன். இல்லை சார் நீங்களே வச்சிருங்க நான் கிளாஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் வாங்கிக்கிறேன் என்றாள் நிலவேனில். இல்லம்மா பரவாயில்ல வச்சுக்கோங்க ஒன்றும் பிரச்சனை இல்லை இது லாஸ்ட் பீரியட் தானே என்று கூறிவிட்டு அவன் தன் வேலையை பார்க்க அவளோ சிஸ்டத்தில் அமர்ந்து படம் வரைய ஆரம்பித்தாள்.
…. தொடரும்….