என் நெஞ்சில் நீ தந்த காயம்…(2)

4.8
(5)

என்னடீ சொன்ன அந்த அனகோண்டா குரலு என்னோட ஆளா உன்னை என்று விரட்டினாள் கனிஷ்கா. வேண்டாமா பார்க்க நல்லா ஹாண்ட்சம்மா இருக்காரு. அதான் நீ வேற ரொம்ப நாளாக சிங்கிள் சிங்கமா சுத்துறியா அதான் என்றாள் நிலவேனில்.

மேடம் எப்போ மிங்கிள் ஆனிங்க நாங்க மட்டும் சிங்கிள் என்றாள் கனிஷ்கா. பேபி எனக்கு லவ் பண்ணுறதுல எல்லாம் இன்ரஸ்ட் இல்லையே. நான் எப்படியாவது டென்த் பாஸ் பண்ணனும். அப்பறம் எப்படியாவது ஃபர்ஸ்ட் குரூப் எடுக்கணும் , சிவில் இன்ஜினீயரிங் படிக்கணும் இப்படி நெறய ஆசை இருக்கு. லவ் பண்ணினால் கான்சன்ரேஷன் மிஸ் ஆகி டென்த் ஃபெயில் ஆகி வீட்டில் இருக்க வேண்டியது தான். ஆல்ரெடி அத்தை பையன், மாமா பையன் எல்லாம் கல்யாண வயசு வந்தும் என்னை தான் கட்டிப்பேனு சுத்திட்டு இருக்கானுங்க அதுல எவனையாவது பிடிச்சு கட்டி வச்சுறுவானுங்க என்றாள் நிலவேனில்.

பேசாமல் நான் நிலாவா பிறந்திருக்கலாம் என்ற கனிஷ்காவிடம் ஏன் மா ஏன் உனக்கு இந்த விபரீத புத்தி என்றாள் நிலவேனில்.

பின்னே எத்தனை அத்தை பசங்க, எத்தனை மாமா பசங்க கொடுத்து வச்சவள் டீ நீ என்றாள் கனிஷ்கா.

அட எருமை மாடு நீ சந்தோஷமா இருக்க என்ன நினைச்சு பாரு ஏதாச்சும் சொந்தக்கார வீட்டுக்கு போனால் நீ என் பையனை தான் கட்டிக்கனும் மருமகளே  அப்படின்னு ஒரு அத்தை கேட்கும் சரின்னு இன்னொரு ஏதாவது விசேஷத்துக்கு போனால் நீ என் பையனை தான் கட்டிக்கணும் அப்படின்னு இன்னொரு அத்தை கேட்கும்.

என்னமோ ஊர்ல பொண்ணே கிடைக்காதது மாதிரி நான் ஒருத்தி தான் பொண்ணுனு இருக்குறது மாதிரி இந்த சொந்தக்காரங்க தொல்லை அதுவும் எங்க அப்பா கூட பொறந்தவங்க, அம்மா கூட பிறந்தவங்க ஒன்னு வீட்டு அத்தை இரண்டு விட்ட அத்தை இவங்க தொந்தரவு எல்லாம் அனுபவிச்சா மட்டும் தாண்டி தெரியும் பிசாசு சந்தோஷமா இரு என்றாள் நிலவேனில் .

ஆமா உனக்கு எத்தனை  என்ற கனிஷ்காவிடம் அப்பா கூட பிறந்தவங்க  நான்கு அத்தை ஒவ்வொரு அத்தைக்கும் ரெண்டு ரெண்டு பசங்க மூன்று மாமா ஒவ்வொரு மாமாக்கும் ரெண்டு ரெண்டு பசங்க கணக்கு பண்ணிக்கோ எத்தனை பேர் வர்றாங்கன்னு என்று சிரித்தாள் நிலவேனில்.  அடிப்பாவி உனக்கு 14 முறைப் பசங்களா என்ற கனிஷ்காவிடம் ஆமாம் பேபி ரொம்ப கஷ்டம் என்று சிரித்தாள் நிலவேனில் .

சரி சரி அப்போ வந்து இந்த அனகோண்டா குரலு எனக்குத்தான் என்றாள் கனிஷ்கா. அம்மா தாயே தாராளமா வச்சுக்கோ யாரு வேண்டாம்னு சொன்னது என்று சிரித்த நிலவேனிலிடம்  இப்போ இப்படி சொல்லிட்டு நாளை பின்னே நீ போட்டிக்கு வந்தன்னு வச்சுக்கோயேன் உன் சங்கை கடிச்சு துப்பிருவேன் என்றாள் கனிஷ்கா.

வர மாட்டேன் அப்படின்னு முழுசா சொல்ல முடியாது நீ எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணு ஆளு வேற பார்க்க கொஞ்சம் நல்லா இருக்காரா ஒருவேளை டென்த் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் இதே ஸ்கூல்ல படிச்சோம் அப்படின்னா அப்போ டிசைட் பண்ணிக்கலாம் அந்த அனகோண்டா குரல் உனக்கா, எனக்கானு என்று சிரித்த நிலவேனிலின்  தலையில் நங்கென்று கொட்டினாள் கனிஷ்கா.

ஆமாம், புதுசா போன் வாங்கி இருக்கேன்னு சொன்னியே என் நம்பரை சேவ் பண்ணுனியா என்ற கனிஷ்காவிடம் ஐயோ இல்லையே உன்னோட நம்பர் நான் சேவ் பண்ணலையே என்றாள் நிலவேனில்.

சரி என்னோட நம்பரை நான் சொல்கிறேன் நீ வீட்ல போயி சேவ் பண்ணி எனக்கு மெசேஜ் அனுப்பு தயவு செஞ்சு கால் பண்ணிடாத எங்க மம்மி அப்புறம் திட்ட ஆரம்பிச்சுடும். என்றால் கனிஷ்கா .

கால் பண்ண மாட்டேன் பேபி மெசேஜ் தான் உன்னோட நம்பர் மட்டும் சொல்லு என்றாள் நிலவேனில். சரி என்று கனிஷ்காவும் தனது மொபைல் எண்ணை கூறிட நிலவேனில் அதை தன் நோட்புக்கில் எழுதிக் கொண்டால் சரி டி நான் வீட்டுக்கு போனதும் மெசேஜ் பண்ணுகிறேன் என்ற நிலவேனில் சரி விளையாடலாமா என்றாள் .

என்ன விளையாடலாம் என்ற கனிஷ்காவிடம் உன் ஹைட்டுக்கு பாஸ்கெட் பால் முடியவே முடியாது சும்மா ஏதாச்சு ஓடிப் பிடிச்சு விளையாடுவோம் வேற என்ன பண்ணுறது என்று சிரித்த நிலவேனிலை முறைத்தவள்  எருமை மாடு பனைமரத்துல பாதி உயரம் நீ வளர்ந்துட்டு என்னை குட்டச்சின்னு சொல்லிட்டு இருக்கியா? என்றாள் கனிஷ்கா .

நான் எங்கேடி பனைமரத்துல பாதி வளர்ந்து இருக்கேன் .பனை மரத்தோட வளர்த்தி என்னன்னு உனக்கு தெரியுமா? அது பக்கத்தில் போய் நின்று பாத்தால் அதில் கால்வாசி கூட நான் கிடையாது நான் என் வயசுக்கு சரியான உயரத்துல தான் இருக்கேன் நீ குள்ளமா இருந்தால் அதுக்கு நான் என்ன பண்ண முடியும் குள்ளச்சி என்றாள் நிலவேனில். போடி நெடுமாடு,  குரங்கு என்று தன் தோழியை திட்டிக் கொண்டிருந்தாள் கனிஷ்கா.

நீங்க ரெண்டு பேரும் என்னடி ரொம்ப நேரமா பேசிக்கிட்டே இருக்கீங்க மத்த கேர்ள்ஸ் எல்லாம் விளையாடிட்டு இருக்காங்க ரெண்டு பேரும் மரத்தடியில் உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்கீங்களா என்று வந்த உடற்கல்வி ஆசிரியை டெய்சி இடம் இல்லை மேடம் அவளுக்கு க வயிற்று வலிஅதனாலதான் நான் துணைக்கு உட்காந்து இருக்கேன் என்றால் நிலவேனில் .

ஸ்டொமக் பெயினா ஏன் மன்த்லி பீரியட்ஸா என்று ஆசிரியர் கேட்கவும் ஆமாம் மேடம் என்று வேகமாக கூறினாள் நிலவேனில்.

சரி சரி போய் ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு ஆசிரியர் தன் வேலையை கவனிக்க.

நாயே எனக்கு இங்க எனக்கு எப்போடி வயிற்றுவலி வந்துச்சு என்றாள் கனிஷ்கா . விளையாடாமல் கதை பேசிட்டு இருக்கோம் என்று சொல்லிட்டு வந்து அந்த அம்மா பனிஷ்மெண்ட் என்கிற பேர்ல கிரவுண்டை சுத்த விட்டுச்சின்னா யார் ஓடுறது அதான் இப்படி ஏதாச்சும் அப்பப்ப பொய் சொல்லிக்கிட்டு இருந்தால் தான்டி தப்பிக்க முடியும் முட்டா பீசு என்றாள் நிலவேனில்.

ஆமாடி நீயெல்லாம் ஒரு பிரண்டுன்னு உன்ன நம்பி உன் கூட பழகுனா நீ என்ன முட்டாள் பீஸ் என்று தான் சொல்லுவ குரங்கு குரங்கு என்றாள் கனிஷ்கா.

என் மூஞ்சி குரங்கு மூஞ்சி மாதிரியா இருக்கு என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் பார்த்தால் அப்படி தெரியலையே என்றது ஒரு ஆண் குரல்.

அவள் திரும்பிய அவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் நரேந்திரன். இந்த குரங்கு எப்போ வந்தான் என்று நினைத்தவள் அவனை முறைத்து விட்டு செல்ல பார்க்க நிலா என்றான் நரேந்திரன்.

நான் பேசிட்டு இருக்கேன் நீ பேசாமல் இருக்க  என்றவனை பார்த்து முறைத்தவள் ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிரு உங்க சார் இங்கே தான் பாத்துட்டு இருக்காரு அப்பறம் கிரவுண்டை சுத்த வச்சுற போறாரு என்று அவள் கூற அதானே நம்ம ஏதாச்சும் பொம்பளை பிள்ளை கிட்ட பேசினாலே இந்த ஆளுக்கு மூக்கு வேர்த்திடுமே என்று கூறிக் கொண்டே அவன் சென்று விட பாவம்டி ரொம்ப நாளா பின்னாடியே சுத்திட்டு இருக்கான் கொஞ்சம் மனசு இறங்கி கருணை காட்டலாம்ல என்றாள் கனிஷ்கா .

இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவனை எல்லாம் நான் பார்க்க சீ போ என்றாள் நிலவேனில் . ஆமாம் இவள் பெரிய எலிசபெத் மகாராணி தான் இவனை எல்லாம் பார்க்க மாட்டாள என்றால் கனிஷ்கா .

என்னப்பா முதல் நாள் ஸ்கூல் எப்படி இருந்துச்சு என்ற சுடர்விழியிடம் அதெல்லாம் நல்லாதான் அம்மா இருந்துச்சு. நான் என்னமோ ஃபர்ஸ்ட் டைம் ஸ்கூலுக்கு போறது மாதிரி சொல்றீங்க ஆல்ரெடி த்ரீ மந்த்ஸ் வேற ஒரு ஸ்கூல்ல வேலை பார்த்தேன் இப்போ அதைவிட கொஞ்சம் பெரிய ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்கு அதனால இங்க வந்துட்டேன் என்றான் துருவநேத்ரன்.

இருந்தாலும் இந்த ஸ்கூல்ல பர்ஸ்ட் டே தான அதனால கேட்டேன் என்ற சுடர்விழி சரிப்பா வா  சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட வா என்றார்.

இல்லமா கொஞ்ச நேரம் ஆகட்டும் நான் அப்புறமா சாப்பிடுறேன் என்று துருவ நேத்ரன் தன்னறைக்கு சென்றான்.

என்னடி ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கியா என்ற வெண்மதி இடம் இல்லமா ஒரு கால் மணி நேரம் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றாள் நிலவேனில் .

நீயும் ஒரு சாவியை எடுத்துட்டு போடி என்று நான் எத்தனை முறை சொல்லுறது எப்போ பாத்தாலும் சாவியை மறந்து வச்சிட்டு போயிடுவது நான் ஆபீஸ் போயிட்டு வீட்டுக்கு வரும் வரைக்கும் வாசல்லயே தவம் கிடக்கிறது  என்றார் வெண்மதி.

மறந்து விட்டேன் மை டியர் ஸ்வீட் மம்மி என்று அவரது கன்னத்தில் முத்தமிட்ட மகளின் கன்னத்தை கிள்ளியவர் சும்மா இப்படி ஐஸ் வைத்து ஐஸ் வச்சு என்னை ஏமாத்தாத என்றவர் சரி நைட்டுக்கு என்ன சாப்பாடு செய்யட்டும் என்றார்.

அம்மா எனக்கு பரோட்டா வேணும் என்ற நிலவேனிலிடம் சரி அப்போ நான் மாமாக்கு போன் பண்ணி வாங்கிட்டு வர சொல்கிறேன் என்ற வெண்மதி தனது தம்பிக்கு போன் செய்தார்.

அம்மா புரோட்டா மட்டுமில்லை கூடவே எனக்கு சிக்கன்  65 வேண்டும் என்ற நிலவேனிலிடம் சிக்கன் 65 ,ஆம்லெட் எல்லாமே சொல்கிறேன் போதுமா தாயே என்றார் வெண்மதி. குட் மம்மி என்று தனது அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டாள் நிலவேனில்.

சரி போ போயி குளிச்சிட்டு டிரஸ் மாத்தி விட்டு சாமி கும்பிடு என்ற வெண்மதி தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

சரி என்று அவளும் குளித்து விட்டு வந்து சாமி கும்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்றாள். கனிஷ்கா போன் நம்பரை சேவ் பண்ணனுமே என்று நினைத்தவள் தனது நோட்புக்கில் இருந்த  அந்த எண்ணை சேவ் செய்து விட்டு ஹாய் செல்லம் இது தான் என்னோட நம்பர். லவ் யூ பேபி இப்படிக்கு மூன்ஃபையர் என்று மெசேஜ் அனுப்பி வைத்தாள்.

என்ன மேசேஜ் சத்தம் என்று தன் ஃபோனை எடுத்து பார்த்த துருவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

இந்த வாத்தி எதுக்கு சிரிக்குது என்னவா இருக்கும் 🤔🤔🤔

…. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!