அன்புள்ள துருவன் சாருக்கு,
ஹாப்பி மேரிட் லைஃப் சார், இனி உங்கள் வாழ்க்கையில் எப்பவுமே என்னோட தொல்லை இருக்காது. நான் உங்க கூட பேசின அந்த நாட்களை உங்களை மாதிரி அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கி எறிய என்னால் முடியாது. அதற்காக இன்னொரு பெண்ணுக்கு சொந்தமான ஒருத்தரை நினைத்துக் கொண்டு வாழவும் முடியாது. அது முகம் தெரியாத உங்க மனைவிக்கு நான் செய்யும் துரோகம். இந்த மூன்ஃபையர் எப்போதும் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமா வாழ வேண்டும் என்று இறைவனை தினமும் வேண்டிக் கொள்வேன்.
இப்போ இதை உங்க கிட்ட சொல்லலாமா , வேண்டாமா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் சொல்லாமல் இருக்க முடிய வில்லை.
ஆனால் சொல்லக் கூடாது. சொல்லவும் மாட்டேன். சொல்லப் படாத என் காதலின் இறுதி அத்தியாயம் இந்த கடிதம். இனி என்னுடைய எந்த கடிதமும் உங்களுக்கு வராது.
இறுதியாக உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்…
இப்படிக்கு
மூன்ஃபையர்…
என்று முடிந்து இருந்தது அந்த கடிதம். அதை வாசித்த துருவனுக்கு இன்றும் கண்ணீர் வழிந்தது. பதிமூன்று வருடங்கள் கடந்து விட்டது அவளை இறுதியாக பார்த்து. அவளைப் பற்றி அவன் விசாரிக்காமல் இல்லை ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எங்கே போன நிலா என்னை விட்டுட்டு. என்னால முடியலை நீ கிடைக்கனும் என்று நான் வேண்டாத தெய்வமே இல்லை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு கையில் அவள் அன்று அணிவித்த ஃப்ரெண்ட்ஷிப் பேண்டை தடவிப் பார்த்தான் துருவநேத்ரன்.
அந்த நேரம் அவனது மொபைல் போன் ஒலிக்க அதன் அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தான் . என்ன சொல்றீங்க கனிஷ்கா என்று துருவனிடம் சார் கொஞ்சம் நான் சொல்ற இடத்துக்கு வர முடியுமா என்றால் கனிஷ்கா . சரி என்று அவனும் அவள் கூறிய இடத்திற்கு சென்றான்.
நிலா பற்றி எதுவும் தகவல் தெரிஞ்சுதா என்ற துருவனிடம் கனிஷ்கா கை காட்டிய திசையில் அவனது மூன்ஃபையர் இருந்தாள்.
ஆனால் அவள் இருந்ததோ கல்லறைக்குள் அதை கண்டவனது இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது. தனது பதிமூன்று வருட தேடல் முற்று பெற்றது என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க அவளோ முற்றும் முதலாக இல்லாமல் போயிருந்தாள்.
அதைக் கண்டவனுக்கு ஒரு நொடி இதயம் நின்று விட்டது .அவளது கல்லறையின் அருகில் சென்றவன் அங்கே இருந்த அவளது புகைப்படத்தையும், தோற்றம், மறைவு என்ற வருடங்களையும் கண்டவன் நொந்து போனான்.
ஐந்து வருடங்களுக்கு முன்பே அவனது மூன்ஃபையர் இறந்து விட்டிருந்தாள், எப்படி கனி என்ற துருவனிடம் சார் அவள் அவங்க அம்மா ஆசைப்பட்டபடி ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து பைலட் ஆயிருக்காள். ஒரு ஃப்ளைட் ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டதா அவங்க மாமா சொன்னாங்க என்றாள் கனிஷ்கா.
ஃபிளைட் ஆக்சிடென்ட்டா என்று அவன் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான். சார் இது நிலாவோட டைரி இது மட்டும் தான் கிடைத்தது என்று கூறுகையில் கனிஷ்காவின் கண்கள் கண்ணீரை சிந்தியது.
அதைப் பெற்றுக் கொண்டவன் அவளது கல்லறையின் முன்பு அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். எப்படி நிலா உன்னால என்னை விட்டு போக முடிஞ்சுது. எனக்கு நீ வேணும் மூனு என்னை தவிக்க விட்டு ஏன் மூனு போன என்று அவன் அழுது கொண்டிருந்தான்.
ஒன்று நீ எந்திரிச்சு வா இல்லை என்னை உன் கூட கூட்டிட்டு போயிரு என்று அவள் அழுது தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று கனிஷ்காவிற்கு தெரியவில்லை அவளால் தான் என்ன ஆறுதல் கூற முடியும் அவளுக்கே ஆறுதல் தேவைப்பட்டது . உயிருக்குயிராக பழகிய தோழி பதிமூன்று வருடங்கள் கழித்து கிடைத்துவிட்டால் என்ற நம்பிக்கையில் தான் அவள் அந்த ஊருக்கு வந்தாள். அந்த ஊரிலோ அவளது கல்லறையை கண்டதும் துடித்து போனாள்.
என்னவென்று நிலவேனில் மாமாவிடம் விசாரிக்கையில் அவர் நடந்த நிகழ்வினை கூறினார். கனிஷ்காவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை உடனே அவள் துருவனுக்கு போன் செய்து வர சொன்னாள்.
வந்து அவனும் இறந்து போன தன் காதலியின் கல்லறையில் விழுந்து அழுது கொண்டிருந்தான். எனக்குன்னு யாருமே இல்ல மூனு அப்பா ,அம்மாவும் தவறிவிட்டார்கள் நீ கிடைப்பங்கிற நம்பிக்கையில் தான் மூனு நான் இத்தனை நாளா காத்துட்டு இருந்தேன் இப்படி நீயும் என்னை விட்டு போயிட்டியே மூனு எனக்குன்னு யாரு இருக்கா என்று அவன் அழுது கொண்டிருப்பதை கண்டவளதுக்கு மனமோ வலித்தது.
ஏன்டி எல்லாரையும் அழவெச்சிட்டு இப்படி போய் சேர்ந்துட்ட என்று நொந்து கொண்டாள் கனிஷ்கா.
அன்று நான் உனக்கு கொடுத்த காயத்தை விட தீராத வலியை எனக்கு கொடுத்துவிட்டு ஏன் சென்று விட்டாய் மூனு என்று அவன் அழுது கொண்டிருந்தான்.
அழுது அழுது ஓய்ந்தவன் எத்தனை நேரம் அழுதானோ தெரியவில்லை இருட்ட ஆரம்பித்ததும் தன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தான். அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் இல்லத்திற்கு சென்றுவிட்டான் . அவளது டைரியை தன்னுடனே வைத்துக் கொண்டிருந்தான். ஏனோ அவனுக்கு அதைப் பிரித்து படிக்க தோன்றவில்லை அவளது நினைவுகளை சுமந்து கொண்டே காலம் முழுக்க வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவனது இதயத்தோடு அவளது போட்டோவையும் டைரியையும் அணைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் துருவநேத்ரன்.
நான் உனக்கு கொடுத்த
வலியை விட
அதிகமான வலியை
என் நெஞ்சில்
விதைத்து சென்றாயடி
என் கண்மணி
என் நெஞ்சில் நீ தந்த இந்த காயம்
என் இறுதி மூச்சு வரை ஆறாது
என் கண்மணி…
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் தான் சேரும் போல அவளும் சொல்ல வில்லை, அவனும் சொல்ல வில்லை ஏனோ விதி அவர்களை சொல்ல விடவும் இல்லை. அவளது உடலுக்கு தானே மரணம் உயிர் எனக்குள் தான் வாழ்கிறது என்று அவள் விட்டுச் சென்ற அவர்களது காதலின் இறுதி அத்தியாயத்தில் அவள் நினைவுகளுடன் பயணிக்கிறான் துருவநேத்ரன்.
….முற்றும்….
இதுவரை இந்த கதையை படித்து ஆதரவு கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி…