என் நெஞ்சில் நீ தந்த காயம்… Climax 2

4.1
(10)

அவளது போட்டோவையும், டைரியையும் அணைத்துக் கொண்டு அவன் அழுது கொண்டிருக்க அவனது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

அவன் எழுந்து சென்று கதவைத் திறந்தவன் வாசலில் நின்றவளைக் கண்டு அதிர்ந்து போனான் .

ஒரு நொடி தான் காண்பது கனவா என்று அவன் திகைத்து கொண்டு இருக்கையில் உள்ளே நுழைந்தாள் அவனது மூன்ஃபையர் . முன்பு இருந்ததை விட கொஞ்சம் வளர்ந்திருந்தாள், அழகாக இருந்தாள். வயதுக்கேற்ற முதிர்ச்சி அவள் முகத்தில் இருந்தது.  பதினேழு வயதில் பார்த்த மங்கையை முப்பது வயதில் காண்கிறான்.

அவள் முகத்தில் என்றும் இருக்கும் அந்த புன்னகை இருக்கவும் என்ன நினைத்தானோ அவளை அணைத்துக் கொண்டான்.

நிஜமாவே நீ வந்துட்டியா நிலா இல்லை எனக்கு கனவு கண்டுட்டு இருக்கேனா என்று நினைத்தவன் அவள் முகம் எல்லாம் தொட்டு பார்த்திட அவள் தான் என்று உறுதி செய்து கொண்டவன் எங்கே போன நிலா ஏன் என்னை தவிக்க விட்ட என்று அழுது கொண்டிருந்தான் துருவநேத்ரன்.

நான் உங்களை தவிக்க விட்டேனா நல்லா நினைச்சு பாருங்க யார் யாரை தவிக்க விட்டது என்றாள் நிலவேனில்.

தப்பு தாண்டி தப்புதான் அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது அன்னைக்கு நிலைமைக்கு நானும் என்னோட காதலை சொல்லி இருந்தால் அது நல்லா இருக்காது நிலா, என்ன ரீசன்னு நான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன் என்ற துருவனிடம் அதுதான் ரீசன் சொல்லிட்டீங்களே  இந்த பதிமூன்று வருஷம் காத்திருப்பு தேவை இல்லையே என்ற நிலவேனிலின் முன்பு மண்டியிட்டவன் சாரி நிலா என்றான்.

யாருக்கு வேணும் உங்க சாரி என்ற நிலாவின் கரம் பற்றியவன் என்னை மன்னிக்க மாட்டியா நிலா என்றான்.

கோவம் இருந்தால் தானே மன்னிக்க முடியும் எனக்கு உங்க மேல  இல்லை யார் மேலயும் கோவம் இல்லை என்றவள் ஏதோ சொல்ல வர அன்னைக்கு எனக்கு கால் பண்ணுவேன்னு நினைச்சேன் என்றான் துருவன்.

தெரியும் நீங்க ஆனால் அப்பறம் கேப் விட்டப்பவே நினைச்சேன் நான் உங்ககிட்ட பேசணும்னு தான் நீங்க நினைக்கிறீங்க.  நான் சொல்லட்டா நண்பனா மட்டும் இல்ல வாழ்க்கை முழுக்க உனக்காக நான் இருப்பேன்னு சொல்லி இருப்பீங்க எனக்கு தெரியும் அந்த வார்த்தையை ஒரு ஒரு மாசத்துக்கு முன்னாடி நீங்க சொல்லியிருந்தீங்க அப்படின்னா கண்டிப்பா சந்தோஷப்பட்டு இருப்பேன். அன்னைக்கு நிலைமைக்கு என் அம்மா எப்ப வேணாலும் என்னை விட்டு போற ஒரு நிலைமை அப்போ உங்களுக்கு என் மேல வந்ததுக்கு பெயர் காதலனே என்னால நம்ப முடியலை. இரக்கம் பார்த்து வரும் அன்பும் காதலும் எனக்கு தேவையில்லைன்னு தோணுச்சு அதனாலதான் நான் உங்களுக்கு அதுக்கப்புறம் பேச நினைக்க வில்லை இப்போ கூட நான் ஏன் வந்தேன் தெரியுமா என்றாள் நிலவேனில் .

அவளை கேள்வியாக பார்த்தவனிடம் எனக்கும் இருந்துச்சு உங்கள பாக்கணும்னு.  பதிமூன்று வருஷத்துக்கு முன்னாடியே தெரியும் உங்க கல்யாணம் நின்னு போச்சுன்னு அப்புறமும் நான் வராததுக்கான ஒரே ரீசன் உங்களுக்கு என் மேல இருக்கிறது காதலா, இரக்கமா என்ற குழப்பத்துல நான் இருந்தேன். அப்புறம் என் வாழ்க்கை எப்படியோ போயிடுச்சு .

ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் கனியை பார்த்தேன் . அவள் தான் சொன்னாள்.  துருவன் துருவன் சார் உன்னை தேடிட்டு இருக்காங்க என்று அதனாலதான் அந்த கல்லறைக்கு உங்களை அழைச்சுட்டு போக சொன்னேன் என்றாள் நிலவேனில்.

உயிரோடு நீ இருக்கும் போது அப்படி ஒரு கல்லறை என்ற துருவ நேத்திரனிடம் என்ன பண்ணட்டும் என்னுடைய சூழ்நிலை ஏன் அந்த கல்லறை என்று என்கிட்ட கேக்குறீங்களே இந்த கேள்விக்கான பதில் அந்த டைரியில இருந்துச்சு நீங்க பிரிச்சு படிச்சிருந்திருக்கலாம் ஒருவேளை அதை நீங்க படிச்சிருந்தால் இப்போ என் போட்டோ முன்னாடி உருகி உருகி அழுது இருக்க மாட்டீங்க அந்த கல்லறை முன்னாடியும் அவ்வளவு நேரம் அழுது இருக்க மாட்டீங்க நீங்க அழுதது எல்லாமே நான் பார்த்தேன். அந்த நிமிஷமே ஓடி வந்து உங்களை கட்டிக் கொள்ள ஆசையா இருந்துச்சு
ஆனா யோசிச்சு வேண்டாம் வேண்டவே வேண்டாம்  நான் ராசி இல்லாதவள் இத்தனை வருஷம் என்னை  நினைத்துக்கொண்டு இருந்து உங்கள் வாழ்க்கையை நீங்க வீணாக்கிட்டீங்க இனிமேலும் உங்க வாழ்க்கையை நீங்க வீணாக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்போ உங்க முன்னாடி வந்து இருக்கேன் என்றாள் நிலவேனில் .

என்ன பேசுற நீ என்றவனிடம் ஆமாம் நான் ஒரு ராசி இல்லாதவள் என் அப்பா, அம்மா மேல நான் உயிரையே வைத்திருந்தேன். முதலில் அப்பா இறந்து போயிட்டாரு அப்புறம் கொஞ்ச வருஷத்துல அம்மா இறந்து போயிட்டாங்க . அப்புறம் தாத்தா ,பாட்டி கொஞ்ச வருஷத்துல இறந்து போயிட்டாங்க.  இந்த மாதிரி நான் யார் மேல பாசம் வச்சாலும் அவங்க செத்துப் போயிடுறாங்க என் வாழ்க்கை முழுக்க நான் தனி மரமா தான் இருக்கணும் அதனால தான் நான் உங்களை விட்டு நிரந்தரமா பிரியனும்ன்னு நினைச்சேன் ஆனால் கண்டிப்பா அந்த கல்லறை உங்களுக்காக ரெடி பண்ணினது இல்லை என்று அழுதவளது கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தான் துருவநேத்ரன்.

என்னடி பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க இவள் பாசம் வச்சா செத்துப் போயிருவாங்களாம் நீ இல்லைனா தாண்டி நான் செத்து போய்டுவேன்.

உனக்கு ஏண்டி இது புரிய மாட்டேங்குது சத்தியமா சொல்றேன் நிலா உன்னை கல்லறையில் பார்த்த அந்த நிமிஷமே சாகணும்னு தான் முடிவு பண்ணினேன் . எனக்குனு  யாரு இருக்கா இந்த உலகத்துல நீ ஏதாவது ஒரு மூலையில எனக்காக இருப்பங்கிற நம்பிக்கையில் தான் இத்தனை வருஷம் வாழ்ந்திட்டு இருக்கேன்.  நீயே இல்லாத பட்சத்தில் நான் எதுக்கு வாழனும் அப்படிங்கற முடிவுதான் யோசிச்சிட்டு இருந்தேன் என்னை சாக விடாமல் காப்பாத்த தான் இப்ப நீ வந்திருக்க என்றான் துருவ நேத்ரன் .

வார்த்தைக்கு வேணும்னா நல்லா இருக்கும் வாழ்க்கைக்கு என்றவளது வாயில் விரலை வைத்தவன் என்னடி வாழ்க்கைக்கு வாழ்க்கைக்கும் சரி, வார்த்தைக்கு சரி என் மூன்ஃபையர் தான் என்னுடைய உலகம் அவள் இல்லாம என்னால வாழ முடியாது .

இத்தனை நாள் நடைபிணமாக  தாண்டி வாழ்ந்தேன் . இந்த பிணத்துக்கு உசுர கொடுக்க நீ வருவியா வரமாட்டியா என்று எத்தனை நாள் ஏங்கி தவிச்சேன் தெரியுமாடீ. இன்னைக்கு என் கண்ணு முன்னாடி இருக்க ஆனா முட்டாள் தனமா பேசிட்டு இருக்கே
என்றான் துருவ நேத்ரன்.

சரி விடு போச்சு இனி பழசு எதையுமே நம்ம பேச வேண்டாம் இனி என் கூட காலம் முழுக்க இருப்பியா நிலா என்றான் துருவன் .

இதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் எப்படி என்னால இருக்க முடியும் கண்டிப்பா இந்த ஊர்ல என்னால இருக்கவே முடியாது நான் இங்க இருந்தால் நான் பல பேரோட வாழ்க்கையில சீக்கல் வரும் என்றாள் நிலவேனில் .

அந்த கல்லறை எதுக்காக என்று கேட்டீங்களே என் அத்தைக்காக.  என் மாமாவோட மனைவி. அவர்களுக்கு என்னை விட பெரிய பசங்க கிடையாது அவங்களோட பசங்க என்னை விட சின்ன பசங்க. என் அப்பா கூட பிறந்த அத்தை கூட அவங்க பையனுக்கு என்னை கல்யாணம் பண்ணி என் மூலமா வர சொத்தை அனுபவிக்கனும்னு தான் நினைச்சாங்க.  ஆனால் என் மாமாவோட மனைவி என்ன கொன்னுட்டு என்னோட சொத்து அனுபவிக்கணும் தாத்தா ,பாட்டி இருக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லை நான் காலேஜ் பைனல் படிக்கும் போது தாத்தா பாட்டி இறந்து போயிட்டாங்க அவங்க இறந்து கொஞ்ச நாளில் நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன்.

அந்த சமயத்துல லீவுக்காக இங்க ஊருக்கு வந்த இடத்துல என் அத்தை எனக்காக ஆசையா பிரியாணி செஞ்சாங்க .என்னவோ தெரியலை சாப்பாட்டுல என்னமோ விழுந்துருச்சு அதனால அந்த சாப்பாட்டை கீழே போட்டேன் அதை சாப்பிட்ட ஒரு தெரு நாய் செத்துப் போச்சு .
அப்பவே நான் உடைஞ்சிட்டேன் அப்போது தான் அவங்க சொன்னாங்க இவள் உயிரோட இருந்தால் அவளோட சொத்து எல்லாம் நாம் அனுபவிக்க முடியாமல் போயிடும் .இத்தனை வருஷமா இவளை பாத்துக்கிட்ட நமக்கு இல்லாமல் எவனோ ஒருத்தன் அனுபவிப்பான் .அதனாலதான் அவளை கொன்னுட்டால் அவளோட செத்தெல்லாம் நமக்கு வரும்னு இப்படி பண்ணுனேன்னு சொன்னாங்க அந்த நிமிஷம் ஒடஞ்சு போயிட்டேன். என் மாமா அவங்கள அடிச்சு கொல்ல போயிட்டாரு அப்பறம் தடுத்துட்டேன்.  அப்போ தான் யோசிச்சேன் கேவலம் இந்த சொத்துக்காக தான் இந்த உறவுகள் எல்லாம் நம்மள கவனிக்கிறது.

நானா அந்த சொத்தை எழுதி கொடுத்தாலும் என்னைக்காவது ஒருநாள் நான் அதுக்கு பங்கு கேட்பேனோ அப்படிங்கிற ஒரு உறுத்தல் அவங்க மனசுல இருந்துகிட்டே இருக்கும் அது என்னைக்குமே எனக்கு ஆபத்துதான் எனக்கு மட்டும் இல்லை என்னை சார்ந்தவங்களுக்கும் ஆபத்துதான். அப்படிங்கிற ஒரு முடிவுக்கு வந்துட்டு தான் அந்த டைம்ல ஒரு ப்லைட் ஆக்சிடென்ட் நடந்துச்சு அதுல நான் செத்து போயிட்டதாக ஒரு டிராமா பண்ணினேன் .

அந்த டிராமா என் மாமாவுக்கு மட்டும் தான் தெரியும் என் அத்தையை நம்ப வைக்கிறதுக்காக சிதைந்து போன ஒரு பொண்ணுக்கு கல்லறையை வைத்து அதை கல்லறையில் இருக்கிறது என்னோட பிணம் தான் அப்படின்னு ஊர் உலகத்தை நம்ப வச்சாரு .

என் மாமா ஒருத்தர் தவிர நான் உயிரோடு இருக்கிற விஷயம் வேற யாருக்குமே தெரியாது . கனிஷ்கா திரும்பத் திரும்ப என் மாமா கிட்ட போய் என்ன பத்தி விசாரிக்கவும் அவரும் வேற வழி இல்லாமல் அவள் கிட்ட மட்டும் இந்த உண்மைய சொன்னாரு . அவள் என்ஙன காண்டாக்ட் பண்ணி சொன்னாள் துருவன் சார் உன்னை மட்டுமே நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்காருன்னு அப்ப கூட எனக்கு வரணும்னு தோணல ஆனால் ஒருவேளை நான் செத்துட்டேன் தெரிஞ்சா நீங்க உங்க லைஃப் பார்த்துருவீங்க அப்படிங்கிற ஒரு நம்பிக்கையில தான் கனி கிட்ட என்னுடைய கல்லறைக்கு அவரை கூட்டிட்டு போ அவர் என் மேல எவ்ளோ காதல் வச்சிருக்காருங்கிறத நான் கண்ணால பாக்கணும் அப்படின்னு சொன்னேன். அவளும் உங்களை அந்த கல்லறைக்கு கூட்டிட்டு வந்தாள்.

ஒருவேளை இந்த டைரிய நீங்க பிரிச்சு படிச்சு இருந்தீங்க அப்படின்னா நான் செத்துட்டேன்னு  நீங்க நம்பி இருக்க மாட்டீங்க.  அவட சொன்னப்ப கூட இதை நான் படிக்க போறது இல்லன்னு நீங்க சொன்னதுனால தான் இப்போ உங்க முன்னாடி நான் நிக்கிறேன் என்றாள் நிலவேனில்.

இந்த ஊர்ல நீ இருந்தா தானே பிரச்சனை நம்ம இந்த ஊர்ல இருக்க வேண்டாம் எங்கயாச்சு கண் காணாத இடத்துக்கு போயிரலாம் எனக்கு இந்த உலகத்துல நீ மட்டும் போதும் என்னோட மூன்ஃபயர் என்னோட மூனு மட்டும் போதும் வேறு எதுவும் எனக்கு தேவையில்லை என்ற துருவனை அமைதியாக பார்த்தவள் அப்போ என் கூட வந்துருங்க என்றாள் .

சரி உன் கூட எங்க வேணாலும் வருவேன் என்ற துருவனின் கையை பிடித்தவள் இதுவரை உங்ககிட்ட சொல்லணும் சொல்லணும்னு நினைச்ச அந்த வார்த்தையை இப்ப சொல்லலாம்னு இருக்கேன் என்றவள் கண்களில் காதல் பொங்கிட ஐ லவ் யூ என்று அவனிடம் கூறினாள்.

அவளை அணைத்துக் கொண்டான் துருவநேத்ரன். என்ன நான் சொல்லிட்டேன் நீங்க சொல்லவே இல்லை என்ற நிலவேனிலை  முறைத்தவன் சொன்னா தான் அம்மணிக்கு புரியுமா என்றான்.

சொன்னா தான் எனக்கு புரியும் என்று அவள் கூறிட என் காதலை நான் வேற மாதிரி தான் சொல்லுவேன் என்றவன்  அவளது இதழை சிறை செய்தான் .

…. முற்றும்….

இந்த கிளைமேக்ஸ் மாற்றி எழுத எனக்கு எண்ணம் இல்லை. ஆனால் என் வாசகரின் விருப்பத்திற்காக மாற்றம் செய்துள்ளேன். குறை இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.1 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!