என் நெஞ்சில் நீ தந்த காயம்…3

4.2
(5)

தனது நோட்புக்கை திறந்தாள் நிலவேனில் .அதில் கனிஷ்காவின் எண் எழுதியிருக்க அதை பார்த்து தனது மொபைலில் பதிந்து கொண்டிருந்தாள் நிலவேனில். பாவம் அவள் கவனிக்கவில்லை அவளது நோட்புக்கில் தண்ணீர் பட்டு ஏழு என்ற எண் ஒன்றாக மாறியிருந்தது. அதை கவனிக்காமல் அவளும் தவறான மொபைல் எண்ணை கனிஷ்காவின் பெயரில் சேமித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

பிறகு தான் ஹாய் பேபி இதுதான் என்னோட நம்பர் ஐ லவ் யூ இப்படிக்கு மூன்ஃபையர் என்று மெசேஜ் அனுப்பி இருந்தாள்.

தனது மொபைல் போனில் நண்பன் ஒருவன் அனுப்பி வைத்த பார்வேர்ட் மெசேஜை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் துருவநேத்ரன் .

அந்த நேரம் அவனது எண்ணிற்கு புதிய எண்ணில் இருந்து மெசேஜ் வரவும் அதை பிரித்து படித்தான். ஹாய் பேபி , இது தான் என் நம்பர் ஐ லவ் யூ இப்படிக்கு மூன்ஃபையர் என்று இருக்க அதைப் படித்து விட்டு மூன்ஃபையர் இப்படியும் ஒரு பெயரா எவன்டா அது எவனோ நம்மள கலாய்க்கிறதுக்காக இந்த மாதிரி அனுப்பி இருக்கானோ என்று நினைத்தவன் சரி பதிலுக்கு லவ் யூ டூ போட்டு விடுவோம் என்று நினைத்து லவ் யூ டூ பேபி என்று மெசேஜ் தட்டி விட்டிருந்தான்.

அவளோ அவளது மாமா வாங்கி வந்த பரோட்டாவை ருசிக்கும் எண்ணத்தில் மூழ்கியதால் மொபைல் போனை ஓரமாக வைத்துவிட்டு தன் அன்னையுடன் வாயாடி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடித்த நிலவினில் உறங்கச் செல்ல எனது என்னடி தூங்க போற என்றார் வெண்மதி.

வேற என்னமா பண்ணனும் என்ற நிலவேனிலின் தலையில் நங்கென்று கொட்டியவர் எருமை மாடு பத்தாம் க்ளாஸ் படிக்கிற கொஞ்சமாவது அந்த நினைப்பு இருக்கா போய் ஒழுங்கா படி டி என்று கூறினார் வெண்மதி.

அவளோ பாவமாக தன் அன்னையைப் பார்த்தாள் .என்ன அப்படி பார்த்துட்டு இருக்க என்ற வெண்மதியிடம் அம்மா நான் அதெல்லாம் பாஸ் பண்ணிடுவேன்மா படிக்கிறதுக்கு ஒன்றும் இல்லை டெஸ்ட் எதுவும் இல்லை அதனால தூங்குறேனே என்றாள் நிலவேனில்.

அம்மு  டெஸ்ட் வச்சா மட்டும் தான் படிப்பியா மற்ற நாள் எல்லாம் படிக்க மாட்டியா என்ற வெண்மதியிடம் அம்மா நான் வந்து மாப்பிள்ளை பெஞ்சுமா லாஸ்ட் பெஞ்ச்  ஸ்டூடண்ட்ஸ் எவனாவது டெய்லி புக் எடுத்து படிச்சா லாஸ்ட் பெஞ்சுக்கு உண்டான மரியாதையே போயிரும் மாப்பிள்ளை பெஞ்சில உட்காந்துகிட்டு படிப்ஸா இருக்க சொல்றியே மம்மி என்ற நிலவேனிலின் தலையில் நங்கென்று கொட்டினார் வெண்மதி.

வாயாடி கழுதை ஒழுங்கு மரியாதையா படி நீ மட்டும் டென்த் ல 400க்கு மேல் மார்க் வாங்கல உனக்கு சோறு கிடையாது என்றார் வெண்மதி.

ஐயோ மம்மி பொசுக்கென்று இப்படி சொல்லிட்டியே நானூறு மார்க் அது எல்லாம் எடுக்கணும்னா நாக்கு தள்ளிரும் ஒரு முன்னூறு மார்க் சொல்லு உன் மகள் எடுத்திடுவேன் நானூறு அதெல்லாம் வந்து நல்லா படிக்கிற ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கிற பிள்ளைகளுக்கே கஷ்டமான விஷயம் என்ற நிலவேனிலை பார்த்து ஏண்டி நான் என்ன படிக்காத முட்டாளா? யாருகிட்ட கதை விடுற பிச்சுருவேன் ஒழுங்கு மரியாதையா நானூறு மார்க் எடுக்கணும் ஒழுங்கா படி டி என்றார் வெண்மதி.

அவர்களைப் பார்த்து சிரித்த அவளது மாமாவிடம் மாமா அம்மா பத்தாவது பப்ளிக் பரீட்சையில் எவ்வளவு மார்க் என்றாள் நிலவேனில்.

அக்கா எல்லா பாடத்திலையும் பாஸ் ஆயிருச்சு அம்மு  என்றார் அவளது மாமா செந்தில் .அது தெரியும் மாமா உங்க அக்கா பாஸ் பண்ணிடுச்சு எவ்வளவு மார்க் என்ற நிலவேனிலின் தலையில் நங்கென்று கொட்டினார் வெண்மதி.

நீ இன்னும் கிளம்பாமல் இருக்க டா உன் பொண்டாட்டி தேடப் போகிறாள் சீக்கிரம் வீட்டுக்கு போ என்று தனது சகோதரனை அனுப்பி வைத்தார் வெண்மதி.

மாமா நீங்க அம்மாவோட மார்க் எவ்வளவு என்று சொல்லிடுவீங்கன்னு பயம் அதனால தான் உங்களை பத்தி விடுது. என்று சிரித்த நிலவேனிலை  பார்த்து தானும் புன்னகைத்தார் செந்தில். சரிக்கா நான் வரேன் என்று அவளது மாமா சென்று விட தன் அன்னையின் மடியில் படுத்துக்கொண்டாள் நிலவேனில்.

என்னடி இது உன்னை படிக்க சொன்னால் நீ என் மடியில் படுத்து இருக்க என்ற வெண்மதியிடம் அம்மா ப்ளீஸ் கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன் என்றாள் நிலவேனில்.

சரி இன்னைக்கு ஸ்கூல்ல என்ன எல்லாம் நடந்துச்சு சொல்லு என்று கேட்டார் வெண்மதி. என்ன நடந்துச்சு ஆடு நடந்துச்சு ,கோழி நடந்துச்சு, நாய் நடந்துச்சு, நரி நடந்துச்சு, வாத்தியார் நடந்தார். நானும் நடந்தேன் , கனிஷ்கா நடந்தாள் அவ்வளவுதான் என்ற நிலவேனிலிடம்  வாயாடி கழுதை நீ என்ன அட்டூழியம் பண்ணினாய் என்று கேட்டேன் என்றார் வெண்மதி .

அம்மா நீ வேண்டும் என்றால் வந்து எங்க மேடம் கிட்ட கேளு நான் ரொம்ப சமத்துக் குட்டி என்ற நிலவேனிலை முறைத்தவர் ஆமாண்டி போன வாரம் பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்கு போனப்ப உன்னோட வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்துல உங்க மேடம் ஏத்திட்டாங்க டீ  மக்கு கழுதை எக்ஸாம் ஹால்ல போய் தூங்கி விழுந்திருக்க இடியட் என்றார் வெண்மதி.

நான் என்ன மம்மி பண்ணறது நீதான் இருமிட்டு இருக்கியே இருமல் டானிக் குடின்னு சொன்னிங்க நான் தான் ஓவராக இருமல் வருதேன்னு சொல்லிட்டு ஒரு மூடி குடிக்கிற இடத்தில் இரண்டு மூடியை குடித்து தொலைஞ்சிட்டேன் எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது கண்ணெல்லாம் சொக்குது நான் என்ன பண்ணுறது என்றாள் நிலவேனில்.

மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் 60 மார்க் எப்பவுமே 90 மார்க் எடுக்கிற சோசியல் சென்சில் வெறும் 35 மார்க் வாங்கி இருக்க நாயே என்றார் வெண்மதி.

எனக்கு சரியான தூக்கம் கண்  முழிக்க முடியல நானும் போய் மூஞ்சியெல்லாம் கழுவிட்டு வந்து உட்கார்ந்து எழுதினாலும் என்னால எழுத முடியல என்று பாவமாக கூறினாள் நிலவேனில் .

நடிக்காத டீ என்ற வெண்மதி மகளின் தலையை கோதிக் கொண்டிருந்தார். சரி உங்க ஆபீஸ்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க என்ற நிலவேனிலிடம் எல்லோரும் தான் நடந்தாங்க என்று வெண்மதியும் மகளைப் போலவே கூற இத்தனை பேர் நடந்தாங்க நீ நடக்கலையா மம்மி என்று மீண்டும் கலாய்த்தாள் நிலவேனில் .

வாயாடி வாயாடி என்ற வெண்மதி சரி அம்மாவுக்கு தூக்கம் வருது நீ கொஞ்ச நேரம் படிச்சிட்டு தூங்கு என்று சொல்லிவிட்டு அவர் சென்று தன்னறையில் படுத்துக்கொண்டார்.

அவள் சென்று தனது மொபைல் போனை பார்த்திடம் லவ் யூ டூ பேபி என்ற மெசேஜை பார்த்தவள் என்னடி புதுசா என்னை பேபி எல்லாம் சொல்லுற  நான் மட்டும்தான் உன்னை பேபி என்று சொல்லுவேன் நீ என்னை எப்பயும் கூப்பிடுறது மாதிரி கூப்பிடாமல் இன்னைக்கு என்ன புதுசா பேபி என்று சொல்லி இருக்க என்று நிலவேனில் மெசேஜ் அனுப்பினாள் .

சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் தனது போனில் மொபைல் ரிங்டோன் ஒலித்திட அதை எடுத்துப் பார்த்தான் துருவன்.பாண்டி சாப்பிடாமல்  என்ன போன் என்றார் அவனது அன்னை சுடர்விழி . ஏதோ மெசேஜ் வந்துச்சு அம்மா என்றவனிடம் சாப்பிட்டு முடிச்சுட்டு அப்புறமா பாரு என்று கூறினார் சுடர்விழி.

சரிங்கம்மா என்றவன் உணவை உண்டுவிட்டு தனது அறைக்கு சென்றான். மெசேஜை பார்க்க என்னது இது எப்பவும் பேபின்னு சொல்ல மாட்டியாவா  யார்டா இது? நம்மகிட்ட விளையாடுறாங்க என்ற நினைத்தவன் ஹூ ஆர் யூ? என்று மெசேஜை அனுப்பினான்.

அவளது போனில் மெசேஜ் டோன் கேட்டிட அதை ஓபன் செய்து பார்த்தாள் நிலா. உன்னை எல்லாம் ஒரு பிரெண்டுனு நம்பி உனக்கெல்லாம் ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பினால்  ஹூ ஆர் யூனு கேட்கிற குரங்கு, பன்னி, காட்டெருமை என்று அவள் பாட்டிற்கு திட்டிக்கொண்டு மெசேஜ் அனுப்ப அவ்வளவு தான் கால் செய்து விட்டான் .

என்னடா இது இப்படி திட்டிட்டு இருக்கு யாரது என்று நினைத்தவன் அவளது எண்ணிற்கு அழைத்து விட்டான்.

திடீரென்று போன் வரவும் அதை அட்டென்ட் செய்தாள் நிலவேனில்.  கோபமாக போனை அட்டென்ட் செய்தவள்  எருமை உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா ஹூ ஆர் யூ ன்னு கேட்ப என்னோட நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க செல்லம் நம்ம ரெண்டு பேரும் மெசேஜ்ல பேசலாம்னு நீதானடி சொன்ன என்று அவள் கூறிக் கொண்டிருக்க ஹலோ ஹலோ ஒரு நிமிஷம் ஆப்போசிட்ல உள்ளவங்க யாரு என்னன்னு கேட்டுட்டு அப்புறமா திட்ட ஆரம்பிங்க என்றான் அவன்.

ஆண் குரலை கேட்டதும் அதிர்ந்து போனால் நிலவேனில் இந்த குரங்குனு நினைச்சு எவனோ ஒருத்தனுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கேனே ஐ லவ் யூ எல்லாம் மெசேஜ் அனுப்பினேனே ஐயய்யோ என்று நாக்கை கடித்தவள் ஹலோ யாரு என்றாள் .

அதுதான் மேடம் நானும் கேட்கிறேன் நீங்க யாரு என்றவன் வெயிட் ,வெயிட் அது என்ன மூன் ஃபயர் என்றான்.

அது என்னோட பெயர் என்றாள் நிலவேனில். மூன்ஃபையர் என்று எல்லாம் பெயர் வைக்கிறாங்களா என்ற துருவனிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என் பெயர்என்னவா வேணாலும் இருக்கும் அதெல்லாம் உங்களுக்கு தேவையா உங்க பேர் என்ன என்றாள் நிலவேனில்.

என் பெயரா அது எதுக்கு நான் உன்கிட்ட சொல்லணும் நீ யாருன்னு சொன்னால் தான் நான் என்னோட பெயர் சொல்லுவேன் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பாண்டி இன்னும் தூங்கலையாபா நீ என்று அவனது அம்மா கேட்டிட தூங்க போகிறேன் அம்மா என்று கூறினான் அவன்.

பாண்டியா என  பாண்டி முனீஸ்வரனா என்றாள் நிலவேனில். ஆமா தாயே பாண்டி முனீஸ்வரன் தான் என் பெயர் உன் பெயர் என்ன என்றான் அவன்.

முன்ஃபையர் என்று அவள் கூறினாள் . சரியான மென்டலா இருக்கும் போல சரி இனிமேல் ஒருத்தருக்கு மெசேஜ் பண்ணும் போது கரெக்டான நம்பருக்கு தான் மெசேஜ் பண்ணுகிறோமா அப்படின்னு தெரிஞ்சுகிட்டு மெசேஜ் பண்ணுங்க நீங்க பாட்டுக்கு ஐ லவ் யூன்னு ஒரு பையனுக்கு அனுப்புறீங்க என்ன என் மேல லவ்வா என்றான் துருவநேத்ரன்.

லவ்வா என்ன போன் பண்ணிட்டு காதல் கோட்டை படம் ஓட்டுறீங்களா அதெல்லாம் என்கிட்ட நடக்காது என்றாள் நிலவேனில்.

ஆமாம் இந்த அம்மா அப்படியே தேவயானி உங்ககிட்ட காதல் கோட்டை படம் ஓட்டுகிறார்கள் என்று அவனும் கத்தி விட இவரு பெரிய தல அஜித் வந்துட்டாரு போனை வை மேன் என்றாள்.

அவன் ஏதோ சொல்ல வர அம்மு இன்னும் தூங்கலையா என்று வெண்மதியின் குரலை கேட்டதும் இதோ தூங்குறேன்மா கனி கிட்ட பேசிட்டு இருக்கிறேன் பேசிட்டு போனை வைத்து விட்டு தூங்குறேன்மா என்று அவள் கூறிட சரிடி சீக்கிரமா தூங்கு காலைலயாவது எந்திரிச்சு படிக்கணும் என்று கூறிவிட்டு வெண்மதி சென்றுவிட ஹலோ வாயடி இவ்ளோ நேரம் எகிறிஎகிரி பேசின இப்ப பண்ணுற கனி கிட்ட பேசுறேன்னு சொல்லுற உங்க அம்மாவ ஏமாத்துறியா என்றான் அவன்.

பின்னே ஒரு லூசு என்கிட்ட பேசிட்டு இருக்குனு எங்க அம்மா கிட்ட சொல்ல முடியுமா என்ற நிலவேனிலிடம் யாருடி லூசு நீதான் லூசு உன் குடும்பமே லூசு லூசு குடும்பத்தில் பிறந்த லூசு, போன வை டி என்று கூறிவிட்டு அவன் போனை வைத்து விட்டான் பரதேசி யாருடா லூசு குரங்கு குரங்கு ஆளும் மண்டையும் அவன் குரலும் சரியான கட்டை குரலு என்றாள் நிலவேனில் .

அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை லூசுன்னு சொல்லி இருப்பான் மெண்டல், குரங்கு எல்லாத்துக்கும் காரணம் அந்த கனிஷ்கா பிசாசு. போன் நம்பரை தப்பா சொல்லி நாளைக்கு இருக்கு அவளுக்கு என்று நினைத்துக் கொண்டே போர்வையை போத்திக்கொண்டாள்  நிலவேனில்.

….. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!