என் பிழை நீ – 13

4.8
(16)

பிழை -13

வெளியே வந்து அரவிந்தும் விதுஷாவும் காரில் ஏறிவிட்டனர். விதுஷாவின் முகம் இன்னும் தெளிவடையவில்லை சற்று கலக்கமாக தான் தென்பட்டது.

அரவிந்த் அவளின் கையை மென்மையாக பற்றியவன், “என்னாச்சு விது?”.

“பாரியை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்குடா.. இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு நாள் மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான்ல.. இதை அவன் நம்ம கிட்ட எல்லாம் ஷேர் பண்ணி இருந்திருக்கலாமே நாம என்ன சொல்ல போறோம் நாம அவனுடைய பிரெண்ட்ஸ் தான”.

“ஆமா ஃப்ரெண்ட்ஸ் தான். ஆனா அவனுக்குன்னு சில பர்சனல் இருக்குல்ல எல்லாத்தையும் சொல்ல முடியாது. பிரண்ட்ஸாவே இருந்தாலும் இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம் விது. இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா அவனுடைய கேரக்டரை எல்லாரும் தப்பா தான் அசாசினேட் பண்ணுவாங்க”.

உண்மையிலேயே இவன் தான் பாரிக்கு இப்படி ஒரு சம்பவம் நேர காரணம் என்று கூறினால் யாராலுமே நம்ப முடியாது. அப்படி இருந்தது அவனின் வார்த்தைகள்..

“நீ இப்போ பாரிக்கு இப்படி நடந்திடுச்சுனு நினைத்து பீல் பண்றியா இல்ல, பாரியை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியலையேன்னு நெனச்சு பீல் பண்றியா”.

அவனின் கேள்விக்கு விரக்தியாக சிரித்தவள், “பாரியை கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்ன்ற தாட் எப்படி எனக்குள்ள வந்துச்சுன்னு எனக்குமே தெரியல.. எப்படியோ பாரி மேல எனக்கும் கொஞ்சம் இன்ட்ரஸ்ட் வந்தது உண்மை தான். அதுக்காக அவனுடைய மனசுல நான் இல்லனாலும்.. அவனுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைனாலும் பரவாயில்ல.. அவன் என்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் என்னைக்குமே நினைக்க மாட்டேன்”.

விதுஷாவின் வார்த்தைகள் ஏனோ அரவிந்தின் இதயத்தை சுருக்கென்று தைத்தது.

“எனக்கு பாரியை ரொம்ப பிடிக்கும் டா. இப்போ இல்ல சின்ன வயசுல இருந்தே ஆஸ் அ பிரண்டா எங்க ரிலேஷன்ஷிப்பை இதுக்கு மேல கொண்டு போனா நல்லா இருக்குமேன்னு நான் நினைச்சாலும் கடவுள் எங்களை ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இருக்குறதை விட ஃப்ரெண்ட்ஸா இருந்தா தான் நல்லா இருக்கும்னு நினைச்சுட்டாரு போலருக்கு.

பாரி மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க உண்மையாவே அந்த பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். அதுக்காக நான் ஒன்னும் பீல் பண்ண மாட்டேன். பாரி மாதிரி ஒரு பிரண்டு கிடைக்கவும் நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்” என்றாள் மென் புன்னகையோடு.

“சரி, அடுத்து என்ன.. வீட்ல அங்கிளும் ஆண்ட்டியும் நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறனு ரொம்ப பீல் பண்றாங்க.. பாரி மேல உனக்கு லவ் இல்லன்னும் போது நீ ஏன் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது” என்று தன் மனதில் தோன்றியதை கேட்டுவிட்டு அவளின் வெளிப்பாட்டுக்காக முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“பாரி மேல எனக்கு லவ் இல்ல தான்.. ஆனா எனக்குள்ள அவன் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கான். கல்யாணத்தை பத்தி எல்லாம் எனக்கு இப்போ நோ ஐடியா மே பி பியூச்சர்ல தானா நடக்கும் போது பார்ப்போம்”.

“ஒருவேளை, யாராவது உன்கிட்ட வந்து உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்னு சொல்லி ப்ரொபோஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க கேட்டா நீ ஓகே சொல்லுவியா?”.

அவன் கூறியதை கேட்டு நகைத்தவள், “என்னடா சொல்ற.. காலேஜ் படிக்கும் பொழுதே நிறைய பேரு ப்ரொபோஸ் பண்ணாங்க. நீ தான் யாரையும் அக்சப்ட் பண்ணவிடலையே.. படிப்பு தான் முக்கியம்னு அட்வைஸ் பண்ணியே சாகடிச்ச.. இப்போ கல்யாணம் பண்ற வயசு ஆகிடுச்சு இனிமே தான் யாராவது வந்து எனக்கு ப்ரொபோஸ் பண்ண போறாங்களா” என்று கேலியாக அவள்  கேட்கவும்.

“ஐ லவ் யூ விது! இப்போ இல்ல பல வருஷமா.. நம்ம காலேஜ் படிக்கும் பொழுது இருந்து நான் உன்னை ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருக்கேன். ஒவ்வொரு தடவை நீ பாரியை மேரேஜ் பண்ணிக்கிறதை பத்தி பேசும் பொழுதெல்லாம் எனக்குள்ள அப்படி வலிக்கும்.

ஆனாலும் உன் முன்னாடி வலிக்காத மாதிரி காட்டிக்கிட்டேன். அப்போவே என் லவ்வை உன்கிட்ட சொல்லிடலாம்னு தான் தோணுச்சு. ஆனா உன் மனசுல பாரியை பத்தின ஒரு அபிப்பிராயம் இருக்கும் பொழுது நான் எப்படி என் மனசுல இருக்குறதை உன்கிட்ட ஓப்பனா சொல்றது.

ஒருவேளை, பாரியும் அக்சப்ட் பண்ணி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் மனசுல இருக்குறதை எனக்குள்ளவே மறைச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா இப்போ தான் அதுக்கு வாய்ப்பு இல்லன்னு தெரிஞ்சிடுச்சே..

அதான் இப்ப என் மனசுல இருக்குறத உன்கிட்ட ஓப்பனா சொல்லனும்னு தோணுச்சு. உன் கூட கல்யாணம் பண்ணி நிறைய குழந்தைகளை பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழனும்னு என்னெல்லாமோ தோணுது டி” என்றான் அவளின் விழியோடு தன் விழிகளை கலக்க விட்டவாறு.

தன் மனதில் இருக்கும் மொத்தத்தையும் உண்மையும் பொய்யுமாக கலந்து பட்டென்று அவளிடம் போட்டு உடைத்து விட்டான்.

உண்மையை மட்டும் கூறினால் அவள் ஒப்புக்கொள்வாளா மாட்டாளா என்று அவனுக்கு தெரியாதா என்ன..

இதற்கு மேல் மறைக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லை.

விதுஷாவிடம் வார்த்தைகளே இல்லை. அசைவற்று அவனையே அதிர்ந்த பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“என்ன அப்படி பாக்குற.. நான் உன்ன பிராங்க் பண்றேன்னு நினைச்சுடாத உண்மையாவே நான் உன்னை முழு மனசா காதலிக்கிறேன். நீ எப்படி பாரியை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சியோ.. அதே மாதிரி தான் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன். என்னை கல்யாணம் பண்ணிப்பியா?”.

அவனின் விழிகளிலோ அத்தனை காதல்.. அவனின் விழிகளை எதிர் நோக்கிய விதுஷாவின் விழிகளை எங்கும் அசைய கூட விடாமல் தன்னோடு கட்டிப்போட்டு விட்டது.

இப்படி எல்லாம் அரவிந்த் தன்னிடம் பேசுவான் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை. உண்மையிலேயே இது அவளுக்கு பேரதிர்ச்சி தான். எத்தனை முறை பாரியை பற்றி இவனிடம் கூறியிருப்பாள்.

அப்பொழுது கூட ஒரு வார்த்தை தன் மனதில் இருப்பதை அவன் கூறவில்லையே.. இப்படி தடாலடியாக கூறி விடவும் அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமர்ந்திருக்கிறாள்.

“இப்படி சடனா சொன்னதால உன்னால் எதுவும் பதில் சொல்ல முடியலனு நினைக்கிறேன். டேக் யுவர் டைம் பொறுமையா யோசிச்சு உன்னுடைய பதில் என்னன்னு சொல்லு. எத்தனை நாள் ஆனாலும் உன்னுடைய பதிலுக்காக நான் காத்துகிட்டு இருப்பேன். இத்தனை வருஷமா உனக்காக நான் காத்துகிட்டு தானே இருக்கேன். இனிமேலும் காத்துக்கிட்டு இருக்கிறது எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல. உனக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்துகிட்டு இருக்கணும்னு சொன்னாலும் நான் சந்தோஷமா காத்துகிட்டு இருப்பேன்” என்றவன் வண்டியை நேராக விதுஷாவின் வீட்டை நோக்கி செலுத்தவும்.

விதுஷாவோ அதிர்ச்சியை அப்பட்டமாக தன் முகத்தில் தேக்கியவாறு தான் அமர்ந்திருந்தாள். அவளின் விழிகள் சாலையில் பதிந்திருந்தாலும் மனதிற்குள் ஆயிரம் யோசனைகள் இதெல்லாம் எப்படி நடந்தது என்று..

இதற்கு நான் எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும்..

தன் நண்பனின் வாழ்க்கையை எண்ணி வெகுவாக வருந்தியவளிற்கு அவனின் வாழ்க்கை இப்படி ஆனதற்கு நாம் தான் காரணம் என்பது இப்பொழுது விளங்கவில்லை.

அவளின் வீட்டை அடைந்ததும் அவளுக்காக இறங்கி வந்து காரின் கதவை திறந்து விட்டவன், அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கி செல்லவும்.

மெல்லிய புன்னகையோடு அவனும் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

இப்படியே இவனின் நாட்கள் காத்திருப்பில் செல்ல..

விதுஷாவோ குழப்பத்துடனே தன் நாட்களை கடத்தினாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக செல்லவும். பாரிவேந்தன் எப்படி இனியாளிடம் தங்களுக்குள் நடந்ததை பற்றி பேசுவது என்றே வெகுவாக சிந்தித்துக் கொண்டு இருந்தான்.

‘ஒருவேளை, நாம எல்லாத்தையும் சொல்லியும் அவ நம்மளோட இருக்க மாட்டேன்னு சொல்லிட்டா என்ன பண்றது’ என்ற எண்ணம் எழ அவனுக்குள் பதட்டம்..

‘வேண்டாம்.. அவளை நம்மள விட்டு போகவே முடியாத மாதிரி ஏதாவது செஞ்சு லாக் பண்ணிட்டு தான் இந்த விஷயத்தை பத்தி அவ கிட்ட பேசணும்’ என்று முடிவெடுத்தான்.

‘நாம ஏன் அவகிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு டைரக்டா ப்ரொபோஸ் பண்ண கூடாது’.

‘நோ.. நோ.. அவ கண்டிப்பா முடியாதுன்னு தான் சொல்லுவா.. அதுவும் இப்படி ஒரு சிச்சுவேஷன்ல போய் அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணா கண்டிப்பா அவ முடியாதுன்னு தான் சொல்லுவா.. அதுக்கு அப்புறம் இதை அடுத்த ஸ்டேஜுக்கு கொண்டே போகவே முடியாத மாதிரி ஆகிடும்’ என்று வெகுவாக தன் மூளையை கசக்கி பிழிந்தவனின் தலையில் சட்டென்று பல்ப் எரிய தொடங்கியது.

‘எஸ்.. அது தான் கரெக்டா இருக்கும். அப்படி செஞ்சா தான் அவளால் நம்மள விட்டு போகவே முடியாது. கடைசி வரைக்கும் நம்மளோடவே இருப்பா’ என்று எண்ணும் பொழுதே அவனின் மனம் தித்தித்தது.

அதன்படி அவளை தன்னுடனேயே வைத்துக் கொள்ள அடுத்தடுத்து தான் செய்ய வேண்டிய காரியத்தை விரைவு படுத்தினான்.

இனியாளுக்கு ஆர்ப்பரித்து வேகமாக ஓடும் ஆற்றில் சிக்கிய துகள்களின் நிலை தான்.

தன் வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது..

தன் வாழ்க்கையில் அடுத்து நடக்கவிருப்பது என்ன..

தன் வாழ்க்கை பயணத்தின் முடிவு எப்படி அமையும் என்ற எந்த ஒரு எதிர்பார்ப்போ எண்ணமோ இல்லாமல் தான் அவளின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

அவள் ஒன்றும் வாழ்க்கையை பற்றிய சிந்தனை இல்லாதவள் எல்லாம் கிடையாது. எதிர்காலத்தை பற்றிய ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் அவளிடம் நிறையவே ஒரு காலத்தில் இருந்தது.

அவளின் சிறு வயது முதலே அவளின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கும் அவளின் தந்தைக்கும் நிறையவே இருந்தது. அதன்படி தான் அவளின் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் நடந்து கொண்டிருந்தது.

ஆனால் என்று அவள் கருவுற்றாளோ அப்பொழுது இருந்தே அவளின் வாழ்க்கை மொத்தமாக தலைகீழாக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

வாழ்க்கையின் மேல் எத்தனை எதிர்பார்ப்புகளை அவள் முன்பெல்லாம் வைத்திருந்தாளோ.. இப்பொழுதெல்லாம் அதற்கு எதிர்மறையாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கை செல்லும் போக்கில் வாழ தொடங்கி விட்டாள் என்று தான் கூற வேண்டும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் பிழை நீ – 13”

Leave a Reply to D.Indumathy Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!