பெருந்தேவனார் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க என்று யோசியரிடம் சொல்ல, அவரும் தான் கணித்ததை சொல்ல ஆரம்பித்தார். “நான் சொல்லப்போறது, நீங்க எங்கிட்ட குடுத்த ஜாதகத்தை பார்த்து நான் கணிச்சதைத்தான். அதனால நான் சொல்லப்போறதை எல்லோரும் கவனமாக கேளுங்க.” என்றார்.
யோசியர் எல்லோரையும் பார்த்து, “முதல்ல ஐயாவோட ஜாதகத்திலும் அம்மாவோட ஜாதகத்திலும் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. இவங்க தினமும் நினைச்சு வேதனைப்படுற விஷயம் இவங்ககிட்டையே கூடிய சீக்கிரம் வரப்போகுது.” என்றார்.
அதைக் கேட்ட விசாகம்,”யோசியரே நாங்க தினமும் நினைச்சு வேதனைப்படுறது என் பொண்ணு துர்க்காவை நினைச்சிதான். நாங்க அவளை கண்மூட முன்னாடி ஒரு தடவை பார்த்தா போதும். “என்றார் அழுதுகொண்டு. அருகில் இருந்த பெருந்தேவனார் அவரைத் தேற்றினார்.
மேலும் யோசியர்,”அம்மா துர்க்கா அம்மா ஜாதகம் இங்க இருக்கிறதால அதைப் பார்த்தன். அவங்க சீக்கிரமா உங்களை தேடி வரப்போறாங்க. நீங்க கவலைப்படாதீங்க. ” என்றார்.
பின் ராமச்சந்திரனையும் தேவச்சந்திரனையும் பார்த்தார். “ஐயா உங்க ரெண்டு பேருக்கும் ஆபத்து நிறைய இருக்கு. எதிர்பாராத விஷயங்கள் நடக்கப் போகுது. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். உங்களை நெருங்கும் பெரிய ஆபத்தை எல்லாம் தடுத்து காப்பாத்த உங்க குலசாமியா ஒருத்தன் இருப்பான்.” என்று சொல்லிவிட்டு, காமாட்சியின் ஜாதகத்தை கையில் எடுத்தார்.
“இது காமாட்சியோட ஜாதகம், இவங்களுக்கு ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைனா இவங்க வாழ்க்கைக்கு ஆபத்து காத்திட்டு இருக்கு. ” என்றார்.
அடுத்து காளையனின் ஜாதகத்தை எடுத்தார்.” காளையா உன்னோட ஜாதகம் என்ன சொல்லுது தெரியுமா? இந்த வீட்டுக்கு வரும் எல்லா ஆபத்துக்களையும் ஏன் பிரச்சனைகளையும் தீர்த்து வைச்சு இந்த குடும்பத்தை வாழ வைக்கிறது உன்னால மட்டும் தான் முடியும். அதுமட்டுமல்ல உனக்கு இன்னும் ஒரே வாரத்தில கல்யாணம் நடக்கும்.
எந்த நிலையிலும் உன்னோட பொறுமையை கைவிடாத. அதே நேரத்தில் எது நடந்தாலும் அதைப் பற்றி ஆழ்ந்து யோசி.” என்றார்.
பெருந்தேவனாரைப் பார்த்து,” ஐயா எது நடந்தாலும் நல்லதுக்குனு நினைச்சிக்கோங்க. நான் கணிச்சதைத்தான் சொன்னேன். நான் வர்றன் ஐயா” என்றவர் அங்கிருந்து சென்றார்.
அவர் சென்ற பிறகும், எல்லோரும் அமைதியாக இருந்தனர். காளையன் தான் “எது வந்தாலும் அதை பார்த்துக்கலாம்.” என்று சொல்லி எல்லோரையும் தேற்றினான்.
சபாபதியும் மோனிஷாவும் எதிர் எதிராக அமர்ந்திருந்தனர். “என்ன சொல்லட்டும்?” என்று கேட்டதும், மோனிஷா, “எனக்கு காப்பி” என்றாள். அவனும் வெயிட்டரை அழைத்து, “இரண்டு காப்பி “எடுத்து வருமாறு சொல்லி அனுப்பினான்.
மோனிஷா டென்ஷனாக இருந்தாள். அவளைப் பார்த்து சிரித்து, “என்ன மோனிஷா டென்ஷனா இருக்கா?” என்றான். அவளும், “ஆமா சபா. நான் உங்கிட்ட பேச வந்தாலே, எரிஞ்சு விழுவ. இப்போ என்னடான்னா நீயை பேச கூப்பிட்டிருக்க. நேற்று அப்பா ஏதாவது சொன்னார்?” என்று கேட்டாள்.
அதற்கு அவன், அவர் சொன்ன எதையும் அவளிடம் சொல்லாமல், “உன்னைப் பற்றி சொன்னாங்க. எனக்கு எத்தனை தடவை துரத்தினாலும் என்னையே சுற்றிச் சுற்றி வர்ற உன் மேல ஏதோ ஒண்ணு இருந்திச்சு. அப்புறம் உன்னோட அப்பா உன்னைப் பற்றி சொன்னதும், இந்த மாதிரி என்னை லவ் பண்ற உன்னை மிஸ் பண்ணவே கூடாதுனு தோணிச்சு.
மோனி என்றவன் அவள் கைகளை பிடித்தான். அவன் கைகளுக்குள் அவள் கைகளை வைத்துக் கொண்டான். மோனி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டான்.
மோனிக்கு அவன் சொன்னதை நம்ப முடியவில்லை.” உண்மையாகவா சொல்ற சபா?” என்றாள். அவனும்,” ஆமா என்னோட மனைவியாக வர உனக்கு சம்மதமா? இத்தனை நாள் உன்னோட காதலை புரிஞ்சிக்காமல் இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடு மோனி “என்றான்.
” என்ன சபா இது. நீ எதுக்கு எங்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு. எப்பிடியோ என்னோட காதலை நீ புரிஞ்சிக்கிட்டல்ல. அது போதும் எனக்கு.” என்றாள். பின்னர் இருவரும் சேர்ந்து காப்பி குடித்து விட்டு கேசவனை சந்திக்கச் சென்றனர்.
காலையில் மலர்னிகாவை பார்க்க வந்த நிஷாவிடம் நடந்ததை சொல்லி புலம்பினார் துர்க்கா. நிஷாவுக்கு பயமாக இருந்தது. மேடத்தை சுற்றி இவ்வளவு பிரச்சினை நடக்குது. அவங்க எப்படி சமாளிப்பாங்க. இது எல்லாம் நிச்சயமா அந்த முகேஷோட வேலைதான். எவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்கிறான். என்று மனதுக்குள் அவனை திட்டித் தீர்த்தாள்.
அந்த நேரத்தில் டாக்டர் வந்து மலர்னிகாவை செக் பண்ணினார். “குட் நல்ல முன்னேற்றம் தெரியுது. இவ்வளவு சீக்கிரம் நீங்க குணமாகுவீங்கனு நினைச்சுப் பார்க்கவே இல்லை. வில் பவர் உங்களுக்கு அதிகம் மலர்னிகா. ” என்றார்.
துர்க்கா டாக்டரிடம், “டாக்டர் நான் மலரை வீட்டிற்கு கூட்டிட்டு போகலாமா?” என்று கேட்க, டாக்டரும் பிரச்சனை இல்லை அவங்களை கூட்டிட்டு போகலாம். அடிக்கடி வந்து செக் பண்ணிட்டு போங்க. என்றார். உடனே துர்க்கா நிஷா உதவியோட மலரை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
ஹாலில் மலரையும் அவளுக்கு உதவியாக நிஷாவையும் உட்கார வைத்து விட்டு, வள்ளியிடம் இருவருக்கும் குடிப்பதற்கு ஜுஸ் குடுத்து விட்டு, சமைக்கச் சொன்னார். பின்னர் மலர்னிகாவிற்காக கீழே ஒரு அறை தயார் செய்யச் சென்றார்.
வள்ளியும் ஜுஸை இருவருக்கும் குடிக்க குடுத்து விட்டு சென்றதும், நிஷா மலர்னிகாவிடம் பேச ஆரம்பித்தாள். “மேடம் இதுக்கு காரணம் அந்த முகேஷ் தான். அவனைத் தவிர உங்களுக்கு எதிரி யாரும் இல்லை. இதுக்கு மேலேயும் பொறுமையா இருக்கிறது நல்லதில்லை மேடம். ப்ளீஸ் போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாம்.” என்றாள்.
அவளைப் பார்த்த மலர்னிகா, “என்ன நிஷா, என்கூட நேரடியாக மோதினா தோத்துப் போயிடுவான்னு தெரிஞ்சி. வெட்கமே இல்லாமல் முதுகில குத்தப் பார்க்கிறான். அவனைப் பற்றி போலிஸ்ல சொன்னா. நான் இதை செய்யவே இல்லைனு சொல்லிடுவான். அவனுக்கு பதிலடி நான் தான் குடுப்பேன் என்றாள் கோபமாக..
இங்கே முகேஷ் கடும் கோபத்தில் இருந்தான். தான் எத்தனை தடவை அந்த மலர்னிகாவை எதிர்த்தாலும் தோல்விதான் கிடைக்கிறது. இனிமேல் அவகூட பிஸிக்கலாக மோதாமல் மெண்டலி டார்ச்சர் கொடுக்கலாம். என்று யோசித்தான். அதில் அவனுக்கு நல்ல யோசனை வர போனை எடுத்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divi