அதிகாலை நேரத்தின் குளிரானது உடலை ஊசி போல குத்திக் கொண்டிருந்தது. குளிரைத் தாங்க முடியாமல் கடினப்பட்ட மலர்னிகா, போட்டிருந்த தனது துப்பட்டாவை இழுத்து இழுத்து கைகளை மூடிக்கொண்டாள் மலர்னிகா, காளையனின் நெஞ்சில் சாய்ந்தவாறு. காளையன் அவளது துப்பட்டாவை எடுத்து, கைகளை நன்றாக மூடிவிட்டான்.
ஊட்டியின் அந்த பெரிய பேரூந்து தரிப்பீடத்தில் வந்து நின்றது பேரூந்து. ஒவ்வொருவராக இறங்கியதும் காளையன் மெதுவாக மலர்னிக்காவின் கைகளை பிடித்துக் கொண்டு கீழே இறங்கினான். அவன் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. தான் இந்த இடத்திற்கு வருவான் என்று. என்ன செய்வது விதி வலியது அல்லவா? அவனை மறுபடியும் இங்கு கொண்டு வந்து விட்டது விதி.
துர்க்கா, கதிர், நிஷாவுக்கும் எதுவும் புரியவில்லை. காளையன் அழைத்து வந்ததால் இவர்கள் வந்திருக்கிறார்கள். இங்கு என்ன செய்யப் போகிறார்கள்? எங்கு தங்கப்போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கான விடைதான் இன்னும் தெரியவில்லை. மலர்னிக்காவிற்கு காய்ச்சல் விட்டிருந்தாலும் உடல் அசதியாக இருந்தது. அதனால் அவள் காளையனின் அணைப்பிலே இருந்தாள்.
காளையன் மலர்னிகாவை பிடித்துக் கொண்டு முன்னே செல்ல, பின்னால் மற்றவர்கள் மூவரும், தமது பைகளை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த டீக்கடி ஒன்றிற்கு சென்றனர். அங்கே பயணக் களைப்பு போவதற்காக டீ வாங்கி குடித்தார்கள். அவர்களிடம் டீயை குடிக்குமாறு சொல்லிவிட்டு தனது போனை எடுத்துக் கொண்டு சற்று விலகி வந்து வந்தான் காளையன்.
இரவு நேரத்தில் அவன் அழைத்த நம்பருக்கு இப்போது ஃபோன் பண்ணினான். மறுபக்கம் இருந்தவர் அவனது போனுக்காக காத்திருந்ததைப் போல ஒரு ரிங்கிலேயே போனை எடுத்தார் எதிர்பக்கம் இருந்தவர். “காளையா சொல்லுப்பா, வந்துட்டியா?” என்று கேட்டார். அதற்கு காளையனும் ஆமா, வந்துட்டோம். ஆனால் இங்க இருந்து எப்படி வீட்டுக்கு வர்றதுன்னு எனக்கு தெரியல” என்று சொன்னான்.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டு, “அதுக்கு என்ன நீ அங்கேயே இரு, ஒரு பத்து நிமிஷத்துல நானே வந்து உங்களை கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார். பின்னர் வீட்டில் உள்ளவர்களை அழைத்து அவர் சொன்ன வேலையை செய்யச் சொன்னார். பின்னர் தானே காரை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
அவருடன் பேசி போனை வைத்துவிட்டு, காளையன் டீக்கடையில் வந்து அவர்களுடன் அமர்ந்தான். அப்போது துர்க்கா தான் முதலில் பேச ஆரம்பித்தார். “காளையா இங்க எதுக்குப்பா வந்திருக்க? இங்கே யார் இருக்கிறாங்க? உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களா? என்று கேட்டார்.
அதற்கு காளையன் சிரித்துக்கொண்டு , “இருக்கிறாங்க அத்தை.” என்று காளையன் சொல்லிக் கொண்டு இருக்கும்போது, அங்கே ஒரு பெரிய கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கியவரை பார்த்ததும் முதலில் டீக்கடையில் இருந்த முதலாளி ஓடி வந்தார். “ஐயா வாங்க, ஐயா என்னையா இந்த நேரத்துல இந்த பக்கம் வந்திருக்கிறீங்க? யாராவது முக்கியமானவங்க வராங்களா ஐயா?” என்று கேட்டார்.
அவர் டீக்கடை முதலாளியை பார்த்து, “என்ன கண்ணப்பா இப்படி ஒரு கேள்வி என்னோட வாழ்க்கையில ரொம்பவே முக்கியமானவங்க வந்திருக்கிறாங்க.” என்று சொல்லியவாறு காளையன் அருகில் வந்து அவனை அணைத்துக் கொண்டார். அவனும் அவரை பதிலுக்கு அணைத்து கண்கள் கலங்கினார்.
அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். காளையன் இவங்க என்று அவரிடம் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்த முனைந்தான். அதற்கு அவர், “கொஞ்சம் இரு காளையா, நான் சொல்றேன். இது உன்னோட அத்தை துர்க்கா. இது அவங்களோட பொண்ணு மலர்னிகா, அதைவிட சிறப்பானா, உன்னோட மனைவி மலர்னிகா என்று சொல்லலாம்.
இது நிஷா, மலர்னிகாவிற்கு தங்கை மாதிரி. இது கதிர் உன்னோட தம்பி மாதிரி சரியா? நான் கரெக்டா சொன்னேனா?” என்று அவனிடம் கேட்டார். அதற்கு காளையன், உங்களிடம் போய் எதையாவது நான் மறைக்க முடியுமா? முடியவே முடியாது” என்று சிரித்தான். “சரி வாங்க மீதிய வீட்ல போய் பேசிக்கலாம். உங்களுக்காக அங்க ஒருத்தன் காத்துட்டு இருக்கிறான்” என்று சொல்லி அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.
ஊட்டி பாதையின் வளைவுகளில் காரானது சீராக சென்று கொண்டிருந்தது. பாதையில் இரு பக்கங்களிலும் சிறிய சிறிய கடைகள், சற்று தொலைவில் பெரிய மலைகள் என்று இயற்கை அன்னை அங்கே தனது அழகை கொட்டி தீர்த்து இருந்தார். அத்தனை அழகாக இருந்தது ஊட்டி.
மெதுவாக இவர்கள் வந்த கார் அந்த வீட்டின் நுழைவாயிலில் நின்று ஹாரனை அடிக்க, சத்தம் கேட்டு காவலாளி வேகமாக வந்து கதவைத் திறந்தார். கதவை திறந்ததும் கார் உள்ளே பாதையில் சென்றது. உள்ளே செல்ல அழகிய பூக்கள் நிறைந்த அந்தத் தோட்டம் இருபுறமும் கண்களைக் கவர்ந்தன.
தோட்டத்திற்கு நடுவில் செல்லும் பாதையில் கார் சென்று, அந்த பெரிய மாளிகை முன் நின்றது. காரில் இருந்து இறங்கியவர்கள் தயக்கத்துடன் வெளியே நின்றனர். இவர்களைப் பார்த்த அவர், “எந்த தயக்கம் உங்களுக்கு வேண்டாம். இந்த வீடு எல்லாம் உங்க வீடு மாதிரி தான். மாதிரி என்ன மாதிரி உங்க வீடுதான். உள்ளே வாங்க என்று சொன்னவர் ஒரு நிமிஷம் இருங்க காளையா” என்று சொல்லிவிட்டு, உள்ளே பார்த்து, “பொன்னி….பொன்னி…” என்று குரல் கொடுத்தார் .
அப்போது வீட்டில் இருந்து பொன்னி கையில் ஆரத்தி தட்டுடன் வெளியில் வந்தார். இதை பார்த்த காளையன்,” இது எதற்கு? “என்று கேட்க,” நீ சும்மா இரு, நீ எப்பவாவது இங்க வருவேன்னு தெரியும் அதுக்காக நீ வரப்போற நாளுக்காக இங்க இருக்கிற எல்லோரும் காத்திட்டு இருக்கிறம்.” என்று சொல்லி, ” பொன்னி என்ன பார்த்திட்டு இருக்க? எடு ஆர்த்தியை, இவங்க இப்பதான் கல்யாணம் ஆனவங்க. முதன் முதலாக நம்ம வீட்டுக்கு வராங்க, அதனால நல்லா எடுத்துக்கணும் ஆர்த்தி” என்று சொல்ல பொன்னியும் ஆர்த்தி எடுத்தார்.
பொன்னியின் தட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டினை வைத்தார் அவர். பின்னர் அனைவரும் உள்ளே சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தனர். அப்போது படிகளில் இறங்கி வந்த வாட்டசாட்டமான ஒருத்தன், காளையனை அங்கு பார்த்ததும் ஓடி வந்து “அண்ணா” என்று கட்டிக் கொண்டான். இதை பார்த்த கதிர் காளையனை குழப்பத்துடன் பார்த்தான். துர்க்காவும் நிஷாவும் என்னது அண்ணாவா? “என்று பார்த்தனர்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Wow super and interesting divi