காதலே- 14
” ம்மா சிம்பிளா வெட்டிங்க வச்சுப்போம், என அலைபேசியில் கூகிள் ஸ்பீச்ல் சொல்ல, நிறைய பேர் வருவாங்க அன்நிசியா இருக்கும்” என்றாள் வாணியோ சென்னையிலான் எல்லாம் அரேஞ்ச் பண்றாங்க எப்படிமா நாம சொல்றது மாப்பிள்ளை கிட்ட நீ சொல்லி பாரு” என்றார்.
அவளும் இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு வந்தவள் “எனக்காக நீயிருக்கின்றாய் என்ற உணர்வே வாழ்க்கையை அழகாக்கிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு நொடியையும் ” எனும் கவிதையோடு சேர்ந்து அழகான பிஜிஎம் இசையை பின்னணியில் இட்டவள் தனது யூடியூப் சேனலில் அதனை பதிவேற்றம் செய்திருந்தாள்.
” அப்பா சிம்பிளா வெட்டிங் செய்போம் பிறகு கிரான்டா பங்க்ஷன் வைப்போம் என்றான் நிதிஸ் ஆம் கனியிடமிருந்து வந்த குறுஞ்செய்தியும் அதுவே,
கோயிலில் திருமணத்தை செய்து வைவ் ஸ்டார் ஹோட்டிலும் நெருங்கிய ரிலேஷன்ஸ் பிரண்ட்ஸ் மட்டும் கலந்து கொள்ளுமளவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது கனியின் குரல் குறுஞ்செய்திக்கு “ஓகே” என ஸ்மைலியுடன் பதில் அனுப்பினான் நிதிஸ் அவளும் “குட் நைட்” என அனுப்பி இருந்தாள்.
நாட்களும் செல்ல திருமணத்திற்கு முதல் நாள் இரவு நிதிஸிடமிருந்து குறுஞ்செய்தி “ஹாய் தூக்கமா?” இல்ல இனிமேதான் என ஓகே “அட்வான்ஸ் விஷசஸ் ஹேப்பி மேரிட் லைப்” என அவன் பதில் அனுப்ப கனியும் “தேங்க்ஸ் அண்ட் சேம் டு யு” என பதில் அனுப்பியிருந்தாள் நாளைய நினைவுகளை எண்ணி சுகமாய் லயித்தவள் தூக்கத்தை தழுவினாள்.
நிதஸும் சிரித்தபடி அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க,”என்ன பிரதர் ஒரு வாரம் கொஞ்சம் ஆபீஸ் ஒர்க் அதிகமாயிட்டு வர முடியல அதுக்கிடைல புதுசா ஒரு ட்ரக் ஓடுது, “சோ ஹேப்பி,லவ் மூட் வந்துட்டு போல ” என கிண்டல் செய்தான் ராம் அவன் அருகில் அமர்ந்தான்.
நிதிஸும் பெருமூச்சுடன் “அந்த குரல மறக்கனும் ,முழுசா அதுல இருந்து வெளி வர முடியல வாரவளுக்கு உண்மையா இருக்கனும்” என்றான் நிதிஸ் உணர்ந்து.
அடுத்த நாளும் அழகாகப் புலர விக்னேஸ்வரர் ஆலயத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.” கனி எழுந்திரு எனும் தாயின் குரலில் எழுந்தவள் குளித்துத் வர பியூட்டினியனும் வந்திருந்தார்.
சிறிது நேரத்தில் கனியின் அறைக்கு வந்த வேணி மகளின் அழகில் ,ரொம்ப “அழகா இருக்கடா” என திஸ்டிப் பொட்டு வைத்து விட்டார். கனியும் அழகாக புன்னகைத்துக் கொண்டாள்.
மேகநாதன் வாணியின் சொந்த பந்தங்கள் திருமணம் நடைபெறும் ஹோட்டலிற்கு முன்னதாக பஸ்ஸில் சென்றிருக்க,மணப் பெண்ணை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டனர் மேகநாதன் வாணி தம்பதியினர்.
சுதர்சன் தனது நண்பர்களுடன் முன்னதாகவே சென்று திருமண வேலைகளை கவனிக்கத் தொடங்கினான். ஆலயத்தின். நுழைவாயில் வாழைமரம் கட்டப்பட்டு, பூக்களால் அலங்கரித்தனர்.
ஆலயம் திருமண செலவை மேகநாதன் ஏற்றுக் கொள்ள, ஹோட்டலில் அதற்கான செலவை ப்ரதாப் செய்வதாக இருந்தது. அதையும் மேகநாதன் செய்வதாகச் சொல்ல ப்ரதாப் தான் பேசி தாங்கள் செய்வதாக முடிவெடுத்தனர்.
மேகநாதன் ,வாணி , மற்றும்அவர்கள் தரப்பு உறவினர்கள் வந்ததும் ப்ரதாப் தம்பதியினர் வரவேற்றனர்பாதுகாப்புகென சில பொலிஸ் அதிகாரிகளும் அங்கு நின்றனர். மீடியாக்கார்களை உள்ளே விடவில்லை பவுன்சர்ஸ்.
ஆலயத்திற்கு வந்த கனியும் மனப்பெண்ணுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட அறையில் நுழைந்து கொண்டாள்.
நிதிஸ் யாக குண்டத்தில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினான். “சிறிது நேரத்தில் ஐயர் பொண்ணை அழைச்சு வாங்க” என குரல் கொடுக்க, கனியும் பெண்கள் சூழ மனமேடைக்கு வந்தாள். தங்க நிறச் சேலையில் அழகுப் பதுமையாய் வந்தவள் நாதிஸுற்கு தான் கொண்டு வந்த தாமரை மலயினால் கட்டப்பட்ட மலர் மாலையை அணிவிக்க அவனும் மலர் மாலையை அணிவித்தான் அவளும் , நிதிஸுன் அருகில் அமரந்து கொள்ள,ஐயரும் மந்திர உச்சாடனஙக்ளை செய்யத் தொடங்கினார்.
கனிக்கோ அழவில்லாத மகிழ்ச்சி அது அவள் முகத்திலும் பியதிபலித்து அது அவளை இன்னும் அழகாகக் காட்டியது. நிதிஸை அவள் தூரத்தில் வரும் போது பார்த்ததுடன சரி அவனருகில் அமர்ந்ததும் அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை.
அதனைத் தொடர்ந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று வந்த தாலியை ஐயர் நிதிஸுடம் கொடுத்தவர் “கெட்டி மேளம் கெட்டி மேளம் ” எனச் சொல்ல. மேள , வாத்தியங்கள் முழங்க நிதிஸும் ஐயரிடம் இருந்து தாலியை வாங்கியவர் கனியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.
கனியின் நெற்றியிலும் தாலியிலும் குங்குமத்தை வைத்தவன் அக்கியை சுற்றி வந்து என அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்தனர்.
மேகநாதன் வாணிக்கும் கண்கள் கலங்க மகளைத்தான் பார்த்தனர் தேவி பாடிய மணமக்களை ஆசீர்வதிக்க அதனை தொடர்ந்து வாணி மேகநாதன் பிரதாப் கல்யாணியின் அனைவருடமும் ஆசீர்வாதம் பெற்று அங்கிருந்து பெரியோர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
” என்ன பிரதர் என்கிட்ட ஆசீர்வாதம் வாங்குறலையா?” என ராம் தமையனை அனைத்து வாழ்த்கை தெரிவித்தான். ஆலயத்தில் அனைத்தும் நல்ல படியாக மூடிய கிங்ஸ் ஹோட்டலுக்கு அனைவரும் கிளம்பினர். மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஆலயத்திற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டதால் மற்றைய அனைவரும் ஹோட்டலுக்கு வருவதாக இருந்தது .
ராம் காரை ஓட்ட நிதிஸும் கனியும் காரில் ஏறும் போது. கனி தாயை தேட “நாங்க பின்னாடி வாரும்டா” என்றார் வாணி ஏனையர்கள் தாங்கள் வந்த வாகனங்களில் ஹோட்டலுக்கு கிளம்பினர்.
சுதர்சன் ஆலய நிர்வாகத்திடம் பணத்தை செலுத்தி விட்டு தனது பைக்கில் புறப்பட்டான். “தரங்கிணி வரலையாடா?” ” எமர்ஜென்சி ஆப்ரேஷன்டா ஹோட்டலுக்கு வாரேன்னு சொன்னா” என்றான் ராம்.
கனி அமைதியாகவே வந்தாள் சிறிது நேரத்தில் ஹோட்டலில் விஐபிகளுக்கான பாதையில் ராம், நிதிஷ், கனி திருமண விருந்துக்கு ஏற்பாடடு செய்யப்பட்ட மண்டபத்தினுள் நுழைந்தனர். எல்இடி பல்பும்களாலும் மலர் அலங்காரங்களாலும் ஸ்டேஜில் அலஙக்ரிக்கப்பட்டு இருவர் அமர கதிரைகள் போடப்பட்டிருந்தன. அலங்கரிப்பட்டிருந்தன.
ப்பே முறையில் உணவுகள் வழங்கப்பட்டு, டிஜே ஒருபுறம் என அவ்மண்டபமே கலகலப்பாக இருந்தது. இருவரும் அவர்களுக்கான இருக்கையில் அமர விருந்தினர்கள் ,திருமண வாழ்த்தைச் தெரிவிக்க மேடையேறினர். போட்டோகிராபர் அவர்களை ஆலயத்தில் எடுத்தது போதாதென்று இங்கும் ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்.
இக் கூட்டம் ஒவ்வாமையை தந்தது கனிக்கு. “அம்மா எங்க இருக்கீங்க” என குறுஞ்செய்தியை அனுப்ப “அக்கா அம்மாவோட போன் என்கிட்ட தான் இருக்கு, அம்மா அத்தை கூட சாப்பிடறாங்க” என பதில் அனுப்பினான் சுதர்சன்.
“ஓகே” “என்றவள் தர்ஷா குடிக்க எதுவும் வேணும்டா ” என அவள அனுப்ப .மேலும் சில விருந்தினர்கள் வர அலை பேசியை அருகில் வைத்து விட்டாள் மேடையேறியவர்களும் வாழ்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்து சென்றனர். அவளும் புன்னகையுடன் “தேங்க்ஸ்” என உதட்டசைவில் சொல்லிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் சுதர்சன் இரண்டு யூஸ் கப்போடு அவர்களை நெருங்கியவன் இருவருக்கும் அதனை கொடுத்துச் சென்றான். நிதிஸோ “இதைத்தான் போன்ல மெசேஜ் பண்ணுதா”? எனக் கேட்க, அவளும் “ஆம்” என்ன தலையாட்டம் இனி எதுனாலும் என்கிட்ட சொல்லு என்றான், அவளும் சம்மதமாக தலையாட்டினாள். “நான் இது குடிக்கிறலே என தனது ஜூஸையும் அவளுக்கே கொடுக்க அவள் முகத்தில் அப்பட்டமாவே தெரிந்தது.
அதன் பின் அனைவரும் குடும்ப சங்கீதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர் கனி முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியே பெற்றோரை நிம்மதியடையச் செய்தது.
அலுவலக நண்பர்கள் சொந்தங்கள் அனைவரும் வாழ்த்தி விடை பெற்று சென்றனர் காலேஜ் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர் .
கனி நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தாள். அலுவலக நண்பர்களுடன் வந்த மோனியும் “சொல்லவே இல்ல பாத்தியா?” என சொன்னவள் அவளை வாழ்த்தி விடை பெற்றாள்.
மேடை ஏறிய காலேஜ் நண்பர்கள் சிலர் பொறாமை பட்டுக்கொண்டனர்.விருந்தினர்கள் தொடர்ந்து வரவே அவளது காலேஜ் நண்பர்கள் மேடையை விட்டு அகன்றனர். அதனால் அவளால் பேச முடியாது இருப்பது குடும்பத்தை தவிர யாருக்கும் தெரியாமலே இருந்தது.
சகானா மாத்திரம் வரவில்லை கணவனுடன் வெளியூர் சென்றிருப்பதால் அவளால் வர முடியாத நிலை அலைபேசியில் வராததுக்கு மன்னிப்பு வேண்டியவள் வாழ்த்தையும் தெரிவித்தாள்.
“ஹேய் கனி அண்ணாடபோட்டோ அனுப்பு” என சகானா ஒரு முறை மெசேஜ் அனுப்ப கனியோ பாடகர் நிதிஸுன் புகைப்படத்தோடு ,இன்விடேஷனையும் சேர்த்து அனுப்பினாள்
புகைப்படத்தை பார்த்த சகானா கனிக்கு மறுபடியும் அழைப்பெடுக்க அவளது அழைப்பை துண்டித்து கனி ஸ்மைலி ஒன்றை அவளுக்கு பதிலாக அனுப்பி இருந்தாள். “ட்ரீம்ஸ் கம் டு, கள்ளி “என பதில் அனுப்பி இருந்தாள் சகானா.
ஆட்களும் சற்றுக் குறையத் தொடங்கினர், கழுத்தில் கை வைத்து நெட்டி முறித்த நிதிஸ் ராமுக்கு அழைத்தவன் “எங்கிருக்க?”. ” இதோ வாரேன்” என்றவன் தரங்கினியுடன் வர நால்வரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிதிஸ் ,”இங்கு புக் செய்த ரூமிற்கு போகலாம்” என கனியை அழைக்க அவளோ சைகையில் ஏதோ சொன்னாள்.
“புரியல ” என்றான் நிதிஸ். அலைபேசியில் அம்மாவை பாத்துட்டு வரேன் என டைப் செய்து காட்டினாலள்” ஓகே சிக்ஸ் ப்ளோர்ல ரூம் நம்பர் பைவ்” என்றவன் ராம் தரங்கிணியோடு பேசிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
தலையசைப்புடன் அவளும் தாயைக் காண விரைந்தாள். “அவங்களால பேச முடியாதா?” “பேசுவா ஆக்சிடென்ட் வாய்ஸ் போயிட்டு” என்றான் “பாவம்ல பேசினவங்க சடன்லி பேசாம போறது” என்றாள் தரங்கினி.
“ஓகே நான் கிளம்புறேன். இப்பவே நாலு மணி ஆயிடுச்சு ஹாஸ்பிடல் போகனும்” என்றாள். “ஓகே இரு ட்ராப் பண்றன்”என்றவன் அவளோட ஹோட்டலை விட்டு வெளியேறினான்.
கனியும் தாயருகில் செல்ல வாணியும் மாப்பிள்ளை எங்க,என சைகையில் கேட்க,அது புரிந்த வாணியும் “ஓகே உன்னோட டிரஸ் எல்லாம் கார்ல இருக்கு இங்கே இரு தர்சனுட சொல்லி எடுப்போம் என்றவர். தர்சனுக்கு அழைத்து விடமத்தைச் சொல்ல அவனும் சிறிது நேரத்தில் உடைப் பெட்டியை எடுத்து வந்து கொடுத்தான்.
வாணி, விட்ட போலாம் பூஜைக்கு ஏற்பாடு செய்யணும் என்றார் கல்யாணி. அத்த் கிளம்பலாம் ரொம்ப அலச்சல் சாப்பிட்டு , மாத்திரை போட்டு நேரத்தோட தூங்குங்க”என்ற கல்யாணி என்னங்க கிளம்பலாம் என்றார் கணவனிடம்.
அனைவரும் ஹோட்டலில் இருந்து கிளம்பினர் அவர்கள் கிளம்ப முன் கனியை விட்டு நிதிஸ் சென்ற அறையில் விட்டவர்கள். பூஜை 6:00 மணிக்கு தான் வாங்க என கனியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர்.
நீதிஸ் ஆகாய நீல நிற ஷேட்ர் மற்றும் கருப்பு ஜீன்ஸில் தயாராகி நிற்க “ஃபிரஷாகலையா?” அவளோ சைகையில் ஏதோ சொல்ல “முதல்ல இந்த சைன் லேங்குவிச் படிக்கணும், என முனுமுனுத்தவன் “புரியல” என்றான் நெற்றியை நீவியபடி. “வீட்ட போய் குளிச்சுக்குறேன்” என அலைபேசியில் டைப் செய்து காட்ட நிதிஸ் இதழ்களிலோ சிரிப்பு “ஓகே” என்றவன் அவளது உடைபெட்டியை தள்ளிக் கொண்டு காரில் வைத்தான்.