காதலே -15
நிதிஸும் அவளது உடைப் பெட்டியை காரின் பின் சீட்டில் வைத்தவன் காரின் முன் சீட்டில் வந்தமர அவன் அருகில் கனியும் அமர்ந்து கொண்டாள்.
காரும் வீட்டை அடைய ஆர்த்தி எடுத்து உள் அழைத்தார் கல்யாணி…..”ரெஸ் சேஞ்ச் பண்ணலையாடா” என கனியிடம் கேட்டவர், ” நிதிஸ் மலர ரூமுக்கு கூப்பிட்டு போ” என்றார்.
அவளை அழைத்துக் கொண்டு தனது அறையில் விட்டவன். இந்த அலுமாரில ரெஸ்ல வைக்கலாம்,ரெடியாகி வா என்றான்.அவனது ஒருமை அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்தவளை ,ஏதும் வேணுமா? எனக் கேட்க ,”இல்லை”எனத் தலையாட்டினாள்.
பின் அறையை விட்டு வெளியேறியவனை நிறுத்தியது கால் கொலுசு சத்தம்” அவளை மீண்டும் திரும்பிப் பார்க்க அலைபேசியை முகத்திற்கு நேராக நீட்டியிருந்தாள் அதைப் படித்தவன் ” ஓகே” என அவ்வறையை விட்டு வெளியேறினான்.
அவ்அறையில் தனது பார்வையை சுழல விட பெரிய அளவிலான கட்டில் அவ்வேளையில் அதோடு ஒருபக்கம் சுழரை அடைத்து அலுமாரியும் ரெஸ்ஸிங் டேபிளும், வலது பக்கம் குளியலறையும், இடதுபக்கம் கதவு பால்கனிக்கு செல்லும் வகையில் கண்ணாடித் தடுப்புக்கள் போடப்பட்டு மிகவும நேர்த்தியாக இருந்தது.
சிறிது நேரத்தில் கீழே வந்தவன் ” அத்த கனி கூப்பிட்டா”என்றான்.வாணியும் மகளது அறைக்குச் செல்ல,அவ் அறையோ பிரமாண்டமாக இருந்தது. முன்னே ஹால் அதில் சோபாக்கள் போடப்பட்டிருநத்து.அதைத் தாண்டி செல்ல படுக்கை அறை அதிலோ பெரிய கட்டில் என அனைத்தையும் பார்த்தபடி ” “மலர்” என அழைத்தபடி செல்ல அவளும் படுக்கை அறையில் இருந்து வெளியோ வந்தவளின் கொலுசு சத்தத்தில் வாணியும் அவளருகில் செல்ல அவளும் சைகையால் தலை அலங்காரத்தை கழற்றச் சொல்ல வாணியும் அனைத்தையும் கழற்றினார்.நிதிஸ் உடைக்குப் பொருத்தமான சுடிதாரை எடுத்து வைத்தவள்.தான் குளித்து வருவதாக தாயிடம் சைகையில் சொன்னாள்.வாணியும் அங்கிருந்து அகன்றார்.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு நீளமான தான் எடுத்து வைத்த சுடிதாரை அணிந்தவள் வெளியே வர பூஜையும் ஆரம்பமாகியது.வாணியோ ” சேலை கட்டலையா எனக் கேட்க,அவளும் சைகையால் ஏதோ சொன்னாள். பூஜையும் ஆரம்பமாகியது.பூஜையை முடித்துக் கொண்டு அனைவரும் வீட்டிலேயே இரவுணவை உண்டனர்.
“நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுது “என்றார் தேவிப்பாட்டி. “நேரம் ஆகுது நாங்க கிளம்புறோம் தேவா” என்றார் மேகநாதன் “நின்று போலாமே”…… “இல்லப்மா போட்டது போட்டபடி கிடக்கு வீட்டில் சில சொந்தக்காரங்க தங்கி இருக்காங்க நாங்க பிறகு வாறோம்” என்றார் மேகநாதன்.
அவர்கள் போக வேண்டும் என்று சொல்லியதும் தான் கனி மலரோ வாணியை கலக்கமாய் நோக்க…. வாணியும் மகளை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவர் ஆயிரம் பத்திரி பத்திரங்களையும் அறிவுரைகளையும் சொன்னாலும் கனியின் முகம் தெளிவடையவே இல்லை அவளின் தவிப்பை கண்டு கவலை கொண்ட நிதிஸ் தாயைப் பார்க்க கல்யாணியும் அவர்கள் இருக்கும் இடம் வந்தவர், கனியை அணைத்து “நாங்க பத்திரமா பார்த்துக் கொள்கிறோம்”என்றார். நிதிஸும் தேவிப்பாட்டியும் அங்கு வர கனியின் கைகளை கோர்த்தவன் நான் இருக்கிறேன் என்பதாய் இருந்தது அவன் செய்கை.
அறைக்கு வந்த நிதிஸ் “ரெஸ் பேக் பண்ணு” என்றான் அளோ கேள்வியாய் அவனைப் பார்க்க “ஹோட்டலுக்கு போகணும்” என்றான் அவளும் அவனைப் பார்க்காது தனது உடையை ஒரு பேக்கில் வைக்க அவனோ “இந்த பேக்ல வைக்கலாமே” என்றான். அவ்ளோ “இல்லை” என தலையாட்ட அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் இரு பைகளையும் தூக்கிக்கொண்டு வெளியே வர அனைவரும் ஹாலில் தான் இருந்த்னர்.
பின்னாடி வந்தவளின் கையை எட்டிப் பிடித்தவன் “வரேன்மா” என்றவன் விரைந்து வெளியேறி காரை அடைந்த பின் தான் மூச்சை இழுத்து விட்டான். எதுக்கு செல்கிறோம் என்று தெரியாதா வீட்டில் உள்ளவர்களுக்கு நிமிர்ந்து பார்க்க கூச்சத்தில் பொதுவாக தலையாட்டி விட்டு நிதிஸுடன் இழுபட்டுச் சென்றாள்.கனி அவர்களின் கோர்த்த கைகளை பார்த்த வேணியும், மேகநாதனும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
நிதிஸ் கார் கதவை திறந்து விட அவன் அருகில் ஏறி அமர ஆறு விதமான வேகத்தில் திருமண விருந்து நடைபெற்ற ஹோட்டலுக்கு சென்று இருவரும் காரிலிருந்து இறங்கி ஹோட்டலின் உள் நுழைந்தனர் விஐபிகளுக்கான பகுதியால் உள் நுழைந்தவர்கள் யார் கண்ணிலும் படவில்லை ரிசப்ஷனில் சாவியை வாங்கிக் கொண்டு தங்களுக்கான அறைக்குச் சென்றனர்.
அறை இருளில் மூழ்கியிருக்க அறையின் லைட்டை ஆன் செய்தான் நிதிஸ். அறை முழுவதும் அலங்காரம் கட்டிலிலும் இதய வடிவில் ரோஜா இதழ்கள் ஒருவிதம் இதமான வாசம் அறை முழுவதிலும், நிதிஸுன் பார்வையை தவிர்க்கும் பொருட்டு கனி சுற்றும் முற்றும் அறையைப் பார்க்க, அறைக்கதவு தட்டப்பட்டது. “நான் பார்க்கிறன்” என நிதிஸ் கதவை திறந்து பார்க்க பணியாளர் தங்களது இருவரின் பேக்குகளுடன் நின்றிருந்தார்.. நிதிஸும் பேக்கை வாங்கியவன் “தேங்க்ஸ்”என கதவை மூட அப்பணியாளரோ “சார் ஆட்டோகிராப் ப்ளீஸ்” என்றான் நிதிஸும் ஒன்றும் பேசாது அவன் நீட்டிய குறிப்பேட்டில் போட்டு புன்னகையுடன் கொடுக்க, அவனும் மகிழ்வுடன் வாங்கிக் கொண்டான்.பூஜை முடிந்த கையோடு வந்ததால் இருவரும் உண்ணவில்லை.ஹோட்டலில சாப்பிடுவதாக நிதிஸ் சொல்லியிருந்தான். ரூப் கார்டின்ல டினர் அரேஞ்ச் பண்ணுங்க என்றான் “சோர் சார்” என பணியாளர் அங்கிருந்து அகன்றார்.
மீண்டும் அறைக்குள் வர கனி பால்கனி நின்றிருந்தாள் மனமெல்லா அப்படி ஒரு மகிழ்ச்சி அவ் மகிழ்ச்சி அவள் முகத்திலும், ” அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்று சும்மாவா சொன்னாங்க,
நிதிஸ் வரும் அரவம் கேட்க அவனைத் திரும்பிப் பார்க்க அவள் நிற்கும் இடம் வந்தவன் வெளியே பார்க்க பூரண நிலவு முதல் நாள் சென்று இருந்ததால் வானம் தெளிவாக காட்சியளித்தது நட்சத்திரம் ஒன்றையும் காணவில்லை.
கனி அவன் விழிகளை பார்த்தவள் சில நிமிடம் எதுவுமே பேசவில்லை அவளிடம் இந்த அசைவும் இல்லாததால் அவள் முன் சொடகிட்டவன். “என்ன ” எனக் கேட்க அவளோ “ஒன்றும் இல்லை” என் தலையாட்டினாள். “ஓகே சாப்பிட போலாம்” என்றான் அவளும் அறைக்குள் வந்து அலைபேசியை எடுத்துக் கொண்டு வர நிதிஸும் அறையை பூட்டிக்கொண்டு இருவரும் ரூப் கார்டினுக்குச் சென்றனர்.
அவளுக்கோ மனதில் காதல், ஆசை அதை வெளிப்படுத்த முடியாத நிலையை வெறுத்தாள். நிதிஸும் அவளுடன் பேச முற்படவில்லை அவன் பதில் மனதிலோ வேறு சிந்தனை இருவரும் தங்களது எண்ணத்தில் மூழ்கியபடி ரூப் கார்டினை அடைந்தனர்.
அவ்விடமே வர்ண விளக்குகளால் ஜொலித்தது இருவரும் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேசையில் அமர்ந்தனர்.”என்ன சாப்பிடுற” என அவன் கேட்க அவளோ அலைபேசியில் டைப் செய்து “ஏதாவது நீங்க ஆர்டர் பண்ணுங்க” என்றாள்.
நிதிஸும் வெயிட்டரை அழைத்து நூடில்ஸை ஆர்டர் செய்தான். உணவும் சிறிது நேரத்தில் வர இருவரும் உணவை உண்டனர்.நிதிஸுன் அலைபேசி இசைக்க அழைப்பை ஏற்றவன் “ஹலோ அம்மா ஓகே,ஓகே என தாயோடு பேசிக் கொண்டிருக்க கனியோ எழுந்து ரூப் கார்டினின் வெளியே பார்த்த வண்ணம் நின்றிருந்தாள். வேறு யாரும் அங்கு இல்லை இருவர் மட்டுமே காதல் கொண்ட அவள் மனதோ கம்பியில் சாய்ந்து நின்று அவனையே பார்த்திருக்க எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ அவனை உச்சி முதல் பாதம் வரை அவளது பார்வை படிந்தது அதில் ரசிப்பு மட்டுமே.
‘என்ன இவ அடிக்கடி ப்ரீசாகி நிற்கிரா?’ ” சரிமா” என அலைபேசியை துண்டித்தவன் கனி நிற்கும் இடம் வந்தான். அவன் அருகில் வர அவளோ தனது பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
அலைபேசியை தூக்கிப் பிடித்தவள் சற்று தள்ளி நின்றவனுடன் செல்பி எடுக்க முட்பட அவனது உயரம் சரியாக அமையவில்லை அவனை திரும்பிப் பார்த்து போனை பார்த்து “சரியா வரல” என்றாள் உதட்டசைவில் அதனைப் புரிந்து கொண்டவன்.அவளருகில் வந்தவன் அவள் அலைபேசியை வாங்கி அவள் அருகில் நின்று தானே செல்ஃபியோ எடுத்தான் அவளும் சிரித்தபடி அலைபேசி வாங்கி செல்ஃபியை பார்க்க அதுவோ அழகாக எடுக்கப்பட்டிருந்தது.
“கனி” என அவளை அழைக்க அவளும் அவனை நிமிர்ந்து பார்க்க ரூப் கட்டிங் பக்க சுவர் கம்பியை பிடித்தவன் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் அவளும் அவனை பார்த்தபடி சுவரியில் சாய்ந்து நிற்க அவனும் அவளைப் பார்த்தபடி “குரலை செருமியவன் ” மை லவ்” என்றான் அவள் கேள்வியாய் அவனைப் பார்க்க “என் லைஃப்ல லவ் இருந்துச்சு அவள நான் ரொம்ப லவ் பண்ணன். என்றான் அவன் வார்த்தையை கேட்டவளுக்கோ, அதிர்ச்சி இருப்பினும் அதை முகத்தில் காட்டாது இருக்க பெரும் பிரயத்தணப்பட்டாள். மேலும் தொடர்ந்து நிதிஸ் “இனி அது என் லைஃப்ல இருக்காது, அதுல இருந்து வெளியில வர முடியல, ஆனா வெளில வரணும், டைம் எடுக்கும் பட் கட்டாயம் வெளியில் வருவேன் என்றான் அவள் முகத்தைப் பார்த்தவாறு.
அவள் சைகோயில் ஏதோ கேட்க “புரியல”….’ இப்போ அவங்க எங்க’ உங்கள எப்படி வோணாம்னு சொன்னாங்க”? என அலைபேசியில் டைப் செய்து கேட்க
விரக்த்தியாய் சிரித்த நிதிஸ் “என்ன அவளோ உருகி காதலிச்சா பட், எனக்கு ஒரு வாய்ப்பக் கூட தராம போயிட்டா?” என்றான்.
” இதோ இப்ப நமக்கு வெட்டிங் நடந்துட்டு இனி அந்த லவ்வ பத்தி பேசுறதோ, நினைக்கிறதோ கூட நான் உனக்கு செய்ற துரோகம், “எனக்கு டைம் வேணும்” “நான் நானாகனும்” என்றான்.
அவளோ என்ன சொல்வதென்றே தெரியாது. அவனை நோக்கி “என்னடா வெட்டிங் நடந்த முதல் நாளே இப்படி பேசுறான்னு யோசிக்கிறியா? “என கேட்க அவளோ “இல்லை” என தலையாட்டினாள்.
“வெல் நாமா அது வர ஒரு நல்ல பிரண்ட்ஸா நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணுவோம்” என்றான். அவளோ நட்புக்கர நீட்ட அக்கரத்தை பற்றிக் கொண்டான். அப்படியே இருவரும் அறைக்கு வந்தனர். கட்டிலில் இந்த ரோஜா இதழ்களை குப்பைத் தொட்டியில் போட்டவன் மற்றொரு போர்வையை அலுமாரியைத் திறந்து எடுத்தவன்.” நீ தூங்கிக்கோ” அவள் அவனை கேள்வியை நோக்க நான் சோபால தூங்கிக்கிறேன் என்றான். அதுவோ நான்கு ஐந்து பேர் தூங்குமளவுக்கு பெரிய கட்டில் “பரவால்ல தூங்கிக்கோங்க என்றாள் சைகையில்.அவனது உயரத்திற்கு சோபாவோ போதாது,இன்றைய நாள் அயர்ச்சியில் அவனுக்கும் ஓய்வு தேவைப்பட்டது.” சரி” என்றவன் கட்டிலில் ஒரு பக்கம் வந்து தூங்க கணியும் மறுபக்கம் தூங்கினாள். அவள் மனம் ‘லவ் ஃபெயிலியர்ல தான் சோகமான சாங்ஸ் இவ்வளவு நாளும் பாடினாரா?பாவம்’ என எண்ணியவள் தூங்கி போனாள்.
மறுநாள் காலையில் அறையை காலி செய்து கொண்டு காலை உணவை அங்கேயே முடித்துக் கொண்டு இருவரும் வெளியேறினர். இதோ வீட்டுக்கும் வந்து விட்டனர். கனியும் பாட்டி மற்றும் கல்யாணியுடன் நேரத்தைக் கடத்திக் கொண்டாள்.
சமூக வலைதள பக்கம் அவள் செல்ல பாடகர் நிதிஸுன் திருமணம் பற்றிய செய்திகள் தான் இருவரின் புகைப்படத்தோடு அதில் அவள் கமெண்ட்சைப பார்க்க பலர் வாழ்த்தியையும், சிலர் கனியை விமர்சித்தும் மேலும் சிலர் தங்களிடமிருந்து நிதிஸை பறித்து விட்டது போலும் கமெண்ட் செய்திருந்தனர்.
அனைத்தும் புறந்தள்ளியவள் தனது யூடியூப் தளத்தை திறந்தாள்.அதில் தான் முதல் பாடி தனது லேப்டாப்பில் சேமித்து வைத்திருந்த ஒரு பாடலை எடுத்தவள் “கடவுளுக்கு நன்றி, எது உன்னுடையதோ ஒரு நாள் அது உன்னை வந்தே சேரும்” என்ன வரிகளுடன் அதை பதிவேற்றினாள்.
அவளது வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றது. நிதிஸுன் அருகில் இருப்பதை பெரும் பேராகக் கருதினாள் தாய் தந்தையுடன் அலைபேசியில் குறுஞ்செய்திகள் மூலம் பேசிக் கொள்வாள்.
மற்றொரு நாள் இருவரும் மறு வீடு சென்று திரும்பினர். அங்கு தாங்கி கொள்ளவில்லை அவனின் வேலை பளு காரணமாக மேகநாதன் வாணியும் தடல் புடலாக விருந்து வைத்தே தம்பதியினரை அனுப்பினர்.
நாட்களும் செல்ல கனியின் பட்டமளிப்பு விழாவிற்கு இருவரும் சேர்ந்து சென்று வந்தனர். அப்போது தான் அவளது நண்பர்களுக்கு அவளது பிரச்சினை தெரிந்தது. சகானாவோ அவளோடு பேசவில்லை சில பல மன்னிப்பின் பின் நண்பர்கள் இருவரும் இணைந்து கொண்டனர்.சில நண்பர்கள் அனுதாபமாய் பார்த்தனர்.
ஆன்லைனில் தனது வேலையைத் தொடர்ந்தவள். ராமிடம் சில வேளைகளில் அவளது வேலை பற்றி சந்தேகஙக்ளும் கேட்டுக் கொள்வாள்.
அன்று ஸ்டுடியோவிற்கு வந்த நிதிஸ் புதிதாக வந்த படத்திற்கு டப்பிங் செய்வதற்காக டப்பிங் ஆர்டிஸ்ட் தேர்வு செய்தவனின் வேலை அன்று அதிலே செல்ல நேரத்தைப் பார்க்க அதுவோ ஒக்ஷ நாலு மணி எனக்காட்டியது “கௌதம் எல்லாருக்கும் இன்பார்ம் பண்ணிடு” என எழுந்தவன் தன் அறையை விட்டு வெளியேறினான்.
நிதிஸுன் கார் வீட்டை வந்தடைந்ததும் அதிலிருந்து இறங்கி உள்ளே சென்றவன், ஹாலில் இருந்த கல்யாணியிடம் “அம்மா கனி எங்க?” ” என்னடா பொண்டாட்டி பொண்டாட்டினு பின்னாடி தெரியுற நாங்க என்ன உன் கண்ணுக்கு தெரியலையா?” என பாட்டி நொடித்துக் கொள்ள
” ஐயோபாட்டி ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தங்க வந்திக்கார் புக் பண்ணி இருந்தேன். அதான் பாக்க போலாம்னு என்றான் சலிப்பாக,
கல்யாணியும் சிரித்தபடி “ரூம்ல டா”என்றார் அவனும் அறைக்குச் செல்ல அறையில் அவளை காணவில்லை பால்கனி எட்டிப் பார்க்க காதில் ஹெட்செட் உடன் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.
அவளை அழைக்க அவளோ காதல் ஹெட்செட் போட்டிருந்ததால் நிதிஸ் அழைத்தது விளங்கவில்லை திடீரென அவள் கரத்திலிருந்த அலைபேசியில் பொருத்தப்பட்டிருந்த ஹெட்செட்டை இழுக்க அவன் இழுத்த வேகத்தில் கையோடுஅது வர அவ்விடம் முழுவதும் நிதிஸுன் குரல்.
” காற்றே இளம் காற்றே! இசையாக வருவாயா?
தொலைதூரம் சிலகாலம்! இவள் காதில் மெல்ல,
பூவே வெண் பூவே !புதிதாக மலர்வாயா?
இவள் கூந்தல் மழை மேகம் அதில் நீந்தி செல்ல
என்று நிதிஸுன் குரல் உருகி ஒலித்தது.
அவன் குரலில் மோகம், தாபம், காதல் உருகி வழிந்தது
“பகல் இரவாய் கண் விழித்திடவா? உனதருகே நான் பிழைத்திடவா?
யுக ,யுகமும் ஒரு நொடி இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா!
உயிராய் இருந்திடவா,
உடை கலைவாய் என்னை அடைவாய் என அப்பாடல் தொடர்ந்து ஒலிக்க,……..
கனியின் முகமோ நிதிஸைக் கண்ட அதிர்ச்சியில் அதுவும் இப்பாடல் ஒலிக்க அவள் முகமோ, ரெத்த சிவப்பென மாறியது.
” வாவ் என்னோட சாங் கேட்பியா?”சொல்லவே இல்ல, இந்த பீல்டுக்கு வந்த புதுசுல பாடினது என்றான். அவளோ அவனைப் பார்க்க கூச்சத்தில் தலையை குனிந்து கொண்டாள்.