காலையில் வேறு அகமித்ரா அவனை கடுப்பேற்றினாள். இப்போது மறுபடியும் அவள் பேச, அதுவும் பொறுக்கி என்றது தேவசூரனுக்கு கோபத்தை வரவழைத்தது. அதனால் அவனது வலது கையால் அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்தான். அவன் கழுத்தைப் பிடிக்க, அகமித்ரா அவளது கைகள் இரண்டாலும் அவனது கையில் அடித்தாள். ஆனால் அவன் கழுத்தில் இருந்து கையை எடுக்கவே இல்லை. அவளுக்கு உடல் வியர்த்து விட்டது. கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வந்தது. அவளுக்கு தான் மரணத்தை நெருங்கி விட்டோம் என்ற எண்ணம் வரும்போதே அவளை பிடித்திருந்த தனது கையை விட்டான் தேவசூரன். அவனும் கையை விட்டதும், கீழே விழுந்த அகமித்ரா தனது தொண்டையை தடவி விட்டாள். விடாது இருமல் வந்து கொண்டு இருந்தது.
கீழே விழுந்தவள் முகத்திற்கு நேராக சொடக்கிட்டான் தேவசூரன். “இங்க பாரு… நீ யாருன்னே எனக்குத் தெரியாது… நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்… மற்றவங்க எப்படி பார்த்தும் பார்க்காமல் இருக்கிறாங்களோ அப்படியே நீயும் இருக்கணும்…. இதுக்கு அப்புறம் என் வழியில வந்த அப்புறம் என்ன பண்ணுவன்னு எனக்குத் தெரியாது…. ச்சீ பே….” என்றவன், அந்த வைன் ஷாப் ஓனரை இழுத்துக் கொண்டு சென்றான்.
அவனது ஆட்கள் அங்கிருந்த வைன் ஷாப்பையே காலி செய்திருந்தனர். தேவசூரன் அவனை இழுத்து வந்து அவனது ஷாப் முன்னால் நிறுத்தினான்.
“இங்க பாரு உன்னோட கடையே காலியாகிடுச்சி…. இதோட இந்த வேலையை விட்டு வேற நல்ல வேலையைப் பாரு இல்லை…” என்று அவனைப் பார்த்து கையை நீட்டி எச்சரித்தான். அந்த வைன் ஷாப் ஓனரும் விட்டாப் போதும்டா சாமி என்று அங்கிருந்து ஓடி விட்டான். தேவசூரனும் அவனது ஆட்களுடன் அங்கிருந்து சென்று விட்டான்.
இங்கே கீழே விழுந்த அகமித்ரா, தனது ஹேண்ட்பாக்கில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து தண்ணீர் குடித்தாள். தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பின்னர் எழுந்து தனது வீட்டிற்குச் சென்றாள். வீட்டிற்கு சென்று நேராக குளித்து விட்டு வந்து கீழே இருந்தாள் அகமித்ரா. அவள் தேவசூரனின் கோபத்தைப் பார்த்து பயந்து விட்டாள். அவனது கோபமான முகம் அவளுக்கு நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. கண்ணை மூடிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து விட்டாள். இருந்தாலும் மூடிய கண்களுக்குள் வந்து நின்றது அவனது முகம், பயத்தில் கண்களைத் திறந்து கொண்டாள். கொஞ்ச நேரம் சென்றதும் பிள்ளைகள் அவளிடம் படிப்பதற்கு வந்தனர். அவளும் தனது பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு பிள்ளைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்தாள். இரவு எட்டு மணி வரை பிள்ளைகள் இருந்தனர். அதன் பின்னர் அவர்களது பெற்றோர்கள் வந்து அழைத்துக் கொண்டு சென்றனர். அகமித்ராவிற்கு பயம் குறைந்திருந்தது. சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டாள்.
தேவசூரன் தனது அறையில் இருந்து புகைபிடித்துக் கொண்டே இருந்தான். ஒரு பாக்கெட் சிகரெட் காலியாகிவிட்டது. அடுத்த பாக்கெட்டை எடுத்தான். ‘எல்லோருக்கும் நல்லவனா தெரியற நான் அவளுக்கு பொறுக்கி மாதிரி தெரியுறனா…. இன்னொரு தடவை என் வழியில வரட்டும் அப்புறம் இருக்கு அவளுக்கு….’ என்று சொல்லிக் கொண்டவனுக்கு போன் வந்தது. அதை எடுத்துப் பேசிய தேவசூரனின் முகம் இறுகியது. நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் தருணம் வந்து விட்டதை உணர்ந்தான். அவன் செய்து கொடுத்த சத்தியம் நினைவிற்கு வந்தது.
அடுத்த நாள் வேதாசலம் கான்வென்ட் மிகவும் ஆரவாரமாக இருந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் தமது புதிய கரஸ்பாண்டன்டை வரவேற்பதற்கு தயாராக இருந்தனர். சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தன.
வேதாசலம் அவர்களின் கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கியவர் எல்லோரையும் பார்த்து புன்னகைத்தார். பின்னர் கார் கதவைத் திறக்க ஆஜானுபாகுவான தோற்றத்துடன் வெளிநாட்டின் செழுமையுடன் வந்து இறங்கினான் ரித்தேஷ். அங்கிருந்த அனைவரும் அவனை ஆஆஆ என்று பார்த்தனர். தனது கூலிங்கிளாஸை எடுத்து ஷர்ட்டில் மாட்டியவன், தந்தையை பார்த்தான். அவரும் “உள்ளே போகலாம் ரித்தேஷ்…..” என்றார்.
உடனே அனைவரும் கைதட்டி ரித்தேஷை வரவேற்றனர். தலைமை ஆசிரியர் மலர் மாலை அணிவித்து அவனை வரவேற்றார். பின்னர் அனைவரும் ஒன்றுகூடலுக்குச் சென்றனர். அங்கே வேதாசலம் ரித்தேஷை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்து அவனை கரஸ்பாண்டன்டாக்கினார். ரித்தேஷின் விழிகள் அடிக்கடி அகமித்ரா பக்கம் சென்று வந்தது. அதை அகமித்ரா கவனித்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். மாணவர்களை வகுப்பறைக்குள் அனுப்பி விட்டு ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும் ரித்தேஷிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார் வேதாசலம். அகமித்ராவை அறிமுகப்படுத்தும் போது, “இது அகமித்ரா… இங்க நம்மளோட ஸ்கூல்லே படித்து, இப்போ இங்கேயே படிப்பிக்கிறாங்க… ஸ்டூடண்ட்ஸ்க்கு ரொம்ப பிடிச்ச மிஸ் அகமித்ரா….” என்றார். இப்படியாக ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி முடிந்ததும் ஆசிரியர்களை வகுப்பிற்கு அனுப்பி விட்டு ரித்தேஷை கரஸ்பாண்டன்ட் அறைக்குள் அழைத்துச் சென்று அந்த சேரில் ரித்தேஷை உட்கார வைத்து அழகு பார்த்தார் வேதாசலம்.
“இங்க பாரு ரித்தேஷ் இந்த ஸ்கூல் உன்னோட தாத்தாவோட தாத்தா ஆரம்பிச்சது… தலைமுறை தலைமுறையாக இந்த ஸ்கூலை நாம நடத்திட்டு வர்றோம்… எனக்கு அப்புறம் இந்த பொறுப்பு உனக்கு வந்திருக்கு… இதுவரைக்கும் இந்த ஸ்கூலுக்கு எந்த கெட்ட பேரும் வந்ததே இல்லை… நீ ஸ்கூலை மேலும் உயரத்துக்கு கொண்டு போறயோ இல்லையோ.. ஆனால் கெட்டு பேரு மட்டும் வந்திடக் கூடாது…” என்றார்.
“கண்டிப்பா டாட்… என்னால எந்தக் கெட்ட பேரும் இந்த ஸ்கூலுக்கு வராது…. ஐ டடூ மை பெஸ்ட்…”
“ஓகே ரித்தேஷ்…. நீ உன்னோட வேலையை நல்லபடியாக ஆரம்பி… நான் வீட்டுக்கு போறேன்….”
“ஓகே டாட்…” என்றவன் அங்கிருந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
இடைவேளை நேரத்தில் கேண்டீனில் ஆசிரியர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். “நம்மளோட கரஸ்பாண்டன்ட் சார் என்ன மேன்லியா இருக்கிறாரு…” என்றார் ஒருவர்.
“ஆமா… எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு….”
“எனக்கும் தான் அவரை பிடிச்சிருக்கு….” என்று ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ரித்தேஷை பிடித்திருக்கு, அவன் அழகாக இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்க அகமித்ரா மட்டும் எதுவும் பேசவில்லை. அதற்கு அமிர்தா, “மித்து எல்லோரும் ரித்தேஷ் சாரைப் பற்றி பேசிட்டு இருக்கிறம்… நீ என்ன அமைதியாக இருக்கிற….?”
“நான் அவரைப் பற்றி என்ன சொல்லணும் அமிர்தா…?” என்றாள்.
“மித்து தான் சாமியார் மாதிரின்னு நமக்குத் தெரியாதா….? அவளை விடுங்க…” என்றார் சக ஆசிரியர்.
“நான் இப்படித்தான்… கட்டின புருஷனைத் தவிர வேறு யாரையும் பார்க்க கூடாதுனு நினைக்கிறவ நான்… என்னை விட்டுடுங்க…” என்றாள் அகமித்ரா.
“என்ன மித்து இன்னும் பழைய காலத்திலேயே இருக்க… கல்யாணமான நாங்களே சும்மா சைட் அடிக்கும் போது கல்யாணம் பண்ணாத உனக்கு சைட் அடிக்க என்ன பிரச்சனை…?”
“ப்ளீஸ்… இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம்… நாம இருக்கிறது ஸ்கூல்ல.. ஸ்டூடண்ட்ஸ் யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க… அவங்களுக்கு தப்பான வழிகாட்டுதலா இது போயிடும்… நீங்க பேசுங்க நான் வர்றேன்…” என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
“என்ன அமிர்தா இந்த மித்து இப்படி இருக்கிறா…?”
“அவளைப் பற்றி தெரியாதா… அவ எப்பவுமே இப்படித்தான்…. சரி விடுங்க…” என்று சொன்னாள் அமிர்தா.
கேன்டீனில் இருந்து வகுப்பறைக்குச் செல்லும் போது அகமித்ராவின் புடவை முந்தானையை பிடித்து ஒரு கரம்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊😊