தேவசூரனின் வேட்டை : 11

4.9
(21)

வேட்டை : 11

ரித்தேஷ் அகமித்ராவிற்கு உடல் உணர்வைத் தூண்டும் போதை மாத்திரையை கூல்டிரிங்ஸில் கலந்து கொடுத்து, அவளை ஒரு அறைக்குள் கூட்டிச் சென்றான். அறைக்குச் செல்லும் வழியில் அகமித்ரா போனை எடுத்து நீண்ட காலமாக அழைப்பை எடுக்காத நம்பருக்கு அழைத்தாள். அந்த அலைபேசி எண் பாவனையில் இருக்குமா என்றுகூட அவள் அப்போது யோசிக்கவில்லை. தலை வேறு சுற்றிக் கொண்டு இருந்தது. என்ன ஆச்சரியம் இரண்டு ரிங்லே போனை எடுத்தான் மறுபக்கம் இருந்தவன். அவன் ஹலோ என்று சொல்லும் முதலே அகமித்ரா பேசுவது கேட்க அமைதியாக இருந்தான். பின்னர் ரித்தேஷின் குரல் கேட்கவும் இதுவரை எதற்கும் பயப்படாமல் இருப்பவன் அகமித்ராவிற்கு தவறாக ஏதும் நடந்து விடுமோ என்று பயந்தவன் போனை ப்ளூடூத்தில் கனெக்ட் பண்ணி காதில் வைத்துக் கொண்டு வந்து தனது ஜீப்பை எடுத்தான். 

அகமித்ரா புத்திசாலித்தனமாக அந்த ஹோட்டலின் பெயரையும் சொல்ல, அரைமணி நேரத்தில் வர வேண்டிய ஹோட்டலுக்கு பத்தே நிமிடத்தில் புயல் போல வந்து நின்றான். ஹோட்டலுக்கு வந்து விட்டதை அவளுக்கு உணர்த்தவே, “அம்மு பயப்படாத வந்திட்டேன்….” என்றான். உடனே அகமித்ரா ரித்தேஷூடன் அறைக்குள் செல்ல அடம் பிடித்தாள். ரித்தேஷ் அவளை பிடித்து இழுக்க, அவள் கையில் இருந்த வளையல்கள் உடைந்து கீழே விழுந்தன. அகமித்ராவிற்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் புதிதாய் இருந்தது. ஒரு கையால் தலையைப் பிடித்தாள். “நான் இந்த இருபத்து மூன்றாம் அறைக்கு வரவே மாட்டேன்… என்னை விடுடா பொறுக்கி ராஸ்கல்…” என்றவள் உடல் பலவீனமானது. 

“என்னையா பொறுக்கினு சொல்ற… ஏதோ அழகா இருக்க உன்னை ஒருநாள் அனுபவிச்சிட்டு விடலாம்னு பார்த்தா ரொம்ப பேசுற… என்ன நடந்தாலும் கேட்க ஆளில்லாத அநாதை நாய்… நீ என்னை பொறுக்கினு சொல்ற….” என்றவன் அவளை அறைக்குள்ளே இழுத்து கட்டிலின் மீது தள்ளி விட்டான். விழுந்ததில் கொஞ்சம் நினைவு வந்தது. ரித்தேஷ் அவளது அருகில் வந்து அவளது உடலை வக்கிரமாக பார்த்தான். அவன் பார்வையில் அவள் உடல் கூசியது. மெல்ல அவள் புடவையில் கையை வைத்தான். அவன் செய்வதை உணர முடிந்தாலும், அவனைத் தடுக்க அவளால் முடியவில்லை. 

‘தனது உயிர் இப்போதே பிரிந்து விடாதோ…தேவ் சீக்கிரமா வந்திடு… என்னால முடியல….’ என மனதுக்குள் கூறிக் கொண்டு அவள் இருந்தாள். அகமித்ராவின் முகத்தை நோக்கி ரித்தேஷ் குனியும் வேளையில், அந்த அறைக் கதவு தட்டப்பட்டது. கதவின் பக்கம் அகமித்ராவின் பார்வை சென்றதைப் பார்த்தவன், “என்ன சினிமால வர்ற மாதிரி உன்னை யாராவது காப்பாற்ற வரப்போறாங்கனு பார்க்கிறயா….? யாரும் இல்லாத அநாதை நீ, உன்னை யாருடி காப்பாற்ற வரப்போறா…?” என்ற ரித்தேஷ் சென்று கதவைத் திறக்க, அடுத்த நொடி அவன் கீழே விழுந்து இருந்தான். நிமிர்ந்து பார்க்க, கண்கள் சிவக்க, கைகளில் நரம்புகள் புடைக்க ஆக்ரோஷமாக நின்ற தேவசூரனைப் பார்த்தான் ரித்தேஷ். தன்னை சரிபடுத்திக் கொண்டு எழுந்தவன், “ஏய் யாருடா நீ… நீ எதுக்கு உள்ளே வந்த…?” என்றவன் வாயிலேயே குத்தினான். ரித்தேஷூம் தேவசூரனுக்கு அடிக்க முயற்சி செய்தான். ஆனால் தேவசூரன் அந்த சூரபத்மன் போல நின்றதால் அவனை அடிக்க முடியாமல் போனது ரித்தேஷிற்கு. ரித்தேஷை நன்றாக போட்டு புரட்டி எடுத்து விட்டான் தேவசூரன். அவனை எழும்ப முடியாத அளவிற்கு அடித்து அந்த அறையில் போட்டவன், அகமித்ரா அருகில் சென்றான். அவளோ உடலை அசைத்துக் கொண்டு ஏதேதோ பிதற்றிக் கொண்டு இருந்தாள். அவளைப் பார்த்தவன், கட்டிலில் இருந்து அவளது முகத்தை தனது நடுங்கும் கைகளால் பிடித்தான். தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, அவள் நெற்றியில் முத்தம் வைத்தான். அகமித்ரா நெளிந்து கொண்டே இருந்தாள். அவளது கன்னத்தில் தட்டினான் தேவசூரன். “அம்மு… அம்மு இங்க பாரு… உன்னோட தேவ் வந்திருக்கிறன்டி… பாருடி அம்மு…” என்று அவள் கன்னத்தில் தட்ட சிறிது தன்னிலைக்கு வந்தவள், “தே…. வ்….” என்றாள். 

“ஆமாடி…. உன்னோட தேவ்தான் பயப்படாத அம்மு….” என்றவன் அவளை தனது வலிய கரங்களால் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவன், ஹோட்டலின் பின் பக்கமாக இருக்கும் வழியால் வெளியேறி விட்டான். காரின் உள்ளே ஏறி அவளை தனது மடியில் வைத்துக் கொண்டு, ட்ரைவரிடம், “காரை எடுங்க….” என்றான். கார் தேவசூரனின் வீட்டை நோக்கிச் சென்றது. செல்லும் வழியில் வர்மனுக்கு போன் பண்ணி அவனை உடனடியாக வீட்டிற்கு வரச் சொன்னான். வர்மனும் ஹாஸ்பிடலில் இருந்து என்னவோ ஏதோ என்று தேவசூரனின் வீட்டிற்கு வந்தான். 

காரில் இருந்து இறங்கி அகமித்ராவை தூக்கிக் கொண்டு போய் இரண்டாவது மாடியில் இருக்கும் அவனது அறைக்கு லிப்ட் மூலம் தூக்கிச் சென்றான். அங்கிருந்த அவனின் கட்டிலில் அவளை படுக்க வைத்து விட்டு, அருகிலே இருந்து அகமித்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவளோ அந்த பெட்டில் உருண்டு கொண்டு இருந்தாள். அவளது உடலில் ஏற்படும் மாற்றங்களை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாள். ஆனால் உதடு மாத்திரம், “தே… வ்… தே…. வ்….” என்று முணுமுணுத்துக் கொண்டது. 

வேகமாக வந்த வர்மன் தேவசூரனின் அறைக் கதவை தட்டாமலே திறந்து கொண்டு உள்ளே வந்தான். அங்கே கட்டிலில் படுத்திருந்த அகமித்ராவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவன். அறைக் கதவை லாக் பண்ணி விட்டு தேவசூரனிடம் வந்தான். 

“தேவா இது மித்ரால்ல…” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்த தேவசூரன், “ஆமா வர்மா… மித்ரா தான்…”என்றான்.

“மித்ரா எப்படி இங்க… அவளுக்கு என்னாச்சி…?” என்றான். வர்மனிடம் நடந்ததை சுருக்கமாக கூறியவன், “அம்முக்கு என்னாச்சினு பாருடா…” என்றான். வர்மனும் தனது ஸ்டெதஸ்கோப்பை எடுத்து அகமித்ராவை பரிசோதித்தான். பின்னர் அவளது இமைகளைத் திறந்து கண்களைப் பார்த்தான். தேவசூரனைப் பார்த்தான். “தேவா, மித்ராவோட உடம்புல அந்த மாத்திரை வேலை செய்ய தொடங்கிடுச்சி…” என்றான். 

“இப்போ என்ன பண்றது வர்மா… மாமாற்று மருந்து ஏதாவது சீக்கிரமா கொடுடா… அம்மு ரொம்ப கஸ்டப்படுறா…” 

“தேவா முதல்ல மித்ராக்கு என்ன மாத்திரை கொடுத்திருக்கிறான்னு கண்டுபிடிக்கணும்… அதற்கு மித்ராவோட ப்ளட் எடுத்து லேப்க்கு அனுப்பணும்… அப்புறமாதான் அதற்கு மாற்று மருந்து கொடுக்கணும்…”

“ஐயோ சீக்கிரமா இதை பண்ணு வர்மா…” 

“தேவா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத… நான் ப்ளட் எடுத்து லேப்க்கு அனுப்பி, ரிப்போர்ட் வந்து அதற்கு மாற்று மருந்து கொடுக்க டைமாகும்…. மித்ரா அவளை கட்டுப்படுத்த முயற்சி பண்ணிட்டு இருக்கிறா… எந்த உணர்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாது… நீ சொல்ற டைமை வச்சிப் பார்த்தா, மித்ரா ரொம்ப நேரம் அந்த மாத்திரைக்கு அடிமையாகி இருக்கணும்… ஆனால் அவ புரண்டு புரண்டு இருக்கிறா… ஏதேதோ முணுமுணுக்கிறா… இது அவள் அந்த உணர்வை அடக்கவே பண்றா ஆனால் அவளால் கொஞ்ச நேரத்துக்கு மேல கட்டுப்படுத்த முடியாமல் உடலைப் போட்டு அசைக்கிறா.. இப்படி பண்ணினா அது மித்ராக்குத்தான் ஆபத்து…”

“வர்மா இப்போ நீ என்னதான் சொல்ல வர்ற…”

“தேவா நீயும் மித்ராவும் உயிருக்கு உயிராக காதலிச்சவங்க… இப்பவும் அந்தக் காதல் உங்களுக்குள்ள இருக்கு… மித்ரா இந்த மயக்கத்தில கூட தேவ்னு தான் சொல்லிட்டேன் இருக்கா… அதனால நீ ஏன் அவளுக்கு மருந்தாகக் கூடாது….?”

“என்ன சொல்றனு யோசிச்சிதான் சொல்றியா வர்மா…?” என்று கத்தினான் தேவசூரன். 

“ஆமா நல்ல யோசிச்சிதான் சொல்றன்… அவள் குணமாகணும்னா நீ இதை பண்ணித்தான் ஆகணும் தேவா… டைம் போயிட்டே இருக்கு… அவள் தன்னோட கட்டுப்பாட்டை இழந்திட்டே இருக்கிறா… நீ அவ மேல வச்சிருக்கிற காதலுக்காக இதை பண்ணித்தான் ஆகணும்….” என்றவன் அவளது ப்ளட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். 

வர்மா சென்றதும் அறைக் கதவை தாளிட்டு விட்டு வந்த தேவசூரன் தனது கப்போர்ட்டைத் திறந்து அதில் இருந்த பெட்டியை வெளியே எடுத்துக் கொண்டு அகமித்ரா அருகில் வந்தான். சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். பின்னர் எது நடந்தாலும் பரவாயில்லை. அதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன், பெட்டியைத் திறந்து அதன் உள்ளே இருந்த தாலியை எடுத்து அசைந்து கொண்டு இருக்கும் அகமித்ராவின் கழுத்தில் கட்டினான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊 மறக்காமல் ரேட்டிங்கையும் கொடுத்திட்டு போங்கப்பா ✨✨✨✨✨

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தேவசூரனின் வேட்டை : 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!