அகமித்ரா, தேவசூரனின் போனை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தாள். அவனது அழைப்பு நின்று, மீண்டும் அலைபேசி அவனின் அழைப்பை அவளுக்கு உணர்த்த, போனை எடுத்து ஆன்சர் பண்ணி காதில் வைத்தான். அவள் போனை எடுத்து விட்டாள் என்றதும், தேவசூரன் அவளிடம், “என்ன அம்மு போனை எடுக்கலாமா… வேண்டாமா என்று யோசிச்சிட்டு இருந்தியா..?” என்றான். அதைக் கேட்டவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இவருக்கு எப்படித் தெரியும்…?’ என்று மீண்டும் மனசுக்குள் யோசிக்க, தேவசூரன் அந்தப் பக்கம் சிரிக்கும் சத்தம் கேட்டது. “அம்மு நீ யோசிச்சது எனக்கு எப்படித் தெரியும்னுதானே இப்போ யோசிச்ச…?” என்று கேட்ட தேவசூரனே தொடர்ந்து பேசினான்.
“நான் சொல்றது சினிமாட்டிக்கா இருக்கும் பட் அதுதான் உண்மை… உன்னோட மனசுல நான் இருக்கிறன்.. அதனால நீ நினைக்கிறதை என்னால ஈசியாக புரிஞ்சிக்க முடியும்…”
“எதுக்கு போன் பண்ணீங்க….?”
“இதென்ன கேள்வி… நான்தான் சொன்னேன் நைட்டுக்கு கால் பண்றேன்னு… உன்கூட பேசணும் போல இருந்திச்சு அதுதான் கால் பண்ணேன்… சரி சொல்லு சாப்டியா…?” என்று கேட்டான். தேவசூரன் அப்படிக் கேட்டதும் அகமித்ராவிற்கு இத்தனை நேரம் இருந்த தவிப்பு நீங்கியது.
“சொல்லு அம்மு சாப்டியா…?”
“ம்ம் நீங்க சாபப்டீங்களா…?”
“நான் சாப்டேன்… நீ என்ன பண்ணிட்டு இருக்கிற…?”
“றூம்லதான் இருக்கிறன்…”
“காலேஜ் பிடிச்சிருக்கா….?”
“ம்ம் பிடிச்சிருக்கு…”
“என்னை பிடிச்சிருக்கா….?” என்றான். அவன் அந்தக் கேள்வி கேட்டதும் மீண்டும் மௌனமாகி விட்டாள் அகமித்ரா.
“என்ன மேடம் அமைதியாகிட்டீங்க போல… சரி உன்கிட்ட நான் அந்த கேள்வியைக் கேட்கல… அம்மு நீ யாருக்கும் பயப்படக் கூடாது… முக்கியமா அந்த ரேணு… அவளெல்லாம்அவளெல்லாம் அவ்வளவு பெரிய ஆளில்லை… அவ என்ன சொன்னாலும் பயந்துட்டு அழுதிட்டு இருக்காத சரியா….?”
“ம்ம்ம்…”
“உனக்கு எப்போ என்னோட பேசணும் போல இருக்கோ அப்போ கால் பண்ணு… அதே போல என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளு ஓகேவா…”
“ம்ம்ம்…”
“ஓகே அம்மு நாளைக்கு பார்க்கலாம்… நான் போனை வச்சிடவா…?” மீண்டும் அமைதியை தத்தெடுத்துக் கொண்டாள் அகமித்ரா. தேவசூரன் இதழ்களில் புன்னகை அரும்பியது.
“அம்மு போனை வைக்கவா….?” என்றான். அவள் எதுவும் சொல்லவும் இல்லை. போனை கட் பண்ணவும் இல்லை.
“என்னடி பேசவா இல்லை போனை வைக்கவா சொல்லு…”
“உங்க விருப்பம்…” என்றாள்.
“சரி வீடியோ கால் வா….”
“ம்கூம்… முடியாது…”
“ஓகே… அப்புறம் சப்ஜெக்ட் எல்லாம் செலக்ட் பண்ணிட்டியா…?”
“ம்ம் பண்ணிட்டேன்…” என்றாள். பின்னர் இருவரும் காலேஜ் பற்றி பேசினார்கள். தேவசூரன் அவனின் படிப்பு சம்மந்தமான விடயங்கள், காலேஜில் அகமித்ராவிற்கு தேவைப்படும் விஷயங்கள் என்பவற்றை பேசிக் கொண்டு இருந்தனர். ஒரு அரைமணி நேரத்தின், “சரி நான் போனை வைக்கிறன்… நாநாளைக்கு காலேஜ்ல பார்க்கலாம்…” என்றான் தேவசூரன்.
அகமித்ராவும், “ம்ம்ம்… தாங்க்ஸ்..” என்று சொன்னாள். அதற்கு சிரித்துக் கொண்டவன், “அம்மு… அம்மு.. டேக் கேர் டா….” என்றவன் போனை வைத்தான். அகமித்ராவும் போனை வைத்தாள். சத்தம் போட்டுக் கொண்டிருந்த அவளது மனம் அமைதியடைந்தது போல அவளுக்குத் தோன்றியது.
போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இந்தப் அறைக்குள் செல்வதற்காக திரும்பிய தேவசூரன் அப்படியே நின்றான். காரணம் அவனின் நண்பர்கள் அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர். அதில் சுரேஷ், “தேவா என்ன பண்ணிட்டு இருந்த…?” என்று கேட்டான். அதற்கு வர்மாவோ, “ஒண்ணுமில்லை சுரேஷ்… உள்ளே ரொம்ப புளுக்கமாக இருந்திச்சா அதுதான் சார் காத்து வாங்க வந்திருப்பாரு…” என்றான். சதீஷூம் அவனின் பங்கிற்கு, “இல்லடா சாருக்கு றூம்ல இருக்க கஷ்டமா இருந்திருக்கும் அதுதான் இங்க வந்திருப்பாரு… இல்லை சார்….” என்று தேவசூரனின் அருகில் வந்தான். மூவரையும் பார்த்து தனது கைகூப்பியவன், “தப்புதான்… நான் பண்ணது தப்புதான்…. உங்ககிட்ட சொல்லாம இங்க வந்தது தப்புத்தான்… போதும்டா ரொம்ப ஓட்டாதீங்க….” என்றான்.
“சரி சரி முதல் தடவை என்பதால உன்னை மன்னிச்சு விடுறோம்… நீ தனியா வந்து போன் பேசுறது தப்பில்லை… ஆனால் எங்கிட்ட சொல்லாம வந்ததுதான் தப்பு.. உன்னை காணோம்னு பயந்து எல்லா இடமும் தேடிட்டு கடைசியாக மொட்டை மாடிக்கு வந்தா ஐயா ஹாயாக லவ்வரகூட கடலை போட்டுட்டு இருக்கிறாரு…” என்றான் வர்மா.
“சாரி டா… நீங்க கீழே இருந்தீங்களா அதுதான் சொல்லாம வந்திட்டேன்… நங்கநீங்க நினைக்கிற மாதிரி எதுவும் பேசலை… சும்மாசும்மா காலேஜ், ஸ்டடிஸ் பற்றித்தான் பேசினோம்…” என்றான்.
“மச்சான் நீ அகமித்ரா மேல வச்சிருக்கிற காதல் எங்களுக்கு புரியுது… ஆனால் அவளுக்கு புரிய கொஞ்சம் டைம் எடுக்கலாம்… அதுவரைக்கும் நீ பொறுமையாக இருடா… அவசரப்படாதே உன்னோட காதல் மித்ராக்கு அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே கொடுக்கணும்.. பயமாகவோ தொல்லையாகவோ இருக்கக் கூடாது…” என்றான் சதீஷ்.
“நீ சொல்றது எனக்கு புரியுது மச்சான்… கண்டிப்பா என்னோட காதல் அவளுக்கு தொல்லையாக இருக்காது… அவள் கண்டிப்பா என்னை லவ் பண்ணுவா…”
“அப்பிடி நடந்தா எங்களுக்கும் சந்தோஷம் தான் மச்சான்…”
“தெரியும்டா உங்களோட மனசு… சரி வாங்க போகலாம்…” என்றான் தேவசூரன். பின்னர் மூவரும் அறைக்குள் சென்றனர்.
அகமித்ரா போனை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். போன் பேசிவிட்டு வந்த யாகவி அகமித்ரா ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து அவள் அருகில் வந்தாள். அவளது தோளைத் தொட்டாள். யாகவியைப் பார்த்த அகமித்ரா, “யாகவி அவங்க கால் பண்ணாங்க…” என்றாள்.
“யாரு தேவா அண்ணாவா….?”
“ஆமா போன் பண்ணினாங்க… சும்மா காலேஜ், ஸ்டடிஸ் பற்றி பேசிட்டு இருந்தாங்க…” என்றாள்.
“மித்து இது உன்னோட வாழ்க்கை நீதான் உனக்கு எது வேணும் எது வேண்டாம்னு முடிவு பண்ணணும்… எல்லாம் நல்லதாகவே நடக்கும்… வா தூங்கலாம்…” என்றாள். இருவரும் தூங்கச் சென்றனர்.
காலையிலேயே அந்த லேடிஸ் ஹாஸ்டல் அதிரும் அளவுக்கு சத்தம் அகமித்ரா அறையில் இருந்து வந்தது. வேற எதுவும் இல்லைங்க அகமித்ரா நேரத்திற்கு எழுந்து விட்டாள். நம்மளோட யாகவிதான் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அகமித்ரா இந்த முறையும் அவளை எழுப்ப தண்ணீரை ஊற்றி விட்டாள். இதனால் தூக்கம் கலைந்து எழுந்த யாகவி, “அடியே மித்து நான் உனக்கு என்னடி பாவம் பண்ணேன்… எதஎதுக்கு என்னைப் போட்டு இப்படி சித்திரவதை செய்ற…? என்னோட மாமாக்கு கிஸ் பண்ணலாம்னு போகும் போது இப்படி அநியாயமா அதை கெடுத்து விட்டுட்டியே… உன்னை கொல்லாம விடமாட்டேன்டி…” என்றவள் அகமித்ராவை அடிக்கத் துரத்தினாள். அங்கிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அகமித்ரா மீது வீச, அப்போது பார்த்து அவர்கள் அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தவர் மீது பட்டு அவரை அபிஷேகம் செய்தது அந்த தண்ணீர் பாட்டில்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊