ரேணுவிற்கு இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லை. ‘எங்க தேவசூரன் அகமித்ராவிற்கு கால் பண்ணியிருப்பானோ… ரெண்டு பேரும் பேசியிருப்பாங்களோ…’ என்று நினைத்துக் கொண்டே தூங்கியவளுக்கு காலையில் எழுந்ததும் தலைவலித்தது. முதலில் நைட் அகமித்ரா என்ன பண்ணியிருப்பான்னு தெரிஞ்சிக்கணும்னு நினைத்தவள், அகமித்ரா தங்கியிருக்கும் ஹாஸ்டலில் இருக்கும் அவளது நண்பிக்கு கால் பண்ணி, உடனடியாக அகமித்ரா அறைக்குச் சென்று அவளிடம் விஷயத்தை கேட்டு வரச் சொன்னாள். ரேணு சொல்லி அதைக் கேட்காமல் இருக்க முடியுமா அதனால் அவள் சரி என்று ரேணுவிடம் சொல்லிவிட்டு தூக்க கலக்கத்துடனே அகமித்ராவின் அறைக்குள் வந்தாள். கதவை தட்டாமல் திறந்து கொண்ட வந்த போது, யாகவி அகமித்ராவிற்கு எறிந்த தண்ணீர் பாட்டில் அகமித்ரா விலக, அவள் பின்னால் இருந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ரேணுவின் தோழி மீது பட்டு, அவளை அபிஷேகம் செய்தது. அவள் நின்ற கோலத்தைப் பார்த்து யாகவியும் அகமித்ராவும் சிரித்தனர். சிரிப்புச் சத்தம் கேட்டு அந்தப் பக்கம் வந்த எல்லோரும் சிரிக்க ரேணுவின் தோழி ரேகாவிற்கு அவமானமாக இருந்தது. அதனால் யாகவியையும் அகமித்ராவையும் பார்த்து முறைத்து விட்டு அவள் அறைக்குச் சென்று விட்டாள்.
யாகவியும் குளித்து ரெடியாகி வந்தாள். பின்னர் இருவரும் இன்று காலேஜ் கேன்டீனில் சாப்பிடலாம் என்று சொல்லிக் கொண்டு காலேஜிற்கு சென்றனர். அங்கே அவர்கள் வகுப்பு மாணவர்களும் சேர்ந்த கொள்ள அவர்கள் ஒன்றாக கேன்டீனுக்கு சென்றார்கள். ஒவ்வொருவரும் அவரவர்க்கு பிடித்ததைச் சொல்லி அதை வாங்கி உண்டனர். அகமித்ரா மட்டும் உழுந்து வடையும் ஒரு டியும் சொல்லி அதை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். ஐவரும் பேசிச் சிரித்துக் கொண்டு சாப்பிடும் போது அங்கே வந்தாள் ரேணு. ரேணுவின் முகம் கோபத்தால் சிவந்து இருந்தது. அவளைப் பார்த்ததும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் எழுந்து நிற்க, அதை கவனிக்காத ரேணு அகமித்ராவின் பக்கம் சொடக்கிட்டாள். அந்த சத்தத்திற்கு திரும்பிப் பார்த்தாள் அகமித்ரா.
“இங்க பாரு நான் கேட்கிறதுக்கு மட்டும் ஒழுங்கா பதில் சொல்லு… நைட் உனக்கு தேவசூரன் கால் பண்ணினானா…? என்ன சொன்னான்…? என்று கேட்டாள். அதற்கு அகமித்ரா என்ன சொல்வது என்று யோசித்தாள். அவளைப் பார்த்து, “உன்கிட்டதான் கேட்கிறேன்… பதில் சொல்லு தேவசூரன் உனக்கு கால் பண்ணினானா…?”
“இல்லை அவங்க எனக்கு கால் பண்ணலை…” என்றாள்.
“நெஜமா உனக்கு தேவசூரன் கால் பண்ணலையா….?”
“இல்லைங்க… அவங்க எதுக்காக எனக்கு கால் பண்ணணும்…? நேற்று நடந்தது ஒரு ராக்கிங்.. நான் அதை மறந்திட்டேன்… உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா அவங்ககிட்டப் போய் கேளுங்க… நான் இங்க படிக்க வந்திருக்கிறன்… மற்றும்படி எதைப் பற்றியும் எங்கிட்ட ப்ளீஸ் எதையும் கேட்க வேண்டாம்…”
“சரி நீ சொல்றதை நான் நம்புறேன்… ஆனால் இடையில ஏதாவது வேலை பார்த்த அப்புறம் நடக்கிறதே வேற…” என்று அவளை எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். அவள் சென்ற பின்னர் இருந்தவர்கள், அவர்கள் எடுத்த உணவை சாப்பிட்டு முடித்த பின்னரே அங்கிருந்து சென்றனர்.
தேவசூரனின் டீம் வந்து அவர்கள் வழமையாக இருக்கும் மரத்தடியில் இருந்தனர். அங்கே ரேணு அவளது டீமோடு வந்தாள் தேவசூரனைப் பார்த்தாள். “தேவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்….”
“எனக்கு உங்ககிட்ட பேச எதுவும் இல்லை…”
“நீ எதுவும் பேச தேவையில்லை… ஆனால் எனக்கு உன்கிட்ட பேசணும்…”
“நீ பேசு… என்னோட காது சும்மாதான் இருக்கு… நீஎன்ன பேசணுமோ பேசு அது கேட்டுக்கும்….” என்றான். அதைக் கேட்டு அவனின் நண்பர்கள் சிரித்தனர். ரேணுக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, “ப்ளீஸ் தேவா… கொஞ்சம் நான் சொல்றதை கேளு….”
“தேவா நான் உன்னையே சுத்திச் சுத்தி வர்றேன்… உனக்கு ஏன் என்னோட காதல் புரியலை…ஏன் என்னை அவாய்ட் பண்ற…?”
“ரேணு உங்கிட்ட இதற்கான பதிலை நான் பலமுறை சொல்லிட்டேன் நீதான் அதை கேட்காமல் என்னை லவ் பண்றதா சொல்லிட்டு இருக்க… அதுக்கு நான் என்ன பண்றது…? இங்க பாரு நீ எத்தனை நாள் என் பின்னாடி சுத்தினாலும் என்னோட மனசு மாறாது…. என்னோட மனசுல ஒரே ஒருத்திக்குத்தான் இடம்… அது அகமித்ராக்கு மட்டும்தான்… நீ என் பின்னாடி சுத்துறது சுத்த டைம் வேஸ்ட்…..” என்றான் தேவசூரன்.
“அதெப்படி தேவா பார்த்த உடனே உனக்கு அவமேல லவ் வந்திச்சு….?”
“அது உனக்கு தேவையில்லாத விஷயம்… அதுல நீ தலையிடாத…. எனக்கும் அகமித்ராவிற்கும் இடையில யாரு வந்தாலும் எனக்குப் பிடிக்காது… இதுதான் நான் உனக்கு குடுக்கிற லாஸ்ட் வார்னிங்… இதுக்கு மேல என்னோட வழியில நீ வரக்கூடாது…” என்றவன் அங்கிருந்து சென்றுவிட, அவனின் நண்பர்களும் அவன் பின்னாடியே சென்று விட்டனர்.
இங்கே க்ளாஸில் அகமித்ரா அருகில் இருந்த யாகவி, “மித்து நீ ஏன் அந்த வெள்ளைப் பன்னி கேட்கும் போது உண்மையை சொல்லலை…?”
“என்ன சொல்ற யாகவி வெள்ளைப் பன்னியா…?”
“ஆமா மித்து வெள்ளைப் பன்னிதான்… அந்த மேனாமினுக்கி ரேணு இருக்கிறால்ல அவதான் வெள்ளைப் பன்னி… அவக்கிட்ட எதுக்கு நீ பொய் சொன்ன…? தேவா அண்ணாகூட நீ பேசினதான்னு கேட்டா நீ ஆமான்னு சொல்ல வேண்டியதுதானே மித்து… அதை விட்டுட்டு ஏன் பேசினேன்னு சொல்லியிருக்கலாமே…”
“எதுக்கு யாகவி… நான் அவக்கிட்ட சொல்ல, அவ அதுக்கு ஏதாவது பிரச்சனை பண்ண… இதெல்லாம் தேவையா….? நான் பேசலைன்னு சொன்னேன் அதோட விஷயம் முடிஞ்சிடுச்சி… இப்போ யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை…” என்றாள் அகமித்ரா.
“ஏதோ நீ சொல்ற… அதனால கேட்டுக்கிறன்….” என்ற யாகவி வேறு விஷயம் பேசத் தொடங்கினாள்.
ரேணுவிடம் பேசிவிட்டு வந்த தேவசூரனுக்கு அகமித்ராவைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற அவள் க்ளாஸ் பக்கம் சென்றான். அங்கே அவளுக்கு பாடம் நடந்து கொண்டு இருந்தது. பாடத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தவள் தேவசூரனை கவனிக்கவில்லை. யாகவிதான் முதலில் தேவசூரனைப் பார்த்து. அவனைப் பார்த்து, “ஹாய் அண்ணா…” என்று சைகை செய்தாள். அவனும் அவளைப் பார்த்து சிரித்து விட்டு கையசைத்தான். யாகவி மெல்ல அகமித்ராவின் கையில் தட்ட அவள் யாகவியை திரும்பிப் பார்த்தாள். யாகவி அவளிடம், “மித்து தேவா அண்ணா வெளியே நிற்கிறாங்க… உன்னைத்தான் பார்க்க வந்திருக்கிறாங்க போல…” என்றாள். உடனே அகமித்ராவின் பார்வை ஜன்னல் பக்கம் செல்ல, அங்கே தேவசூரன் செய்த செயலில் அவள் விழிகள் விரிந்தன.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Supero super divi