தேவசூரனின் வேட்டை : 21

4.7
(27)

வேட்டை : 21

அடுத்த நாள் கேம்பிற்குச் செல்ல முதல் அகமித்ராவை பார்த்து விட்டு செல்லலாம் என்று தேவசூரன் நினைத்துக் கொண்டு இருந்தான். ஆனால் அகமித்ரா காலேஜ்க்கு வரவில்லை. யாகவியும் காலேஜ்க்கு வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றான் தேவசூரன். இவர்கள் செல்வதற்கான வண்டி வந்துவிட்டதால் எல்லோரும் அதில் ஏறிச் சென்றுவிட்டனர். தேவசூரனை அவனது நண்பர்கள் சமாதானப் படுத்தினார்கள். 

ஹாஸ்டலில் காய்ச்சலில் படுத்திருந்தாள் அகமித்ரா. அவளுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. யாகவி ஹாஸ்பிடலுக்கு போவதற்கு அழைத்தும் அவள் வர மறுத்தவிட்டாள். காலையிலும் சாப்பிடவில்லை. அவளை கவனித்துக் கொள்ள யாகவியும் காலேஜ்க்கு போகவில்லை. அகமித்ராவின் போன் சார்ஜ் போடாததனால் அது தன்னுயிரை விட்டிருந்தது. 

மதிய நேரத்தில் அகமித்ராவிற்கு காய்ச்சல் அதிகமாகிவிட்டது. இதற்கு மேலும் ஹாஸ்பிடலுக்கு போகவில்லை என்றால் ஆபத்து என்று யாகவி அகமித்ராவை ஒரு ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இவளை சோதித்து விட்டு ஊசி போட்ட டாக்டர், மாத்திரைகளையும் கொடுத்து அனுப்பினார். அதை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர். ஊசி போட்டதால் அகமித்ராவிற்கு காய்ச்சல் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இரவும் மாத்திரைகளைப் போட்டு படுத்துக் கொண்டாள். 

நைட் அந்த வெட்ட வெளியில் எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அதில் கலந்து கொள்ளாமல் சற்று தொலைவில் நிலவைப் பார்த்துக் கொண்டு கைகளை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருந்தான் தேவசூரன். வர்மன் அவனிடம் வந்தான். 

“தேவா என்னாச்சி…?”

“ஒண்ணுமில்லை மச்சான்…”

“இங்க பாரு எதுவா இருந்தாலும் சொல்லுடா…”

“அம்முக்கு கால் பண்றன் லைன்னே கிடைக்கலடா… எனக்கு அவளை பார்க்கணும் போல இருக்கு….”

“போன்ல சார்ஜ் ஏதும் இல்லாம இருக்கும்டா… நீ பயப்படாத வா போலாம்… உன்னை காணவில்லைனு தேடிட்டு இருந்தாங்க…”

“இல்லை மச்சான் நீ போ நான் வரலை… எனக்கு தனியாக இருக்கணும்…. ”

“தேவா சொன்னாக் கேளு வா…” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றான் வர்மா. 

அகமித்ரா தொடர்ந்து இரண்டு நாட்கள் மாத்திரையை தொடர்ந்து போட, காய்ச்சல் முற்றிலும் அவளை விட்டுச் சென்றது. யாகவி காலேஜ் போயிருந்தாள். போகமாட்டேன் என்றவளை வற்புறுத்தி அனுப்பி வைத்திருந்தாள் அகமித்ரா. அறையை சுத்தம் செய்து விட்டு வந்து இருந்தவளுக்கு அப்போதுதான் போனின் ஞாபகம் வந்தது. ‘ஐயோ என்னோட போன் எங்க…’ என்றவள் அவளது போனை தேடிக் கொண்டு இருந்தாள். அங்கிருந்த மேசை மீது இருக்க, அதை எடுத்துப் பார்த்தாள். போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப்பாகி இருப்பதை பார்த்து, போனை சார்ஜில் போட்டாள். சில நிமிடங்களில் எடுத்துப் பார்க்க தொடர்ந்து மெசேஜ் வந்து கொண்டிருந்தது. வாட்ஸ்அப்பிற்குள் செல்ல, தேவசூரனின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெசேஜ் வந்திருந்தது. அதை ஓபன் செய்து ஒவ்வொரு வாய்ஸ்ஸாக கேட்க ஆரம்பித்தாள். 

“அம்மு சாப்டியா…?”

“அம்மு ஏன் கால் பண்ணலை… உடம்புக்கு சரியில்லையா…?”

“ஏன் அம்மு காலேஜ் வரலை… உன்னை பார்க்கணும் போல இருக்கு… உன் குரலை கேட்கணும் போல இருக்கு அம்மு…”

“என்மேல ஏதாவது கோபம்னா அதை எங்கிட்ட காட்டு… இப்பிடி பேசாமல் மட்டும் இருக்காத அம்மு…”

“அம்மு எனக்கு ரொம்ப பயமா இருக்கு… நீநல்லா இருக்கிறல்ல…”

“இன்னைக்கு ஏன் காலேஜ் வரலை… அம்மு உனக்கு ஒண்ணு தெரியுமா… இன்னைக்கு நாங்க கேம்ப் போறோம்… உங்கிட்ட சொல்லிட்டு உன்னைப் பார்த்திட்டு போகலாம்னு நினைச்சேன் பட் நீதான் காலேஜ் வரலையே… எனக்கு உன்னை விட்டுட்டு போக மனசே இல்லை… எல்லோரும் கட்டாயம் வரணும்னு சொன்னதாலதான் நான் வந்தேன்… போயிட்டு வர்றேன் அம்மு… பத்திரமா இரு… ப்ளீஸ்டி ஒரு மெசேஜ் போடுடி…”

“அம்மு உனக்கு என்னடியாச்சி…? எத்தனை மெசேஜ் போட்டிருக்கிறன்… நீ ஒரு மெசேஜையும் பார்க்கலை.. இங்க வந்திட்டேன் அம்மு… உன்னை விட்டு ரொம்ப தூரமா இருக்கிறன்… நீ பத்திரமா இருக்கிறல்ல… எனக்காக ஒரு மெசேஜ் போடுடி…” என்று எக்கச்சக்க மெசேஜ் தேவசூரனிடம் இருந்து அவளுக்கு வந்திருந்தது. அதை எல்லாம் ஒவ்வொன்றாக பார்க்க அவளுக்கு தேவசூரன் அவள் மீது கொண்ட தூய்மையான அன்பு விளங்கியது. ‘தேவ்… தேவ்…’ என்று அவள் மனம் துடித்தது. அவன் மீதான காதல் இன்னும் அதிகமாகியது. அப்படியே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள். 

கேம்பில் அவரவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகளை அவரவர் செய்து கொண்டு இருந்தனர். அங்கே வேலை செய்து கொண்டிருந்த தேவசூரனிடம் வந்தாள் ரேணு. 

“தேவா என்ன சொல்றா அந்த அகமித்ரா…?”

“அவ என்ன சொல்லணும்…?”

“உன் பின்னாடி நான் சுத்திட்டு இருக்கிறன்… நீ என்னடான்னா அவளுக்கு பின்னாடி சுத்திட்டு இருக்கிற… தேவா நான் உன்னை ரொம்பபபபப ரொம்பபபபப லவ் பண்றன்… என்னை லவ் பண்ணினால் நீ மினிஸ்டரோட மருமகனாகி விடலாம்.. கார் பங்களா ஏசினு செம்மையா வாழலாம்… இதே நீ அந்த மித்ராவை கல்யாணம் பண்ணினனு வச்சிக்கோ… படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கிறதே கஷ்டம்.. அவகூட சேர்ந்து கஷ்டப்படப் போறியா…” என்று கேட்டாள். அதைக் கேட்டுக் கொண்டு நின்ற தேவசூரனுக்கு கோபம் வர, அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்தான். அவளுக்கு உயிர் போவதைப் போல இருந்தது. 

“இங்க பாரு… அவ என்னோட உயிரு… அவளுக்காக என்ன வேணும்னாலும் நான் செய்வேன்… என்னோட வாழ்க்கை மாளிகையில இருக்கணுமா… இல்லை குடிசையில இருக்கணுமான்னு முடிவு பண்ண வேண்டியது நீ இல்லை நான்… என்னோட வாழ்க்கையை எப்படி வாழணும்னு எனக்குத் தெரியும்… நீ உன்னோட வேலையப் பாரு… இதுக்கு மேல என்னோட விஷயத்திலையோ இல்லை மித்ராவோட விஷயத்திலையோ தலையீட்டனா உன்னை கொலை பண்ணக்கூட நான் தயங்க மாட்டேன்… இந்த ஒரு தடவை உன்னை மன்னிச்சு விடுறன்…” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். அவன் அங்கிருந்து சென்ற பின்னர் தான் ரேணுவின் நண்பர்கள் ஓடி வந்து அவளை தூக்கினார்கள். தேவசூரன் கழுத்தை இறுக்கிப் பிடித்ததால் அவளால் பேச முடியவில்லை. சைகையால் தண்ணீர் கேட்க, அவர்களும் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கிக் குடித்தவள் அங்கிருந்து அறைக்குச் சென்று விட்டாள். அவள் உள்ளம் உலைக்களமாய் கொதித்தது. 

யாகவி காலேஜ்ஜில் இருந்து வந்ததும் அவளிடம் தேவசூரன் பற்றி விசாரித்தாள். அவளும் அவர்களு கேம்ப் போயிருப்பதைப் பற்றிச் சொன்னாள். 

“பாவம் மித்து அண்ணா… உன்னை ரொம்ப தேடினாங்க… நீயும் அவரை லவ் பண்றல்ல அப்புறம் எதுக்காக அவர்கிட்ட சொல்ல தயங்குற…?” என்று கேட்டாள் யாகவி. அகமித்ரா மௌனமாக இருந்தாள். 

“மித்து கையில இருக்கிற பொக்கிஷத்தோட அருமை அது இருக்கும் போது தெரியாது… நம்மளை விட்டு போன பிறகுதான் தெரியும்னு சொல்லுவாங்க… அந்த மாதிரி தேவா அண்ணாவை நீ இப்போ இழந்திட்டு பின்னாடி வருத்தப்படாத மித்து…” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல, அகமித்ரா போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள். 

தேவசூரனின் நம்பருக்கு அழைத்தாள். அவனது போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொன்னது. சிறிது நேரத்திற்கு மீண்டும் அழைத்தாள். அப்போதும் லைன் கிடைக்கவில்லை. அகமித்ராவிற்கு பயம் வந்து விட்டது. தேவசூரனின் போன் எப்போதும் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததே இல்லை. இப்போது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்ல அகமித்ராவிற்கு தேவசூரனுக்கு என்னாச்சோனு பயமாக இருந்தது. இரவு முழுவதும் அழைத்துக் கொண்டு இருந்தாள். லைன் கிடைத்தபாடில்லை. யாகவி அவளை அறைகுள் அழைத்து வந்த போதும் அவள் அவனுக்கு அழைப்பதை நிறுத்தவில்லை. 

“என்ன மித்து அண்ணாவோட போன் வேலை செய்யலனு சொல்லும்போது அண்ணாக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு ஏன் பதறிட்டு இருக்க… அவர் மேல இருக்கிற காதலை மறச்சி உன்னை நீயே ஏமாத்திட்டு இருக்க… அண்ணா கேம்ப் போயிருக்கிற ஊர்ல இன்னைக்கு மழை அதனால சிக்னல் கிடைக்காமல் இருக்கலாம்… நாளைக்கு கால் பண்ணிப் பாரு…. இப்போ வந்து தூங்கு…” என்றவள் படுத்து தூங்கி விட்டாள். நீண்ட நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாள் அகமித்ரா. 

தேவசூரன் டீம் கேம்ப் போன ஊரில் இரவு முழுவதும் மழை பெய்ததால் இன்று இவர்களுக்கு எந்த வேலையும் இல்லை… ஜாலியாக ஊரை சுற்றிப் பார்க்கலாம் என்றனர். உடனே இவர்கள் டீமும் ஊரைச் சுற்றிப் பார்க்க புறப்பட்டது. எல்லோரும் ஜாலியாக பேசிக் கொண்டு செல்ல, தேவசூரன் ஏதோ யோசனையிலே வந்தான். அப்போது தேவசூரனை தேடி ஓடி வந்தான் சுரேஷ். சுரேஷ் சொன்ன விஷயத்தைக் கேட்ட தேவசூரன் வேகமாக ஓடினான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தேவசூரனின் வேட்டை : 21”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!