தேவசூரன் அகமித்ராவை பற்றி யோசித்துக் கொண்டே இருந்தான். அப்போது அவனைத் தேடி ஓடி வந்தான் சுரேஷ்.
“என்ன சுரேஷ் என்னாச்சி….?”
“மச்சான் உன்னைப் பார்க்க யாரு வந்திருக்கிறாங்கனு பாரு… நீங்களும் வாங்கடா…” என்று அழைத்துச் சென்றான் சுரேஷ். அங்கே பிஎம்டபிள்யூ கார் ஒன்று நின்றிருந்தது. அதைப் பார்த்த தேவசூரன் தனது நண்பர்களைப் பார்த்தான். அதில் வர்மன் தேவசூரனை பார்த்து, “யாரு மச்சி இது…?” என்றான். அதற்கு தேவசூரன் பதில் சொல்ல வரும் முன்னரே காரில் இருந்து இறங்கினார் ஒருவர். அவரைப் பார்த்து, “டாடி…” என்று சொல்லி அணைத்துக் கொண்டான் தேவசூரன். அதைப் பார்த்த அவனின் நண்பர்கள் வாயடைத்துப் போய் நின்றனர். காரணம் வந்திருந்தவர் பெரிய தொழிலதிபர் ருத்ரேஸ்வரர். தேவசூரன் இவ்வளவு பெரிய இடத்துப் பையனா என்று அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ச்சி அடைந்தது அவனின் நண்பர்கள் மட்டுமல்ல, தேவசூரனைப் பார்க்க ஆசையாசையாக ஓடி வந்த அகமித்ராவும்தான். அகமித்ராவிடம் தேவசூரன் தான் ஒரு பணக்கார வீட்டுப் பையன் என்று சொன்னதே இல்லை.
தனது தந்தையிடம் நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்தான். அவரும் தேவசூரனின் நண்பர்களுடன் சகஜமாக பேசினார். அப்போது காரின் பின் பக்க கதவைத் திறந்து கொண்டு பிறரை உறுத்தாத வகையில் மார்டன் ஆடை அணிந்து, ஸ்டைலாக இறங்கிய ஒரு பெண் ஓடி வந்து தேவசூரனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டான். இதைப் பார்த்த அகமித்ராவிற்கு உலகமே நின்று விட்டது. அப்போது ஒரு கரம் அவள் தோளைத் தொட்டது. திரும்பிப் பார்க்க ரேணுவும் அவள் நண்பர்களும் நின்றிருந்தனர். அவளைப் பார்த்து பயந்து விட்டாள் அகமித்ரா. ஆனால் ரேணு அவளைப் பார்த்து சிரித்து, “பயப்படாத மித்ரா… நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்… நீ எங்க இங்க..? ஓஓஓஓ தேவாவைப் பார்க்க வந்தியா.. அவனைப் பார்க்க நீ இவ்வளவு தூரம் வந்திருக்கிறன்னா அவனை லவ் பண்ற… என்ன நான் சொல்றது சரியா…?” என்றாள் ரேணு. அதற்கு தலையை குனிந்து கொண்டாள் அகமித்ரா.
“மித்ரா நீ தேவாவை லவ் பண்ணது தப்பில்லை… ஆனால் இப்போ போய் நீ தேவாக்கிட்ட நீ லவ் பண்றதை சொன்னா அவன் என்ன நினைப்பான்… இத்தனை நாள் எம்மேல வராத காதல் இப்போ நான் பணக்காரன்ற உண்மை தெரிஞ்ச பிறகு வந்திருக்குனு உன்னை சந்தேகப்படமாட்டானா… அவனை விடு அவங்க குடும்பம் எவ்வளவு பெரிய குடும்பம்…. நாளைக்கு நீ கல்யாணம் பண்ணணும்னா அங்க போனேன்னா உன்னோட சார்பாக யாரு நிப்பாங்க…. தேவாவோட குடும்பத்தை அவமானப்படுத்த மாட்டாங்க…
இதை எல்லாம் விடு அதோ தேவாவை ஓடி வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாளே அது யாரு தெரியுமா… தேவாவோட மாமா பொண்ணு… அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா ரெண்டு குடும்பமும் முடிவு பண்ணியிருக்கிறாங்க… அவளும் பெரிய பணக்காரிதான்… தேவா உன்னை கல்யாணம் பண்ணணும்னா அவனோட குடும்பத்தை விட்டுட்டு உன்கூட வரணும்… நீதான் இப்போ முடிவு எடுக்கணும் தேவா இத்தனை வசதியையும் விட்டுட்டு உன்கூட வந்து கஷ்டப்படணுமா… இல்லைன்னா அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணுமா…?” என்றாள்.
அகமித்ரா அங்கிருந்த ஒரு சேரில் இருந்தாள். அவள் என்ன முடிவு எடுப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். அவளிடம் மேலும் பேசி குழப்பினாள் ரேணு. அகமித்ரா ஒரு முடிவு ஒன்றை எடுத்தாள். பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டாள். அவள் சென்றதும் ரேணுவின் முகம் மாறியது. “எப்படி என்னோட ப்ளான்…?” என்றாள் அவர்களிடம். அதற்கு அவர்கள், “என்ன ப்ளான் ரேணு….?”
“மித்ரா தேவாவை பார்க்கத்தான் இங்க வந்திருக்கா… ஆனால் நான் அவளை தேவாவை பார்க்க விடாமல், அதோ நிற்கிறாளே அந்தப் பொண்ணைப் பற்றி சொல்லி அவளை குழப்பி விட்டுட்டேன்… அவள் இனிமேல் தேவாவை திரும்பியும் பார்க்க மாட்டா… என்னோட வழி கிளியர்…”
“அது எப்படி ரேணு… மித்ரா போயிட்டா சரி ஆனால் அந்தப் பொண்ணு இருக்கிறாளே….” என்று சொன்னவளைப் பார்த்து சிரித்தாள் ரேணு.
“இந்த ரேணுவைப் பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கிறீங்க…? அந்தப் பொண்ணு தேவாவோட மாமா பொண்ணுதான். அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா பெரியவங்க இருந்தாங்க ஆனால், இவங்க ரெண்டு பேரும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க…”
“ஏன் ரேணு….?”
“சின்ன வயதில் இருந்தே ஒண்ணாக வளர்ந்ததால் அவள் தங்கச்சி மாதிரினு தேவசூரன் சொல்லிட்டாள். அவளும் தேவாவை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டாள். அதனால அந்த கல்யாணப் பேச்சையே விட்டுட்டாங்க.. அது எனக்குத் தெரியும் அந்த மித்ராக்கு தெரியாதுல… அதுதான் அதைச் சொல்லி அவளை விரட்டி விட்டேன்….” என்றாள்.
“ரேணு ஒருவேளை அவளுக்கு உண்மை தெரிஞ்சா என்ன பண்ணுவ….?”
“அதற்கு வாய்ப்பே இல்லை… நம்மளோட கேம்ப் முடிய இன்னும் ஏழு நாட்கள் இருக்கு… அதுக்குள்ள அந்த மித்ரா காலேஜை விட்டே போயிருப்பா…” என்றாள்.
“மித்ரா மட்டும் இல்லை அந்த யாகவியையும் அவளோட சேர்த்து அனுப்பி வச்சிடு….” என்றாள் ஒருத்தி.
“அதுக்கென்ன அவளையும் மித்ராவோட அனுப்பி வச்சிடலாம்… காரியத்தை சிறப்பா பண்ணிடலாம்….” என்றவள் போனை எடுத்து அவளது அப்பாவுடன் பேசி விட்டு வைத்தாள்.
“உன்னைப் பார்க்கணும் போல இருந்திச்சு… அதுதான் உடனே கிளம்பி வந்தேன்… அப்போ இவளும் கூட வாறேன்னு சொன்னா… சோ கூட்டிட்டு வந்தேன்….”
“ஓகே டாட்….” என்று பேசிக் கொண்டிருந்தான். ஒருமணி நேரத்தில் அவர்கள் சென்றுவிட தேவசூரனை சுற்றி வளைத்தனர் அவனின் நண்பர்கள். தேவசூரனுக்கு புரிந்து விட்டது.
“மச்சான் வேண்டாம்டா… நீங்க என்ன கேட்கப்போறீங்கனு எனக்குத் தெரியும்….”
“தெரியுதுல்ல அப்போ சொல்லுங்க சார்….”
“என்னடா இது சார்னு சொல்றீங்க….”
“நீங்க பெரிய இடம் உங்ககூட மரியாதையாகத்தானே பேசணும்…” என்றான் சதீஷ். அவனைப் பார்த்து முறைத்த தேவசூரன், “இதோ இதனால்தான் உங்ககிட்ட சொல்லலை… நான் பிஸ்னஸ் மேன் ருத்ரேஸ்வரரோட பையன்னு சொன்னா நீங்க இப்பிடித்தான் மரியாதையா பயந்து பேசியிருப்பீங்க… முதல்லமுதல்ல பேசியிருப்பீங்களான்றதே சந்தேகம்தான்… இதோ பாருங்க நான் பணக்காரன்தான் அதனால எனக்கு உண்மையான நட்பு கிடைக்கல… ஸ்கூல்ல என்கூட இருந்தவங்க எல்லோருமே என்கிட்ட இருந்த பணத்துக்காக என்கூட இருந்தவங்க…. அது எனக்கு பிடிக்கலை… எனக்கு இருக்கிற ப்ரெண்ட்ஸ் எனக்காக என்கூட இருக்கணுமே தவிர, என்கிட்ட இருக்கிற பணத்துக்காக இருக்கக்கூடாது என்றுதான் நான் யாரென்றே தெரியாத இந்த சென்னைக்கு வந்தேன்… டாட் இங்க பிஸ்னஸ் பண்ண வருவாங்க… ஆனால் என்னை இங்க இருக்கிறவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த சென்னை எனக்கு உண்மையான உறவுகளை கொடுத்திருக்கு… நான் எதிர்பார்த்தது இதைத்தான்… நீங்க என்கூட பழைய மாதிரி இருப்போம்னு சொன்னா நான் இங்க இருப்பேன்…இல்லை மரியாதையா நடத்துவோம்னு சொன்னா நான் உடனே கிளம்பி போயிடுவேன்…” என்றவனை அவர்கள் அணைத்துக் கொண்டு, “மச்சான் சாரிடா… நீ எப்பவும் எங்க தேவாதான்…” என்றார்கள்.
ஒருவழியாக எப்படி ஹாஸ்டல் வந்தோம்னு தெரியாத வகையில் வந்து சேர்ந்தாள் அகமித்ரா. அவளது மனம் எல்லாம் அங்கே தேவசூரன் அவளை ஏமாற்றியதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தது. கட்டிலில் படுத்து கண்களை மூடினாள். அப்போது துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வந்த யாகவி, அகமித்ராவை எழுப்பி அவள் கையைப் பிடித்து சுற்றினாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divima
Thank you so much akka 💙💙💙💙
💙💙💙 திவி குட்டி 💙💙💙💙
Thank you so much akka 💙💙
Thank you so much akka 💙💙