சித்தார்த்திற்கு தன் மனைவியின் எதிர்பார்ப்புகள் புரிந்தது. இருந்தாலும், தனது தொழிலை இளக்காரமாக நினைக்கவும், நிதானத்தை இழந்து, வார்த்தைகளை விட்டிருந்தான்.
“ப்ச்! வேலை பிஸியில் மறந்துட்டேன். மன்னிப்பும் கேட்டுட்டேன். இனி அந்த தப்பு நடக்காதுன்னு சொல்லிட்டேனே. அப்புறம் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? எப்பப் பாரு சின்னப்பிள்ளையாட்டம் இருக்குறது. கொஞ்சமாவது மெச்சூர்டா பிகேவ் பண்ணேன். எங்க அண்ணியையும், ரூபாவையும் பார்க்குற தானே!”என்றான்.”
அவளோ,”கல்யாணமாகி ஃபர்ஸ்ட் பர்த்டே. அதை மறந்துட்டு பேச்சைப் பாருங்க. பிஸியாம் பிஸி. ஈஸியா ஊர் சுத்துற வேலை தானே. அது ஒரு காரணம்னு சொல்லிட்டு வர்றீங்க. நீங்க செஞ்சது தப்புன்னு சொன்னா, என்னை மத்தவங்களோட கம்பேர் பண்ணி பேச்சை மாத்துறீங்க.!” என்று முகம் சிவக்க கத்தினாள்.
“ப்ச்! எதுக்கு இப்படி கத்துற?” என்று அதட்டினான் சித்தார்த்.
“ஓ! நோ… அந்த சீட்டு வேண்டாம். இங்கேயே எனக்கு அப்பர் பர்த் குடுங்க.”என்று சத்தமாக தனது மறுப்பைக் கூறிக் கொண்டிருந்தாள் மகிழினி.
அவளது சத்தத்தில் நிகழ்வுக்கு வந்த சித்தார்த்தோ, “என்ன?” என்பது போல தருணைப் பார்த்தான்.
“ ஓ! அவங்களுக்கு விருப்பமில்லைன்னா விட்டுடு தருண். அந்த சார் கிட்ட கேட்டு பார்க்க வேண்டியது தானே.”
“அவங்க கிட்ட கேட்டுட்டேன் சித்! குழந்தை நைட்ல அழுவானாம். வொஃய்பால சமாளிக்க முடியாது, நான் பக்கத்துல இருக்கணும்னு சொல்லிட்டார்.”
“ஓ!” என்றவன், அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருங்க.
“மகிழினி மேடம் சீட் கொடுக்குறேன்னு சொல்லிட்டாங்க. ஆனால் இங்கேயே அப்பர் பர்த் கேட்குறாங்க.”என்றான் தருண்.
“ஓ!” என்றவன் மனதிற்குள், ‘என்னோட சீட் இங்கே தான் தெரியுமா? அதான் இங்கே வேணும்னு சொல்றாளோ! ச்சே! ச்சே! நான் இருக்க இடம்னு தெரிஞ்சா ஓடிப் பார்க்கத்தான் நினைப்பா.’என்று எண்ணியவன், தலையை உலுக்கிக் கொண்டு, அவர்களது இருக்கையில் அப்பர் பர்த்தில் இருந்த இளைஞனிடம் பேசி, அவளுக்கு அங்கேயே இடத்தை ஏற்பாடு செய்துக் கொடுத்தான்.
ஆனாலும் மனதிற்குள், ‘ஏன் இங்கேயே இருக்கணும்னு சொல்றா? தெரியலையே ! அவ ப்ரெண்டு இருக்குற இடத்துக்கும், இந்த இடத்துக்கும் நடுவுலே உள்ள இடமாச்சே! அவ ஃப்ரெண்டோட இருக்குறதுக்கு வசதியா இருக்குமே. ஏன் வேண்டாம்னு சொல்றா? என்ன காரணாமா இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அதற்கு பதில் சொல்வது போல் வேகமாக அங்கு வந்தாள் ரேகா.
“ஹேய் லூசே.. அம்மா, அப்பா கூட இருந்தா ஜாலியா என்ஜாய் பண்ண முடியாது. அதுனால உன்னோட தான் இருக்கப் போறேன்னு ஏற்கனவே நீ தான் சொன்னீயே. அப்புறம் நான் எப்படி அங்கே வருவேன்.”
“இருந்தாலும் அம்மாவோட பேசணும்னு வந்துட்டா என்ன பண்றதுன்னு பயந்துட்டேன்.”
“எதுக்கு? எதுங்குறேன்? எனக்கும் இந்த வயசானவங்கன்னாலே கொஞ்சம் அலர்ஜி தான்.” என்று தோளைக் குலுக்கியபடியே திரும்பிய மகிழினியை, அதிர்ந்துப் பார்த்தார் அவளது சீட்டிற்கு வந்த வயதான பெண்மணி.
“ஐயோ! ஆன்ட்டி! உங்களை சொல்லலை சாரி!” என்று அசடு வழிய கூறிய மகிழினி, எழுந்து அவருக்கு இடம் குடுக்க.
அவரோ,”பரவாயில்லைமா. எல்லோருக்கும் ஒரு நாள் வயசாகத்தான் போகுது.” என்றார்.
நமட்டு சிரிப்புடன் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான் தருண்.
மகிழினியின் ஃபோன் இசைக்க…
“ஐயோ இவங்க வேற நேரம் காலம் தெரியாமல் ஃபோனை போடுறாங்க.”என்று புலம்பியவளோ, ஃபோனை கட் செய்தாள் மகிழினி.
சித்தார்த் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.
தருண், “ஏங்க! பாவம் உங்க வீட்டுல, உங்களை காணோம்னு பதட்டத்துல இருப்பாங்க. இன்னும் அவங்க மேல கோபத்துல தான் இருக்கீங்களா? சும்மா எங்கே இருக்கீங்கன்னு ஒரு தகவலாவது சொல்லலாம் தானே.” என்றான்.
“ஏங்க! ஃப்ரெண்டு தப்பு பண்ணா, அவங்களுக்கு நல்லது சொல்லித் தரணும். அதை விட்டுட்டு அவங்களுக்கு துணை போகக் கூடாது.”என்றான் தருண்.
“என்னடி மகி! சார் பாட்டுக்கும் பேசிட்டே இருக்காரே. அவரை ஆஃப் பண்ணாமல், நீ அமைதியா வேடிக்கைப் பார்க்குறதைப் பார்த்தால் தான் பயந்து வருதுடி. பாவம்டி சார் ஒரு அப்பாவி!” என்று ரேகா நக்கலடிக்க.
“காலையில் இருந்து சாருக்கு என்ன பாட்டு டெடிகேட் பண்றதுன்னு யோசிட்டுச்சு இருந்தேன். இப்போ தான் சிக்குச்சு”என்றுத் தோழியைப் பார்த்து சிரித்தாள் மகிழினி.
இருவரின் வில்லங்கமான சிரிப்பைப் பார்த்து பயந்துப் போன தருண், “என்னங்க சொல்றீங்க? ஒன்னும் புரியலையே.”
“அதுவா கரெண்ட் ஸ்விச்சுவேஷனுக்கு ஏத்தது போல என் ஃப்ரெண்ட் ரிங்டோன் மாத்துவா! இப்போ நீங்க அவளுக்கு கொடுத்த இலவச அட்வைஸைக்கு என்ன பண்ண போறான்னு கேட்டேன். சிக்கிடுச்சாம்.”என்றாள் ரேகா.
“என்னங்க சிக்கிடுச்சு. நான் ஒன்னும் தப்பா சொல்லலையே.”
‘என்ன பாட்டாக இருக்கும்?’ என்று ஆர்வமாக தருண் அவளையே பார்க்க.
“போடா, போடா புண்ணாக்கு!
போடாதே தப்புக்கணக்கு.” என்ற பாடல் ஒலிக்கவும்.” அவன் முகம் போனப் போக்கைப் பார்த்து, ரேகா வாய் விட்டு நகைத்தாள்.
வேகமாக அங்கிருந்தவர்களைப் பார்த்தான் தருண். ‘பக்கவாட்டு இருக்கையில் இருந்த பெண்மணி, தனது மருமகளிடம் பேசிக் கொண்டிருக்க. எதிரே இருந்த வட இந்திய ஜோடியோ தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருக்க. நல்லவேளை!’ என்று நிம்மதியடைந்தவன், “ஏங்க? ஏன்?” மகிழினியை பார்த்து வினவினான்.
“அடுத்தவங்க விஷயத்துல தலையிடுறதே தப்பு. இதுல என்னைப் பத்தி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? இல்ல தானே! அப்புறம் எப்படி என்னைப் பற்றி ஜட்ஜ் பண்றீங்க? அது தப்பா தானே இருக்கும்.” என்று மகிழினி அவனைப் பார்த்து வினவ.
“ஓ! காட் ! ஆளை விடுங்க. இனி உங்க விஷயத்துல மூக்கை நுழைக்க மாட்டேன். இல்லை, இல்லை யார் விஷயத்திலும் தலையிட மாட்டேன் போதுமா?” என்று இரு கைகளையும் மேலே உயர்த்தியவன், அங்கிருந்து ஓட.
மகிழினியும், ரேகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தப்படியே ஹைஃபை கொடுத்தனர்.
“வா மகி! ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்தது கால் வலிக்குது.” என்ற ரேகா, தோழியுடன் அமர்ந்தாள்.
மகிழினி சிரித்துப் பேசினாலும், உள்ளுக்குள் கோபத்துடன் இருப்பதைப் உணர்ந்த ரேகா, “பாவம் டி அந்த சார். மனசுல எதுவும் வச்சுக்காமல் பேசுறார். ஏன் இவ்வளவு கோபம்?” என்றாள.
ரேகாவை பார்த்து புன்னகைத்தவளோ,”ப்ச்! இல்லை ரேக்ஸ், சிரிச்சு பேசினா கவலை இல்லைன்னு நினைக்கிறாங்க. எனக்கும் உணர்வுகள் இருக்கும். சின்ன பிள்ளையாட்டம் பிகேவ் பண்ணாதேன்னு ஈசியா எல்லோரும் சொல்லுவாங்க. அதே போல இவரும் நான் வீட்டை விட்டு வெளியில வந்ததை மட்டும் பார்த்துட்டு அட்வைஸ் பண்ண வந்துட்டார். பொறுமையாவே ரியாக்ட் பண்ணியிருக்கலாம். ப்ச்! யார் மேல உள்ள கோபத்தையோ இவர் மேல காண்பிச்சுட்டேன். நான் கோபத்தில் இருக்கேன்றதுக் கூட அவருக்கு புரிஞ்சிருக்காது. சரி விடுடி பார்த்துக்கலாம்.” என்றாள் மகிழினி.
“ஆமாம் மகி! நீ வீட்டை விட்டு வந்தது இவருக்கு எப்படித் தெரியும்?”
“அது ஒரு பெரிய கதை… நான் மண்டபத்தில் இருந்து பேக்கை மாட்டிக் கிட்டு பால்கனியில் இருந்து குதிச்சேனே.”
“ம்…”
“அப்புறம்… அப்புறம்… அதை மட்டும் உன் கிட்ட சொல்ல மாட்டேனே..” என்று மகிழினி நமட்டு சிரிப்புடன் கூற.
“ நோ! இன்னைக்கு ஃபுல்லா ட்ரெயின்ல என்னென்ன வித்துட்டு வருதோ, அதையெல்லாம் எனக்கு வாங்கித் தர. நாளைக்கு மீதி கதையை நான் உனக்கு சொல்லுவேனாம்.”
“மகி! இங்கே விக்கறதெல்லாம் அன்ஹெல்த்திடி. ஹைஜீனிக்கா இருக்காது.”
“அதான் டாக்டரம்மா நீங்க இருககீங்களே? அப்புறம் எனக்கு என்ன கவலை?” என்றவள், ரேகாவின் முறைப்பைக் கண்டுக் கொள்ளாமல், தனக்கு எதிரில் இருந்தவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.
‘நல்ல வேலை இவங்களுக்கு தமிழ் தெரியாது.’ என்று எண்ணியவளோ, “எந்த ஊர்?”என்று ஆங்கிலத்தில் வினவினாள்.
“பூனே!” என்றான்.
“ஓ! மராத்தி எனக்குத் தெரியும்.” என்ற மகிழினியோ அறை, குறை மராத்தியில் அவனிடம் பேச முயல.
எதிரில் இருந்தவனோ, அடக்கமாட்டாமல் நகைத்தான். அவனது மனைவியின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
“எனக்கு தமிழ் நல்லா பேச வரும். என் மனைவிக்கு தமிழ் நல்லா புரியும். ஆனால் உங்க மராத்தி எங்க ரெண்டு பேருக்குமே புரியலை.” என்றான்.
“குமார் இல்லை, நான் நவனிஷ்.” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நகைக்க.
“இது உனக்குத் தேவையா மகி?” என்று ரேகாவும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு சிரித்தாள்.
******************
இவர்களிடமிருந்து தப்பித்து வேகமாக ஓடிய தருணோ, “அப்பாடா!”என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
அவர்களிடம் பேசி விட்டு வேகமாக வந்த தருணை கிண்டலாகப் பார்த்தான் சித்தார்த்.
“உனக்கு ஏன் டா இந்த வேண்டாத வேலை? வாயைக் குடுத்து மாட்டிக்கிட்டு வர்றியா?” என்று நண்பனைப் பார்த்து வினவினான் சித்தார்த்.
“ச்சே! ச்சே! சும்மா தான் பேசிட்டு இருந்தோம் மச்சி.”
“ நீ ஓடி வந்த வேகத்திலே தெரியுது நீங்க பேசிக்கிட்ட லட்சணம்.”
“இல்லை டா. பாவம் அந்தப் பொண்ணு. ஏதோ அவங்க வீட்டு ஆளுங்க மேல பயங்கர கோபத்துல இருக்காங்க. அதை வெளியே காண்பிச்சுக்காமல் இருக்குறதுக்காக போராடுறாங்க.” என்ற தருணின் பேச்சில் சித்தார்த்துக்கு சிறு துளிக் கூட உடன்பாடில்லை.
‘சரியான திமிர் பிடிச்சவ. தான் நினைச்சது தான் நடக்கணும்னு பிடிவாதம். வீட்ல உள்ளவங்க பாவம்! இவக் கிட்ட பேசணும்னு ஃபோன் போட்டா, போனைக் கூட எடுக்காமல் இருக்குறா. எப்படியோ போகட்டும். அவ இருக்குறப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சா, என் கண் முன்னாடி வந்து நிக்குறா?’ என்று தனக்குள் நொந்துக் கொண்டிருந்தான்.
“அடுத்த ஸ்டேஷனில் தானே லஞ்ச் கொண்டு வருவாங்க. அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. காலையில் இருந்து நீ அலைஞசுக்கிட்டே இருக்க. வா நாம போய் கொஞ்ச நேரம் உட்காரலாம்.” என்று தனியே அவர்களிடம் சிக்கிக் கொள்ள பயந்த தருண், சித்தார்த்தையும் இழுத்துக்கொண்டு சென்றான்.
அங்கோ மகிழினி நவனீஷ் கையில் அழுதுக் கொண்டிருந்த குழந்தையை வாங்கி விளையாட்டு காண்பித்து சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள்.
அவள் அழகாக குழந்தையை சமாதானப்படுத்தி உறங்க வைப்பதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.