மயங்கினேன் மன்னவனிடம் 2

4.9
(15)

பாகம் 2

ப்ளஸ் டூ தான் என சர்வசாதாரணமாக கிருத்திகா தலையில் இடியை இறக்க உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போனவள் மணவறையில் அமர்ந்த தலையும் அதற்கு அடுத்து நடந்த எதையும் உணரவேயில்லை.. தீடீரென கழுத்தில் ஈரம் படவும் உணர்வுக்கு வந்தவள் முதலில் பார்த்தது கண்ணெதிரே தெரிந்த வலிய கரத்தை தான்.. மூணு முஞிச்சே மட்டும் தான் போடனும் மாப்பிள்ளை சுத்தி நின்ற சொந்தங்களின் கேலியில் அதிர்ந்தவள் அதன் பின்பு தான் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை பார்த்தாள்.. மாங்கல்யம் ஏறி கணவனாகவே ஆகிவிட்டான்.. இன்னும் அவன் முகத்தை கூட பார்த்தது இல்லையே, வேகமாக வலது புறம் திரும்பினாள்.. கணவனின் முகம் பார்க்க,

மூன்று முடிச்சிட்டு கையை விலக்கியவனும் அவள் முகம் பார்த்தான்.. இருவர் பார்வையும் முதன் முறை சந்தித்தது.. ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான்.. அதன் பின்பு இருவரும் நேராக அமர்ந்து கொண்டார்கள்.. 

தனக்கு முன்பு இருந்த ஓமகுண்டத்தை வெறித்து பார்த்தாள்.. அவளின் அத்தனை ஆசைகளையும் எதிர்பார்ப்பையும் எரிகின்ற தீயில் போட்டு பொசுக்குவது போல பொசுக்கி விட்டாரே அவளின் அப்பா.. கண்ணில் முட்டி கொண்டு நின்ற கண்ணீரை கஷ்டப்பட்டு உள்ளடக்கி கொண்டு கணவன் கை பிடித்து அந்த ஓமகுண்டத்தை சுற்றி வந்தாள்..

தீடீர் திருமணமே பயங்கர அதிர்ச்சி தான்.. ஆனால் அதை விட உச்சபட்ச அதிர்ச்சி அவளுக்கு தாலி கட்டியவன் பள்ளி படிப்பை தாண்டவில்லையாமே,

அவள் டாக்டர்.கிருத்திகா மாணிக்கவேல்.. பி.எச்.டி முடித்து டாக்டர் பட்டம் வாங்கியவள், அவளுடைய கணவானகப்பட்டவன் ஒரு டிகிரி கூட வாங்கவில்லை.. .. 

அவளுக்கு எதிர்கால கணவனை பற்றி இருந்த ஒரே எதிர்பார்ப்பு ஆசை எல்லாமே அவளுக்கு சமமாக படித்து இருக்க வேண்டும்.. சமமான வேலையில் இருக்க வேண்டும் என்பது தான்…. அவள் தந்தைக்கும் அவளின் எதிர்பார்ப்பு எல்லாம் தெரியும்.. தெரிந்தும் இப்புடி செய்து விட்டாரே, மனம் தாளவே இல்லை.. 

ப்பா ஏன்ப்பா ஏன் இப்புடூ பண்ணுனீங்க தனிமையில் தந்தையிடம் கேட்க, கிருமா வடிவேலன் அய்யா குடும்பம், நன்றிகடன் என அதே பல்லவியை திரும்ப பாடியவர், அதோடு நில்லாது வடிவேலன் அய்யா பையன் மா குணத்தில் குறை சொல்ல முடியாது தங்கம்மா அவர்.. படிப்பு மட்டும் தான் வாழ்க்கையா என்ன? என கேட்டவரை உக்கிரமாக முறைத்தவள்,

ஓ… அப்ப படிப்பு வாழ்க்கைக்கு முக்கியமில்லையா அப்ப ஏன் என்கிட்ட மட்டும் சின்ன குழந்தையில் இருந்து படிப்பு தான் முக்கியம் கிருமா.. நல்ல படி.. அது தான் உன் வாழ்க்கையை உயர்த்தும்ன்னு ஏன் சொல்லி சொல்லி வளரத்தீங்க என ஆற்றாமையில் கத்தியவளுக்கு இனி எவ்வளவு அழுது புரண்டாலும் பயன் இல்லை.. இது தான் வாழ்க்கை என்பது புரிய, அமைதியானவள் அடுத்தடுத்த நடந்த சடங்குகளை எந்தவித முக சுணுக்கமும் இல்லாமல் செய்தாள்… 

மண்டபத்தில் அனைத்து சடங்கும் முடிய மணமக்களை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.. வீரய்யன் வீட்டை பார்த்தவளுக்கு இவ்வளவு பெரிய வீடு இரண்டு மூணு கார்ன்னு இவ்வளவு வசதி இருக்கே படிச்சு இருக்க கூடாதா, அக்கா டாக்டர், தம்பி சாப்ட்வேர்  இஞ்ஜுனியர், தங்கச்சி ஆடிட்டர், அவங்க எல்லாம் நல்ல படிச்சு இருக்கும் போது இவர்க்கு மட்டும் என்னவாம் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் மனம் அதிலே தான் உழன்றது…

யோவ் வீரய்யா தங்கச்சி கூட சேர்ந்து நில்லு இரண்டு பேர்க்கு நடுவில் நாலு ஆட்டோ ஓடும் போல எதுக்கு இவ்வளோ கேப் என்றபடி வீரய்யனை கிருத்திகாவை இடித்து கொண்டு நிற்கும்படி தள்ளி விட்டார் வீரய்யனின் அக்கா கணவன் செந்தில்குமரன்.. 

அப்படி நிற்பது கூட கிருத்திகாவுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.. வீராவோட நிறுத்தி இருக்க கூடாதா அது என்ன பின்னாடி ஒரு அய்யன் என கவலைப்பட்டவளுக்கு அவனின் பெயரில் கூட குறை தான்.. 

கிருத்திகா நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்டி.. நாளைக்கு காலையில் வரோம்.. வருத்தப்படாத டி.. யார் யாருக்கு என்னனு எழுதி இருக்கோ அது தான் நடக்கும்… பிடிச்ச மாதிரி அமையலையேன்னு வருத்தப்படறதை விட கிடைச்சதை பிடிச்சு மாதிரி பாத்திரத்திற்கு தான் கிருமா புத்திசாலி தனம் என கிளம்பும் போது புத்தி சொன்ன அவளின் அம்மா தெய்வானையிடம்,

ஓ… ஃபிலாஷப்பி எதிரே நின்னு என்ன வேணாலும் பேசலாம்.. அந்த இடத்தில் நிற்கறவங்களுக்கு தான் அந்த வலி தெரியும் பேசாம்மா போம்மா என அவரிடம் எரிந்து விழுந்தாலும், 

நீண்ட யோசனைக்குப் பின் அம்மா சொன்னது தான் சரி… இந்த வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கிறேன் என்ற முடிவுக்கு வந்தவள்,

இரவு அலங்கரிக்கப்பட்ட அவர்கள்  அறைக்குள் வந்த வீரய்யனிடம்.. இதோ பாருங்க மிஸ்டர்.வீர்ய்யன் இல்ல மிஸ்டர்..வீரா இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலை… ஆனா இப்ப வேற வழி இல்லை… அதனால் இந்த கல்யாணத்தை அக்சப்ட் பண்ணிக்கிற மைண்ட்டுக்கு நான் வந்துட்டேன்..

ஆனா ஆனா உங்களை இப்போதைக்கு என் ஹஸ்பெண்ட் வெளிய சொல்ல முடியாது… ஏன்னா நான் நான் பி.எச்.டி முடிச்சு இருக்கேன்.. ஆனா நீங்க என இழுத்தவள் ம்பச் அதை விடுங்க..

என்னால் எப்புடி வெளியே சொல்ல முடியும் நீங்களே யோசிச்சு பாருங்க.. என் ஃப்ரெண்ட்ஸ் கூட வொர்க் பண்றவங்க எல்லாரும் கிண்டலா கேலியா பார்ப்பாங்க.. இந்த பொண்ணுக்கு ஏதோ குறை இருக்கு அதான் இப்புடி படிக்காத பையனை கல்யாணம் பண்ணி வச்சு இருக்காங்கன்னு கூட சொல்வாங்க.. அதனால் நீங்க பேசாம படிச்சு ஒரு இரண்டு டீகிரியாவது வாங்கிடுங்க என படபடவென சொல்லி விட்டு அவன் முகம் பார்த்தாள்.. 

இந்த பேச்சுக்கு அவனின் ரியாக்ஷன் என்னவென பார்ப்பதற்காக, வீராவின் முகத்தில் கோவமோ இந்த பேச்சு பிடிக்கவில்லை என்ற எரிச்சலோ ஏன் எந்த உணர்வும் இருப்பதாக தெரியவில்லை.. 

கிருத்திகாவின் முகத்தை நேராக பார்த்தவன் பிடிக்கலைன்னா பரவாயில்லை நீங்க ரொம்ப கஷ்டப்பட வேணாம், இரண்டு வீட்டிலையும் நான் பேசிக்கிறேன்.. நாமா..

இதோ பாருங்க டைவர்ஸ் பண்ணிக்கலாம் பிரிச்சிடலாம்ங்கிற பேச்சே வேண்டாம் மிஸ்டர் வீரா.. அப்புடி பண்ணுனா என் அப்பாவுக்கு ரொம்ப அசிங்கமாயிடும்.. அவர் ரொம்ப கஷ்டப்படுவார்.. அதனால் டைவர்ஸ் எல்லாம் தர மாட்டேன்.. நான் தான் இட்ஸ் ஓகே அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன் சொல்லிட்டேன்னே அப்புறம் என்ன உங்களுக்கு, நீங்க படிக்க மட்டும் செய்ங்க அது போதும் என்ற கிருத்திகா மேலும் எப்புடி மும் அவனை படிக்க சம்மத்திக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எதிரே இருந்தவனின் மனநிலை என்ன? அவன் மனதில் என்ன ஓடுகிறது என்பது தெரியாமலஅ அவன் படிக்க வேண்டிய அவசியத்தை தொண்டை தண்ணி வற்றி போகுமளவு பேசினாள்..

நான் சொல்றது எல்லாம் சொல்லிட்டேன்.. இனி நீங்க தான் உங்க முடிவை சொல்லனும், இப்பவே சொல்லனும்ங்கிற அவசியம் இல்லை.. நல்லா யோசிச்சு சொல்லுங்க எந்த யூனிவர்சிட்டியில் படிக்ககிறீங்கன்னு, வீராவிற்கு படிக்க சம்மந்தமான இல்லையா என்ற கேள்விமே அவளிடம் இல்லை.. படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவனை தள்ளுக்கின்றோம் என்ற எண்ணம் இல்லாது, தனக்கு தேவையானதை சொல்லி விட்டு,

இப்ப தூங்கலாம், சினிமா சீரியல்ல வர மாதிரியான ட்ராமாலாம் வேணாம்.. நீங்களும் பெட்லயே படுத்துக்கோங்க என பெரிய மனதோடு சொல்லி விட்டு படுத்து விட்டாள்.. 

இதோ ஆகிவிட்டது பத்து நாட்கள் இன்னும் வீராவிடமிருந்து எந்த பதிலும் இல்லை… பத்து நாட்களும் விடாது கிருத்திகாவும் பேசி கொண்டே தான் இருக்கின்றாள்.. ஆனால் வீரா தான் கிணற்றில் போட்ட கல்லாக எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் சரியென்றும் சொல்லாமலும் இருக்க அது வேறு கிருத்திகாவுக்கு பயங்கர எரிச்சலைப் கொடுத்தது..  

எல்லாவற்றையும் நினைத்து தன்னை நொந்தபடி குளித்து முடித்து பாத்ரூம் விட்டு வெளி வந்தவள்.. அவசர அவசரமாக பச்சை நிற காட்டன் புடவை ஒன்றை கட்டி, கூந்தலை ஒரு கிளிப்பில் அடக்கி விட்டு, எளிமையாக முகத்திற்கு அலங்காரம் செய்து கொண்டு, நெற்றி நடுவே சிறிய பொட்டு ஒன்று வைத்து விட்டு, இடது கையில் வாட்சும் வலது கையில் அவள் எப்போதும் அணியும்  ப்ரேசெல்ட்டும் போட்டு விட்டு, ஹேர்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியவள் மீண்டும் ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்தவள், 

அச்சசோ இதை மறந்துட்டேன் என தலையில் அடித்து கொண்டவள் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த தாலிக்கொடியை கழற்றி மேசையில் வைக்கவும் வீரய்யன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.. 

சார்ஜரிலிருந்து போனை எடுக்க வந்தவன் கண்ணில் தாலிக்கொடி பட்டது…

 “காலேஜ்ல யாருக்கும் கல்யாணமானது தெரியாதுல்ல அதான்” என்றாள் என்ன சொல்லுவானோ என்ற தயக்கத்தோடு அவன் முகம் பார்த்து, ஏனெனில் நேற்று தான் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடந்து இருந்தது..

ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன் எதுவும் சொல்லாது அறையிலிருந்து வெளியேற 

அப்பாடா ஏதும் சொல்லவில்லை என்ற நிம்மதி பெருமூச்சு விட்டவள் கிருத்திகாவும் அவசரமாக அறையிலிருந்து வெளியேறினாள்.. 

மாடியிலிருந்து கீழ் இறங்கி வந்தவள் கண்ணில் 

ஹாலின் நடுவே ஆளுயர புகைப்படத்தில் சிரித்து கொண்டு இருக்கும் தந்தை படத்தின் முன்பு கைகூப்பி நின்று இருந்த.. வீரய்யன் பட்டான்.. அவனின் தந்தை வடிவேலன் அவனுக்கே 16 வயது இருக்கும் போதே இறைவனடி சேர்ந்து இருந்தார்.. 

ஹால்லை ஒட்டி இருந்த கிச்சனில் மாமியார் முருகேஸ்வரி ஏதோ வேலை செய்து கொண்டு இருப்பதும் தெரிந்தது, 

அதன் அருகே இருந்த டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர் வீரய்யன் தம்பி கார்த்திகேயனும் அவனின் மனைவி ரோகிணியும்.. இருவரையும் பார்த்து சிநேகமாக கிருத்திகா புன்னகைத்தாள்.. 

வேலைக்கு கிளம்பிட்டிங்களா அண்ணி என பதிலுக்கு சிரித்தப்படி கார்த்திகேயன் கேட்க,

ம்.. என கார்த்திகேயனுக்கு பதிலளிக்க, அவன் மனைவி ரோகிணியோ எப்போதும் போல முகத்தை உம்மென்று வைத்தபடி கிருத்திகாவை பார்த்தாள்.. முகம் உம்மென்று இருந்தாலும் அந்த பார்வையில் எப்போதும் ஒரு நக்கல் நையாண்டி நீ எல்லாம் ஒரு ஆளா என்பது போன்ற அலட்சிய பாவனையும் இருக்கும்..

இது வழக்கம் தானே என கிருத்திகாவும் அதை விட்டுவிட்டாள்.. இந்த வீட்டுக்கு வந்த புதிதில் இந்த பொண்ணு ஏன் என்னை இப்புடி பார்க்குது என்ற யோசனையும் கோவமும் வரும்.. அவளை மட்டுமல்ல வீரய்யனை கூட அதே அலட்சிய பார்வை தான் பார்ப்பாள்.. போதாதக்கு ஏதாவது வாய்க்குள் முனுமுனுப்பதையும், கார்த்திக்கேயன் பார்வையால் கண்டிப்பதையும் கூட பார்த்து இருக்கிறாள்.. 

காரணம் தெரிந்து கொண்டபின் அதற்கும் தன் தந்தை மீது தான் கோவம் வந்தது.. 

கார்த்திகேயன் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் இரண்டு இலட்சம் சம்பளம் வாங்குகிறான்.. ஆனால் வீரய்யன் என்ன வேலை செய்கிறான்? அது தான் அவளுக்கு தெரியாதே, சரியாக படிக்கவில்லை பெரிதாக என்ன வேலை பார்த்து விட போகிறான் என்ற எண்ணம் எழுந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டுமே, அதனால் திருமணம் முடிந்த இரண்டாம் நாள் அவனின் தங்கை கார்த்திகை செல்வியை பிடித்து இதை கேட்க, 

வேலைக்கா என இழுத்தப்படி அவளை ஒரு மாதிரி பார்த்த கார்த்திகை செல்வி எங்க அண்ணா எந்த வேலைக்கும் போகலை, அவரு என்றவளை 

செல்வி இங்க சீக்கிரம் வா என யாரோ அழைக்க செல்வி சென்று விட்டாள்.. 

சொல்லி கொள்ளும்படி இல்லையென்றாலும் ஏதாவது ஒரு வேலை பார்ப்பான் என நினைத்து இருந்தவளுக்கு இதிலும் ஏமாற்றம் தான்.. 

அப்பா என பல்லை கடித்தாள்.. உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க வடிவேலன் அய்யா பையன்ங்கிற ஒரு தகுதி மட்டும் போதும் வேற ஏதும் வேண்டாம்ன்னு நினைச்சுட்டிங்களே என மனதிற்குள் மட்டும் தான் குமுறி கொண்டாள்.. நேரிடையாக தந்தையாம் கேட்கவில்லை.. கேட்டு மட்டும் என்ன பயன் என விட்டுவிட்டாள்…

 அவள் கணவன் சம்பாதிக்க வீரய்யன் வேலைக்கு செல்லாமல் இருப்பது தான் இந்த ரோகிணியின் அலட்சிய பார்வைக்கு காரணம் என்பது புரிய முதலில் கோவம் ஆற்றாமை ஆதங்கம் எல்லாம் தான் வந்தது.. 

ஆனால் என்ன பண்ண முடியும்.. ரோகிணியோட சண்டை போடவோ குடும்ப அரசியல் பண்ணவோ கிருத்திகாவுக்கு விருப்பமில்லை.. முதலில் அவள் கணவன் வீராவை படிக்க சம்மதிக்க வைக்க வேண்டும்.. அதன் பிறகே வேலையை பற்றி பேச வேண்டும் எல்லாம் சரி செய்து விட்டு இந்த ரோகிணியை பார்த்து கொள்ளலாம் என்ற முடிவெடுத்த பின் ரோகிணியையும் அவள்  பார்வையையும் கண்டு கொள்வதே இல்லை.. 

கீர்த்திமா காலேஜ்க்கு ரெடியாகிட்டயா என கேட்டப்படி  கிச்சனிலிருந்து வெளி வந்தார் அவளின் மாமியார் முருகேஸ்வரி.. அவரின் வலது கையில் ஒரு பேக்கும், இடுப்பில் கார்த்திகேயன் ரோகிணியின் ஒரு வயது குழந்தை ஷ்ரவனும் இருந்தான்.. 

  இந்தாமா  இதில் உனக்கு மதியத்திற்கான சாப்பாடு தண்ணி இடைவெளி நேரம் குடிக்க ஜுஸ்  எல்லாம் ரெடியா இருக்குமா என்றபடி லஞ்ச் பேக்கை அவளிடம் நீட்ட,

அச்சோ சாரி அத்தை எழுந்திரிக்க கொஞ்சம் லேட்டாகிட்டு அதான் கிச்சன் பக்கம் வர முடியலை..  நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு இது எல்லாம் ரெடி பண்ணுனீங்க நான் கேண்டின்லையே பார்த்து  இருந்திருப்பேனே என்றாள் சற்று சங்கடத்துடன், 

இதில் என்னமா இருக்கு என்றவர் முகம் மாறியது அருகே வந்து கிருத்திகா கழுத்தை பார்த்தவுடன்,

கீர்த்திமா உன் கழுத்தில் கழுத்தில் ஒற்றை விரல் நீட்டி கழுத்தை சுற்றி காட்டியவருக்கு மேற்கொண்டு  பேச முடியவில்லை.. தொண்டை அடைத்தது கொண்டது போல் நிவி விட்டு கொண்டபடி அவள் முகம் பார்த்தார்.. அவளின் பதிலுக்காக 

போச்சுடா பார்த்ததுட்டாங்களே  இப்ப இவங்ககிட்ட என்ன சொல்றது கிருத்தி நிற்காத நின்னா கேள்வி கேட்பாங்க.. ஈவ்னிங் வந்தாலும் கேட்பாங்களே, அதை அப்ப பார்த்துக்கலாம்  சாயங்காலம் வரைக்கும் டைம் இருக்கே எதையாவது யோசிச்சு வைப்போம்  இப்ப ஜுட் விட்டுரு தனக்குள் சொல்லி கொண்டவள் ரொம்ப 

லேட்டாச்சு அத்தை வரேன் பாய் என அவசரமாக சொல்லிவிட்டு கிளம்ப பார்க்க,

 உங்க தாலி கொடி எங்க காணோம் ரோகிணி தான் கேட்டது,

நாராயணா இந்த கொசு தொல்லை வேற பல்லை கடித்து கொண்டு திரும்பி பார்த்தாள்..  பதில் சொல்லவில்லை அப்படியே அமைதியாக நிற்க,

என்ன பதில் சொல்லாம அமைதியா நிற்கிறீங்க.. ஓ.. அப்ப நீங்களே தான் கழட்டி வச்சு இருக்கீங்களா என அவளின் ட்ரேட் மார்க் நக்கல் தொனியில் கேட்டாள், 

ரோகிணி அமைதியா இரு கார்த்தி அடக்கப் பார்த்தான்.., அவனுக்குமே அண்ணியின் செயலில் அதிருப்தி தான்.. இருந்தும் அண்ணியை பேச விட்டு வேடிக்கை பார்க்க முடியுமா?  அதனால் ரோகிணியை அமைதியாக இருக்க சொல்ல,

ம்ஹும் கிடைத்த வாய்ப்பை விடுவாளா ரோகிணி,  இந்த மாதிரி அநியாயம் எங்கையாவது நடக்குமா, கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள தாலியை கழட்டி வச்சு இருக்கீங்க.. வேலைக்கு போறவங்க எல்லாம் உங்களை மாதிரி தான் தாலியை கழட்டி வைக்கிறாங்களா என கிருத்திகாவை பேசி கொண்டே போக,

 அதை எல்லாம் கிருத்திகா கவனிக்கவே இல்லை.. ரோகிணி பேச்சை எப்போதும் போல் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.. அருகே நின்று இருந்த மாமியார் முகத்தை தான் பார்த்தாள்.. அதில் உன் செயல் எனக்கு பிடிக்கவில்லை.. உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை என்ற அதிருப்தியும்.. நிறைய கவலையும் தெரிந்தது.. நேற்று தான் தான் வேலைக்கு செல்ல வேண்டுமென அவசர அவசரமாக  தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வை நடத்தி இருந்தார்..  அதையும் திருமணம் போல அத்தனை பேரை அழைத்து பெரிதாக செய்து இருந்தார்.. இன்று தான் கழட்டி வைத்தது அவருக்கு கவலையை கொடுக்கும் என்பது புரிந்தது.. அவரை பார்க்க கிருத்திகாவுக்கும் சங்கடமாக தான் இருந்தது.. 

ஆனால் என்ன பண்ண முடியும்.. தப்பு இவர்கள் பேரில் தானே, படிக்க மாட்டேன் என்ற பையனை நாலு அடி போட்டு படிக்க வச்சு இருந்திருக்கனும் தானே.. அப்படி இவர்கள் செய்து இருந்தால் நான் ஏன் தாலியை கழட்டி வைக்க போறேன்.. அப்ப தப்பு இவங்க மேல்ல தான் என் மேல் இல்லை என தன் செயலுக்கு தானே நியாயம் சொல்லி கொண்டாள்.. 

ரோகிணி இன்னும் நிறுத்தாது ச்சே ச்சே என்ன பழக்கம் இது.. உங்க வீட்டுல இதை தான் சொல்லி கொடுத்து வளரத்தாங்களா என கிருத்திகாவை வீட்டை இழுத்து பேச,

கிருத்திகாவுக்கு சுறுசுறுவென கோவம் எழ அதே கோவத்தோடு பேச வாயெடுக்கும் முன்பு  

கார்த்தி என்ன சத்தம் என்றபடி வீரயய்ன் அருகே வந்தான், 

இனி ரோகிணி வாய் திறக்க மாட்டாள்.. அவளின் அலட்சிய பார்வை நக்கல் பேச்சு முனுமுனுப்பு எல்லாம் வீரய்யன் பார்க்காத வரை மட்டுமே.. அவன் முன்பு பேச மாட்டாள்.. அவனின் கார்த்தி என்ற ஒற்றை அழைப்பில் வாய் ஜிப் போட்டது போல் மூடி கொள்ளும்.. இதையும் கிருத்திகா கவனித்து இருக்கிறாள்.. ஆனால் கவனித்ததை கருத்தில் கொள்ளவில்லை.. ஏன் என்ற ஆராய்வும் இல்லை.. 

இல்ல மாமா அவங்க தாலியை..

அதில் உனக்கு என்ன பிரச்சினை ரோகிணி..

அது அது பிரச்சினை எனக்கு என திக்கியவள் இப்புடி பண்ண கூடாதுன்னு தானே.. இது தப்பு தானே..

உனக்கு இதில் என்ன பிரச்சினைனு கேட்டேன் என வீரய்யன் திரும்பவும் அதையே கேட்க,

இப்ப பேசு இப்ப பேசுடா மனதிற்குள் ரோகிணிக்கு கவுண்டர் கொடுத்த கிருத்திகா எனக்கு ஒரு நேரம் வரும் அப்ப உன்னை கவனிச்சுக்கிறேன் என்றவளுக்கு கணவனுக்கு ஒரு சபாஷ் போட தோன்றியது.. அவன் முகத்தையே பார்த்து கொண்டு நின்றாள்..,

லேட்டாகலையா தன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தவளிடம் வீரய்யன் கேட்கவும் தான் அதை உணர்ந்தவள்,

அச்சோ என தலையில் அடித்து கொண்டு ஆமா ஆமா என்றவள் வரேன் அத்தை என முருகேஸ்வரியின் முகம் பார்த்து சொல்ல, அவர் அமைதியாக நின்றார்.. 

முருகேஸ்வரிக்கோ அவ்வளவு வருத்தம்.. மகனை போல் இதை சாதரணமாக  எடுத்து கொள்ள முடியவில்லை.. அவர்கள் வழக்கப்படி மூன்று மாதம் கழித்து தான் தாலி பிரித்து கோர்ப்பர்.. ஆனால் மருமகள் மஞ்சள் கயிறோடு வேலைக்கு செல்ல வேண்டாமென்று நேற்று தான் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வை அவ்வளவு ஆசையாக நடத்தி இருந்தார்.. லட்சுமி முகப்பு வைத்து பன்னிரெண்டு பவுனில் தடிமனான கொடி எடுத்து வைத்திருக்க, அதை பார்த்த மருமகள் முகம் மாறியதால், அவளுக்காகவே மீண்டும் கடைக்கு சென்று ஐந்து பவுனில் கண்ணை உறுத்தாத வகையில் சின்ன முகப்பு வைத்து மெல்லிய கொடி செய்து நேற்று இந்நேரம் பிரித்து கோர்த்து இருக்க, அவளோ கழட்டி வைத்து விட்டு சலனமில்லாமல் நிற்கின்றாளே என்ற வருத்தம்.. 

அம்மா வீரய்யனின் ஒற்றை அழைப்பில் வருத்தத்தை முழுங்கி கொண்டார்.. 

டிப…ன் டிபன் சாப்பி..ட்டு போமா, அய்யா நீயும் வா எடுத்து வைக்கிறேன் என டைனிங் டேபிள் அருகே சென்றார்.. கலங்கிய கண்ணை கட்டுப்படுத்திய படி,

லேட்டாச்சுலமா வெளியே பார்த்துக்கிறோம் என்ற வீரய்யன் அவரின் தோள்ளை ஒன்னும் இல்ல கவலைப்படாதீங்க எனும் விதமாய் இரண்டு தட்டு தட்டி விட்டு, தம்பியிடம் பார்த்துக்கோ என தலை அசைக்க, அவனும் சரி என தலை அமைக்கவும் வீரய்யன் வெளியேறினான்..

கிருத்திகாவுக்கு அந்த பரிபாஷனைகள் புரியவில்லை அவன் பின்னே சென்றவள் வீரா என அழைக்க திரும்பி பார்த்தவனிடம் இந்த விஷயத்தை என் அப்பாகிட்ட சொல்லிடுவாங்களா

மாட்டாங்க என வீரய்யன் தலையசைக்க..

அது எப்புடி சொல்றீங்க.. என் மேல் இருக்க கோவத்தில் சொல்லிட்டா ம்பச் அவருக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாறே என முகத்தை கவலையாக வைக்க,..

உள்ளே முந்தானையால் கலங்கிய கண்ணை துடைத்து கொண்டு இருந்த முருகேஸ்வரியை ஒரு தரம் பார்த்து விட்டு, கிருத்திகாவை ஒரு மாதிரியாக பார்த்த வீரய்யன்..

என்னை மீறி என்கிட்ட சொல்லலாமா அவங்க ஒரு துரும்பை கூட அசைக்க மாட்டாங்க என்றான்..

படிக்கவும் இல்லை எந்த  வேலைக்கும் போகலை ஆனா வீட்டையே கண் அசைவில் வச்சு இருக்கிறார்ப்பா இந்த மனுஷன் பெரிய டேலண்ட் தான் என புருவம் உயர்த்த,

வீரய்யன் அவளை கல்லூரியில் விடுவதற்காக அவன் புல்லடில்  தயாராக இருந்தான்..

“இல்ல நான் ஆட்டோவில் போய்க்கிறேன்.. ஏன்னா கல்யாணமானது காலே”… என அவள் சொல்லி முடிப்பதற்குள் புல்லட் அவ்விடத்தை விட்டு பறந்து இருந்தது..‌ 

‘சரியான திமிர் வரலைன்னு சொன்னா, அப்புடியே விட்டுட்டு போய்டுறதா, காலேஜ்க்கு கொஞ்ச முன்னாடி இறக்கி விடுறேன், வா கிருத்திகான்னு சொன்னா இவர் கீரிடம் குறைஞ்சிடுமா.. சரியான ஆட்டியூட் திமிர் திமிர்’ என கணவனை திட்டிய படியே ஆட்டோ பிடித்தாள்.. 

வரும் வழியில் ஆமா வேலைக்கு போகாதவறுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய புல்லட், யார் வாங்கி கொடுத்தது, பெட்ரோல் விற்கிற விலைக்கு இது எல்லாம் தேவையா, இவர் செலவுக்கு எல்லாம் என்ன பண்ணுவார்.. அத்தை தான் கொடுப்பாங்களோ, அவங்க தான் கொடுப்பாங்க, அவங்க தான் ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சு இருக்காங்க, செலவுக்கு எல்லாம் காசு தரமாட்டேன் சொன்னா தானே வேலைக்கு போகனும்னு தோணும்..  நாமா தான் இனி ஒன்னொன்ன சொல்லி கொடுத்து திருத்தனும் போல, ம்பச் சே இதுக்கா நான் பி.எச்.டி படிச்சேன். எல்லாம் என் நேரம் என் சலித்தப்படி ஒரு வழியாக கல்லூரிக்கு வந்து சேர, பத்தே நிமிடம் தாமதமாகி விட்டது.. ஹெச்.ஓ.டியிடம் திட்டும் வாங்கி கட்டி கொண்டு வகுப்பறைக்கு சென்றாள்.. 

இன்று இளநிலை படிப்பிற்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் நாள்.. அவர்களை வரவேற்று வகுப்பறையில் அமர வைத்து விட்டு “ஹாய் ஸ்டூடண்ஸ் ஐயம் கீர்த்திகா மாணிக்கவேல்” என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு 

“Introdced யுவர் செஃல்ப்” என்றபோது வகுப்பறை வாயிலில் எக்ஸ் க்யூஸ் மீ மேம் என்ற குரல் கேட்க, திரும்பி பார்த்த கிருத்திகா இவர் எதுக்கு இங்க வந்து இருக்கார் என அதிர்ச்சியானாள்.. அவளை நோக்கி வந்த அவள் வீரய்யனை பார்த்து,

அருகே வந்தவனிடம் என்ன விஷயம் எதுக்காக இங்க வந்தீங்க என மெதுவான குரலில் சீற,

“படிக்கிறதுக்கு வந்து இருக்கேன் மேம்.. பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் க்ளாஸ் கண்டுபிடிச்சு வரதுக்கு லேட்டாகிருச்சு சாரி மேம் என மனைவியை பயங்கர அதிர்ச்சியில் தள்ளி விட்டு கூலாக கடைசி பெஞ்சில் சென்று அமர்ந்தான்  வீரய்யன்.. 

படிங்க நீங்க கண்டிப்பா படிக்கனும் என திருமணம் முடிந்த நாளிலிருந்து இன்று காலை வரை சொன்ன போது எல்லாம் எதுவும் பேசாது அமைதியாக ஒரு பார்வை பார்த்தானே அதற்கான அர்த்தம் இது தானா,இருடி உனக்கு வைக்கிறேன் பெரிய ஆப்பா என்ற பார்வை தானா அது,

நான் படிக்க சொன்னேன்.. ஆனால் இப்புடியா? தபால் வழி கல்வியை நான் சொல்ல,  இவன் வேண்டுமென்றே என்னையா படிக்க சொல்ற உனக்கு வைக்கிறேன்டி பெரிய ஆப்பான்னு.. என்னை பழிவாங்கவே 33 வயதில் பேக்கை மாட்டி கொண்டு இப்புடி என்னோட காலேஜ்க்கு வந்து சேர்ந்து இருக்கின்றானே என  தீயாய் அவனை கிருத்திகா முறைக்க, வீரய்யனோ படு கூலாக பேனாவை விரலில் சுழற்றியபடி அவளை இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்து இருந்தான்… 

வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தான்.. வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்ற கோர்ஸ் வேறு,  

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

1 thought on “மயங்கினேன் மன்னவனிடம் 2”

Leave a Reply to Manish Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!