லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 12

4.6
(12)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 12

 

பார்கவியின் கணவன் சரவண பாண்டியன்..  அவன் திங்கள் வரும் வரை பொறுக்க முடியாமல் அவசரமாக சனிக்கிழமை இரவே அவனை கைபேசியில் தொடர்பு கொண்டாள் அவள்..

 

“பவி குட்டி.. என்னடி.. மாமனை விட்டு ரெண்டு நாள் கூட இருக்க முடியலையா? அதுக்குள்ள கால் பண்ணிட்டே.. எனக்கு கூட நீ என் கைக்குள்ள இல்லாம தூக்கமே வர மாட்டேங்குதுடி..”

 

“யாருக்கு..? உனக்கு..? சும்மா அளந்து வுடாத.. நீ ஷூட்டிங்னு போய்ட்டா என் ஞாபகம் எல்லாம் உனக்கு இருக்கவே இருக்காது.. எத்தனை வருஷமா உன்னோட குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்.. என்கிட்ட அளக்காத சரவணா..”

 

“ஏ ஜிங்கிடி.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி செல்லம்.. என்னதான் ஷூட்டிங்ல இருந்தாலும் 24 மணி நேரமும் மாமனுக்கு உன் நெனப்பு தான்.. நம்புடி என்னை.. அதை விடு.. என்ன பண்ணிட்டு இருக்க இப்போ.. அதான் மாமனை பிரிஞ்சி இருக்க முடியாம ஃபோன் பண்ணிட்ட இல்ல..? அப்படியே உன்னை மறுபடியும் பார்க்கிற வரைக்கும் தாங்கற மாதிரி கிளுகிளுப்பா மாமனுக்கு சும்மா கீழருந்து மேல வரைக்கும்  ஜிவ்வுன்னு ஏறி கிக்காக்கற மாதிரி அழுத்தமா ஒரு இச்சு குடுடி ஜிலேபி..”

 

அவன் ஏதோ நினைத்து பேசிக் கொண்டே போக அவளோ “வீக் என்ட் அதுவுமா என்னை விட்டுட்டு ஷூட்டிங் போயிட்டு உனக்கு இச்சு வேற கேக்குதா.. அதெல்லாம் ஒன்னும் கெடையாது.. இங்கே யாரும் ரொமான்ஸ் பண்றதுக்காக உனக்கு ஃபோன் பண்ணல.. நான் வேற ஒரு முக்கியமான விஷயமா உனக்கு ஃபோன் பண்ணேன்..”

 

“வேற விஷயமாவா? என்னடி விஷயம்?”

 

“அது என் காலேஜ்ல என்னோட வேலை செய்றா இல்ல மதி..”

 

“ஆமாமா.. ஞாபகம் இருக்கு.. நான் கூட உன்னை ஒருவாட்டி காலேஜ்ல விட வரும்போது அந்த பொண்ணை பார்த்து இருக்கேன்.. அழகா சினிமா ஹீரோயின் மாதிரி இருக்குமே.. சூப்பர் ஃபிகரு..”

 

“யோவ்.. ஃபோன்ல தானே பேசுறோம்.. இவ நம்மள அடிக்க மாட்டான்ற தைரியத்தில தானே பேசிகிட்டு இருக்க..?”

 

“அய்யோ..  உனக்கு என்னடி செல்லம் இப்படி பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது..? அது நான் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் இல்ல ..?அந்த கண்ணோட்டத்தில் கண்ணோட்டத்தில பார்த்தனா..? அதான் தங்கச்சியையும் அப்படி சொல்லிட்டேன்..”

 

“ஓ.. அ…ப்புடி.. ஆமா.. எந்த ஊர்லயா தங்கச்சியை சூப்பர் ஃபிகர்ன்னு சொல்றாங்க..?”

 

“ஹி..ஹி.. அது ஒன்னும் இல்ல பேபி.. பழக்க தோஷத்துல கொஞ்சம் டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு..”

 

“ஆஹான்.. டங்க் ஸ்லிப் ஆயிடுச்சா? நீ வீட்டுக்கு வா.. உனக்கு டங்கே இல்லாம பண்றேன்..”

 

“அடி கள்ளி.. உனக்கு மாமா மேல எவ்ளோ லவ்வு டி? டங்கே இல்லாம போற அளவுக்கு மாமனுக்கு முத்தம் கொடுக்கப் போறியா.. கேட்கும்போதே எனக்கு உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுதே.. இதுக்காகவே டைரக்டர் கிட்ட எப்படியாவது பேசி திங்ககிழமைக்கு பதிலா நாளைக்கு மதியமே வீட்டுக்கு வந்துர்றேன்.. மாமனை நல்லா கவனிச்சு தங்கம்..”

 

“கவனிப்பு தானே..? நீ வா.. வா.. உன்னை நல்லா கவனிக்கிறேன்..”

 

“நீ ஆசையா சொல்றது கூட எனக்கு கோவமா சொல்ற மாதிரியே இருக்கு டி செல்லம்.. சரி..  இன்னும் நீ என்ன முக்கியமான விஷயம்னு சொல்லவே இல்லையே..”

 

அதற்கு மேல் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவள் கைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டு நேராக வந்து அடிப்பாள் என்று தோன்றியது அவனுக்கு.. அதனால் நேரம் கடத்தாமல் பேச்சை மாற்றி விஷயத்துக்கு வந்தான்..

 

அவளும் மதிக்கு இருந்த பிரச்சனையையும் அதற்கு தீர்வாய் அவன் செய்ய வேண்டிய வேலையை பற்றியும் சொல்ல “இவ்வளவுதானா மேட்டரு.. நான் பாத்துக்குறேன்.. விடு தங்கம்.. டயலாக் குடுத்தா சும்மா பின்னி  பெடலெடுக்கற மாதிரி ஒரு சூப்பர் ஆளை கூட்டிட்டு வரேன் பாரு..”

 

“நீ மொதல்ல ஆளை கூட்டிட்டு வா.. அவர் சூப்பரா இல்லையான்னு நான் சொல்றேன்..”

 

“சரிடி பவி கண்ணு.. அதான் மாமா நீ சொல்ற வேலையை பண்றேன்னு சொல்லிட்டேன் இல்ல.. இப்பவாவது மாமனுக்கு ஒன்னு கொடுக்க கூடாதா..?”

 

“முதல்ல ஆளை கூட்டிட்டு வா.. அதுக்கப்புறம் எல்லாமே கொடுக்கிறேன்..”

 

அவள் முறுக்கி கொள்ள “அடியே.. ரொம்பத்தான் பண்ற டி.. ஃபோன்ல தானே கேக்குறேன்.. என்னை பாத்தா பாவமாவே இல்லையா உனக்கு..?”

 

அவன் குரலின் இயக்கத்தை கேட்டு நிஜமாகவே அவளுக்கு பாவமாய் இருக்க “யோவ்.. வீடியோ கால்ல வாயா.. நிறைய கொடுக்கிறேன்..” வெட்க சாயலோடு சொன்னவளை அப்பொழுதே தனக்குள் அடக்கி கொள்ள வேண்டுமென தோன்றியது அவனுக்கு..

 

அவள் சொன்னது தான் தாமதம்.. மனைவியிடம் தான் செய்யப் போகும் வேலைக்கான பரிசை வாங்க வீடியோ காலுக்கு தாவினான்..

 

இரண்டு நாளுக்கும் சேர்த்து வைத்து ஆசை தீர கைபேசி மூலமாக கேட்டது எல்லாம் அவனுக்கு கொடுத்தாள் பார்கவி..

 

பின்னே சினிமா துறையில் அனுதினமும் பல நடிகைகளையும் பெண்களையும் சந்திப்பவன் எவரிடமும் மனம் தடுமாறாமல் தன்னை காதலித்த  நாளிலும் சரி.. திருமணம் செய்த பிறகும் சரி.. தன் ஒருத்தியை மட்டுமே மனதில் சுமந்து கொண்டிருக்கும் அவளின் ஆருயிர் காதல் கணவனாயிற்றே.. அவன் ஆசையாய் கேட்கும் போது அவள் எதையுமே மறுத்ததில்லை..

 

இப்படியே இரண்டு நாட்களும் ஓடி விட படப்பிடிப்பு தாமதமாகி இன்னும் ஒரு நாள் கழித்தே முடிய திங்கட்கிழமை நேராக வீட்டுக்கு வர முடியாமல் வேறு ஒரு படப்பிடிப்பிற்கு போய்விட்டான் பாண்டி என்ற பொதுவாக சினிமா உலகத்தில் அழைக்கப்படும் அசிஸ்டன்ட் டைரக்டர் சரவண பாண்டியன்..

 

அது மதியழகி வேலை செய்யும் கால் சென்டர் பக்கத்தில் இருந்த 11 மாடி கட்டிடத்தில் நடந்த படப்பிடிப்பு தான்.. அதே படபிடிப்பிற்கு தான் ஸ்டண்டு காட்சிகள் செய்ய வந்திருந்தான் தீரனும்..

 

அன்று எடுக்க வேண்டிய சண்டை காட்சிகள் ஏனோ சரியாக எடுக்க முடியாமல் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது பாண்டியை.. டைரக்டர் வேறு ருத்ர மூர்த்தியாய் மாறி கத்திக் கொண்டிருந்தார் அவனிடம்..

 

“என்னையா இது மூணு மணி நேரமா இந்த ஷாட்டை எடுத்துகிட்டு இருக்கேன்.. என்னதான் ஆச்சு இந்த தீரனுக்கு.. எக்ஸ்ட்ரா பேமென்ட் ஏதாவது எதிர்பார்க்கிறானா..? இத்தனை டேக் வாங்கிட்டு இருக்கான்.. டைம் வேற போயிட்டே இருக்குது.. ஏற்கனவே அந்த ஹீரோ கால்ஷீட் பிரச்சனையினால இந்த படத்தோட ஷூட்டிங் இழுத்துகிட்டே போகுது.. இதுல இந்த தீரன் வேற எதுக்கு இப்படி கழுத்தறுக்கறான்..?

 

“இல்ல சார்.. எப்பவும் எந்த ஷாட்னாலும் அரை மணி நேரத்துல அசால்ட்டா ஊதி தள்ளிட்டு போய்டுவான் தீரன்.. இன்னைக்கு என்னன்னு தெரியல.. அவனுக்கு கவனமே இங்க இல்லை.. நான் போய் அவன் கிட்ட பேசி பார்க்கிறேன் சார்..”

 

“பேசு பேசு.. இந்த ஷாட் எல்லாம் அவனை விட்டா பண்றதுக்கு சரியான ஆள் கிடையாது.. ஏதாவது எக்ஸ்ட்ரா பேமென்ட் வேணும்ணாலும் கொடுத்துடலாம்.. சீக்கிரம் ஒழுங்கா பண்ணி முடிக்க சொல்லு..”

 

உடனே தீரனிடம் ஓடினான் பாண்டி.. “என்ன தீரா ஆச்சு உனக்கு? இவ்ளோ டேக்  எடுக்கவே மாட்டியே நீ..? டைரக்டர் வேற கத்திக்கிட்டு இருக்காரு தீரா.. உன்னை பத்தி எனக்கு தெரியும்.. நீ ஒரு வேலைன்னு ஒத்துக்கிட்டேனா கரெக்டா செஞ்சுடுவே.. என்ன ஆச்சு உனக்கு இன்னிக்கி.. உன் கவனமே வேலைல இல்லை.. அந்த திமிர் பிடிச்ச டைரக்டர் வேற பணம் எக்ஸ்ட்ரா வேணுமாங்கற மாதிரி என்னை கேக்கறாரு.. என்னாச்சு தீரா.. ஏதாவது பிரச்சனையா?”

 

“என்னது..? எக்ஸ்ட்ரா துட்டு கொடுக்கறாராமா..? அந்த ஆளு இந்த தீரனை பத்தி என்ன நினைச்சுக்கிட்டு கீறாரு.. தீரன் ஒரு தபா வாக்கு கொடுத்துட்டா அப்புறம் உசுரே போனாலும் அவன் அதை தாண்ட மாட்டான்.. ஆனா இன்னைக்கு கொஞ்சம் பேஜாரா தான் கீறேன் பாண்டி…”

 

“ஏன் தீரா.. ஏதாவது பெரிய பிரச்சனையா? நம்ம தம்பி ஏதாவது பிரச்சனையில மாட்டிக்கினானா?”

 

“இல்ல இல்ல.. அவனால ஒரு பிரச்சனையும் இல்ல.. அவன் சொக்க தங்கம் டா.. ஆனா வேற ஒரு சங்கதி.. அது.. கொஞ்ச நாளா என் பின்னாடி ஒரு ஃபிகரு சுத்தினு கீது.. ரொம்ப சின்ன பொண்ணு.. தம்மாதூண்டு கீது.. என்னை லவ் பண்றேன்னு சொல்லி டார்ச்சர் பண்ணுது அந்த பொண்ணு..”

 

“ம்ம்.. எனக்கெல்லாம் இருக்கிற ஒன்னே மதிக்க மாட்டேங்குது.. உனக்கு பாரு.. எத்தனை பொண்ணுங்க மேல வந்து விழுது.. அதுவும் சின்ன பொண்ணா தான் பார்க்குது உன்னை.. உனக்கு உடம்பு முழுக்க மச்சம் இருக்கு தீரா..”

 

“த சீ வாய மூடுயா கஸ்மாலம்.. உனக்கு தான் என்னை பத்தி தெரியும் இல்ல.. நான் ஆஞ்சநேயர் சாமி கும்பிடுறவேன்.. என்கிட்ட வந்து தேவையில்லாம அந்த பொண்ணு லவ்வு கிவ்வுன்னு பேசின்னு கீது.. நான் அதை ஏத்துக்கலைன்னா உயிரை வுட்ருவேன்னு  சொல்லி என்னை மேர்சலாக்குது யா.. பெரிய சிக்கல்ல மாட்டி வுட்ரும் போல என்னை.. அதுக்குத்தான் இன்னா செய்யறதுன்னு  தெரியாம மூச்சிக்அகினு கீறேன் பாண்டி..”

 

“இதான் உன் பிரச்சனையா? இரு இரு…” என்று சொல்லி சற்று யோசித்தவனுக்கு தன் மனைவி சொன்ன பிரச்சனையும் இதே போல தானே இருந்தது என்று தோன்ற அடுத்த நொடியே அவனுக்குள் ஒரு மின்னல் வெட்டியது..

 

“தீரா.. நான் சொல்றதை கேளு.. நான் சொல்றபடி செஞ்சனா உன் பிரச்சனையும் தீர்ந்திடும்.. இன்னொரு பொண்ணோட பிரச்சனையையும் தீர்த்திடலாம்..”

 

“மறுபடியும் பொண்ணா.. டேய் வோணான்டா.. இந்த பொண்ணுங்க சமாச்சாரமே நமக்கு வோணாம்..”

 

தீரன் சற்று தயங்க “தீரா.. அதெல்லாம் உனக்கு எந்த பயமும் வேணாம்.. அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான்.. நீயே அது கிட்ட தப்பா நடக்கணும்னு நினைச்சாலும் அது வுடாது.. அது நெருப்பு.. அதுக்கும் உன்னை மாதிரியே பிரச்சனை தான்..” என்று மதியழகியினா பிரச்சனை பற்றிய முழு விவரத்தையும் தீரனிடம் தெரிவித்தான்..

 

“ம்ம்.. பிரியுது.. இப்போ இதுக்கு என்ன பண்ணலாம்ன்கிற..?”

 

“தீரா.. இங்க பாரு.. இப்போ அந்த பொண்ணு அந்தப் பையன் தொல்லை தாங்காம தனக்கு ஏற்கனவே லவ்வர் இருக்காருன்னு சொல்லிடுச்சு.. அதே மாதிரி தான் உன்னையும் இந்த பொண்ணு ரொம்ப தொந்தரவு பண்ணுது இல்ல..? அது கிட்டயும் உனக்கும் ஏற்கனவே ஒரு லவ்வர் இருக்காங்கன்னு சொல்லிடு.. அந்த பொண்ணுக்கு லவ்வரா நடிக்க ஒரு ஆள் தேவை.. நீயே அந்த லவ்வரா நடிச்சா அந்த சின்ன பையன் இந்த சின்ன பொண்ணு ரெண்டு பேருமே மனசு மாறி வேற வழியில போயிடுவாங்க.. நீங்க ரெண்டு பேருமே நிம்மதியா இருக்கலாம்..”

 

“அது சரி பாண்டி.. நாம ஸ்டன்ட்ல  என்னதான் சிங்கமா இருந்தாலும் ஆக்டிங்ல கொஞ்சம் வீக் ஆச்சே.. “

 

தீரனும் மதியை போலவே கவலை கொள்ள “தீரா.. ஃப்ரியா விடு.. அந்த பொண்ணும் ஒன்னும் பெரிய ஆக்டர் எல்லாம் இல்ல..நல்லா படிச்சு பொண்ணு வேற.. நடிப்பெல்லாம் வராதாம் அதுக்கு.. அந்த பொண்ணுக்கு சொல்லிக் கொடுக்கும் போது நானே உனக்கு ஆக்டிங் ட்ரைனிங் கொடுத்துடுறேன்.. அப்புறம் ஓகே தானே..?”

 

இரண்டு நிமிடம் யோசித்தவன் “நீ சொல்றதும் சரிதான்.. எப்படியும் இன்னைக்கு அந்த சின்ன பொண்ணு என்கிட்ட பேச வரும்.. எனக்கு ஏற்கனவே ஒரு லவ்வர் இருக்கான்னு அவகிட்ட  கர்ட் & ரைட்டா சொல்லிடுறேன்.. ஆனா என்ன பிராப்ளம்னா அந்த பொண்ணுகிட்ட நான் ஆஞ்சநேயர் பக்தன்.. பொண்ணுங்க பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்னு உதார் விட்டு வெச்சி கீறேன்.. இப்ப நான் இன்னொரு பொண்ணை லவ்வாங்கி பண்றேன் சொன்னா அந்த பொண்ணு நம்பிக்கணுமே..”

 

“அந்த பொண்ணை எப்படி சமாளிக்கறதுன்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன்.. அதெல்லாம் பெரிய மேட்டர் இல்ல.. நீ ரெடியா இரு.. நாளைக்கு காலைல என் வீட்டுக்கு போலாம்.. அந்த பொண்ணையும் வர சொல்லிடறேன்.. “

 

மறுநாள் காலை எவ்வளவு பெரிய குழப்பத்தின் முதல் படியில் காலை வைக்கப் போகிறோம் என்று தெரியாமல் பாண்டியிடம் தலையசைத்து விட்டு தான் செய்ய வேண்டிய ஸ்டண்ட் ஷாட்டை செய்யப் போனவன் ஒரே டேக்கில் அந்த ஷாட்டை முடித்து இருந்தான்..

 

சொன்னது போல் அன்று மாலை படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சேர்ந்தாள் மலரழகி தீரனை தேடி..

 

அங்கே தீரன் தன்னை அறிவாளால் தாக்க வந்த நான்கு பேரை சரமாரியாக அடித்து துவைத்து கொண்டிருந்தான்.. ஒவ்வொருவனாய் அடித்து வீழ்த்து விட்டு கம்பீரமாய் வீர நடை போட்டு அடுத்தவரை நோக்கி கழுகு பார்வையோடு மதயானை போல் வீறு கொண்டு வந்தவனின் அடுத்த அடி எதிரே இருந்தவனின் தலை மேல் இடி என இறங்க ஒரே அடியில் சுருண்டு விழுந்தான் அந்த மாமிச மலை..

 

இந்த சண்டைக்கு நடுவே ஒரு அரிவாளின் முனை தீரனின் புஜத்தில் கீறி விட அதை ஏதோ நகக்கீரல் போல் தூசி தட்டி விட்டவன் அடுத்தவனை நோக்கி பாய்ந்தான்.. இந்த சண்டை எல்லாமே ஒரு கட்டிடத்தின் மதில் மேல் நடந்து கொண்டு இருந்தது.. கீழே விழாமல் லாவகமாய் நகர்ந்தபடி சண்டை போட்டுக் கொண்டிருந்தான் தீரன்..

 

அந்த வீரனின் தீரத்தில் தீரனின் வீரத்தில் மயங்கி போய் தான் நின்றாள் மாதவள்..

 

 

 

தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா

வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குறுவாளா

தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா

வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குறுவாளா

சீறும் பாம்பாய் படமெடுத்தாடி

சினமே காக்கும் மின்னொளி வீரா

எறி

கழல் தீயாய் போர்க்களமாடி

எதிரியை தாக்கும் தாண்டவ சூரா

இடியினை கொட்டி தொடையினை தட்டி

வென்றாயே நீ கரிகாலா..

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!