லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 18

5
(8)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 18

 

மதி அந்த வீட்டை விட்டு வெளியே போவதை இரு ஆண்களும் அவளை தடுத்து நிறுத்த எதுவும் செய்ய இயலாமல் அதிர்வோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

 

உள்ளே இருந்து பஜ்ஜியோடு வெளியே வந்த பார்கவி “சரவணா.. எங்க மதியை காணோம்..?” என்று புருவம் சுருக்கி கேட்க அவளுடைய சரவணன் நிகழ்ந்த அனைத்தையும் அவளிடம் விவரித்தான்..

 

“சரவணா.. எனக்கு என்னவோ அவளுக்கு அண்ணன் கூட நடிக்கிறதுலதான் ஏதோ பிரச்சனைனு தோணுது.. அவ காலேஜ்ல டிராமால எல்லாம் வேற ப்ரொஃபஸரோட ஜோடியா ஆக்ட் பண்ணி இருக்கா சரவணா.. ஆனா அண்ணன் கூட நடிக்கும் போது தான் அவ இப்படி ஆயிடறா.. என்னன்னே தெரியல.. சாரி அண்ணா.. நான் சொன்னதை நம்பி அவளோட லவ்வரா நடிச்சு அந்த பொண்ணை மனசு மாற வைக்கலாம்னு நெனைச்சீங்க… ஆனா அப்படி எதுவும் நடக்கல.. இவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல..”  குழப்பமான முகத்தோடு சொன்னாள் பார்கவி..

 

“சிஸ்டர்.. என்னிய மாதிரி ஆளு கூட அவங்க எல்லாம் பேசறதே பெரிய விஷயம்.. இதுல என்கூட நடிக்கணும்னா அவங்களுக்கு ஒரு மாதிரி இருந்திருக்கும் தானே..? நான் படிக்காதவன்.. கொஞ்சமும் நாகரிகம் தெரியாதவன்.. அவங்க காலேஜ்ல அங்க வேலை செய்யறவங்களோட நடிச்சாங்கன்னா அவங்களாம் படிச்சவங்களா இருப்பாங்க.. பெரிய பெரிய ஆளுங்களா இருப்பாங்க.. ரீஜண்டா இருப்பாங்க.. அவங்களும் நானும் ஒன்னும் ஆயிடுவமா..? அதான் அவங்களுக்கு என்னோட நடிக்க பிடிக்கல போல.. பரவால்ல சிஸ்டர்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. எனக்கு தோதா ஏதாவது ஒரு துணை நடிகை கெடைப்பாங்க.. அவங்களை வச்சு அந்த பொண்ண சமாளிச்சுக்குவேன்..” விரக்தியான குரலில் தீரன் சொல்ல அதை கேட்ட பார்கவியின் முகம் மாறியது..

 

அவன் சொன்னதைக் கேட்டு மிகவும் வருத்தம் கொண்டாள் அவள்..

 

அதை கவனித்த பாண்டி “சரி விடு பவி குட்டி.. நம்ம வேற ஏதாவது பொண்ணை வச்சு தீரும் பின்னாடி சுத்துற அந்த பொண்ணை சமாளிக்கலாம்.. ஆனா இப்போ காலேஜ்ல அந்த பையனை தான் எப்படி சமாளிக்க போறீங்கன்னு தெரியல..”

 

“இல்ல இல்ல.. அதுக்குள்ள நம்ம அந்த முடிவுக்கு வர வேண்டாம்.. நாளைக்கு மதி காலேஜ்க்கு வருவா இல்ல..? நான் அவ கிட்ட பேசி பார்க்கிறேன்.. ஒருவேளை மனசு மாறி நாளைக்கு திரும்பியும் அவ பிராக்டிஸ் பண்ண வந்தாலும் வருவா.. அண்ணா நீங்க எதுக்கும் நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க.. அவ வந்தா நம்ம மறுபடியும் இதை கண்டினியூ பண்ணலாம்..”

 

பார்கவி சொல்ல அதுவும் சரியாகத்தான் தோன்றியது தீரனுக்கு.. தனக்காக அவள் அப்படி தன்னோடு சேர்ந்து நடிக்க விரும்பவில்லை என்றாலும் அவள் பிரச்சனை தீர்வதற்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வேரூன்றி இருந்தது மனதில்.. 

 

ஆனால் அடுத்த நாள் கல்லூரிக்கு வரவில்லை மதியழகி.. பார்கவி அவளை கைபேசி மூலம் அழைத்து கேட்கவும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் சொல்லி அதிகம் பேசாமல் இணைப்பை துண்டித்து விட்டாள் அவள்.. பார்கவி அவளுக்கு மனம் சரியில்லை என்று புரிந்து கொண்டாள்..

 

“சரி.. முன்னாடி முடிவு பண்ண மாதிரி அண்ணாவை வேற ஆள் பார்த்துக்க சொல்லலாம்..” என்று எண்ணி அவள் பாண்டிக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டாள்..

 

இங்கே மலரழகியோ தினமும் தீரனின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று அவனிடம் ஒரு முறை தன் விருப்பத்தை சொல்லி அவன் முறைப்பை பதிலாக வாங்கிக் கொண்டு வருவதை தன் வழக்கமாகவே வைத்திருந்தாள்.. அவன் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அதெல்லாம் காற்றோடு தான் போனது அவளை பொறுத்தவரை..

 

அவன் மறுபடி மறுபடி தான் இன்னொரு பெண்ணை விரும்புகிறேன் என்று சொல்ல அவளோ “அதான் ஞாயிற்றுக்கிழமை நேராவே வந்து பார்க்க போறேன் இல்ல? அப்ப தெரிஞ்சுட போகுது.. நீ எதுக்கு தீரா தினம் தினம் கஷ்டப்பட்டு பொய் சொல்லி என் மனசை மாத்த ட்ரை பண்ற.. நீ எவ்வளவுதான் சொன்னாலும் உன் பேச்சை நான் நம்ப மாட்டேன்” என்று சொல்லிவிட்டு சென்று விடுவாள் அவள்..

 

தீரனுக்கு அலுப்பாக இருந்தது.. “இந்தப் பொண்ணுக்கு என்ன சொல்லி தான் புரிய வைப்பேன்..” அவள் சின்ன பெண் என்று மட்டும் எண்ணி அவள் மனதை மாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவன் இப்போது தன் நினைவில் முழுதாய் மதியே குடி கொண்டிருக்க இன்னும் தீர்க்கமாய் அவள் மனதை மாற்றும் வேலையில் இறங்கி இருந்தான்..

 

அடுத்த நாளும் கழிந்து போக பாண்டிக்கு அழைத்து “ஏய் பாண்டி.. அந்த பொண்ணு கிட்ட நான் இன்னொருத்தியை லவ் பண்றேன்.. அவளோட டேட் பண்ண போறேன்னு சொல்லி இருக்கேன்.. ஞாயிற்றுக்கிழமை அவ அங்க வந்து பாப்பா.. பேசாம நானும் போகாம இருந்திடவா? இப்பதான் அங்க யாரும் வரப்போறதில்லையே..”

 

தீரன் கேட்க பாண்டியோ “இல்ல இல்ல தீரா.. நீ போயிட்டு வா.. யாரும் வரலைன்னாலும் நீயும் போகாம இருந்தா நீ பொய் சொல்றன்னு  அந்த பொண்ணுக்கு உறுதியா தெரிஞ்சு போயிடும்.. அது வேண்டாம்.. மதி சிஸ்டர் வரலைன்னா என்ன? நம்ப அவங்களுக்கு பதிலா வேற பொண்ணை ஏற்பாடு பண்ணிக்கலாம்.. உன்னோட லவ்வரா நடிக்க ஒரு பொண்ணை தேடி கண்டுபிடிக்கிற வரைக்கும் உன் பின்னாடி வர்ற அந்த பொண்ணு நீ யாரையோ லவ் பண்றேன்னு நம்பணும்.. அதுக்கு இந்த வாரம் நீ அந்த ஹோட்டலுக்கு போ.. அங்க இருக்கும்போது நான் உனக்கு ஃபோன் பண்றேன்.. அந்த பொண்ணு தான் ஃபோன் பண்ணி உடம்பு சரியில்லைன்னு சொல்லி வரலைன்னு அன்னைக்கு சமாளிச்சுட்டு வந்துரு.. அடுத்த வாரம் மறுபடியும் வேற பொண்ணை பார்த்து நம்ம நடிக்க வச்சுக்கலாம்.. என்ன ஓகேவா?”

 

அப்போதைக்கு வேறு வழியும் இல்லை என்பதால் அவனும் சரி என்று சொல்லி இருந்தான் அந்த திட்டத்திற்கு..

 

இரண்டு நாட்கள் இப்படியே கழிந்து இருக்க சனிக்கிழமை முழுதும் எப்போதும் போல தன் தம்பியோடு செலவிட்டவன் அன்று மாலை இந்தரோடு கடற்கரைக்கு சென்றிருந்தான்.. மணல் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவன் எதிரில் வந்து நின்ற மலரழகியை பார்த்து திடுக்கிட்டு தான் போனான்..

 

“வந்துட்டாளா.. இவளை..!!?” பல்லை கடித்து சொன்னவன் “கிளம்பலாமா இந்தர்?” என்றான் அவளை கண்டு கொள்ளாது..

 

“அண்ணா பாவம்ணா அந்த பொண்ணு..” இந்தர் அவளுக்கு பரிந்து சொல்ல அவனை தீவிரமாய் முறைத்து விட்டு சட்டென எழுந்து தன் மேல் படிந்திருந்த மணல் துகள்களை தட்டி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியே சாலை நோக்கி நடக்க தொடங்கினான் அவன்..

 

மலர் அழகியின் முகமோ அவன் செய்ததை கண்டு வாடி போனது.. அதை பார்த்த இந்தர் அவள் அருகில் வந்து “நீ ஒன்னும் கவலைப்படாதே.., நீ இவரை துரத்தி துரத்தி லவ் பண்ற மாதிரியே நானும் இன்னொருத்தியை லவ் பண்ணிட்டு இருக்கேன்.. ஆனா அவளும் இப்படித்தான் என் வயசை காரணம் காட்டி என் பக்கம் திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறா.. ஆனா நிச்சயமா அவ மனசை மாத்திடுவேன்.. அதே மாதிரி நீயும் நம்பிக்கையோட இரு.. அண்ணா மனசு கட்டாயமா மாறும்..”

 

அவன் பேசியதை கேட்டு அவளும் சட்டென தன் உற்சாகத்தை முகத்தில் திருப்பிக் கொண்டாள்..

 

“எனக்கு தெரியுமே.. அதனாலதான் உங்க அண்ணா என்னை எவ்வளவு விரட்டினாலும் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கேன்.. நீ வேணா பாரு.. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அவரை என் பின்னாடி சுத்த வைக்கிறேன்..” என்று நம்பிக்கையோடு சொன்னவளை பார்த்து சிரித்தவன் “தட்ஸ் த கான்ஃபிடன்ஸ்.. நிச்சயமா எங்க அண்ணா உன் பக்கம் திரும்புவார் பார்.. அது அவ்வளவு ஈஸி இல்ல தான்.. ஆனா மிஷன் இம்பாஸிபிள் இல்ல.. முயற்சி பண்ணா எதுவுமே பாஸிபிள் தான்..” என்று சொல்லிவிட்டு அவள் கைக்குலுக்கி “ஆல் தி பெஸ்ட்..” என்று வாழ்த்து சொன்னவன் தன் அண்ணனை தொடர்ந்து நடக்க தொடங்கினான்..

 

ஆனால் அங்கு நடந்த அத்தனையும் சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தன இரு கண்கள்..

 

வீட்டிற்கு வந்தவுடன் இந்தர் தீரனிடம் “அண்ணா.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..” என்று தொடங்க தீரனோ “நானும் தான்டா சொல்லணும்.. சரி நீ சொல்லு.. நான் அப்புறம் உனக்கு என்ன விஷயம்ன்னு சொல்றேன்..” என்றான்..

 

இந்தர் “அண்ணா.. எதுக்காகவும் வீக் என்ட்ல ரெண்டு நாளும் உங்களோட நான் ஸ்பென்ட் பண்ற டைம விட்டுக் கொடுத்ததே இல்லை இதுவரைக்கும்.. ஆனா நாளைக்கு சாயந்தரம் என்னால உங்களோட இருக்க முடியாதுண்ணா.. நாளைக்கு டின்னருக்கு ஒரு ஃப்ரென்ட்டை பார்க்க ஹோட்டலுக்கு போறேன்.. அவன் ரொம்ப அடம் பிடிக்கறான் ணா.. ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்.. நாளைக்கு ஒரு நாள் மட்டும் நான் போயிட்டு வரவா ?”

 

“இந்தரு.. நானே உன் கிட்ட இது பத்தி தான் சொல்லிக்கணும்னு நினைச்சேன் டா.. நாளைக்கு எனக்கும் முக்கியமான ஒரு வேலை கீது.. நான் ஒருத்தவங்கள பாக்க ஒரு எட்த்துக்கு போவணும்.. இதுவரைக்கும் இப்படி எதுவும் நான் பண்ணிக்கினது இல்லையா? அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு ரோசனையா இருந்திச்சு.. அதான் இப்ப நீயே சொல்லிக்கின இல்ல? நானும் நாளைக்கு ஒரு நாள் மட்டும் போய்க்கினு வரேன் டா தம்பி..”

 

அவன் சொன்னதை கேட்ட இந்தர் “அதெல்லாம் பரவால்லண்ணா.. நீ இப்படி எல்லாம் எங்கேயும் போக மாட்டே என்னை விட்டு.. முதல் தடவையா யாரையோ பார்க்க வெளிய போறேன்னு சொல்ற.. நீ போயிட்டு வா அண்ணா..” என்றான்..

 

அடுத்த நாள் காலையில் பாண்டி தீரனை அழைத்திருந்தான்.. “என்ன பாண்டி.. இந்த டைம்ல நீ நம்மள கூப்பிட மாட்டியே.. என்ன ஏதாவது பிரச்சனை ஆயிருச்சா.. எதா இருந்தாலும் சொல்லு.. சும்மா பூந்து விளையாடிடுவோம்..”

 

தீரன் சொன்னதைக் கேட்ட பாண்டி “அதெல்லாம் ஒன்னும் இல்ல தீரா.. நம்ம தம்பி பேரு இந்தரு தானே..?” என்று அவன் கேட்க “ஆமா.. ஆனா நான் யார்கிட்டயும் சொன்னதே இல்லையே உனக்கு எப்படி டா தெரியும்?” தீரன் கேட்க “நீ சொன்னது இல்ல தீரா.. ஆனா உன்னை பத்தி செட்டில சில பொண்ணுங்க முழு ஆராய்ச்சியே பண்ணி வச்சிருக்காங்க.. என்னதான் நீ மறைச்சாலும் உன்னை பத்தி எல்லா டீடைல்ஸும் அவங்க சொல்லிருவாங்க.. அவ்வளவு லவ்வு உன் மேல..”

 

அவன் கிண்டலாய் சொல்லி சிரிக்க தீரன் “அது லவ் இல்லடா.. அதுக்கு பேரு வேற.. சரி விடு.. அதான் ஏற்கனவே என் கழுத்தை புடிச்சிட்டு ஒன்னு தொங்கிக்கிட்டு இருக்குதே.. முதல்ல அதுக்கு என்ன வழியை பண்ண போறேன்னு தெரியல.. இன்னிக்கு சாயந்திரம் நீ சொன்ன மாதிரி அங்க போய் உட்கார்ந்துட்டு வரேன்.. அந்த பொண்ணு நம்புதோ இல்லையோ..?”

 

அவன் சொன்னதைக் கேட்ட பாண்டி “எல்லாம் நல்லபடியா நடக்கும் தீரா.. கவலைப்படாதே..” என்று சொல்லி இணைப்பை  துண்டித்து விட்டான்..

 

அன்று மாலையும் வந்தது.. தீரன் அவன் முன்னமே சொல்லி இருந்த உணவு விடுதிக்கு சென்று தான் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த மேஜைக்கு எதிரில் இருந்த  நாற்காலியில் அமர்ந்து கொண்டான்..

 

சுற்றி சுற்றி அவன் நாலா புறமும் பார்வையால் அளைந்து கொண்டு இருக்க சரியாக அப்பொழுது அந்த விடுதிக்குள் நுழைந்தான் இந்தர்..

 

நுழைந்தவுடனேயே தன் அண்ணன் எதிரில் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டவன் “இங்கதான் யாரையோ மீட் பண்ண போறேன்னு சொன்னாரே.. அவங்க வரப் போறாங்களா? என்ன பார்த்தாருன்னா நான் செத்தேன்.. நான் எதுக்கு வந்து இருக்கேன் தெரிஞ்சா என்னை பொளந்து கட்டிடுவாரு.. அவரு கண்ல படாம எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கோடா இந்தரு..” என்று வேகமாக சென்று தீரன் பார்வையில் படாதவாறு மறைவாக இருந்த ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்..

 

அடுத்ததாக அந்த விடுதிக்குள் நுழைந்தவள் மலரழகி.. அவள் நுழைந்ததும் எதிரிலேயே தீரன் அமர்ந்திருக்க அவன் அருகில் வந்தவள் “ஹேய்.. தீரா.. ஐ லவ் யூ பேபி” என்று அவனை கொஞ்சுவது போல் பாவனை செய்ய அவன் அவளை முறைத்து பார்த்து “இங்க பாரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல என் லவ்வர் இங்க வரப்போறா.. நீ இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருந்தா அவளுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. நீ முதல்ல இங்கிருந்து போ.. அவ இருக்கும் போது என் கண்ணில் கூட படாத.. நானே அவ கிட்ட மெதுவா சொல்லி அப்புறம் உன்னோட பேச வைக்கிறேன்.. அதுவரைக்கும் இங்க வந்து நின்னுகிட்டு இந்த மாதிரி பண்ணிட்டு இருக்காத..” என்றவனை முகம் சுருக்கி பார்த்தாள்..

 

“இன்னும் கூட நீ அப்போ சொன்ன பொய் உன்மைன்னு  சாதிச்சுட்டு இருக்க இல்ல? பண்ணு பண்ணு.. சரி.. நான் போய் அப்படி உட்கார்ந்துக்குறேன்.. அங்க இருந்து உன்னை வாட்ச் பண்ணிக்கிறேன்.. அப்படி யாரு தான் வராங்கன்னு நானும் பாக்குறேன்..” என்று சொல்லிவிட்டு வேகமாய் சென்றவள் தீரனுக்கு தெரியாமல் மறைந்தாற் போலீ வேறு ஒரு இடத்தில்  ஒளிந்து அமர்ந்திருந்த இந்தரை பார்க்கவும் “ஹேய் இந்தர்.. நீ என்ன இங்க உக்காந்து இருக்க..? உங்க அண்ணன் அங்க தானே இருக்காரு.. அவரோட உட்காராம தனியா வந்து உட்கார்ந்திருக்க..?”

 

அவள் கேட்கவும் “ம்ம்.. நான் சொன்னேன் இல்ல.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு.. அவளுக்காக தான் இங்க வந்து இருக்கேன்..”

 

“ஓ.. நீ அவளை பார்க்கும் போது நான் இங்க கரடி மாதிரி இருக்க வேண்டாம்.. நான் வேணா பக்கத்து டேபிள்ல போய் உட்கார்ந்துகிறேன்..” என்று அவள் சொல்ல “இல்ல இல்ல.. நான் தான் சொன்னேனே.. அவ என்னை அவாய்ட் பண்றான்னு.. இன்னொருத்தரை மீட் பண்ண இங்க வரேன்னு சொல்லி இருக்கா.. அதான் அவளை பார்க்கறதுக்கு நான் இங்க வந்தேன்..”

 

முழு விவரத்தையும் ஏனோ மலர்ழகியிடம் பகிர அவனுக்கு மனம் வரவில்லை.. அது தன்னுடைய சொந்த விஷயம் என்று எண்ணினான் அவன்..

 

இருவரும் எதிரெதிரில் அமர்ந்து தீரன் அமர்ந்திருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்கவும் தீரனோ பாண்டியின் அழைப்பை எதிர்பார்த்து தன் கைபேசியை உற்றுப் பார்த்து இருந்தவன் திடீரென தனக்குள் ஏதோ உந்தி தள்ள விடுதியின் வாயில் பக்கம் பார்வையை திருப்பினான்..

 

அங்கே அழகு மயிலாய் வந்து நின்று கண்களை அந்த விடுதியை சுற்றி அலையவிட்ட மதி தீரனில் வந்து தன் கண்களை நிலைக்க விடவும் அவனோ அவளைப் பார்த்து முதலில் திடுக்கிட்டு அதிர்ந்து பிறகு ஆனந்தமாய் ஆச்சரியப்பட்டு முகம் மலர்ந்து போனான்..

 

அவன் கண்களை நேராகப் பார்த்தவள் அந்தக் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டு ஆசையாக பார்க்கவும் அவன் அவளின் அந்த பார்வையில் மொத்தமாய் சொக்கி செயலிழந்து போனான்.. 

 

அவனைக் கேட்காமலேயே அவன் கால்கள் தன்னிச்சையாய் மதியழகியை நோக்கி நடந்தன.. தன்னை மறந்த நிலையில் மதியழகிக்கும் தனக்கும் இருந்த இடைவெளியை மெல்ல கடந்திருந்தான் தீரன்..

 

மதியழகியின் அருகில் போய் நின்றவனை ஏற்கனவே தந்த அதிர்ச்சிக்கு மேல் இன்ப அதிர்ச்சியாக சட்டென கலங்கிய கண்களோடு அவனை மென்மையாய் அணைத்து மார்பில் தலை சாய்த்தாள் மதியழகி..

 

ஓா் பாா்வை பாா்த்தே

உயிா்தந்த பெண்மை 

வாராமல் போய்விடுமா 

ஒரு கண்ணில்

கொஞ்சம் 

வலிவந்த போது 

மறு கண்ணும் தூங்கிடுமா

நான் கரும்பாறை 

பல தாண்டி 

வேராக வந்தேன் 

கண்ணாளன் 

முகம் பாா்க்கவே

என் கடுங்காவல் 

பல தாண்டி 

காற்றாக வந்தேன் 

கண்ணா உன் 

குரல் கேட்கவே

அடடா அடடா 

இன்று கண்ணீரும் 

தித்திக்கின்றதே..

 

உயிரே உயிரே 

வந்து

என்னோடு கலந்துவிடு 

உயிரே உயிரே 

என்னை 

உன்னோடு கலந்துவிடு 

நினைவே நினைவே

எந்தன் 

நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே 

இந்த 

விண்ணோடு கலந்துவிடு..

 

மழைபோல் மழைபோல்

வந்து 

மண்ணோடு விழுந்துவிட்டேன்

மனம்போல் மனம்போல் 

உந்தன்

ஊனோடு உறைந்துவிட்டேன் 

உயிரே உயிரே 

இன்று 

உன்னோடு கலந்துவிட்டேன்

நினைவே நினைவே 

உந்தன் நெஞ்சோடு

நிறைந்துவிட்டேன்..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!