லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 20

5
(5)

 

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 20

சேகர் ஒரு வில்லத்தனமான புனனகையோடு அவர்கள் எதிரில் வந்து நிற்க “இப்ப இவன் எதுக்கு இங்கே வந்திருக்கிறான்?” என்று யோசனையோடு நின்றிருந்தாள் மதியழகி..

இந்தரோ விட்டால் அவனைக் கொன்று விடுவான் போல எரிபார்வையை அவன் மீது வீசிக் கொண்டிருந்தான்..

“ஹலோ மதி.. ஹாய் இந்தர்.. எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்? உங்களுக்கு என்ன? நீங்க நல்லா தான் இருப்பீங்க.. உங்களால நான் தானே வேலையை இழந்துருக்கேன்.. நான்தான் வேலை இல்லாம கஷ்டப்பட்டு இருக்கேன்.. அது சரி.. என்ன மதி அப்புறம் உன் பிளான் எல்லாம் எப்படி இருக்கு?”

அவன் கேட்க மதிக்கோ அதீதபதட்டம் சூழ்ந்து கொண்டது அவன் கேள்வியில்..

அவன் முகத்திற்கு நேராக சுட்டுவிரலை நீட்டியவள் “ஏய் உன்னை யாருடா இங்க கூப்பிட்டாங்க? நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு.. நீ செஞ்ச வேலைக்கு உன்னை போலீஸ்ல புடிச்சு கொடுக்காம அந்த வேலையை விட்டு அனுப்ப மட்டும் செஞ்சேன் இல்ல.. அதுக்கு சந்தோஷப்படு.. இன்னொரு முறை என் முன்னாடி வந்து நின்ன நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. நெஜமாவே உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடுவேன்..”

“என்னடி போலீஸ் ல பிடிச்சு கொடுத்துடுவேன்னு பூச்சாண்டி காட்டுறியா எனக்கு?”

அவன் திமிராய் கேட்க தீரன் மதியழகியை பார்த்து “யார் மதி இவன்..? இவனை நீ எதுக்கு வேலையை விட்டு அனுப்பி வச்ச? உன் கூட வேலை செய்றானா?” 

சேகரை முறைத்துக் கொண்டே அவன் எதிரில் வந்து நின்றவனிடம் இந்தர் அவசர அவசரமாக “அண்ணா இவன் ஒரு கேடு கெட்டவன்ணா..” என்று ஏதோ சொல்ல தொடங்க அவனை ஒரே ஒரு தீப்பார்வையால் பேச்சிழக்க செய்தான் தீரன்..

“நீ என்னை அண்ணன்னு கூப்பிடாத.. அவ்வளவுதான்.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”

மதி பக்கம் திரும்பி “நீ சொல்லு மதி.. யார் இவன்?” என்று கேட்க “அது.. தீரா.. இவன் என் காலேஜ்ல வேலை செஞ்சவன் தான்.. என்னை விரும்பறதாவும் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னும்  சொன்னான்.. நான் அதுக்கு ஒத்துக்கலைன்னு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும்னு என்னை அடிச்சு கைய முறுக்கி என்னென்னவோ கொடுமை பண்ணான்.. அது பொறுக்க முடியாம தான் நான் பிரின்ஸ்பல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி இவனை வேலையை விட்டு எடுக்க வெச்சேன்..”

அவள் சொன்னதைக் கேட்டு ஆத்திரம் பொங்க அவன் சட்டையை கொத்தாக பிடித்தான் தீரன்.. அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடவும் உதடு கிழிந்து ரத்தம் வந்தது அவனுக்கு..

அப்படியும் கொஞ்சமும் சலிக்காமல் கீழே விழுந்திருந்தவன் மெதுவாய் கை ஊன்றி எழுந்து “என்ன மதி டார்லிங்.. பாதி கதையை மட்டும் சொல்றே.. மீதி கதையை யார் சொல்வா.. பாரு.. அவங்க எல்லாம் என்னை மட்டுமே தப்பா பாக்குறாங்க.‌ மீதி கதையை நான் சொல்லட்டுமா..?” என்று கேட்க “ஏய் நீ எதுவும் பேச வேண்டாம்.. முதல்ல இங்கே இருந்து போ..  ஒரு வார்த்தை மதியை பத்தி தப்பா பேசினே உன்னை கொன்னே போடுவேன்டா” தீரன் அவனை மிரட்டினான்..

“பிரதர் பிரதர்.. கூல் டவுன் பிரதர்.. நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிட்டு போயிடறேன்.. நான் வேற எதுவும் பண்ண மாட்டேன்.. அப்படியே மதியை நான் எதாவது பண்ணா நீங்க என்ன என்னை சும்மா விடுவீங்களா? எனக்கும் என் உயிர் மேல ஆசை இருக்குல்ல..? அதனால நான் மதியை எதுவும் பண்ண மாட்டேன்.. நான் என்ன சொல்லணுமோ அதை அஞ்சே நிமிஷத்துல சொல்லிட்டு இங்கிருந்து போயிருவேன்.. அது சொல்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க பிரதர்..”

அவன் சொன்னதை கேட்டவன் நொடி நேரம் அமைதியாகிவிட அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான் சேகர்..

“ஏன் மதிமா.. நான் உன்னை லவ் பண்றேன்னு எப்ப சொன்னேன்..? நல்லா ஞாபகப்படுத்தி பாரு.. நான் அதை சொல்லவா.. என் லவ்வை சொல்ற மாதிரி சிச்சுவேஷன் எப்படி வந்ததுன்னு.. நான் லவ் பண்றேன்னு சொன்னவ அதையும் சொல்லனும் இல்ல? இது என்ன ஓரவஞ்சனை?” என்றவன் இந்தர் பக்கம் திரும்பி “நீ மதியை லவ் பண்றேன்னு சொன்னேல? உன்னை ஆஃப் பண்ணறதுக்கு என்கிட்ட வந்து மதி மேடம் ஐடியா கேட்டாங்க.. அப்ப நான் சொன்னது தான் இந்த லவ்வரா நடிக்கிற ஐடியா.. உன்கிட்ட அதை சொல்லியும் நீ உன்னோட லவ்வரை காட்டுன்னு கேட்டுட்டியா? யாரை காட்டுறதுன்னு தெரியாம மறுபடியும் என்கிட்ட புலம்புனாங்க இந்த மதி மேடம்.. அப்பதான் நான் தான் லவ்வர்ன்னு சொல்லுன்னு சொன்னேன்.. அதுக்கு மதி மேடம்.. இல்ல.. என் கூட இந்த காலேஜ்ல வேலை பாக்குற உங்களை இத்தனை நாளா நான் லவ் பண்றேன்னு தெரிஞ்சா என் மரியாதை மானம் கெட்டுப் போயிடும்.. அதனால அதுக்கு வேற யாராவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்னு இவங்க தான் சொன்னாங்க.. அவங்க அப்படி சொன்ன அப்புறம்தான் எனக்கு கோவம் வந்துச்சு.. எனக்கு என்ன குறைச்சல்.. இதோ இந்த தீரன் படிக்காதவன் சினிமால ஸ்டன்ட் பார்ட்டி.. இவனை எல்லாம் லவ்வருன்னு பெருமையா சொல்லிப்பாளாம்.. ஆனா படிச்சு ஒரு பெரிய ப்ரொஃபஷன்ல இருக்கேன்.. என்னை அவளோட லவ்வர்னு சொல்றதுக்கு அவளுக்கு கசக்குதாம்.. உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல ஆம்பள உடம்பு தானடி வேணும்.. அது என்கிட்ட இல்லன்னு தானே என்னை வேணாம்னு சொன்ன..” என்று கேட்ட நொடி அவன் முகத்தில் இடியாய் இன்னொரு அடி விழுந்தது..

தீரன் அவன் பேசியதை அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனை அடி வெளுத்திருந்தான்.. ஆனால் இந்தரும் மலரழகியும் இப்போது அவர்களை கேள்வியாய் பார்த்திருந்தார்கள்..

இந்தர் மதியழகியை பார்த்து “வேற யாரையாவது உன்னோட லவ்வர்னு சொன்னா நான் நம்ப மாட்டேன்னு எங்க அண்ணாவையே உன் லவ்வர்னு சொல்லி நடிக்கிறியா?” என்று கேட்க “ஆமா இந்தர்.. இந்த தீரன் உன்னோட அண்ணன்னு எங்க அக்காவுக்கு தெரிஞ்சிருச்சு.. மதியக்கா என்னோட கூட பொறந்தவன்னு தீரனுக்கு தெரிஞ்சிருச்சு.. அதான் ரெண்டு பேரும் சேர்ந்து சூப்பரா பிளான் பண்ணி லவ் பண்ற மாதிரி நடிக்கிறாங்க நம்ம கிட்ட.. இப்ப விஷயம் வெளிய வந்துருச்சு.. நம்ம சேகருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.. அக்கா இப்படி எல்லாம் இன்னொரு ஆம்பளையை உன் லவ்வர்னு சொல்லி நடிக்கிறியே.. உனக்கு வெட்கமா இல்ல..?”  மலர் கேட்க அவள் முன்னே தன் சுட்டு விரலை நீட்டி அவளை எரிப்பது போல் பார்த்திருந்தான் தீரன்..

“அவ்வளவு தான் உனக்கு மரியாதை.. நீ என்னை தொந்தரவு பண்ணப்ப கூட நான் உன்னை தப்பா பேசினது இல்ல.. ஆனா மதியழகி மாதிரி ஒரு பொண்ணை பாத்து தப்பா பேசினே.. நீ பொண்ணுன்னு கூட பாக்க மாட்டேன்.. பல் எல்லாம் பேத்து கைல கொடுத்துடுவேன்.. ஞாபகம் வச்சுக்க..”

அவன் மிரட்ட “ஏன்ணா நீங்க மலரை மிரட்டறீங்க? அவ கேட்கிறதுல என்ன தப்பு? ஆஞ்சநேயர் பக்தின் ஆஞ்சநேயர் பக்தன்னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு என்னையும் ஏமாத்தி கடைசில இப்போ ஒரு பொண்ணை தள்ளி வைக்கிறதுக்காக யாருன்னு தெரியாத ஒரு பொண்ணை லவ்வர்னு சொல்லி கேவலமா நடிக்கிறீங்களே.. இதுதான் நீங்க உங்க ஆஞ்சநேயருக்கு செய்ற பெருமையா?”

மதியழகி இப்போது பொங்கி எழுந்து விட்டாள்.. “வாயை மூடு இந்தர்.. யாரு நடிக்கிறாங்க.. இங்கே யாரும் நடிக்கல.. ஆமா.. நீ என்ன கால் சென்டர்ல ஃபாலோ பண்ணிட்டு இருந்தியே.. இப்பவும் தினமும் கால் சென்டர்க்கு வந்துட்டு இருக்கியா..?” அவள் கேட்க இல்லை என்பது போல் தலையாட்டினான் இந்தர்..

“ஏன்.. ஏன் இப்ப எல்லாம் நீ என்னை ஃபாலோ பண்றது இல்ல?”

“அது அண்ணாக்கு அந்த பில்டிங் பக்கத்துலயே ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு.. ஒரு ஒன்னரை மாசமா அந்த ஷூட்டிங் நடக்கிறதுனால அண்ணன் அங்க வந்துட்டு போயிட்டு இருக்காரு.. அதான் நான் இப்ப எல்லாம் வர்றதில்லை..”

“ம்ம்ம்ம்.. அந்த ஒன்றரை மாசமா நான் தினமும் உங்க அண்ணாவை பாத்துட்டு தான் இருந்தேன்.. நீ உட்கார்ந்திருப்பியே அதே கடையில.. அவர் அழகு.. அவர் ஸ்டைலு.. இதெல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துது.. ஒரு நாள் அவர் ஷூட்டிங்க்கு கூட போயிருந்தேன்.. எவ்வளவு அழகா சண்டை போடுறார் தெரியுமா? அவருடைய ஆண்மைக்காகவே அவர் கிட்ட விழுந்துட்டேன் நானு.._

“இதை நான் நம்பனுமா? அவர் பேசறதை பார்த்தாலே..” என்று அவன் ஏதோ தொடங்க “டேய்.. உனக்கு மூளையே இல்லையா? இப்ப அவர் எப்படி பேசினார் உன்கிட்ட? கொஞ்சமாவது மெட்ராஸ் பாஷை அவர் வாயில வந்துச்சா? அதை நீ கவனிக்கவே இல்லையா? இவ்வளவு தூரம் ஒரு மனுஷன் மாறனும்னா அது யாருக்காக இருக்கும்ன்னு கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா? அது அவரோட உயிர்க்கு உயிரா இருக்கற ஒருத்தர்காக மட்டும் தான் இருக்கும்.. அந்த லவ்வர் நான்தான்..  உயிரா நினைக்கிற தம்பிக்காக கூட தான் பேசுற ஸ்டைலை மாத்தாதவர் எனக்காக மாத்தினார்.. அப்போ இதிலருந்தே அவர் என்னை எவ்வளவு விரும்புறார்னு புரியலையா உனக்கு..?”

இந்தர் கொஞ்சம் குழப்பமாய் பார்க்க அதே நேரம் தீரனும் மதியைதான் கண் அசைக்காமல் பார்த்திருந்தான்..

ஆனால் மலர் அழகி “ஒன்றை மாசம் முன்னாடி நீ உன் கால் சென்டர் கிட்ட தீரனை பார்த்தேங்கறதை நான் நம்புறேன்.. ஆனா இவர் பாஷையை உன்னை லவ் பண்ணதனால தான் மாத்திக்கிட்டார்னு நீ சொன்ன பாரு.. அது சுத்த பொய்.. நீ ஒரு ப்ரொஃபசர்.. நீ நெனச்சா நல்ல தமிழ்ல எப்படி பேசுறதுன்னு அவருக்கு நாலே நாள்ல சொல்லிக் கொடுக்க முடியும்.. அப்படி சொல்லிக் கொடுத்து கூட்டிட்டு வந்துருப்ப.. ரெண்டு பேரும் நல்லாவே நடிக்கிறீங்க.. நீ என்ன வேணா முயற்சி பண்ணிக்கோ எங்களை நம்ப வைக்க.. ஆனா நான் நம்ப மாட்டேன்.. தீரன் என்னை லவ் பண்ணலன்னாலும் பரவால்ல.. நான் அவரை தான் லவ் பண்றேன்.. நான் அவரைதான் கல்யாணம் கட்டிப்பேன்..  நீ என்ன பண்ணாலும் நீ ஒருத்தரை லவ் பண்றேன்கிற விஷயத்தை நான் நம்பவே மாட்டேன்.. நீ எப்படி குடும்பத்துக்காக மாடா உழைச்சிட்டு இருக்க? எந்த டிஸ்ட்ரக்ஷனும் இல்லாம முழு மூச்சா உன் வேலை உண்டு நீ உண்டுன்னு இருப்பேன்னு உன்னை பத்தி எல்லாம் எனக்கு தெரியும்.. நீ சொல்ற இந்த கதையை நான் நம்பவே மாட்டேன்.. அதுவும் சேகர் சொன்ன விஷயத்தை கேட்டப்பறம் எனக்கு நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு சுத்தமா நம்பிக்கை இல்லை..”

அவள் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி அப்படியே சிலையாக நின்றவள் “நாங்க லவ் பண்றோம்னு உன்னால நம்ப முடியல இல்ல..? சரி..”

தீரன் பக்கம் திரும்பி “என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா? உங்க தம்பியும் என் தங்கச்சியும் நம்ம லவ் பண்றோம்னு நம்பனும்னா அதுக்கு ஒரே வழி நம்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்.. சொல்லுங்க.. உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” அலைபாயும் விழிகளோடு அவள் கேட்க தீரனுக்கோ யாரும் தன்மீது தேன் மாரி பொழிந்தது போல் இருக்க தன்னையும் அறியாமல் சம்மதம் என்று தலையசைத்திருந்தான் மேலும் கீழுமாய்..

மதியழகி சொன்னதை கேட்டு இந்தர் தன் இடத்தில் அப்படியே அதிர்வோடு நிற்க மலர் அழகியோ சத்தமாக சிரித்தாள்..

“என்னடி பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு?”

மதியழகி கேட்க “எனக்கு இல்ல.. உனக்கு தான் புடிச்சிருச்சு.. நீ இப்படி கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னவுடனே ஐயையோ நம்ம அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறாரு.. அதனால நான் இனிமே அவரை லவ் பண்ண மாட்டேன்.. இனிமே அவரு அவளுக்கு மட்டும் தான் சொந்தம் அப்படின்னு சொல்லிட்டு நான் விட்டுக் கொடுத்துடுவேன்னு நினைச்சியா? எனக்கு தெரியாது நீ என்ன பண்றேன்னு? கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டு நான் மனசு மாறின உடனே ரெண்டு பேரும் கல்யாணத்தை தள்ளி போடுவீங்க.. அப்படியே தள்ளி போட்டு தள்ளி போட்டு ஒரு ஸ்டேஜ்ல கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க.. என்னையும் வேற யாருக்காவது மனசை மாத்தி கல்யாணம் பண்ணி வச்சுருவே.. இதானே உன்னோட பிளான்.. இதெல்லாம் நம்புறதுக்கு வேற ஆளை பாரு..”

அவள் உறுதியான குரலில் சொல்ல இந்தர் இப்படி ஒரு கோணம் இருக்கிறதோ என்று யோசிக்க தொடங்கினான்..

“ஓ.. உனக்கு இப்ப கன்ஃபர்மேஷன் வேணுமா?” என்றவள் தீரன் பக்கம் திரும்பி “தீரா.. நாளைக்கு உங்க உறவுக்காரங்களோட வந்து என் வீட்டுல உங்களால என்னை பொண்ணு கேட்க முடியுமா? முடியாதா?”

அவள் ஒரே வார்த்தையில் அவன் பதிலை கேட்க அவனோ “நாளைக்கேவா?” என்று சற்றே நடுங்கிய குரலில் வினவினான்..

அந்த நடுங்கிய குரல் இந்தருக்கு ஏதோ சொல்ல அவனுக்கும் இப்போது அவர்கள் விரும்புகிறார்கள் என்ற விஷயத்தில் நம்பிக்கை குறைந்தது..

“ஏன் தீரா.. உடனே என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு ஏதாவது கஷ்டம் இருக்கா? ஏதாவது பிரச்சனைனா சொல்லுங்க.. நாம யோசிக்கலாம்.. ஆனா நம்ம யோசிக்க யோசிக்க இவங்க ரெண்டு பேருனால நம்மளோட பிரச்சனைகள் அதிகமாயிட்டே தான் போகும்..”

அவள் சொன்ன விஷயத்தை அப்போதுதான் கிரகித்துக் கொண்டான் தீரன்.. அவள் சொன்ன விஷயம் புரிய தனக்காக இல்லை என்றாலும் அவளை இந்தர் அதற்கு மேல் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக இந்த விஷயத்தை தான் செய்து தான் ஆக வேண்டும் என்று உணர்ந்தவன் ஆனால் அவளை திருமணம் செய்து கொள்ளும் தகுதி தனக்கு இருக்கிறதா என்ற யோசனையிலேயே சற்று தயங்கினான்..

ஆனால் அவளோ “சொல்லுங்க தீரா.. நான் உங்க பதிலுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. நீங்க என்னை லவ் பண்றீங்க தானே? அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதில உங்களுக்கு என்ன இவ்வளவு தயக்கம்?” என்று கேட்கவும் அதற்கு மேல் தாமதித்தால் அவள் எங்கே உடைந்து விடுவாளோ என்று தோன்ற “நாளைக்கு எங்க தூரத்து ஒருத்தவங்க இருக்காங்க.. அவங்களை கூட்டிட்டு உங்க அப்பா கிட்ட பொண்ணு கேட்க வரேன்..” என்றவரனை திருப்தியாக பார்த்து புன்னகைத்தவள் மலரழகி பக்கம் திரும்பி “நாளைக்கு தீரன் வந்து நம்ம அப்பா கிட்ட பொண்ணு கேட்பார்.. அதுக்கப்புறம் அடுத்த முகூர்த்தத்திலேயே எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்.. இப்பவும் நீ பிடிவாதமா தான் இருப்பேனா இரு.. ஆனா நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் அவரை விரும்புறேன்னு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..
அந்த சேகருக்கு சொன்னதுதான் உனக்கும்.. என் புருஷனை இன்னொரு பொண்ணு தப்பா பார்க்கிறதை என்னால அனுமதிக்கவே முடியாது..” என்றவள் தீரன் கையைப் பிடித்து படி வெளியே நடக்க அவர்களையே அப்படியே அதிர்ந்த கண்களோடு பார்த்துக் கொண்டு நின்றார்கள் இந்தரும் மலரழகியும்..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!