லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 6

4.8
(5)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 6

 

“இல்ல.. எனக்கு நிச்சயமா தெரியும்.. நீ யாரையும் விரும்பி இருக்க மாட்டே.. ஏன்னா உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு.. உன்னோட தங்கை டாக்டருக்கு படிச்சிக்கிட்டு இருக்கா.. அவ படிச்சு முடிக்கிற வரைக்கும் நிச்சயமா நீ யாரையும் காதலிக்கவும் மாட்ட.. கல்யாணம் பண்ணவும் மாட்ட.. அது தெரிஞ்சதனால தான் உன்னை இப்போதைக்கு என் லவ்வை அக்செப்ட் பண்ணு.. நான் படிச்சு முடிச்சு ஒரு நல்ல நெலமைக்கு வந்தப்பறம் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்.. அதுக்குள்ள உன் தங்கையும் படிச்சு முடிச்சு நல்ல நெலமைக்கு வந்துடுவா‌‌.. உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் என்கிட்ட பொய் சொல்லாதே.. நீ என்ன சொன்னாலும் நீ என் லைஃப் பார்ட்னர் ஆகறதை யாராலயும்.. ஏன்.. உன்னால கூட தடுக்க முடியாது”

 

மதியழகி பற்றி தெளிவாக புரிந்து வைத்திருந்தான் இந்தர்..

 

அவன் மனதை மாற்ற முடியவில்லை என்றால் கூட குறைந்தபட்சம் குழப்பவாவது முடியும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போய்க் கொண்டிருந்தது மதிக்கு..

 

“நீ சொல்றது எல்லாமே சரிதான்.. எனக்கு என் குடும்பம் தான் ரொம்ப முக்கியம்.. அதனால தான் இப்ப வரைக்கும் எனக்கு எத்தனையோ பேர் ப்ரொபோஸ் பண்ணி இருந்தாலும் அது எதையுமே நான் அக்செப்ட் பண்ணிக்கிட்டது கிடையாது.. எனக்கு இருக்கற பொறுப்பை எல்லாம் முடிச்சுட்டு அப்பறம் தான் என் கல்யாணத்தை பத்தியே யோசிக்கணும்னு நெனைச்சிட்டிருந்தேன்.. என் தங்கை டாக்டர் ஆகற வரைக்கும் கூட இல்லை அவளுக்கு கல்யாணம் ஆகி அவ லைஃப்ல செட்டில் ஆனப்பறம் தான் என் கல்யாணத்தை பத்தி யோசிக்கணும் நெனைச்சிட்டு இருந்தேன்..”

 

அவள் ஒரு இக்கு வைத்தபடியே பேசிக்கொண்டு போக அவனோ பொறுமையின்றி “ம்ம்.. அப்பறம்? அப்புறம் ஏன் மா இப்ப முடிவை மாத்திட்ட.. சொல்லு சொல்லு உன் கதையை கண்டினியூ பண்ணு” என்று என்ன சொன்னாலும் அவளை தான் நம்ப போவதில்லை என்பது போல் தலை சாய்த்து அவளையே ஆழ்ந்து பார்த்தபடி கேட்டான் இந்தர்..

 

“ஆனா இப்போ நான் லவ் பண்றவரு கொஞ்சம் வித்தியாசமானவரு.. அவருக்கும் குடும்ப பொறுப்பு இருக்கிறதுனால என் பொறுப்பை எல்லாம் முடிச்சு வர வரைக்கும் வெயிட் பண்றேன்னு சொல்லி இருக்காரு.. அவரை ஒரு மாசம் முன்னாடி தான் மீட் பண்ணேன்.. அதனால உனக்கு அவரை தெரிஞ்சுக்கிறதுக்கு வாய்ப்பில்லை.. நாங்க ரொம்ப வெளியில மீட் பண்ணிக்கிட்டதில்ல..  ஆனா அவரு என்னை சந்திச்ச முதல் நாளே  என்னை ரொம்ப பிடிச்சு போயி அடுத்த ரெண்டே நாள்ல எனக்கு ப்ரொபோஸ் பண்ணாரு.. என் கன்டிசனுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டதுனால நானும் யோசிச்சு பார்த்து மனசார தான் அவர் லவ்வை ஏத்துக்கிட்டேன்.. நீ நம்பலைங்கறதுக்காக நான் லவ் பண்ணறேன்கிறது பொய் ஆயிடாது.. நீ நம்புனா நம்பு.. நம்பாட்டி போ..”

 

அவள் தெளிவாய் சொன்னதை கேட்ட இந்தர் சற்றே யோசிக்க தொடங்கினான்.. ஒரு மாதமாய் அவள் கால் சென்டருக்கு போய் இருக்கும் போது தான் அங்கு இல்லை என்பது அப்போதுதான் அவனுக்கு மின்னல் வெட்டுவது போல் அவன் நினைவில் வெட்டியது..

 

ஒருவேளை இந்த ஒரு மாசத்துல நம்ம இல்லாதப்ப யாரையாவது லவ் பண்ணி இருப்பாளா? 

 

“ஆமா.. அது யாரு..? நீ அது யாருன்னு சொல்லு.. அப்புறம் நீ சொல்றதை நம்பலாமா வேண்டாமான்னு நான் யோசிக்கிறேன்..” விடாகொண்டனாய் பேசிக்கொண்டு இருந்தான் அவன்..

 

“ஆமா.. நான் எதுக்கு உன்கிட்ட என்னோட லவ்வர் யாருன்னு சொல்லணும்.. அது என்னோட பர்சனல்… உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நீ கேட்டே.. அது என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன்.. ஏன்னா நான் இன்னொருத்தர் காதலிக்கிறேன்னு அதுக்கான காரணமும் சொல்லிட்டேன்… அதோட என் பதில் முடிஞ்சுது.. இதை தாண்டி நான் யாரை லவ் பண்றேன்னு உனக்கு எதுக்கு நான் சொல்லணும்..?”

 

அப்படி யாராவது இருந்தால் தானே சொல்வதற்கு? என்ன என்னவோ சொல்லியும் அவனை சமாளிக்க முடியாமல் திணறினாள் மதியழகி..

 

“அதானே பார்த்தேன்.. அப்படி ஒருத்தன் இருந்தா தானே நீ சொல்ல முடியும்? அப்படி யாருமே இல்ல.. அதனால தானே சொல்ல மாட்டேங்குற?” என்ன சொன்னாலும் அவன் நம்புவதாய் இல்லை..

 

“ஓ.. அப்ப நீ நம்ப மாட்ட இல்ல..? சரி அவர் யாருன்னு இப்ப உன்கிட்ட சொல்லணும்.. அவ்வளவுதானே? அப்படி சொல்லிட்டா என்னை நம்புவ இல்ல? அவர் யாருன்னு சொல்றது என்ன.. அடுத்த ஞாயித்துக்கிழமை உனக்கு என் லவ்வரை நேராவே காட்டுறேன்.. நாங்க ரெண்டு பேரும் நெக்ஸ்ட் சண்டே ஒரு சின்ன டேட் போறோம்.. ஆனா அவர் என்னை எங்க கூட்டிட்டு போறார்ன்னு எனக்கே தெரியாது.. டேட்டிங் கூட்டிட்டு போறேன்னு மட்டும் தான் சொல்லி இருக்காரு.. அழகான ஒரு கூலான எடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இருந்தாரு.. நீதான் என்னை எப்பவும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்னு சொல்றியே.. அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்னை ஃபாலோ பண்ணு.. உனக்கே தெரியும் அவர் யாருன்னு..” அவள் தெளிவாய் சொல்லிவிட்டாள் தான்..

 

ஆனால் அவளுக்கு தானே தெரியும்.. அவன் யார் என்று கேட்க பதில் சொல்லி சமாளிக்க முடியாமல் அவனிடம் இப்படி சொல்லி தன் பொய்யான காதலனை தயார் செய்ய ஒரு வாரம் வாய்தா வாங்கி இருக்கிறாள் என்று..

 

அவனுக்கோ இப்போது அவள் சொன்னதை நம்புவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.. நேரில் காட்டுகிறேன் என்கிறாளே.. ஒருவேளை நிஜமாகவே யாரையாவது விரும்புகிறாளோ.. அது யாராக இருந்தாலும் சரி.. அவனை போட்டு தள்ளிட்டு தான் மறு வேலை.. மனதிற்குள் அந்த கண்ணுக்கு தெரியாத நபரின் மேல் வன்மத்தோடு மனதிற்குள் சொல்லி கொண்டான்..

 

இப்படி அவன் மதியை பற்றி வில்லத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தான் இந்தர்..

 

“உன் பதில் உனக்கு கிடைச்சிருச்சுனா நான் கிளம்புறேன்..” என்று சொன்னவள் தன் வழியை பார்த்து போய் விட்டாள்..

 

“ஒரு ஒரு மாசம் அண்ணா வராருன்னு இவளை கவனிக்காம விட்டதுக்கு அந்த கேப்ல ஒரு பாய் ஃப்ரெண்டை பிடிச்சிட்டாளே.. அழகான பொண்ணு கிடைச்சா போதும்..  மடக்கி போட ரெடியா காத்துகிட்டு இருப்பாங்க போல இருக்கு.. சரியான அலைஞ்சானுங்க..”

 

தானும் அதே வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் எவனோ ஒருவனை 30 வயதில் மதியழகியை விரும்பியதற்காக திட்டிக் கொண்டிருந்தான் இந்தர்..

 

அன்று முழுவதும் மதியழகிக்கு கொஞ்சம் நிம்மதியாகவே சென்றது.. சேகர் பேராசிரியர்கள் அறைக்கு வந்தவுடன் “ரொம்ப தேங்க்ஸ் சேகர் சார்.. உங்க ஐடியா நிஜமாவே ஒர்க் அவுட் ஆயிடுச்சு.. முதல்ல அவன் நம்பல.. அப்புறம் இந்த ஒரு மாசமா தான் லவ் பண்றேன் அது எதுன்னு சொன்னவுடனே நம்பிட்டான்..”

 

“ஓ.. சூப்பர்.. மதி மேடம்..” என்று மதியிடம் சொன்னவன் “என்ன இந்த பய? யாரு உன் லவ்வர்ன்னு கேட்டு தொலைச்சிருப்பான்னு பார்த்தா இவ்வளவு ஈஸியா அவ சொன்னதை நம்பிட்டான்.. சே.. இவ்வளவுதானா இவன்..?” இந்த இப்படி எல்லாம் கேட்காததுக்காக மனதிற்குள்ளேயே அவனை திட்டி தீர்த்தான்..

 

“ஆனா இன்னொரு பிரச்சனை வந்திருக்கு சார்.. என் லவ்வர் யாருன்னு அவன் பெரெல்லாம் கேட்டான்.. என்ன சொல்லி அவனை நம்ப வெக்கறதுன்னு தெரியாம அவனுக்கு என் லவ்வரை நேராவே காட்டுறேன்னு சொல்லி இருக்கேன்.. இன்னும் ஒரு வாரம் தான் டைம் இருக்கு.. எப்படி என் லவ்வர்னு ஒரு ஆளை ஒரு வாரத்துக்குள்ள ஏற்பாடு செஞ்சு  காட்ட போறேன்னு யோசிச்சு யோசிச்சு மண்டையே வலிக்குது சேகர் சார்..”

 

அவள் சொன்னதை கேட்டு சற்று நிம்மதியானது சேகருக்கு.. 

 

ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டவன் “என்ன மேடம் இப்படி யோசிக்குறீங்க? கையில் வெண்ணெயை வெச்சுக்கிட்டு யாராவது நெய்க்கு அலைவாங்களா?” என்று கேட்க

 

அவளுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.. “வெண்ணெயா..? யாரு வெண்ணெய்..?” அவள் கேட்டவுடன் “நான் தான் அந்த வெண்ணெய்” என்று சட்டென சொல்வதற்கு அவனுக்கு வாய் வரவில்லை.. 

 

“ஏன் மேடம்..? ஒரு பேச்சுக்கு பழமொழி சொன்னா இப்படியா அதுக்கு கேள்வி கேப்பீங்க? இங்கயே உங்க பக்கத்துலயே கல்யாணம் ஆகாத 30 வயசு ஆளு நான் இருக்கும்போது நீங்க எதுக்கு வேற யாரையாவது வெளில போய் தேடனும்.? ஏன் கவலைப்படுறீங்க? நீங்க என்னை தான் லவ் பண்றீங்கன்னு இப்பவே போய் சொல்லிருங்க அந்த பையன் கிட்ட..”

 

சேகர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனாள் மதியழகி.. “என்ன சார் சொல்றீங்க? உங்களை லவ்வர்ன்னு சொல்லவா? இல்ல சார்.. அது மட்டும் என்னால முடியாது.. அது சரியா வராது.. காலேஜ்ல படிப்பு சொல்லி கொடுக்குற இடத்துல இருக்கற நான் இங்கயே என் கூட வொர்க் பண்ற ப்ரொஃபஸரை லவ் பண்றேன்னு ஒரு ஸ்டூடன்ட் கிட்ட போய் சொன்னா அதை விட தப்பான விஷயம் வேறெதுவும் இருக்காது.. அது தப்பு சார்.. அது பொய்தான்னாலும் என்னை பத்தி அப்படி ஒரு தப்பான விஷயத்தை என் ஸ்டுடன்ட்ஸ்க்கு சொல்ல மாட்டேன்.. நான் என் ஸ்டுடென்ட்ஸ்க்கு ஒரு மாடலா இருக்கணும்னு நினைக்கிறேன்.. ப்ளஸ் என் ப்ரொஃபஷன்ல எந்த காரணத்தை கொண்டும் ஒரு ப்ளாக் மார்க் வந்துடக்கூடாது.. என் கூட ஒர்க் பண்ற ப்ரொஃபசரை நான் லவ் பண்றேன்னு சொன்னா அது என் ரெபுடேஷனை ஃபுல்லா காலி பண்ணிடும் சார்..” 

 

.அவள் உறுதியாய் சொல்லிவிட அவனோ “ஐயோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல மேடம்.. ஊர் உலகத்துல ஒரே காலேஜ்ல லெக்ச்சரஸா இருக்க ரெண்டு பேர் இது வரைக்கும் லவ் பண்ணினதே கிடையாதா?”

 

அவன் எப்படியாவது அவளை தன் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று முயன்று கொண்டிருக்க அவளோ “மத்தவங்களை பத்தி எனக்கு தெரியாது சார்.. என்னை பொறுத்த வரைக்கும் அது ரொம்ப தப்பு..” என்றாள் தீர்மானமாக..

 

“அது மட்டும் இல்லாம.. அவன் கிட்ட ஓவர் பில்டப் எல்லாம் கொடுத்து டேட்டிங் அது இதுன்னு வேற சொல்லி இருக்கேன்.. அப்புறம் அவரை ஒரு மாசம் முன்னாடி தான் நான் மீட் பண்ணேன்னு வேற சொல்லி இருக்கேன்.. உங்களை தான் எனக்கு ரெண்டு மூணு வருஷமா தெரியுமே.. அப்புறம் நான் எப்படி அவன் கிட்ட உங்களை என் லவ்வர்ன்னு சொல்ல முடியும்..?”

 

அவள் கேட்ட கேள்வியில் முழுவதுமாய் ஏமாற்றமடைந்தான் சேகர்.. “மதி.. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றேன்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. நான் உங்களை அவன்கிட்ட என்னை உங்க லவ்வர்னு சொல்ல சொன்னதே எப்படியாவது நெஜமாவே வாழ்க்கைல உங்க லவ்வர் ஆயிடணும்கற ஆசைல தான்.. உங்களை மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை விட அதிர்ஷ்டக்காரன் வேற யாருமே இருக்க முடியாது.. ப்ளீஸ் மதி.. என் பிரபோஸலை அக்செப்ட் பண்ணிக்கோங்க..”

 

அவன் கெஞ்ச ஆரம்பிக்க அவளுக்கோ அவன் நடவடிக்கை அருவருப்பாய் இருந்தது..

 

“நான் ஒரு ப்ரொஃபசர்.. நீங்களும் ஒரு ப்ரொஃபசர்.. இப்படி எனக்கு இந்த பிரபோஸல் பிடிக்கலன்னு தெரிஞ்சப்பறமும் இப்படி கேக்கறதுக்கு உங்களுக்கு வெக்கமா இல்ல.? இந்த பேச்சை இதோட விடுங்க.. இல்லைன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்..”

 

அவள் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு கராராய் செல்ல அவனோ சட்டென அவள் முன்னால் மண்டியிட்டான்.. 

 

“ப்ளீஸ் மதி.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா நான் இங்க வேலையை விட்டுட்டு வேற காலேஜ்ல கூட வேலை தேடிக்கறேன்.. ப்ளீஸ் மதி.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு மட்டும் சொல்லுங்க.. நான் உங்களை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்..” விடாமல் மேலும் மேலும் கெஞ்சினான் அவன்..

 

“மிஸ்டர் சேகர்.. என்ன பண்றீங்க நீங்க…? திடீர்னு வந்து என்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்னு சொல்றீங்க..? அது எப்படி..? இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு திடீர்னு உங்களுக்கு என் மேல லவ் வரும்..? சரி.. அப்படியே நீங்க லவ் பண்ணாலும் எனக்கு உங்க மேல லவ் வரணும் இல்ல..? எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.. இன் ஃபேக்ட் இப்போ உங்க கூட ஃப்ரெண்டா இருக்கிறது பத்தி கூட நான் கொஞ்சம் யோசிக்கிறேன்.. இஷ்டம் இல்லாத ஒரு பொண்ணை உங்களை லவ் பண்ண சொல்லி ஃபோர்ஸ் பண்றீங்க? அதுவும் ஏதோ வெடலை பையன் மாதிரி இப்படி எல்லாம் பண்ணாதீங்க.. ஸ்டூடண்ட்ஸ் யாராவது பார்த்தாங்கன்னா என்னை பத்தி என்ன நினைப்பாங்க? ஒரு ப்ரொஃபசர் நடந்துக்குற மாதிரியா நடந்துக்கிறீங்க? முதல்ல எழுந்திரிங்க.. இல்ல.. நான் கிளம்பி வெளியே போயிட்டே இருப்பேன்..”

 

அவள் பொறுமை இழந்து கொஞ்சம் அழுத்தமாய் கத்தி சொல்ல அவனோ அந்த அறையை விட்டு திரும்பி செல்ல எத்தனித்தவளை கையை பிடித்து நிறுத்தி “மதி ப்ளீஸ்..” என்று கெஞ்ச அவன் பக்கம் திரும்பியவள் அவனை தீயாய் எரிப்பது போல் முறைத்து “மரியாதையா கையை விடு..” என்றாள்..

 

அவளின் மரியாதை ஒருமைக்கு தாவி விட அவனுக்கும் ஆண் என்கிற கர்வம் தலையெடுத்தது…

 

“என்னடி.. கொஞ்சம் இறங்கி போயி கெஞ்சுனா ஓவரா ஆடுற.. இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிறவங்க எல்லாரும் விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா..? கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் விரும்பிக்கோ.. அதான் நான் லவ் பண்றேன்னு சொல்றேன்ல..? அது போதாதா உனக்கு? என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னடி உனக்கு? எனக்கு என்னடி கொறச்சல்..? இங்க பார்.. நீ என்னை லவ் பண்ணி தான் ஆகணும்.. இல்ல.. நீ என்னை லவ் பண்ணலன்னாலும் பரவாயில்லை.. ஆனா என்னை கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.. உனக்கு நான் வேற ஆப்ஷனே கொடுக்கல..” கையை நன்றாக அழுத்தியபடி அவன் சொல்ல அவளுக்கோ கையில் வலி எடுக்க ஆரம்பித்தது..

 

அவளுக்கோ இந்தருக்கும் சேகருக்கும் பெரிதாய் வித்தியாசம் எதுவுமே தெரியவில்லை.. இரண்டு ஆண்களுமே அவர்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்க வேண்டும் என்று தான் நினைத்தார்களே தவிர அவள் மனதை பற்றி துளியும் கவலை கொள்ளவில்லை..

 

இப்படி அவர்களுக்குள் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே அந்த அறையின் வாசல் பக்கமாய் வந்த இன்னொரு பேராசிரியை பார்கவி மதியழகி சேகர் கையில் மாட்டிக்கொண்டு அவனை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டு உள்ளே வேகமாக ஓடி வந்து மதியின் கையை விடச் சொல்லி அவனை அடிக்க தொடங்கினாள்..

 

அவனோ அப்போதும் மதியின் கையை விடாமல் இருக்க “ஏய்.. இது எங்க பிரச்சனை.. இதுக்குள்ள நீ வராத.. போயிரு மரியாதையா..” என்க அவளோ “டேய்.. என்னடா.. கூட வொர்க் பண்ற பொண்ணு கிட்ட எப்படி மிஸ்பிஹேவ் பண்ற..? முதல்ல கையை விடுடா.. இல்ல.. நான் இப்ப போய் பிரின்ஸ்பல் கிட்ட சொல்லி எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுவேன்..”

 

எப்படியும் தன் வேலை போகப்போகிறது என்ற தைரியத்தில் பார்கவி பேசியதை கண்டு கொள்ளாமல் “மதி.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு.. என் காதலை ஏத்துக்க மதி.. இல்லை இப்படியே உன் கையை ஒடச்சிடுவேன்.. அப்புறம் உன்னை எவன் கல்யாணம் பண்ணிக்கறான்னு நானும் பாக்குறேன்..” என்று கர்ஜிக்க மதியழகிக்கோ ஏற்கனவே கை பயங்கரமாய் வலிக்க தொடங்கி இருந்தது..

 

எங்கே கையை உடைத்து விடுவானோ என்று அரண்டு போய் இருந்தாலும் தை காட்டிக் கொள்ளாமல் “நீ என்ன பண்ணாலும் சரி.. நான் அப்படி சொல்லவே மாட்டேன்.. அதுவும் என்கிட்ட நீ இப்படி முறை தவறி நடந்துக்கிட்ட அப்பறம் உன்னை மாதிரி ஒரு பொறுக்கியை லவ் பண்றேன்னு என் வாயால நான் சொல்லவே மாட்டேன்.. கனவு கூட காணாத..” அவளும் பதிலுக்கு இரைந்தாள்..

 

அவள் கையை மேலும் மடக்கி உடைக்க போகும் சமயம் அவளுக்கு வலியில் உயிரே போய்விடும் போலிருக்க அந்த அறை வாசலை கடந்த இந்தர் அந்த காட்சியை பார்த்த நொடி புயலாய் உள்ளே வந்து சேகரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!