லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 7
“நீ என்ன பண்ணாலும் சரி.. நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்லவே மாட்டேன்.. அதுவும் என்கிட்ட நீ இப்படி முறை தவறி நடந்துக்கிட்ட அப்பறம் உன்னை மாதிரி ஒரு பொறுக்கியை லவ் பண்றேன்னு என் வாயால நான் சொல்லவே மாட்டேன்.. கனவு கூட காணாத..” சேகர் கேட்டதற்கு பதிலுக்கு இரைந்தாள் மதி..
அவள் கையை மேலும் மடக்கி உடைக்க போகும் சமயம் அவளுக்கு வலியில் உயிரே போய்விடும் போலிருக்க “என் கை வலிக்குது.. கைய விடுங்க..”
அவள் முகத்தை சுருக்கி அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள போராட அவனோ அப்படியே அவள் கையை முறுக்கி பின்னால் கொண்டு வந்து இழுத்து அவளை நெருங்கி நின்றவன் “என்னடி.. ரொம்ப பத்தினி வேஷம் போடுற..? சாயங்காலம் ஆறு மணியிலிருந்து ராத்திரி 12 மணி வரைக்கும் கால் சென்டர்ல வேலை செய்றேன்னு சொல்றியே.. நெஜமாவே நீ கால் சென்டருக்கு தான் போறியானு யாருக்குடி தெரியும்?”
அவன் சொன்னதை கேட்டவள் அருவருப்பாய் தீயை மிதித்தது போல் கொதித்து போனாள்..
“நீ எல்லாம் ஆம்பளையாடா? பொறுக்கி.. நீ சொன்னதை கேக்கலன்னு என் கேரக்டர் பத்தி தப்பு தப்பா பேசுற.. சீ.. மரியாதையா இப்ப கைய விடுறியா இல்ல நான் பிரின்சிபல் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணவா?”
அப்போது சரியாக அந்த அறை வாசலை கடந்த இந்தர் அந்த காட்சியை பார்த்த நொடி புயலாய் உள்ளே வந்து சேகரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.
அந்த அதிரடியான குத்தில் அந்த அறையின் மூலையில் போய் சுருண்டு விழுந்த சேகர் அந்த அடியில் வாயோரம் கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டிருக்க “என்னையாடா அடிச்ச? உன்னை என்ன செய்யறன்னு பாரு..” என்று சீறி கொண்டு சிரமப்பட்டு எழுந்து பதிலுக்கு இந்தரை அடிக்க அவனை நோக்கி பாய்ந்து வந்தான்..
இந்தரோ “என்ன தைரியம் இருந்தா என் மதியோட கையை உடைக்க பார்ப்ப.. கொன்னுடுவேன்டா உன்னை..” மிரட்டலாய் சொன்னபடி தன்னை நோக்கி பாய்ந்து வந்த சேகரை காலால் எட்டி உதைத்தான்..
அவன் தான் ஸ்டண்ட் மாஸ்டரின் தம்பி ஆயிற்றே.. அவனிடம் சண்டைக்கு போனால் என்ன கதிக்கு ஆளாவோம் என்று தெரியாமல் அவன் மேல் கை வைக்கப் போன சேகர் கிழிந்த நாராய் அந்த அறையின் மூலையில் மறுபடியும் போய் விழுந்து இருந்தான்..
மதிக்கோ சேகர் அடி வாங்கியது ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும் இன்னொரு புறம் இந்தர் “என் மதி” என்று அவளை விளித்தது அவளுக்கு உறுத்தலாக இருந்தது.. சேகரை அருவருப்பாய் ஒரு பார்வை பார்த்து வைத்தவள் இந்தர் பக்கம் திரும்பி அவனை முறைத்துக் கொண்டுதான் இருந்தாள்..
அவனோ அவள் முறைப்பை கண்டு கொள்ளாமல் “கை ரொம்ப வலிக்குதா மதி.. கை ஒன்னும் ஆகல இல்ல? ரொம்ப அடிபட்டுச்சா?” என்று அவள் கையை பிடித்து வைத்து நீட்டியும் மடக்கியும் பதட்டத்தோடு பார்த்தவனை ஆச்சரியமாக ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள் பார்கவி..
அவளுக்கு இந்தரின் நடவடிக்கை எதுவுமே பிடிப்படவில்லை.. “இவன் என்ன மதி என்னவோ இவனுக்கு ரொம்ப குளோஸ் மாதிரி நடந்துக்குறான்..”
இப்படி எண்ணி இருந்தவள் எண்ணியதோடு நிற்காமல் “மதி.. என்ன இது? இவன் ஸ்டுடென்ட் தானே? அவன் உன்னை பேர் சொல்லி கூப்பிடறான்.. இவ்வளவு உரிமையோட உன் கைய புடிச்சு டாக்டர் மாதிரி என்னவோ வைத்தியம் பார்த்துட்டு இருக்கான்..?
அவள் அவள் விழிகளில் வியப்பு அகலாமல் கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் “அது..” என்று விளக்க தொடங்கிய மதியை பதில் சொல்ல விடாமல் “இப்ப இது ரொம்ப முக்கியமா? அவங்க கிடக்குறாங்க விடு மதி.. டாக்டர் கிட்ட போலாமா? கை ரொம்ப வலிக்குதா? இரு முதல்ல இந்த நாய நான் கவனிச்சிட்டு வரேன்..”
சேகர் பக்கம் கோவமாய் திரும்பியவனை கை பிடித்து இழுத்து தன் பக்கம் திருப்பி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள் மதி.. கன்னத்தில் கையை வைத்து தாங்கி அவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனே முன்னாள் தன் சுட்டு விரலை நீடி
“வாயை மூடு.. எல்லாம் உன்னால தாண்டா.. என்னடா நினைச்சுகிட்டு இருக்க நீ? உன் இஷ்டத்துக்கு நடந்துப்பியா? உன்னை கேக்க ஆளே இல்லைன்னு நினைச்சியா? முதல்ல நீ இங்க இருந்து வெளில போ.. இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க நின்னுட்டு இருந்த நான் இந்த காலேஜ்லருந்து வேலையை விட்டுட்டு போயிருவேன்.. போடா.. முளைச்சு மூணு இலை விடல.. அதுக்குள்ள படிச்சுட்டு இருக்கும் போதே லவ்வு.. அதுவும் உன்னை விட வயசு அதிகமா இருக்குறவ கிட்ட.. அப்படியே சப்பின் இன்னொரு அறை அறைஞ்சேன்னு வையி உனக்கு செத்து போன உங்க அம்மா ஞாபகம் வந்துடும்.. அவங்க இருந்து இருக்கணும்.. இந்த நேரம் நான் கொடுத்த இந்த அடியை அவங்க கொடுத்து அண்ணா உன்னை ஒரு வழி ஆக்கிருப்பாங்க..”
“இல்ல மதி.. நான் சொல்றதை கேளு..” அவன் மறுபடியும் ஏதோ சொல்ல வர “இன்னொரு வார்த்தை பேசினா நான் நிஜமா சொல்றேன்.. நான் இந்த காலேஜை விட்டு போறதுக்கு முன்னாடி உன்னையும் இந்த காலேஜ் விட்டு டிஸ்மிஸ் பண்ண வச்சுருவேன்.. நீ சொல்லி இருக்க இல்ல..? உங்க அண்ணாவோட கனவை பத்தி.. அப்புறம் அது எல்லாமே பாழா போயிரும்.. நீ என் லைஃப்ல பண்ண டேமேஜ் எல்லாம் போதும்.. முதல்ல இங்கிருந்து வெளியே போ..”
வாசல் படமாக கையை நீட்டிக்கொண்டு கண்ணை மூடி சொன்னவளை பார்த்தபடியே திரும்பி சேகரை முறைத்த படி அந்த இடத்தை விட்டு காலி செய்தான்..
அவன் சென்றதும் சேகர் பக்கம் திரும்பியவள் “அந்த அரை க்ராக்கு போயிடுச்சு.. இந்த அரை க்ராக்குக்கு ஒரு வழி பண்ணுவோம் வா..” பார்கவியிடம் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னவள் அவளை அழைத்துக் கொண்டு நேராக கல்லூரி முதல்வரின் அறைக்கு சென்று “எக்ஸ்கியூஸ் மீ மேடம்” இன்று உள்ளே செல்ல அனுமதி கேட்க அவர் உள்ளே வருமாறு தலையை அசைக்கவும் “மேம்.. மிஸ்டர் சேகர் பத்தி நான் ஒரு கம்ப்ளைன்ட் பண்ணனும்..” என்றாள்..
அவரும் அங்கு எதிரே இருந்த இருக்கையை அவர்கள் இருவரையும் அமரச் சொல்லி காட்டியபடி “சொல்லுங்க..” என்றார்..
சேகர் தன்னிடம் நடந்து கொண்டது பேசிய முறை தன் கையை முறுக்கி துன்புறுத்தியது என நடந்த எல்லாவற்றையும் அவரிடம் முழுவதுமாய் சொன்னாள் மதியழகி..
ஆனால் அவள் செய்த தவறு இதில் எந்திரன் பெயரை ஏற்க வேண்டாம் என்று எண்ணி அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களை சொல்லாமல் மறைத்தது தான்.. அவனைப் பற்றி சொன்னால் அவன் படிப்பை பாதியிலேயே நிறுத்த பட்டு பாழாகிவிடும் என்று அவனுக்காக கவலைப்பட்டு அவன் செய்ததை சொல்லாமல் மறைத்தாள் அவள்..
கல்லூரி முதல்வரும் பியூனை அனுப்பி சேகரை அழைத்துக் கொண்டு வர சொன்னார்.. ஐந்து நிமிடங்கள் கழித்து சேகர் முகத்தில் ரத்த காயத்தோடு வர அவனைப் பார்த்து அதிர்ந்து போனார் அந்தக் கல்லூரி முதல்வர்..
“என்ன மிஸ்டர் சேகர்? யார் உங்களை இப்படி அடிச்சாங்க?” என்று கேட்க “மேடம் அந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் தான் என்னை இப்படி அடிச்சுட்டான் மேடம்.. இதோ இங்க உக்காந்து உங்க கிட்ட வந்து என்ன பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்காங்களே.. இந்த மதி.. இவங்களும் அந்த பையனும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்க மேடம்.. அதை பத்தி நான் அவங்க கிட்ட நான் கேட்டேன்.. அவங்களை ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? ஒரு காலேஜ்ல ப்ரொஃபஸரும் ஸ்டுடென்ட்டும் இப்படி எல்லாம் நடந்துக்கலாமான்னு கேட்டேன்றதுக்காக தான் என்னை அந்த பையன் இப்படி அடிச்சிட்டான் மேடம்..”
வாய்க்கு வந்தாற் போல் பொய்களை அள்ளி விட்டு இருவர் மீதும் மொத்தமாக பழியை போட்டான் சேகர்.. அவன் சொன்னதைக் கேட்டு கல்லூரி முதல்வர் மதியின் பக்கம் திரும்பி கேள்வியாய் பார்க்க அவளோ “இல்ல மேடம்.. இவன் பொய் சொல்றான் மேடம்.. அந்த பையன் என்னை லவ் பண்றேன்னு சொன்னது உண்மைதான்.. ஆனா நான் அவன் லவ்வை அக்ஸப்ட் பண்ணல.. அவனுக்கு அட்வைஸ் பண்ணிட்டு தான் வந்தேன்.. அவன் என்னை விட ரொம்ப சின்ன பையன் மேடம் நான் எப்படி அவன் லவ்வை அக்ஸ்ப்ட் பண்ணுவேன்? நீங்க வேணா அவனையே கூப்பிட்டு கேளுங்க மேடம்..”
அவள் சொன்னவுடன் இந்த்ரஜித்தை அழைத்து வர சொன்னார் கல்லூரி முதல்வர்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கே வந்த இந்த்ரஜித்திடம் “இந்தர்.. நீ எதுக்கு சேகரை அடிச்ச..? அவர் உன்னோட ப்ரொஃபசர்.. அந்த மரியாதை கூட இல்லாம இப்படி உதடு கிழியற அளவுக்கு கண்ணு மண்ணு தெரியாம அடிச்சி இருக்க?” என்று கேட்க “மேடம்.. இந்த ஆளை அடிச்சதோட விட்டனேன்னு சந்தோஷப்படுங்க.. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவனை கொன்னே போட்டு இருப்பேன்.. இவன் எல்லாம் ஒரு ப்ரொஃபசரா? ஒரு ப்ரொஃபசர் செய்ற வேலையா இவன் செஞ்சான்? அவன் என்ன வேலை பண்ணிட்டு இருந்தான் தெரியுமா மேடம்? என் மதியை கையை முறுக்கி பின்னாடி பிடிச்சு இழுத்து அவளை ஹர்ட் பண்ணிட்டு இருந்தான்.. அதான் அடிச்சேன்.. இதுல என்ன தப்பு இருக்கு?” அலட்சியமாய் கேட்டான் அவன்..
அதைக் கேட்டு அப்படியே அதிர்ந்து போனார் அந்த கல்லூரி முதல்வர்.. “ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்.. எது நடந்தாலும் நீங்க இங்க வந்து என்கிட்ட சொல்லி இருக்கணும்.. செகண்ட்லி.. மதி இஸ் யுவர் ப்ரொஃபஸர்.. மதி மேடம்னு சொல்லு.. அது என்ன மதி மதின்னு என்னவோ நீ தான் அவங்களுக்கு பேர் வச்ச மாதிரி கூப்பிடுற? காலேஜுக்கு படிக்க தான வர? படிக்கிற வேலையை விட்டுட்டு ப்ரொஃபஸரை லவ் பண்ணுவியா நீ? அத கேட்டா அவங்களை போட்டு அடிப்பியா? இப்ப நான் கூடத்தான் கேட்கிறேன்.. என்னையும் அடிச்சிடுவியா நீ? நீ என்ன பெரிய ரவுடின்னு நினைப்பா உனக்கு?”
கல்லூரி முதல்வர் கேட்டதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அலட்சியமாய் நின்று கொண்டிருந்தான் இந்தர்..
இந்தரை சுட்டி காட்டி “மேடம்.. இவன் மட்டும் இல்ல மேடம்.. மதியும் இவனை லவ் பண்றாங்க.. அவன் லவ் சொன்னப்போ மதி அவன் லவ்வை அக்செப்ட் பண்ணி இருக்காங்க.. நான் அதை பத்தி கேள்வி கேட்டதுக்காக தான் இவன் என்னை அடிச்சான்.. மதியும் இவனும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க மேடம்..”
அப்படியே தட்டை தலைகீழாய் திருப்பி போட்டான் சேகர்.. அதைக் கேட்டு அது உண்மை இல்லை மதி தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்ல வாய் எடுத்த இந்தர் சற்று நிறுத்தி வார்த்தைகளை தனக்குள்ளேயே இழுத்துப் பிடித்து நிதானமாக யோசித்தான்.. அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தான்..
“ஆமாம் மேடம்.. நான் மதிக்கு ப்ரொபோஸ் பண்ணேன்.. அவளும் என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கிட்டா.. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்..” மதியை தீர்க்கமாய் பார்த்தபடி அவன் சொல்ல மதியோ அவன் அப்படி பொய் சொன்னதை நம்ப முடியாமல் அப்படியே அவன் பக்கம் திரும்பி பார்த்தபடி ஸ்தம்பித்து சிலை ஆகி போனாள்.. தன் காலுக்கு அடியில் பூமி நழுவி விழுவது போல் இருந்தது அவளுக்கு..
நீ பார்த்துட்டு போனாலும்..
பாக்காம போனாலும்..
பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்.. உன்னை..
பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்..
நீ பேசிட்டு போனாலும்..
பேசாம போனாலும்..
பேசிக்கிட்டே தான் இருப்பேன்..
நான்..
பேசிக்கிட்டே தான் இருப்பேன்..
நீ அமைதியா பார்த்தாலும்..
கோவமா பாத்தாலும்..
ரெண்டையுமே நான் ரசிப்பேன்..
அந்த
ரெண்டையுமே நான் ரசிப்பேன்..
நீ சிரிச்சுட்டு போனாலும்..
சிரிக்காமல் போனாலும்..
ரசிச்சுக்கிட்டே தான் இருப்பேன்..
நான்..
ரசிச்சுக்கிட்டே தான் இருப்பேன்..
உன்னை கனவில பார்த்தாலும்..
நேரில பார்த்தாலும்..
நினைச்சுக்கிட்டே தான் இருப்பேன்.. உன்னை..
நினைச்சுக்கிட்டே தான் இருப்பேன்..
தொடரும்..