லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 9

5
(4)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 9

 

“அப்போ எனக்கு உன்னை டிஸ்மிஸ் பண்றதை தவிர வேற ஆப்ஷனே இல்ல..” 

 

இந்த சொன்னதைக் கேட்டு ஒரு பெருமூச்சை விட்டு கொண்டு இடம் வளமாய் தலையாட்டிய படி  அந்த கல்லூரி முதல்வர் சொல்ல மதியோ “வேண்டாம் மேடம்.. அவன்தான் சொல்றான்ல.. இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்னு.. நீங்க முடிஞ்சா அவங்க அண்ணாவையே கூப்பிட்டு பேசுங்க.. எனக்கு தெரிஞ்சு அது தான் மேடம் சரியா வரும்..” என்றாள் இந்தரை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்த படி..

 

“ஓகே மேடம்.. எனக்கு கிளாஸ் இருக்கு.. ஏற்கனவே 10 15 மினிட்ஸ் லேட் ஆயிடுச்சு.. நான் போகணும்.. நான் கிளம்பவா..?” 

 

அவள் முதல்வரை அனுமதி கேட்க அவரும் “போமா.. எனக்கு உன்னை பத்தி நல்லாவே தெரியும்.. இந்த காலத்து பசங்களை பத்தியும் தெரியும்.. நான் உன்னை எதுவுமே தப்பா நினைக்கல.. ஆனா இனிமே சுத்தி இருக்கிறவங்களை கொஞ்சம் வாட்ச் பண்ணி பார்த்து நடந்துக்க.. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க..”

 

“ஓகே மேடம்.. தேங்க்யூ வெரி மச்..” , அங்கிருந்து வெளியேறினாள் மதியழகி..

 

இன்னொரு முறை இந்தருக்கு எச்சரிக்கை விடுத்து அவனுடைய வகுப்புக்கே அனுப்பி வைத்தார் கல்லூரி முதல்வர்..

 

அன்று மாலை கால் சென்டர் வேலைக்கு கிளம்பி வீட்டுக்கு வெளியே வந்த மதியை பின் தொடர்ந்தான் இந்தர்.. 

 

“மதி.. கொஞ்சம் நில்லு..” என்று நடந்து சென்று கொண்டிருந்தவளை பின்னிருந்து அவன் அழைக்க அவளோ அவன் பிடிவாதத்தை எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டே “நீ இன்னும் கூட என் பின்னாடி வரியா? ஏன் பிரின்ஸ்பல் மேடம் என்ன சொன்னாங்கன்னூ ஞாபகம் இல்லையா உனக்கு?” என்று கேட்க “ஏன் உனக்கு ஞாபகம் இல்லையா? அந்த காலேஜுக்குள்ள உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்னு தான் நான் பிரின்சிபல் கிட்ட சொன்னேன்.. இது காலேஜும் கிடையாது.. இங்க உன்னை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு எனக்கு எந்த ரூலும் கிடையாது.. எனக்கு என்ன தோணுதோ நான் பண்ணலாம்..”

 

அவன் அவளை தீர்க்கமாய் பார்த்து சொல்ல “ஐயோ இந்தர்.. புரிஞ்சுக்கோ ப்ளீஸ்.. எனக்கு உன் மேல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை.. வரவும் வராது.. நான் இன்னொருத்தரை விரும்பறேன்னு சொல்றேன் இல்ல? அது உண்மைதான்.. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ..”

 

“அப்படியா.. அப்படின்னா சரி.. நீ சொன்ன இல்ல..? அடுத்த வாரம் உன்னோட அந்த இமேஜினரி லவ்வரோட எங்கேயோ டேட்டிங் போறேன்னு.. எங்க போறீங்கன்னு அவரு கிட்ட கேட்டு சொல்லு.. நான் அங்க வந்து உன் லவ்வரை மீட் பண்ணிக்கிறேன்..”

 

“நீ எதுக்கு அவரை மீட் பண்ணனும்..?”

 

“ஏன்.. நான் அவரை மீட் பண்ணி பேசினா உன் லவ்வர் உன்னை விட்டுட்டு போயிடுவாரா? அப்ப அப்படி உன் மேல நம்பிக்கை இல்லாம போறவரு நிஜமாவே உன்னை லவ் பண்றாருன்னூ நீ நினைக்கிறியா?”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அவர் என்னை சந்தேகப்படவே மாட்டாரு.. அதுவும் உன்னை மாதிரி ஒரு சின்ன பையனோட வச்சு.. இப்ப என்ன..? உனக்கு அவரை மீட் பண்ணனும்.. அவ்வளவுதானே? சரி.. அடுத்த வாரம் நிச்சயமா என் லவ்வரை மீட் பண்ணலாம்.. ஆனா ஒரு கண்டிஷன்.. அது வரைக்கும் நீ என்னை தொந்தரவு பண்ண கூடாது.. ஒருவேளை என் லவ்வரை மீட் பண்ணி நான் நிஜமாகவே லவ் பண்றேன்னு உனக்கு புரிஞ்சிடுச்சுன்னா அதுக்கப்புறமும் நீ என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.. இதுக்கு ஓகேனா அடுத்த வாரம் நீ என் லவ்வரை மீட் பண்ணலாம்..”

 

அவள் சொன்னதைக் கேட்டவன் உடனடியாக யோசிக்காமல் அதற்கு ஒப்புக்கொண்டான்..

 

“ஓகே.. தென்.. லெட்ஸ்  மீட் அகெய்ன் நெக்ஸ்ட் வீக்..” சொல்லிவிட்டு அங்கிருந்து அவளை திரும்பியும் பாராமல் நடந்தான் அவன்..

 

இப்போது மதி இன்னும் குழப்பத்துக்கு ஆளானாள்.. தன்னுடைய காதலன் என்று அவன் முன்னால் யாரை கொண்டு போய் நிறுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நடுச்சாலையில் நின்றாள் அவள்..

 

சிறிது நேரம் குழம்பிக் கொண்டு நின்று கொண்டிருந்த மதி சட்டென பார்கவிக்கு தன் கைபேசி மூலம் அழைத்தாள்..

 

பார்கவியிடம் என்ன நடந்தது என்று விவரமாக சொன்னவள் இந்த பிரச்சனை தீர என்ன செய்வது என்று தெரியவில்லை என்று புலம்பி தள்ள அன்று மாலை அந்த கால் சென்டர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருமாறு அவளிடம் சொன்னாள் பார்கவி..

 

“எதுக்கு பார்கவி..? இன்னிக்கு ஒரு நாள் லீவு போட்டா கூட லாஸ் ஆஃப் பே ஆயிடும்..”

 

“சரி.. நான் சொல்றதை கேளு.. நீ நாளைக்கு வீட்டுக்கு வா.. நாளைக்கு சனிக்கிழமை லீவு தானே? நான் இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு நல்ல ஐடியா சொல்றேன்.. அப்புறம் நீ உன் வேலையை நிம்மதியா பார்க்கலாம்.. இல்லன்னா உன் மனசுல இந்த பிரச்சனை தான் எப்பவும் ஓடிக்கிட்டு இருக்கும்.. உன்னால ஒழுங்கா வேலை கூட பார்க்க முடியாது..  முதல்ல இந்த இந்தர் பையனை ஆஃப் பண்ணணும்.. அதுக்கான வழியை நாளைக்கு டிசைட் பண்ணுவோம்.. நீ வீட்டுக்கு வா.. நம்ம பேசலாம்..”

 

அவள் சொன்னதை கேட்டவள் அதுவும் சரிதான் என்று எண்ணி பார்கவியின் வீட்டிற்கு மறுநாள் மாலை வருவதாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்..

 

அன்று சனிக்கிழமை.. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழுவதுமாய் தன் தம்பியோடு மட்டுமே செலவிடுவான் ரணதீரன்.. எவ்வளவு கோடி கொடுக்கும் படப்பிடிப்பு வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு போவதில்லை அவன்..

 

அன்றும் அதே போல காலையில் சற்று தாமதமாகவே எழுந்தவன் தன் தம்பி எழுவதற்குள் அவனுக்கு சுட சுட மணக்க மணக்க ஃபில்டர் காஃபியை கலந்து எடுத்துக் கொண்டு போய் அவர்கள் அறைக்கு சென்று காபி கோப்பையை மேஜையில் வைத்துவிட்டு “டேய் இந்தரூஊஊ.. எந்திரிடா கண்ணூஊஊ.. இதோ பாரு.. விடிஞ்சு சூரியன் உச்சிக்கு வரப்போவுதுடா தம்பி.. இப்படி நேரங்காலம் இல்லாம பட்டினி கெட்ந்தா உடம்பு இன்னாத்திக்கு ஆகும்..? அம்மாம் தூக்கம் வந்திச்சின்னாலும் இந்த காபியை ரவ குடிச்சிட்டு அப்புறம் கவுந்து படுத்துக்கினு தூங்குடா.. எந்திரி டா ராசா.. வவுத்தை எம்ப்டியா போடாத..”

 

தீரன் அப்படி கொஞ்சி கெஞ்சி எழுப்பவும் மெதுவாக சோம்பல் முறித்துக் கொண்டு  கண் விழித்த இந்தர் “அண்ணா.. காபி போட்டு எடுத்துட்டு வந்துட்டீங்களாண்ணா.. ஆனு எனக்கு தூக்கம் தூக்கமா வருதே.. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கவா? ப்ளீஸ்ணே..”

 

“இன்னாது.. இன்னும் தம்மா நேரம் தூங்கணுமா..?சரி.. தூங்கிக்க.. ஆனா இந்த காப்பியை குட்ச்சிட்டு அப்புறம் கவுந்தட்ச்சு பட்த்துக்க..”

 

“ஐயோ.. அண்ணா ப்ளீஸ்.. காபி குடிச்சா தூக்கம் கலஞ்சிடும்.. நான் அப்புறமா குடிச்சுக்கிறேன்ணா..” 

 

அவன் மறுபடியும் போர்வைக்குள் புகுந்து கொள்ள போர்வையை இழுத்து விலக்கி தலையை இடவலமாய் ஆட்டி “த பாரு.. எம்மா நேரம் வேணாம் நீ தூங்கு.. ஆனா வவுத்தை காலியா போடக்கூடாது.. பாரே.. இப்ப எதுவுமே துன்னாம படுத்துக்கினே இருந்தினா அப்புறம் சீக்காயிருவ டா ராஜா.. எந்திரிச்சு இந்த காப்பியை மொதல்ல குடிச்சுக்கோடா தம்பி..”

 

“வேற வழி..” என்று மெதுவாக எழுந்தவன் அந்த காபியை மெல்ல அரை தூக்கு கண்ணோடு ஏனோதானோவென்று மெல்ல பருகி ஒரு மிடறு விழுங்கியதும் அது நாவின் சுவை மொட்டுக்களை தீண்டி அதை தாண்டி தொண்டை வழி வயிற்றுக்குள் சென்ற நொடி தான் அவன் வயிறு எவ்வளவு காலியாய் இருந்தது என அவனுக்கு எடுத்துக்காட்டியது.. நிஜமாகவே வயிறு ரொம்பவும் தான் பசித்தது அவனுக்கு.. 

 

“அண்ணா நெஜமாவே பசிக்குதுண்ணா..”

 

“அதான் நான் அப்பவே சொல்லிக்கின்னேன்ல.. சரி.. போ.. போய் பல்லை விலக்கிட்டு வா.. உனக்கு நாஸ்தா ரெடியா இருக்குது.. சீக்கிரம் வந்து துன்னு..”

 

“அண்ணா.. முதல்ல வந்து டிஃபன் சாப்பிட்டுட்டு அப்புறமா பல்லு வெலக்குறேனே ப்ளீஸ்..”

 

“அதெல்லாம் முடியாது.. உடம்பு கெட்டுப்போகும்.. நீ போய் பல்லு விலக்கிட்டு வா.. அண்ணன் மாதிரி சும்மா இஷ்டாங்கா இருக்கணும் டா.. பாரு எப்படி நோஞ்சாங் கணக்கா கீரன்னு..”

 

அதற்கு மேல் அவன் அண்ணனிடம் பேசி சமாளிக்க முடியாது என்று புரிந்தவன் மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து குளியல் அறைக்கு சென்றான்..

 

அதற்குள் ரணதீரன் கீழே வந்து ஒரு தட்டில் தான் செய்து வைத்திருந்த தோசைகளையும் அதற்கு தொட்டுக்கொள்ளும் பக்க உணவுகளாய் இரண்டு விதமான சட்னி.. சாம்பார்.. கூடவே மிளகாய் பொடி.. என விதவிதமாய் எடுத்து வைத்தான்..

 

அவன் அப்படித்தான்.. சனி ஞாயிறு இரண்டு நாளும் முழுக்க முழுக்க தானே சமைத்து தம்பிக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை அளிப்பதில் கவனமாய் இருப்பான்.. 

 

வார நாட்கள் முழுவதும் தம்பி எங்கே எங்கேயோ வெளியில் உண்கிறானே என்ற வருத்தம் அவனுக்கு மேலோங்கி நிற்கும்.. 

 

அதனால் அவன் உடல் நிலை கெட்டுப் போய்விடப் போகிறதே என்ற வருத்தத்தோடு இருந்தாலும் வார இறுதி நாட்களில் தானே தன் கையால் சமைத்து அவனுக்கு ஊட்டி விட்டு திருப்திப்பட்டு கொள்வான் ரணதீரன்..

 

தம்பியும் வார இறுதியில் அண்ணன் சமைத்து தரும் அவனுடைய கைப்பக்குவம் நிறைந்த உணவுக்காக வாரம் முழுதும் காத்துக் கொண்டுதான் இருப்பான்.. அப்படி அவனை பாசத்தில் கட்டி போட்டிருந்தான் ரணதீரன்..

 

ஒவ்வொன்றையும் அவனுக்கு பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான் தீரன்.. ஆனால் இப்படி அவன் கேட்பதையெல்லாம் செய்வதனால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று புரியாமல் செய்து கொண்டிருந்தான் அவன்..

 

தன் அறையிலிருந்து வெளி வந்த இந்தர் காலை உணவின் கம கம வாசம் மூக்கை துளைக்க அப்படியே அந்த வாசத்தை கண்ணை மூடி நுகர்ந்து கொண்டே “அண்ணா.. சான்சே இல்லண்ணா.. எப்படிண்ணா இப்படி சமைக்கிறீங்க? என் பசி இன்னும் அதிகமாயிடுச்சு..”

 

“இந்தரு.. மணி ஏற்கனவே 10 ஆயிடுச்சு.. நாஸ்தா எல்லாம் காலையில 7:00 மணிக்கு துன்னனும்டா.. இப்படி 10 மணிக்கு துன்னா உடம்பு இன்னாத்துக்கு ஆவுறது? இவ்ளோ நேரம் வவுத்தை கொலப்பட்டினி போட்டின்னா உன் உடம்பு பாழா பூடும் டா ராசா.. நேரா நேரத்துக்கு நீ நல்லா சாப்ட கொள்ள உன் உடம்பை அண்ணன் மாதிரியே சும்மா கன்னா வெச்சிக்கினு இருந்தா தானே அண்ணனுக்கு நிம்மதியா இருக்கும்டா தம்பி.. இல்லின்னா உன்னை ஒழுங்கா கண்டுக்காம நோஞ்சான் பயலாக்கிக்கினேன்னு அண்ணனுக்கு பேஜாரா பூடும்டா..”

 

தன் அன்ணன் புலம்பியதைக் கேட்டான் “ஐயோ அண்ணா.. இனிமே காலையில் 7:00 மணிக்கு எல்லாம் எழுந்துடறேன்னா.. நீங்க கவலைப்பட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க.. சரி வாங்க சாப்பிடலாம்..” என்று சொன்னவனை சாப்பாட்டு மேஜை முன்னால் அமர வைத்து தானே தோசையை விண்டு சாம்பாரில் தோய்த்து அவன் வாயில் ஊட்டி விட்டான் தீரன்..

 

இது ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் அவர்களுக்குள் நடக்கும் வழக்கமான அழகான அன்பான விஷயம் தான்.. ஆனால் ஒவ்வொரு முறை தீரன் அவனுக்கு உணவை ஊட்டும் பொழுதும் கலங்கித்தான் போவான் இந்தர்.. 

 

தந்தை இறந்ததிலிருந்து தனக்கு ஒரு தந்தையாகவே மாறி விட்டிருந்த அவனின் அண்ணன் தாயும் இறந்த பிறகு தான் தான் பெற்ற குழந்தையாகவே இந்தரை பாவிக்க தொடங்கி விட்டிருந்தான்.. 

 

ஒவ்வொரு முறையும் ரணதீரன் தன் அன்பில் இந்தரை திக்குமுக்காட வைக்கும் போது இந்தர் அந்த நேரங்களில் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு போவான் தன்னையும் மீறி..

 

இதில் தாய் தந்தை போல தான் சரியாக இந்தரை கவனிக்கவில்லையோ என்று அவ்வப்போது தனக்கு குற்ற உணர்ச்சியாக இருப்பதாக வேறு சொல்லுவான் ரணதீரன்..

 

அதைக் கேட்ட இந்தருக்கோ ரொம்பவும் வேதனையாக இருக்கும்.. எத்தனையோ முறை தன் அண்ணனிடம் சொல்லி இருக்கிறான்..

 

“அண்ணா ஒருவேளை நீ எனக்கு முன்னாடி பொறக்காமயே போயிருந்தா நான் ஒத்த புள்ளயா அம்மா அப்பாக்கு பொறந்து இருந்தேன்னா இத்தனை நேரம் எங்கேயோ ஒரு இடத்துல பிச்சை எடுத்துட்டு தான் இருந்திருப்பேன்ணா.. ஆனா அம்மா அப்பா இல்லாத குறை தெரியாம நீ என்னை எவ்வளவு நல்லா பார்த்துக்கறேண்ணா.. உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம்.. நீ என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கறே.. அம்மா அப்பா இருந்து இருந்தா கூட என்னை இவ்வளவு நல்லா பாத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டாங்க.. நான் எது கேட்டாலும் எனக்கு உடனே வாங்கி தர்ற.. உனக்குன்னு தனி வண்டி கார் எதுவுமே இல்லை.. ஆனா எனக்கு வண்டி வாங்கி கொடுத்து இருக்கே.. எனக்கு எவ்ளோ நல்ல டிரஸ் வாங்கி கொடுக்கிற.. தினமும் பணக்கார வீட்டு பிள்ளைங்க மாதிரி செலவுக்கு கை நிறைய பணம் கொடுத்து அனுப்புற.. இதைவிட எனக்கு வேற என்னண்ணா வேணும்..? அம்மா அப்பா இருந்திருந்தா கூட எனக்கு இவ்வளவு செஞ்சிருக்க மாட்டாங்க..  என்னை பொறுத்த வரைக்கும் நீ எனக்கு அம்மா அப்பாக்கும் மேல ணா..” என்று குரல் தழுதழுக்க சொல்லுவான் இந்தர்..

 

இப்போது அவனுக்கு தோசை ஊட்டிக் கொண்டிருந்த ரணதீரனுக்கு தானும் தோசையை எடுத்து ஊட்டினான் இந்தர்.. வாராவாரம் அந்த வீட்டில் நடக்கும் பாசம் காட்சி தான் இது.. ஆனால் இருவருக்கும் இப்படி அன்பை காட்டுவதில் சலிப்பே ஏற்படுவதில்லை..

 

அடுத்து மதிய உணவை அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து சமையலறையை ஒரு ஒரு வழியாக்கி நளபாகம் முடித்து மதியமும் ஒன்றாக உணவு உண்பார்கள்..

 

உணவு உண்ணும் நேரத்தில் அந்த வாரம் முழுதும் இந்தர் கல்லூரி கதைகளை பற்றி கேட்டுக் கொண்டிருப்பான் ரணதீரன்.. அதேபோல ரணதீரனின் படபிடிப்பில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி சுவாரசியமாக கேட்டு தெரிந்து கொள்வான் இந்தர்..

 

ஆனால் ஒரு நாளும் தன் அண்ணனிடம் தான் கல்லூரிக்கு சரியாய் செல்லாது பெண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை பற்றி சொன்னதே இல்லை இந்தர்..

 

மதியின் வகுப்பை தவிர மற்ற வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்ல மாட்டானே தவிர எப்படியோ படித்து எல்லா பாடங்களிலும் தேர்வாகி விடுவான் இந்தர்.. காப்பியடிப்பது.. பிட் அடிப்பது என்று இப்படி எந்த தப்பான செயலிலும் ஈடுபட மாட்டான் அவன்.. ஆனாலும் எல்லா பாடங்களிலும் தேறி விடுவான்.. 

 

இதனால் தான் அவன் கல்லூரிக்கு பாதி நேரம் போகாமல் இருப்பது இதுவரை அவன் அண்ணனுக்கு தெரியாமல் இருந்தது.. அப்படி போகாமல் இருந்தால் அவன் எப்படி தேர்வுகளில் இப்படி மதிப்பெண்கள் பெற முடியும் என்று எண்ணி இருந்தான் தீரன்..

 

மதிய உணவிற்கு பிறகு இருவரும் வண்டி ஏறி லாங் டிரைவ் போய்விடுவார்கள்.. 

 

வெளியே போய் ரோட்டோர கடையில் மாங்காய் துண்டு.. ஐஸ்கிரீம்.. மிளகாய் பஜ்ஜி.. என்று அவனுக்கு பிடித்தது எல்லாம் வாங்கி இருவரும் கடற்கரையில் போய் அமர்ந்து சிறிது நேரம் அலைகளோடு அளவளாவி விட்டு தீரன் நடித்த ஏதாவது ஒரு திரைப்படத்திற்கு போய் பார்த்துவிட்டு தான் வருவார்கள்… அதில் தீரன் செய்கின்ற சாகசங்களை பற்றி அவ்வப்போது இந்தர்  பாராட்டு மழை பொழிய அதில் நனைந்து ஆனந்தமாய் இருப்பான் தீரன்.. 

 

இரவு இருவரும் நேரம் கழித்து வீட்டுக்கு வருபவர்கள் அம்மா பிள்ளை போல  கட்டி அணைத்துக் கொண்டு உறங்கி விடுவார்கள்.. இது சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இன்று வரை இருவரும் பின்பற்றி வரும் நடைமுறை.. எதற்காகவும் இந்த நடைமுறையில் எந்த மாறுதலும் இதுவரை இருந்திருக்கவில்லை..

 

அந்த வாரமும் அப்படியே இருவரும் சனிக்கிழமை மாலை கடற்கரைக்கு போயிருந்த வேளையில் அங்கே அவர்களை பின்தொடர்ந்து தன் தோழியுடன் வந்து சேர்ந்தாள் மலரழகி..

 

அதே நேரத்தில் மதியழகி தன் தோழி பார்கவி வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்..

 

இரண்டு பெண்களும் இரண்டு இடங்களில் அவரவர் பிரச்சினைகளை பார்த்துக் கொண்டிருக்க வீட்டில் தனியாக இருந்த அவர்களின் தந்தை தமிழ்வாணனை சந்திக்க அங்கு வந்திருந்தான் சேகர்..

 

நம்மை போல நெஞ்சம் கொண்ட..

அண்ணன் தம்பி யாரும் இல்லை..

தன்னைப் போல என்னை எண்ணும்..

நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை..

 

தம்பி உந்தன் உள்ளம் தானே..

அண்ணன் என்றும் வாழும் எல்லை..

ஒன்றாய் காணும் வானம் என்றும்..

ரெண்டாய் மாற நியாயம் இல்லை..

 

கண்ணோடு தான் உன்

வண்ணம்..

நெஞ்சோடு தான் உன் எண்ணம்..

முன்னேறு நீ மென்மேலும்..

என் ஆசைகள் கை கூடும்..

 

இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க..

 

 

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!