நாயகனோ அனைத்திலும் முதன்மையானதைத் தேடும் ரகம். சிறுவயதில் விளையாடிய பொம்மைத் துப்பாக்கி முதல் தற்போது அவனுக்கு வரப் போகும் மனைவி வரை அனைத்திலும் முதன்மையாக இருக்க வேண்டுமென்பதில் அதீத கவனம் செலுத்துபவன். சிறு குறை கண்டாலும் அதைத் தன்னில் இருந்து ஒதுக்கித் தள்ளி விடும் வல்லினக் குணத்தின் சொந்தக்காரன்.
நாயகியோ நம் நாயகனின் குணத்திற்கு அப்படியே எதிர். பெண்ணவளின் தேகம் மட்டுமல்ல உள்ளே உள்ள உள்ளம் கூட மென்மைதான்.
வெளுத்ததெல்லாம் பால் என நம்பி ஒருவனைக் காதல் செய்யும் நம் நாயகியும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு குறை கூறித் தள்ளும் நாயகனும் விருப்பமே இன்றி திருமண பந்தத்தில் இணைய நேர்ந்தால்…?
இன்னொருவனை காதலித்த பெண்ணை தன் மனைவியாக ஏற்பானா தமிழ் எழிலன்…?
காதலால் வஞ்சிக்கப்பட்ட நாயகியின் மனம் வல்லினக் கணவன் மீது சாயுமா..?
வல்லினம் தமிழில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் மிகும் போது விளைவுகள் ஏற்படுமல்லவா..?
இவர்களுடைய வாழ்க்கையில் நிகழப் போவதை “வல்லினம் மிகும் காந்தர்வனே..” கதை மூலம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.