யாரைக் கூப்பிட சித்தி போறிங்க என்ற உதயச்சந்திரனிடம் வந்துட்டியா உதய் ரோனி இன்னும் கீழே வரவில்லை. அவளை கூப்பிடத் தான் போகிறேன் என்றார் சுசீலா.
நீங்க இருங்க சித்தி நானே போயி கூட்டிட்டு வரேன் என்றவன் தன்னறைக்கு சென்றான்.
அறையில் அவள் இல்லை. பால்கணியிலே அமர்ந்திருந்தாள். அவளருகில் வந்தவன் அவளது தலையைத் தொட போனான். தொடாமல் கையை எடுத்துக் கொண்டவன் வெரோனிகா என்றிட அவள் அசையவே இல்லை.
அவளருகில் அமர்ந்தவன் சரி ஓகே உன்னை நான் திட்டுனது தப்பு தான் எழுந்திரு என்றான். அவள் அசையாமல் இருக்க அவளது முகத்தை நிமிர்த்தினான்.
இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே அழுதுகிட்டு இருப்ப என்னைப் பாரு என்றவனை அவள் முறைத்திட உனக்கு என்ன பிரச்சனை என்றான் உதயச்சந்திரன்.
எல்லோர் முன்னாலையும் என்னை அசிங்கப் படுத்தி வெளியில் விரட்டி விட்டுட்டிங்க நளைக்கு நான் எப்படி ஸ்கூலுக்குப் போவேன்.
எல்லோரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க எனக்கு அசிங்கமா இருக்கும் என்றவள் அழுதிட அப்போ எல்லோர் முன்னாலையும் நான் உன்னை திட்டினது தான் கோபமா என்றான். அதுவும் தான் என்றவள் முகத்தை திருப்பிக் கொள்ள என்னைப் பாரு வெரோனிகா என்றவனது பக்கம் திரும்பாமல் அவள் இருந்திட சொல்றேன்ல என்றவன் அவளது முகத்தை கைகளில் ஏந்தி தன் புறம் திருப்பினான்.
இனிமேல் உன்னை திட்டுறதா இருந்தாலும் வீட்டுக்குள்ள வச்சு திட்டுறேன் போதுமா என்றான். அவள் மீண்டும் மௌனமாக இருந்திட இன்னும் என்னடி என்றான்.
நான் ஸ்கூல் போக மாட்டேன் என்றவளிடம் ஏன் இப்படி குழந்தை மாதிரி நடந்துக்கிற வெரோனிகா என்றவன் என்னைப் பாரு நான் யாரு என்றான்.
சந்துரு மாமா என்றவளைப் பார்த்து சிரித்தவன் அது வீட்டில். ஸ்கூலில் என்றவனிடம் கிளாஸ் டீச்சர் என்றதும் அப்போ சொல்லு நான் உன்னை திட்டினது தப்பா என்றான்.
அவள் யோசிக்க ஆரம்பித்திட அப்பாடா இந்த லுசு யோசிக்குது அப்படியே ஏதாச்சும் சொல்லி சமாதானம் பண்ணிருடா உதய் என்று நினைத்தவன் நீ ஏன் கன்பியூஸ் பண்ணிக்கிற வெரோனிகா.
ஸ்கூலில் நீ என்னை டீச்சரா மட்டும் பாரு உன் சந்துரு மாமாவா பார்க்க வேண்டாம் என்றான். அவளும் சாரி மாமா என்றிட குட்கேர்ள் என்று அவளது கன்னம் தட்டியவன் பாரு அழுது அழுது மூக்கு எல்லாம் சிவந்து போச்சு என்றான்.
போ போயி முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம் என்றவனிடம் இன்னைக்கு எனக்கு நீங்க டியூசன் சொல்லிக் கொடுக்கவே இல்லை என்றாள்.
மேடம் தான் உங்க அம்மா வீட்டுக்கு போறிங்களே உங்களுக்கு எப்படி நான் டியூசன் எடுக்கிறது என்றான். மாமா என்று சிணுங்கியவளிடம் சரி வா பசிக்குது என்றான்.
எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் வெளியே கூட்டிட்டு போங்க என்றாள் வெரோனிகா. ஏய் என்ன விளையாடுறியா அழுது, அழுது முகம் எல்லாம் எப்படி வீங்கிப் போயிருக்கு பாரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிச்சுக்கும் ஒழுங்கா வா சாப்பிடலாம் என்றவன் அதட்டிட பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் வெரோனிகா.
ஐஸ்கிரீம் நாளைக்கு வாங்கித் தரேன் என்றவனைப் பார்த்து சிரித்தவள் அவனுடன் உணவு மேஜைக்கு சென்றாள்.
என்னடி தலைவலி எல்லாம் ஓகேவா என்ற சுசீலாவிடம் தலைவலியா என்றாள் வெரோனிகா. ஆமாம் உன் சந்துரு மாமா தான் சொன்னான் உனக்கு தலைவலினு என்றார் மலர்கொடி.
சாப்பிடுற நேரத்தில் அக்காவும், தங்கச்சியும் ஏன் என் பேத்திகிட்ட கேள்வியா கேட்டு இம்சை பண்ணுறிங்க அவளை சாப்பிட விடுங்க என்றார் கல்யாணிதேவி.
ஆச்சி ரொம்ப நன்றி என்று மனதிற்குள் நினைத்தவள் கடகடவென சாப்பிட்டு விட்டு எழுந்து தன்னறைக்கு சென்று விட்டாள்.
என்ன பண்ணுற என்றவனிடம் தூங்கப் போறேன் என்றாள். படிக்க வேண்டாமா என்றவன் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். அவளும் அவன் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஏதாச்சும் டவுட் இருக்கா என்றவனிடம் இல்லை மாமா என்றவள் சென்று படுத்துக் கொள்ள அவனும் சென்று படுத்து உறங்க ஆரம்பித்தான்.
என்ன ஏன் இப்படி உட்கார்ந்திருக்க ஸ்கூலுக்கு போகனும் அர்ச்சனா அப்பறம் கிளம்பிருவாள் என்ற உதயச்சந்திரனிடம் எல்லோரும் என்னை கேலி பண்ணுவாங்க மாமா என்றாள்.
இதோ பாரு வெரோனிகா நான் உன்கிட்ட சொல்லுறேன்ல நீ ஒன்றும் குழந்தை இல்லை. யாரு கேலி பண்ணினாலும் நீ அதை கண்டுக்காதே நான் எல்லாம் படிக்கிற காலத்தில் தினமும் வாத்தியார் துரத்தினதால கிரவுண்ட்ல சுத்தினவன் தான்.
இதெல்லாம் அவமானமா வெரோனிகா ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள் இல்லையா என்றான் உதயச்சந்திரன்.
சரி சரி கிளம்பு நேரம் ஆச்சு என்றவன் அவளை அர்ச்சனாவுடன் அனுப்பி வைத்தான். பிறகு தானும் கிளம்பி பள்ளிக்கு சென்றான்.
அன்று ஊர்மிளா பள்ளிக்கு வரவில்லை. என்ன தான் உதயச்சந்திரன் அவளை சமாதானம் செய்தாலும் ஏனோ அவளுக்கு வகுப்பறைக்கு செல்லவே ஒரு மாதிரியாக இருந்தது.
நேற்று அவள் வெளியே சென்ற பொழுது எல்லா மாணவிகளும் அவளைப் பார்த்து சிரித்த காட்சி அவள் மனதில் தோன்றிட ஊர்மிளா வேறு இல்லை அதனால் சோகமாக கிரவுண்டில் கல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
ஏய் ரோனி என்ன இங்கே உட்கார்ந்திருக்க என்று வந்நனர் கிஷோர், விஷால், அர்ஜுன் மூவரும். அவர்களை கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தவளிடம் உன் கிட்ட தானே கேட்கிறோம் என்றான் விஷால்.
எனக்கு கிளாஸ்க்கு வரவே பிடிக்கவில்லை என்றவளிடம் ஏன் என்னாச்சு என்றான் விஷால். இல்லை நேற்று சந்துரு பச் இல்லை உதயச்சந்திரன் சார் கிளாஸை விட்டு வெளியே போகச் சொன்னாருல அதனால எல்லோரும் என்னை கிண்டல் பண்ண மாட்டாங்களா என்றவளைப் பார்த்து சிரித்த கிஷோர் லூசு ரோனி இதுக்கா இவ்வளவு கவலைப் படுற என்றான்.
பார்த்திங்களா சிரிக்கிறிங்க என்றவள் சோகமாகிட டேய் வாயை மூடுடா என்ற அர்ஜுன் என்ன ரோனி நீ சின்னப் பிள்ளையா. ப்ளஸ்டூ படிக்கிற டீச்சர் திட்டுனதுக்கெல்லாம் பீல் பண்ணிட்டு அப்படி மத்தவங்க கிண்டல் பண்ணுவாங்கனு நினைச்சா நம்ம கிஷோரும், விஷாலும் என்னைக்கோ ஸ்கூலை விட்டு ஓடிப் போயிருக்கனும் .
வேதாவில் தொடங்கி, கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கம்னு எல்லோரும் அவனுங்களை கிளாஸை விட்டு விரட்டாத நாளே இல்லை. ஏன் நானே எத்தனை தடவை வெளியே போயிருக்கேன் தெரியுமா என்றான் அர்ஜுன்.
நம்ம வீர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் ரோனி என்ற விஷாலைப் பார்த்து சிரித்தாள் வெரோனிகா.
சரி கிளாஸ்க்கு போகலாமா என்ற கிஷோரிடம் சரி என்றாள் வெரோனிகா. கிஷோர், அர்ஜுன்,விஷால் இனிமேல் நாம ப்ரண்ட்ஸ் என்றவளிடம் இனிமேல் என்ன நீ ஸ்கூலுக்கு வந்த பர்ஸ்ட் டேயில் இருந்தே நாம ப்ரண்ட்ஸ் தான் என்றான் விஷால்.
ஊர்மிளா எங்கே என்ற கிஷோரிடம் அவளுக்கு காய்ச்சல் என்ற வெரோனிகா தன் நண்பர்களுடன் வகுப்பறைக்கு சென்றாள்.
அன்றைய நாள் பள்ளி நல்லபடியாகவே சென்றது. அன்றிலிருந்து அவர்கள் நால்வரும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர்.
தினம் தினம் வீட்டில் உதயச்சந்திரன் அவளிடம் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது கண்டிப்புடன் இருந்தாலும் அவள் மீது அவன் காட்டும் அக்கரை அவளுக்கு அவனை மெல்ல மெல்ல பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் அவன் மீது அவளுக்கு வந்த விருப்பம் என்னவென்று அவள் ஆராய்ச்சி செய்ய வில்லை.
சந்துரு மாமா , சந்துரு மாமா என்று அவளது குரல் அந்த அறை எங்கும் நிறைந்தே இருந்தது.
என்ன வெரோனிகா எக்ஸாம்க்கு படிச்சுட்டியா என்ற உதயச்சந்திரனிடம் படிச்சுட்டேன் மாமா ஆனாலும் கொஞ்சம் பயமா இருக்கு என்றாள்.
என்ன பயம் என்றவனிடம் கிளாஸ் டெஸ்ட்லையே வேதா சாரும், மாணிக்கம் சாரும் பயங்கரமா முறைச்சாங்க இப்போ மிட் டெர்ம் டெஸ்ட் அதான் கொஞ்சம் பயமா இருக்கு என்றாள் வெரோனிகா.
எதற்கு பயப்படுற நான் சொல்லிக் கொடுத்தது உனக்கு ஞாபகம் இருக்கா என்றவனிடம் நல்லாவே ஞாபகம் இருக்கு மாமா என்றாள் வெரோனிகா. அப்பறம் என்ன பயம் நீ எழுது என்றவன் ஆல்திபெஸ்ட் என்றிட தாங்க் யூ மாமா என்றாள்.
என்ன ரோனி எக்ஸாம் டென்சனா என்ற விஷாலிடம் ஆமாம் என்றவள் கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருக்க ஏன்டி இப்படி இருக்க என்றாள் ஊர்மிளா.
கிளாஸ் டெஸ்ட்ல மார்க் கம்மியானதுக்கே வேதா சார் பயங்கரமா முறைச்சாரே அது தான் என்றவளைப் பார்த்து சிரித்த கிஷோர். அந்த ஆளு ஒரு டம்மி பீஸு அதற்கெல்லாம் பயந்து சாவாத ரோனி என்றான்.
ஆமாம் ரோனி ஏன் கவலைப் படுற என்ற நிகிலா கிஷோர் சொன்னது போல தான் அவரு டம்மி பட்டாஸ் வெடிக்கிற மாதிரி வெறைப்பா இருப்பாரு ஆனால் புஷ்வானம் போல புஸ் என்றிட வெரோனிகா சிரித்து விட்டாள்.
என்ன சிரிப்பு என்று வகுப்பறைக்குள் நுழைந்த வினித்ரா எல்லோரையும் எக்ஸாமிற்கு ஒழுங்காக அமர வைத்து பேப்பர் கொடுக்க ஆரம்பித்தாள்.
அனைவரும் அமர்ந்து எக்ஸாம் எழுதும் பொழுது வெரோனிகாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த வகுப்புத் தோழி சிவரஞ்சனி சும்மா இருக்காமல் ரோனி உங்க அத்தை என்றான். எதே அத்தையா என்றவளிடம் உதயச்சந்திரன் சார் உனக்கு மாமா தானே அப்போ வினித்ரா மிஸ் உனக்கு அத்தை தான் என்றாள்.
வெரோனிகா கோபமாக அவளைப் பார்த்திட என்ன உனக்கு தெரியாதா வினித்ரா மேடம் வீடு எங்க பக்கத்து வீடு தான். உங்க மாமா அவங்களை இரண்டு முறை வீட்டுக்கு அவரோட பைக்ல கூட்டிட்டு வந்திருக்கிறார் என்றாள்.
வெரோனிகா என்ன அங்கே பேச்சு என்ற வினித்ராவிடம் ஒன்றும் இல்லை மேடம் என்றவள் பரீட்சை எழுத ஆரம்பித்தாள்.
வினித்ராவை ஏனோ வெரோனிகா முறைத்தபடியே பரீட்சை எழுதினாள். வினித்ரா சென்ற பிறகு எக்ஸாம் சூர்பர்வைசிங் செய்ய உதயச்சந்திரன் வந்தான். அவனிடம் வினித்ரா பேசிக் கொண்டிருக்க நான் சொன்னேன்ல நீ நம்பவே இல்லை இப்போ பாரு எப்படி சிரிச்சு சிரிச்சு பேசுறாங்கனு என்றாள் சிவரஞ்சனி.
வெரோனிகா , சிவரஞ்சனி என்ன பேச்சு என்றான் உதயச்சந்திரன். ஒன்றும் இல்லை சார் என்னோட பென்ல இங்க் தீர்ந்திடுச்சு அதான் அவள் கிட்ட எக்ஸ்ட்ரா பென் கேட்டேன் என்றாள் சிவரஞ்சனி.
சரி ஓகே எக்ஸாம் எழுதுங்க என்றவன் மாணவர்களை கவனிக்க வெரோனிகா அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
என்னாச்சு இவளுக்கு என்று நினைத்தவன் வெரோனிகா என்றிட அவள் எஸ் சார் என்றாள் . என்ன பண்ணிட்டு இருக்க எக்ஸாம் எழுதாமல் என்றிட ஒன்றும் இல்லை என்று அமைதியாக எழுத ஆரம்பித்தாள் வெரோனிகா.
என்னடி ரஞ்சனி அந்த ரோனி ஏன் சோகமா இருக்கிறாள் நீ என்ன பண்ணின என்ற கார்த்திகாவிடம் ஒன்றும் இல்லைடி அவளை கவனிச்ச வரை மேடம்க்கு உதய் சார் மேல எதுவும் பீலிங்க்ஸ் இருக்கும் போல அதான் அவள் கிட்ட வினித்ரா மேடமும், உதய் சாரும் லவ் பண்ணுறாங்கனு ஒரு பிட்டை போட்டேன் பாவம் புள்ளை அப்படியே ஷாக் ஆகிட்டாள்.
பிசிக்ஸ் எக்ஸாம் மூர்த்திகிட்ட செத்தாள். நாம நாலு டியூசன் போயி வாங்க முடியாத மார்க் இவள் எந்த டியூசனும் போகாமல் லாஸ்ட் டெஸ்ட்ல வாங்கிட்டாள். அதான் எனக்கு செம்ம கடுப்பு இன்னைக்கு தோதா வினித்ரா மேடம் கிளாஸ்க்கு வரவும் இவகிட்ட இப்படி ஒரு டிராமா போட்டு அவளை குழப்பி விட்டுட்டேன் என்றாள் சிவரஞ்சனி.
சூப்பர்டி என்ற கார்த்திகாவிடம் சிவரஞ்சனியா கொக்கா என்றவள் சரி வாடி கேண்டீன் போகலாம் என்று கிளம்பினாள்.
வெரோனிகா என்னாச்சு என்ற நிகிலாவிடம் ஒன்றும் இல்லை என்றாள். என்னாச்சு ஊர்மி இவளுக்கு என்ற நிகிலாவிடம் அவள் இப்படித் தான்டி எதையாச்சும் திங்க் பண்ண ஆரம்பித்தால் ரொம்ப கவலையா இருப்பாள் என்றாள்.
அன்று மாலை வீட்டிற்கு செல்வதற்காக பிரகாஷிற்காக காத்திருந்தாள். அவன் அன்று கொஞ்சம் லேட்டாக கிளம்பி வந்தான்.
என்ன அண்ணி ரொம்ப நேரம் வெயிட் பண்ணுறிங்களா என்றவனிடம் பரவயில்லை மாமா என்றவள் பைக்கில் அமர்ந்திட அவன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
தன் அறைக்கு சென்றவள் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். என்ன வெரோனிகா எக்ஸாம் எப்படி எழுதின என்றான் உதயச்சந்திரன்.
அவள் பதில் பேசாமல் யோசித்துக் கொண்டிருக்க வெரோனிகா உன்கிட்ட தான் கேட்கிறேன் என்றவனிடம் சந்துரு மாமா உங்களுக்கு என்னைப் பிடிக்குமா என்றாள் வெரோனிகா.
என்ன என்றவனிடம் சொல்லுங்க மாமா உங்களுக்கு என்னை பிடிக்குமா என்றவளிடம் பிடிக்கும் ஏன் கேட்கிற என்றான் உதயச்சந்திரன்.
என்னைப் பிடிக்குமா, இல்லை வினித்ரா மேடமை பிடிக்குமா என்றவளை கேள்வியாக பார்த்தவன் என்ன கேட்கிற என்றான்.
அவள் பயந்து கொண்டே சிவரஞ்சனி சொன்னதைப் பற்றி கேட்டிட அவனுக்கு வந்த கோபத்திற்கு அவளை..
….தொடரும்…
Very good https://shorturl.at/2breu