என்ன சொல்லுறிங்க மேடம் நீங்க என்ற உதயச்சந்திரனிடம் நிஜமாகத் தான் சார் சொல்கிறேன் என்றாள் வினித்ரா. அவன் அவளிடம் என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு லவ் பண்ணுறேன்னு சொல்லுறிங்க என்றான் உதயச்சந்திரன்.
நான் உங்க ஸ்கூலில் இரண்டு வருசமா வேலை பார்க்கிறேன் சார். இந்த இரண்டு வருசத்தில் உங்களை கவனிச்ச வரைக்கும் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கிற குணம் பிடிச்சுருக்கு. நீங்க கரஸ்பாண்டன்ட்டோட பையன் ஆனால் அந்த பந்தா கொஞ்சமும் உங்க நடவடிக்கைகளில் இருக்காது. நீங்க யாருகிட்ட பேசினாலும் உங்க பார்வை எதிராளியோட கண்களைத் தான் பார்த்து பேசும் என்றவளிடம் நான் இதைப் பற்றி கேட்கவில்லை மேடம் என்னோட பர்சனல் லைஃப் பற்றி என்ன தெரியும்னு கேட்டேன் என்றான் உதயச்சந்திரன்.
உங்களுக்கு ஒரு முறை கல்யாணம் ஏற்பாடு பண்ணி ஸ்டாப் ஆகிருச்சுனு கேள்விப் பட்டேன் சார் மற்றபடி உங்க பர்சனல் லைஃப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் நாம காதலிக்க ஆரம்பிச்சுட்டால் எல்லாமே தெரிஞ்சுக்குவேன் சார் என்ற வினித்ராவிடம் ஐயம் ஸாரி மேடம் என்றான் உதயச்சந்திரன்.
ஸார் என்றவளிடம் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு என்றான் உதயச்சந்திரன். ஸார் என்றவள் அதிர்ச்சியாக நிஜமாகத் தான் மேடம் என் மனைவிகிட்ட தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னே போன்ல பேசிட்டு இருந்தேன் என்றான் உதயச்சந்திரன்.
ஸார் விளையாடாதிங்க என்ற வினித்ராவிடம் இதில் விளையாட என்ன இருக்கு மேடம் என்றவன் ஐயம் ஸாரி உங்க மனசுல என் மேல ஆசை உருவாக என்னோட நடவடிக்கை எதுவும் காரணமா இருக்கும் பட்சத்தில் என்னை மன்னிச்சுருங்க என்றான் உதயச்சந்திரன்.
உங்க மனைவி பெயர் என்னனு தெரிஞ்சுக்கலாமா என்ற வினித்ராவிடம் இன்னும் இரண்டு மாதத்தில் என் மனைவியோட பிறந்தநாள். நீங்க நேரிலே வந்து அவளை சந்திக்கலாம். அதுவரை அவளைப் பற்றி என்னால எதுவும் சொல்ல முடியாது. அப்பறம் திரும்பவும் சொல்கிறேன் என்னை மன்னிச்சுருங்க என்ற உதயச்சந்திரன் கிளம்பிட வினித்ராவிற்கு மனம் எல்லாம் பாரமாக இருந்தது.
என்ன இவன் இப்படி சொல்லிட்டு போகிறான். கல்யாணம் முடிஞ்சுருச்சுனு சொல்லுறான். ஆனால் வொய்ப் பெயரைக் கூட சொல்ல மாட்டேங்கிறான் என்று யோசித்தபடியே வீட்டிற்கு சென்றாள் வினித்ரா.
கனவுல என் தலையில் இடி விழுந்த மாதிரியே இப்போ இவன் கல்யாணம் முடிஞ்சுருச்சுனு இடியை இறக்கிட்டு போறானே என்று வருந்தியபடி வீட்டிற்குள் நுழைந்தாள் வினித்ரா.
வா மச்சி ஸ்வீட் எங்கே என்றாள் பவித்ரா. என்னடி கேட்கிற என்ன ஸ்வீட் என்றாள் வினித்ரா. என்னடி உன் ஆளுகிட்ட லவ் ப்ரப்போஸ் பண்ண போறேன்னு சொன்னியே அதான் ஸ்வீட் கேட்டேன்.
என்ன சொன்னாரு எப்போ கல்யாணம் என்ற பவித்ராவிடம் எப்போ கல்யாணமா என்ன பேசுற பவி என்றாள் வினித்ரா.
என்னடி தப்பா கேட்டுட்டேனா என்ன உன்னை ஒருத்தன் பிடிக்கலை, கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னால் அவன் கண்ணு தெரியாதவனா தான் இருப்பான் என்று பவித்ரா பேசிக் கொண்டே செல்ல கடுப்பான வினித்ரா ஸ்டாப் இட் பவி என்று கத்தினாள்.
என்னாச்சு வினி என்ற பவித்ராவிடம் அவன் என்னை பிடிக்கவில்லைனு சொல்லிட்டான். அது மட்டும் இல்லை அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சுருச்சாம் என்ற வினித்ரா உதயச்சந்திரனிடம் பேசிய நிகழ்வினைக் கூறினாள்.
அனைத்தையும் கேட்டு முடித்த பவித்ரா அவன் பொய் சொல்கிறான்னு தோன்றுகிறது என்றாள். என்னடி சொல்லுற என்ற வினித்ராவிடம் ஆமாம் அவன் வொய்ப் பெயர் கூட சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டான். இரண்டு மாதம் கழிச்சு அவன் பொண்டாட்டிக்கு பிறந்தநாள் வருதாம். அதற்கு உன்னை கூப்பிடுறானாம் இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. அவன் உன்னை அவாய்ட் பண்ணுறதுக்காக கல்யாணம் ஆகிருச்சுனு பொய் சொல்லிருப்பான்.
நீ ஒரு லூசு அதை உண்மைன்னு நம்பி இப்போ தான் கவலைப் பட்டுட்டு இருக்க என்றாள் பவித்ரா. அவன் பொய் சொல்லி இருந்தால் கூட அவன் மனசில் எனக்கு இடம் இல்லாததால தானே என்னை அவாய்ட் பண்ண இப்படி ஒரு பொய் சொல்லி இருக்கனும் என்றாள் வினித்ரா.
அது சரி தான் வினி ஆனால் அவனுக்கு பிடிக்கவில்லைனு சொன்னால் அவனை விட்டுற முடியுமா. எப்பவுமே ஒரு பொண்ணு தான் ஒரு பையனை ரிஜக்ட் பண்ணனும். பையன் ஒரு பெண்ணை ரிஜக்ட் பண்ணிட அனுமதிக்க கூடாது. அதனால அவனுக்கு அடிக்கடி உன்னோட காதலை புரிய வைக்க முயற்சி பண்ணு.
அவன் உன்னை விரும்ப ஆரம்பிச்சதும் நீ அவனை ரிஜக்ட் பண்ணு அப்போ தான் இவனை மாதிரி ஆளுக்கெல்லாம் புத்தி வரும். அவன் பொண்டாட்டி பெயரை சொல்ல மாட்டானாம். நேர்ல பார்க்கிறதா இருந்தாலும் இரண்டு மாதம் கழிச்சு தான் காட்டுவானாம். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. அவனுக்கு கல்யாணம் எல்லாம் ஆகிருக்காது. ஒரு பொண்ணு தானா போயி ப்ரப்போஸ் பண்ணினால் இந்த பசங்க இப்படித் தான் உச்சானிக்கொம்புல ஏறி உட்காந்துப்பானுங்க என்றாள் பவித்ரா.
நோ பவி உதய் சார் அப்படி இல்லை. அவர் என்னை ரிஜக்ட் பண்ணும் போது ஆட்டிட்யூட் காட்டலை ரொம்ப தன்மையா தான் சொன்னாரு. எந்த வகையிலாவது உங்க மனசுல ஆசையை வளர்த்து விடுறது போல என்னோட செய்கைகள் இருந்திருந்தால் மன்னிச்சுருங்கனு தான் சொன்னாரு அதனால இதை இப்படியே விட்டுருவோமே என்றாள் வினித்ரா.
என்ன வினி உன்னை ஒருத்தன் பிடிக்கலைன்னு சொல்லிருக்கான். அதுவும் ஏத்துக்க முடியாதபடி இருக்கு அவன் சொன்ன காரணம். இரண்டு மாதம் கழிச்சு மீட் பண்ணக் கூடிய அவனோட பொண்டாட்டி யாருன்னு தெரிஞ்சுக்கனும். இப்படியே விட முடியாது அவன் போன் நம்பர் கொடு அவன் உண்மையிலே யோக்கியனா, இல்லை யோக்கியன் போல நடிக்கிறானான்னு தெரிஞ்சுக்குவோம் என்றாள் பவித்ரா.
தப்பு பவி அவர் நல்லவரோ, கெட்டவரோ அவருக்கும், எனக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை. அவன் கல்யாணம் முடிஞ்சுருச்சுனு பொய்யே சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. அவன் மனசுல எனக்கு இடம் இல்லாததுனால தானே அப்படி ஒரு பொய் கூட சொல்லிருக்க முடியும் அதனால இந்த விசயத்தை இத்தோட விட்டுரு. நான் ப்ரஸ் ஆகிட்டு வரேன் என்ற வினித்ரா தன்னறைக்கு சென்றாள்.
அதெல்லாம் விட முடியாது வினி. எப்படி ஒருத்தனால இவ்வளவு நல்லவனா இருக்க முடியும். அவன் எப்படிப் பட்டவன்னு கண்டுபிடிச்சே தீருவேன். அவனை எதாவது ஒரு விசயத்தில் லாக் பண்ணி உன்னோட லவ்வை சக்சஸ் பண்ண வைக்கிறேன் என்று நினைத்த பவித்ரா வினித்ராவின் மொபைலில் இருந்து உதயச்சந்திரனின் மொபைல் எண்ணை எடுத்துக் கொண்டாள்.
அவனது முகநூல் கணக்கிற்கும் ஒரு போலி ஐடி உருவாக்கி ப்ரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பி வைத்தாள். மெசஞ்சரிலும் ஹாய் என்று மெசேஜ் அனுப்பி வைத்தாள்.
வீட்டிற்கு வந்தவனை நெடுஞ்செழியன் வரவேற்றிட அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு தன்னறைக்கு சென்றான் உதயச்சந்திரன். என்ன பண்ணிட்டு இருக்க ரோனி என்றவனிடம் ஒன்றும் இல்லை மாமா சும்மாவே உட்கார்ந்திருக்கிறது போர் அடிக்குது அதான் கதை படிச்சுட்டு இருக்கேன் என்றாள் வெரோனிகா.
இரண்டு வாரத்தில் ப்ராக்டிகல் இருக்கு அது முடிஞ்சதும் எக்ஸாம் இருக்கு. பப்ளிக் எக்ஸாமை வச்சுட்டு பாடப் புத்தகம் படிக்காமல் கதை படிச்சுட்டு இருக்கியா முட்டாள் என்றவனிடம் மாமா ஏன் கோபமா பேசுறிங்க. நீங்க டெஸ்ட்டுக்கு படிக்க சொன்னதெல்லாம் படிச்சுட்டேன்.
அப்பறம் தான் என்றவளிடம் என்ன அப்பறம் ஒரு முறை படிச்சா போதுமா. எக்ஸாம் முடியுற வரை உன் கவனம் அங்கேயும், இங்கேயும் சிதறக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல இப்போ தான் கதை படிக்கிறாங்களாம் மேடம் என்றவன் கோபமாக திட்டிட ஸாரி மாமா இனிமேல் கதை எல்லாம் படிக்க மாட்டேன் என்றவள் போனை ஓரமாக வைத்து விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே சென்றாள்.
மொட்டை மாடிக்கு சென்றவள் இப்போ என்ன பண்ணிட்டேன்னு இப்படி திட்டுறாரு கதை படிக்கிறது ஒரு குத்தமா. எப்போ பாரு படி படின்னு அந்த பிசிக்ஸ், கெமிஸ்ட்ரியை மட்டும் எவ்வளவு நேரம் படிக்கிறதாம். கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ்காக எதாச்சும் படிச்சா குத்தம் . வர வர ரொம்ப ஓவரா தான் பண்ணுறாரு என்று பொருமியவள் அழுது கொண்டிருந்தாள்.
அவள் கண்கள் கலங்கியபடி சென்ற பிறகு தான் அவன் உணர்ந்து கொண்டான். ச்சே என்ன பண்ணிட்ட உதய் யார் மேலையோ உள்ள கோபத்தை ரோனிகிட்ட என்று நினைத்தவன் வெரோனிகா என்று கீழே வந்தான்.
என்ன உதய் என்ற சுசீலாவிடம் ரோனி எங்கே சித்தி என்றான் உதயச்சந்திரன். அவள் ரூம்ல தான் இருந்தாள். கீழே வரவில்லை என்றிட சரிங்க சித்தி நான் பார்க்கிறேன் என்றவன் அவளைத் தேடி மொட்டை மாடிக்கு சென்றான்.
அங்கு அவள் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க அவன் சென்று அவளருகில் அமர்ந்தான். பச் என்றவள் முகத்தை திருப்பிக் கொள்ள ரோனி என்றான்.
அவள் அவன் புறம் திரும்பாமல் இருக்கவும் ரோனி என்னைப் பாரும்மா என்றான். அவள் அப்பொழுதும் திரும்பாமல் இருக்க அவளது முகத்தை தன் புறம் திருப்பியவன் என்னடி கூப்பிட்டால் திரும்ப மாட்டியா என்றான்.
அவளது கண்கள் கலங்கி , சிவந்திருப்பதைக் கண்டவன் சாரிடா என்றான். என்கிட்ட ஒன்றும் நீங்க பேச வேண்டாம். நான் ஒன்றுக்கு, மூன்று முறை பாடம் படிச்ச பிறகு தான் கதை படிச்சேன். அதற்கு போயி திட்டுறிங்க என்றவளின் கையை தன் கைக்குள் வைத்தவன் சாரி தங்கம் மாமாவுக்கு வொர்க் டென்சன் அதான் என்றவன் கோவிச்சுக்காதே பாப்பா என்றான்.
நான் ஒன்றும் பாப்பா இல்லை என்றவளிடம் சரி அப்போ நீ வந்து பீப்பா என்று சிரித்தவனை அவள் முறைத்து விட்டு எழுந்து செல்ல அவளது கையைப் பிடித்தவன் எங்கே போற கோவிச்சுக்கிட்டு என்றான்.
எங்கேயோ போறேன் உங்களுக்கு என்ன என்றவளிடம் ஓஓ எங்கேயோ போறிங்களா மேடம். யாரோ ஒரு பொண்ணு அவங்க சந்துரு மாமாவுக்கு போன் பண்ணி பர்பிள் கலர் கண்ணாடி வளையல் கேட்டுச்சு பாவம் அந்தப் பொண்ணு இப்போ எங்கேயோ போறதால அந்த வளையலை என்ன பண்ணுறதுன்னு தெரியலை என்றவனை திரும்பி முறைத்தவள் போங்க மாமா உங்க மேல நான் கோபமா இருக்கேன் என்றாள் வெரோனிகா.
ஏன் என்றவனிடம் நான் பர்பிள் கலர் ஒன்றும் கேட்கவில்லை ப்ளாக் கலர் தான் கேட்டேன். பர்பிள் கலரில் என்கிட்ட இரண்டு செட் வளையல் இருக்கு என்றவளை இழுத்து தன்னருகில் அமர வைத்தவன் அவளுக்கு ப்ளாக் கலர் வளையலை கொடுத்தான்.
என் ரோனி கேட்டு அவளோட சந்துரு மாமா மறப்பேனே ப்ளாக் கல்ர் தான் வாங்கிருக்கேன் என்றவனிடம் தாங்க்ஸ் மாமா என்றாள். ஸாரி ரோனிமா என்றவனிடம் பரவாயில்லை மாமா நீங்க தானே திட்டுனிங்க எனக்கு கோபம் எல்லாம் இல்லை என்றாள்.
…..தொடரும்….
Very good https://lc.cx/xjXBQT
Very good https://lc.cx/xjXBQT