ஊர்மிளா கோபமாக கிஷோரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். ஊர்மி என்ன பண்ணிட்ட என்று வந்த வெரோனிகாவிடம் நீ வா நாம வீட்டுக்கு போகலாம் என்ற ஊர்மிளா அவளைப் பிடித்து இழுக்க என்ன பண்ணுற ஊர்மி விடு என்னை என்ற வெரோனிகா கிரிஜாவிடம் வந்து ஸாரி ஆண்ட்டி அவளுக்கு என்ன கோபம்னு தெரியலை. நான் இன்னொரு நாள் சந்துருமாமா கூட வரேன். நாம அப்ப ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கலாம் என்றாள் வெரோனிகா. சரிம்மா ரோனி என்ற கிரிஜாவிடம் விடை பெற்றவள் கிஷோர் ஐயம் ஸாரி உன்கிட்ட ஊர்மிளா ஏன் அப்படி நடந்துகிட்டாள் என்று எனக்கு தெரியலை. எதுவா இருந்தாலும் உன்னை கை நீட்டி அறைஞ்சது பெரிய தப்பு ப்ளீஸ்டா எனக்காக அவளை மன்னிச்சுக்கோ என்றாள் வெரோனிகா.
அது பிரச்சனை இல்லை ரோனி அவள் யாரு எனக்கும் ப்ரண்ட் தானே நான் ஒன்றும் தப்பா நினைக்கவில்லை என்ற கிஷோரிடம் தாங்க்ஸ் கிஷோர் என்றவள் விஷால், அர்ஜுன் பாய் நான் கிளம்புகிறேன் அப்பறமா பேசலாம் என்று சென்று விட்டாள்.
உனக்கு வருவதற்கு இவ்வளவு நேரமா ரோனி என்ற ஊர்மிளாவிடம் ஊர்மி என்னாச்சு உனக்கு ஏன் இவ்வளவு கோபம் என்ற வெரோனிகா ஒரு ஆட்டோ பிடித்து தன் நாத்தனாருடன் வீட்டிற்கு வந்தாள்.
என்னடா சொன்னிங்க என்ற அர்ஜுனிடம் இல்லைடா அது என்று தயங்கிய கிஷோரை அவன் முறைத்திட நீ ரோனியை லவ் பண்ணியா அர்ஜுன் என்றாள் நிகிலா.
என்ன நான் ரோனியை லவ் பண்ணினேனா யார் சொன்னது என்ற அர்ஜுனிடம் இவனுங்க தான் என்ற நிகிலா நடந்தவற்றை கூறினாள்.
என்னடா சிரிக்கிறிங்க என்ன விசயம் என்று சொல்லுங்க என்று ஊர்மிளா வற்புறுத்தவும் இல்லை ஊர்மி இதோ இப்போ நடக்கிறதே இந்த சீன் அதாவது கிரிஜா அம்மா கூட நம்ம ரோனி பேசிட்டு இருக்கிறது. இதுவே நம்ம ப்ளஸ்டூ சேர்ந்த புதிசில் நடந்திருந்தால் மாமியார், மருமகள் பேசிட்டு இருக்காங்கனு நாங்க நினைச்சுருப்போம் என்று சிரித்தான் கிஷோர். எனக்கு புரியலை என்ற ஊர்மிளாவிடம் அர்ஜுனுக்கு ரோனி மேல ஒரு க்ரஷ் இருந்துச்சு பட் ரோனிக்கு கல்யாணம் ஆகிருச்சு அதான் இந்த சீன் ஒன் இயர் முன்னே நடந்திருந்தால் மாமியார், மருமகள் போல இருந்திருக்கும் என்றான் கிஷோர். கோபம் தலைக்கேறிய ஊர்மிளா அவனை பட்டென்று அறைந்து விட்டாள்.
நடந்த விசயத்தை நிகிலா கூறிட ஏன்டா உங்களுக்கு அறிவே கிடையாதா. நான் பலமுறை அப்பவே சொல்லி இருக்கிறேன் ரோனி மேல எனக்கு அப்படி எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லைனு அப்பறமும் ஏன்டா இப்படி பேசி ச்சே ஊர்மிளா என்னை பற்றி என்ன நினைப்பாள். ஊர்மிளா மூலமா ரோனிக்கு தெரிந்தால் என்னை கேவலமா நினைக்க மாட்டாளா ஏன்டா இப்படி பண்ணின என்ற அர்ஜுன் நண்பனை திட்டிட அர்ஜுன் விடு அவன் விளையாட்டுக்கு தானே சொன்னான் என்ற கிரிஜா. கிஷோர், விஷால் நீங்க இரண்டு பேரும் நிகிலாவை வீட்டில் விட்டுட்டு வாங்க என்றிட இல்லைம்மா நாங்க அப்படியே வீட்டுக்கு போகிறோம். காலையில் வரோம் என்றான் விஷால்.
கிஷோர் தப்பா எடுத்துக்காதப்பா என்றிட அம்மா நான் ஒன்றும் தப்பா எடுத்துக்கவில்லை என்றவன் வீட்டிற்கு கிளம்பினான்.
என்ன அர்ஜுன் தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்க என்ற கிரிஜாவிடம் என்னம்மா இவன் இப்படி பண்ணி வச்சுருக்கிறான். இந்த விசயம் ரோனிக்கு தெரிந்தால் என்னை எவ்வளவு கேவலமா நினைப்பாள். அவளுக்கு இவனுங்களை விட என்னை தான் பிடிக்கும். அவளுக்கு கல்யாணம் ஆன விசயம் முதலில் என்கிட்ட மட்டும் தான் சொன்னாள். அப்பறம் தான் மத்த ப்ரண்ட்ஸ்கிட்ட சொன்னாள். அவள் எதாவது ப்ரண்டோட வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்றால் அது கூட நம்ம வீடு தான் என்று புலம்பிய அர்ஜுனை அமைதியாக பார்த்தார் கிரிஜா.
சரி இப்போ அம்மா கேட்கிறேன் பதில் சொல்லு நீ வெரோனிகாவை விரும்பினாயா என்றார் கிரிஜா. அம்மா அது என்றவன் தயங்கிட பதில் சொல்லு அர்ஜுன் என்றார் கிரிஜா. அவளை பார்த்த உடனே ரொம்பவே பிடிச்சது என்னம்மோ உண்மை தான் ஆனால் எப்போ அவளுக்கு கல்யாணம் ஆனதை சொன்னாளோ அப்போ இருந்து அவள் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் அவ்வளவு தான் அம்மா என்றான் அர்ஜுன்.
சரி அர்ஜுன் ஊர்மிளாவுக்கும், உனக்கும் நடுவில் என்றிட இல்லைம்மா ஊர்மி என்னோட பெஸ்ட் ப்ரண்ட். அவள் ரோனியோட நாத்தனார் அதனால தான் கோபத்தில் கிஷோரை அடிச்சுருப்பாள் என்ற அர்ஜுன் ரோனி என்னை தப்பா நினைச்சுருவாளாம்மா என்றான். நிச்சயம் அப்படி நினைக்க மாட்டாள். அவள் கூட பேசின வரை ரொம்ப மெச்சுருட்டியான பெண்ணாக தான் தெரிந்தாள். அதனால கவலை படாதே அர்ஜுன் என்றார் கிரிஜா.
என்னடா நீ அவ்வளவு பெரிய முட்டாளா ஊர்மிளா , வெரோனிகாவோட நாத்தனார் அவள் கிட்ட போயி அர்ஜுன் ரோனி மேல ஒரு க்ரஷ் வச்சுருந்தான்னு சொல்லி அவள் அதை ரோனி கிட்ட சொன்னால் அர்ஜுன் பற்றி என்ன நினைப்பாள். நம்மளை பற்றி தான் என்ன நினைப்பாள். யோசிக்கவே மாட்டியா கிஷோர் என்றான் விஷால்.
இல்லை மச்சான் ஒரு ஜாலிக்காக சொன்னேன். அது இவ்வளவு பெரிய தப்பா மாறும்னு தெரியலை. ஊர்மி அறைஞ்சது கூட எனக்கு பிரச்சனை இல்லை ரோனி தப்பா நினைச்சுருச்சுனா என்ன பண்ணுறது அது தான் எனக்கும் வருத்தமாக இருக்கு என்றான் கிஷோர். விடு மச்சான் பார்த்துக்கலாம் என்ற விஷால் தன் வீட்டிற்கு கிளம்ப, கிஷோர் அவனது வீட்டிற்கு கிளம்பினான்.
ஊர்மி என்ன பிரச்சனை உனக்கு ஏன் இப்படி பிகேவ் பண்ணின அவங்க நம்ம ப்ரண்ட்ஸாவே இருந்தாலும் ஒரு பையனை கை நீட்டி அடிக்கிறது ரொம்ப தப்பு என்றாள் வெரோனிகா. ரோனி உனக்கு எதுவும் தெரியாது பேசாமல் போயிரு நான் இருக்கிற கோபத்தில் உன்னை எதுனாலும் சொல்லிட போகிறேன் என்றாள் ஊர்மிளா.
என்ன சொல்லிடப் போற ஊர்மி அவனை அடிக்கிற அளவுக்கு உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை எனக்கு தெரிஞ்சே ஆகனும் சொல்லு என்றாள் வெரோனிகா. சொல்ல முடியாது போடி என்றவள் கோபமாக தன்னறைக்கு சென்று விட வெரோனிகாவிற்கு முகத்தில் அறைந்தது போல் ஆகி விட்டது.
இப்போ நான் என்ன தப்பா கேட்டு விட்டேன். இவள் ஏன் என் மேல இவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்று நினைத்த வெரோனிகா தன் அறைக்கு சென்றாள்.
என்ன ரோனி ட்ரீட் எல்லாம் கொடுத்துட்டியா என்ற உதயச்சந்திரனிடம் முடிஞ்சுருச்சு மாமா என்றாள் வெரோனிகா. என்னாச்சு ஏன் டல்லா இருக்க எதுவும் பிரச்சனையா என்றவனிடம் இல்லை மாமா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றவள் தலைவலிக்குது மாமா என்று படுத்துக் கொண்டாள்.
நான் தைலம் தேய்ச்சு விடட்டுமா ரோனி என்றவனிடம் இல்லை மாமா வேண்டாம் நான் படுத்துக்கிறேன் என்ற வெரோனிகா படுத்துக் கொள்ள என்னைப் பாரு ரோனி என்றான் உதய்.
அவள் எழுந்து அவனை பார்க்க உனக்கு தான் பொய் சொல்ல வராதே அப்பறம் என்ன என்றவன் என்ன நடந்துச்சு என்றான்.
ஒன்றும் இல்லை மாமா என்றவளிடம் சொல்லு ரோனி என்ன நடந்துச்சு என்றான் உதய். நடந்தவற்றை கூறினாள் வெரோனிகா. மாமா அவள் ஏன் கிஷோரை அறைஞ்சாள்னு தான் நான் கேட்டேன் அதற்கு அவள் பதில் சொல்லாமல் என்னை திட்டிட்டு போறாள். எனக்கு எதுவுமே புரியவில்லை. கிஷோர் எதுனாலும் தப்பா பேசி அதனால அவனை அவள் அடிச்சிருந்தாலும் அதை என் கிட்ட சொல்லி இருக்கலாமே அதில் என்ன தப்பு வந்திடும் என்றாள் வெரோனிகா.
ரோனி அவள் உனக்கு தெரிய வேண்டாம்னு நினைக்கவில்லை. அவள் இப்போ கோபமா இருக்கிறாள். அவள் கிட்ட நீ மேலும், மேலும் கேள்வி கேட்கவும் கோபத்தில் பேசி விட்டாள். அதனால நீ அதை பெரிதாக எடுத்துக்காதே சரியா அவள் யாரு உன்னோட நாத்தனார் தானே. நீ விட்டுக் கொடுத்து போறதில் என்ன தப்பு. அவளுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடு அவளாவே உன் கிட்ட சொல்லுவாள் என்றான் உதய்.
சரிங்க மாமா என்றவள் அச்சச்சோ மறந்தே போயிட்டேன் என்றவள் ஒரு பாக்ஸை எடுத்து அவனிடம் நீட்டினாள். என்ன இது என்றவனிடம் கிரிஜா ஆண்ட்டி செய்த ஸ்வீட் மாமா. ரொம்ப டேஸ்ட்டியா இருந்துச்சு அதான் உங்களுக்கும் கொடுத்து விட்டாங்க. அர்ஜுன் மட்டும் இல்லை அவனோட அம்மா கூட ரொம்ப ஸ்வீட். எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சுருக்கு மாமா என்றாள் வெரோனிகா.
அர்ஜுனை உனக்கு ரொம்ப பிடிக்குமா என்ற உதய்யிடம் அவன் என்னோட பெஸ்ட் ப்ரண்ட். ஊர்மிளாவை விட எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அந்த வாட்ச்மேன் பிரச்சனை அப்போ நீங்கள் எனக்கு எந்த அளவுக்கு சப்போர்ட்டிவ்வா இருந்திங்களோ அதே அளவுக்கு அவனும் சப்போர்ட்டா இருந்தான். என்னை அவனும் உங்களை மாதிரியே மோட்டிவேட் பண்ணிட்டே இருப்பான். என்னோட பெஸ்ட் ப்ரண்ட் அவன் என்றாள் வெரோனிகா.
என்ன ரோனி உனக்கு என்னை பிடிக்குமா, அர்ஜுனை பிடிக்குமானு ஒரு கேள்வி கேட்டால் நீ அர்ஜுனை பிடிக்கும்னு சொல்லுவ போல என்றான் உதய்.
மாமா தப்பா பேசாதிங்க அவன் என்னோட ப்ரண்ட், நீங்க என்னோட கணவர் அவன் கூட நீங்க ஏன் உங்களை கம்பேர் பண்ணுறிங்க. நான் சொன்னது உங்களுக்கு புரியலையா நீங்க என்னோட கணவர் என்னை மோட்டிவேட் பண்ணுறதும், எனக்கு சப்போர்ட்டிவா இருக்கிறதும் உங்களோட கடமை. அதே போல எனக்கு ஒரு ப்ரண்டா அவன் சப்போர்ட் பண்ணினான். அதை தான் நான் சொன்னேன். நீங்க உங்களை பிடிக்குமா, அவனை பிடிக்குமானு கேட்கிறிங்க என்றவளிடம் ரோனி நான் விளையாட்டுக்கு தான் கேட்டேன் என்றான். மாமா விளையாட்டுக்கு கூட இனி அப்படி ஒரு கேள்வி கேட்காதிங்க சில விசயங்களில் நான் ரொம்ப சென்சிடிவ். குறிப்பா உங்க விசயத்தில் என்றவள் எழுந்து சென்றாள்.
ரோனி அதான் மன்னிப்பு கேட்டுட்டேனே அப்பறம் என்னடி என்றவனிடம் இல்லை மாமா கொஞ்சம் கஸ்டமா இருக்கு அதான் என்றவள் அவனது தோளில் சாய்ந்திட உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமா ரோனி என்றான் உதய். உங்களை மட்டும் தான் மாமா ரொம்ப, ரொம்ப பிடிக்கும். என்னோட வாழ்க்கை, எதிர்காலம் எல்லாமே நீங்க தானே மாமா என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவன் ஸாரிடா உன்னை ஹர்ட் பண்ணி இருந்தால் என்றான் உதய்.
…..தொடரும்….
Very good https://is.gd/N1ikS2