அவளிடம் கிளம்பி வருமாறு அறிவுறுத்தியவன் கதவருகே செல்ல, அவனை நிப்பாட்டியது அவள் குரல்.
“ஒரு நிமிஷம்” அவளது குரல் திக்கி திணறி காதில் விழவும்,
“ஹனி!” என்னமோ அவள் ஆசை ஆசையாக “அத்தான் இங்க வாங்கன்னு” கூப்பிட்டது போல அவள் அருகில் ஒரே எட்டில் வந்தமர்ந்தான். அமர்ந்த வேகத்தில் அவள் மீதே விழுந்தான்.
அவனது முழு எடையையும் தன் மீது விழாமல் தள்ளி அமர்ந்தவள் “இப்போ என்னன்னு வந்து மேல விழுறீங்க?” முகம் சுளித்தாள்.
“வேணும்னு விழலன்னு சொல்லத்தான் தோணுது. ஆனால் தேவையாதான் விழுந்தேன்”
வெகு அருகில் தெரிந்த அவளது விழிகளுக்குள் வீழ்ந்தவன், கண்களை மூடித் திறந்து, பின் தலை கேசத்தை விரல்களால் களைத்துவிட்டவனுக்கு அவஸ்தையாக இருந்தது. அவளை அருகில் உணர்ந்தவனுக்கு பிரியவே மனதில்லை.
ஆனால் வெளியே தாய் தந்தை தங்களுக்காக காத்திருக்க, தானும் இவளும் தனித்திருப்பது சரியில்லையே, யோசித்தவனுக்கு இனியும் இங்கே தாமதிப்பது சரியில்லைன்னு தோணியது.
“ஹனி. அங்கே ரெஸ்ட்ரூம் இருக்கு. கதவை சாத்திட்டு போறேன். கிளம்பிட்டு கால் பண்ணு” என்றவன் அறைக்குள் ஒரு ஓரமாக பரிதாபமாகக் கிடந்த மொபைலை எடுத்து அவளிடம் தந்தான்.
“எனக்கும்தான் பத்திகிட்டு வருது ஹனி. அத்தான் கிட்டக்க வந்து மொத்தமா அணைச்சிக்கவா?” அவன் விழிகளில் ஆவலும் ஏக்கமும் அப்பட்டமாய் பெண்ணவளின் பொன் தேகத்தின் மீது படர்ந்து பரவ.
எப்ப பாத்தாலும் இடக்காக பேசும் அவனது பேச்சில் பொறுமையை இழந்தவளுக்கு கண்மண் தெரியாத ஆத்திரம் பொங்கி வரவும் “ஆஆஆஆ!” பொறுமை இழந்து வெறி பிடித்தவள் போலக் கத்தினாள்.
அவள் அப்படிக் கத்துவதும் அவனுக்கு பிடித்துத் தொலைக்க, “கத்தாதடி. போறேன்” சென்றவனுக்கு மீண்டும் அழைப்பு வந்தது.
“என்னடா?” ஆத்மாவிடம் சீறினான்.
“அப்பா டேய். இங்க உங்க மாமனார் மாமியார் வந்திருக்காங்கடா” பண்றதையும் பண்ணிட்டு நம்மகிட்ட எரிஞ்சு விழறான், ஆத்மாவுக்கு எங்கேயாவது போய் முட்டிக்கலாம்னு இருந்தது.
“எங்கடா?” அதிர்ந்த சிபின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.
“கதவுக்கு வெளியடா ராசா. கொஞ்சம் ரூமை விட்டு வெளிய வா. இங்க குடும்பமே உனக்காக காத்திருக்குது” சுடு தண்ணியில் கால் வைத்தது போலக் குதித்தான் அவன்.
“ஏய் இப்பதாண்டி வந்தாங்க. இதோ ஆத்மா அவங்களை கூப்பிடப் போறான்” சொன்னவன் “இப்படியே இருக்கறதுன்னா எனக்கொன்னும் பிராப்ளம் இல்லை ஹனி. கண்ணுக்கு குளிர்ச்சிச்சியா ஜில்லுன்னு இருக்குது. பட் உங்க பேரண்ட்ஸ் வந்திருக்காங்க. அவங்க கூட இன்னும் யாரோ வந்திருக்காங்க போலவே” அவளது முகத்தை திருப்பி வெளியே சுட்டிக்காட்டினான்.
அவன் சொல்லவும் எட்டிப் பார்த்தவள் “மை காட் இவங்களா?” சொன்னவள் தன்னுடைய உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறை ஓடினாள்.
வரும் போது எப்படி வந்தாளோ அதே போலத் தயாராகிவிட்டாள் கால் மணிநேரத்துக்குள்.
ஜன்னலருகே நின்றவனின் விழிகள், தான் இருப்பதையும் மறந்து அவள் தயாராகவும், பார்வையை விலக்காமல் ரசித்தபடியே நின்றான்.
நின் பெயரை என் இதழ்கள் வாசித்தால்
என் இதயத்தின் தாளமும் தடுமாறுதடி.
விழிகளில் பதிந்திட்ட உன் வடிவம்,
இமைப்பொழுதும் எனை விட்டுப் பிரியாதடி.
மெல்லிசையாய் நின் குரலோசை
என் செவிதனில் வீழும் நேரம் சொர்க்கமடி.
உன் விழிதனில் நம் எதிர்காலத்தை
கண்டு கழிப்பேனடி.
உன் அருகில் இருக்கும் போது
மொத்தமும் மறந்து போனதடி நளிர்பெண்ணே.
நீயே என் மொத்தமும் என்று சரணடைகிறேனடி…
புடவை விலகித் தெரிந்த வெற்றிடையும், சரிந்து அகன்ற இடையும் அவனை பித்தனாக்கிட, ஓரெட்டில் அவளருகில் வந்தவன் அப்படியே மொத்தமாக அவளைக் கட்டிக்கொண்டான், “விடுங்க” அவள் மிரண்டு திமிரவும்.
“ஹனி ப்ளீஸ்டி ஒரே ஒரு கிஸ். ஐ காண்ட்….. மை” விழிகள் சிவந்திட அவள் கழுதோரம் வன்மையாக முத்தங்களைப் பதித்தான்.
அவனது கைகள் அவளை சுற்றி வளைத்து அணைக்க, இதழ்களோ அவள் கழுத்து கன்னம் என்று ஊர்வலம் போனது. பெண்ணவளின் நெருக்கம் போதாது மோக உணர்வுகள் குதியாட்டம் போட, அவள் இதழ்களை தன் பற்களால் கடித்து இழுத்தவனுக்குள் தீயாய் பற்றியெறிந்தது தேகம்.
அவளை அனுப்பியே தீரவேண்டிய இந்தச் சூழலை முற்றிலும் வெறுத்தான். இவர்கள் மட்டும் வரவில்லையெனில் நளிர்பெண்ணை கொண்டாடித் தீர்த்திருப்பான். இன்றே அவளைத் தன் மனைவியாக்கியிருப்பான்.
அசைய முடியாத நிலையில் அவன் கைகளுக்குள் சிறைபட்டிருந்தவளுக்கு அவன் காதலுடன் செய்யும் அத்தனையும் நரகமாகவே இருந்தது. வெளியே பெற்றவர்கள் இருக்க, இங்கே இந்த நிலையில் ஒரு ஆம்பளையுடன் தனித்திருக்கிறோமே. இந்த நினைப்பே அவளைக் கொன்று தீர்த்தது.
“விடுங்க உங்களை கெஞ்சிக் கேக்கறேன். அப்பாம்மாகிட்டப் போகணும் நான்” நலிந்த குரலில் பேசவும் முடியாது பேசினாள். இதற்கு மேல் போராட அவளிடம் கொஞ்சமும் சத்தில்லை.
யாருக்கும் தெரியாமல் இந்தப் பிரச்சனையை பேசித் தீர்க்கலாம் என்றுதானே இங்கே வந்தாள். ஆனால் இங்கோ முற்றிலும் தவறாகப் போனது. தன்னை மீறியே நடந்த செயல்களை தடுக்க முடியாது தோற்றுப் போனவளுக்கு அவனை எதுவும் செய்திட முடியாத இயலாமையில் வெறுப்பே மிகுந்தது.
பெத்தவங்க வெளியே இருக்கையில் தான் ஒரு ஆணுடன் இப்படியொரு நிலையில் இருக்கோம் என்ற எண்ணமே அவளைக் கொன்று தீர்க்க, தொண்டைக்குழியில் இருந்து அடிவயிறு வரை ஒரு பதட்டம் ஊடுருவியது. அடுத்து என்னாகும், அவங்க தன்னை என்ன நினைப்பாங்க என்றெல்லாம் எண்ணங்கள் அவளது மனதை அறித்தெடுத்தது.
ஏற்கனவே கல்யாணத்தை மறுத்ததற்காக இன்னும் சொல்லிக்காட்டிகிட்டே இருக்காங்க. இப்போ இந்த விஷயம் தெரிந்தால் அவ்வளவுதான். கண்கள் கலங்க நின்றாள்.
“ஓகே. வா போகலாம்” அவள் கைகளைப் பிடித்தான்.
“எனக்கு அங்கே வரதுக்கே பயமா இருக்கே” விழிகளில் கண்ணீர் உடைப்பெடுக்க, அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவளை தன்னோடு அணைத்து விடுவித்தவன் “நான் பார்த்துக்கறேன் ஹனி. நான் சொல்றதுக்கு ஏதும் மறுப்பு சொல்லாம இரு போதும்” அவன் அறிவுறுத்த.
“ஆஹாஹா உங்க வசதிக்குப் பேசுவீங்க. அதுக்கு நான் சரின்னு சொல்லணுமோ” அவனை ஏளனமாகப் பார்த்தாள்.
“நாம லவ் பண்றோம்னு சொல்லுவேன். அதுக்கு ஆமான்னு சொல்லு. சிம்பிள் ஹனி. சே எஸ்” அவன் வெகு எளிதாக சொல்லிக் கொடுக்கவும், அவளுக்கு பத்திக்கிட்டு வந்தது.
“அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன நாம இருந்தது நினைப்பிருக்கா” கள்ளப் புன்னகையோடு அவன் வினவ.
“பொறுக்கி” உதட்டுக்குள் சொன்னவள் அவனை பார்க்கவும் சங்கடப்பட்டு வேறு திசையில் நோக்கிட.
“என்னை வேண்டாம்னா இன்னொருத்தன் கூட கல்யாணம் பண்ணுவாங்க. அவனோடவும் அப்படியே இருப்பியா?”
அவன் கேள்வியில் நிதர்சனம் உரைக்க திகைத்துப் போய் அவனையே வெறித்தாள்.
“நான் வெளியே போறேன் ஹனி. அண்ட் பிடிக்குதோ பிடிக்கலையோ நீ சரின்னுதான் சொல்லணும். பிகாஸ் உன்னோட அப்பா அம்மா கூட வந்திருக்கறது அவங்க சம்மந்தி வீடு. இப்படி நிறைய காரணம் இருக்கும் சொல்ல” அவளை அழைத்துக்கொண்டு அவன் ஹாலுக்கு வந்தான்.
எப்படி அவங்க முகத்துல முழிக்கறது?. என்ன விளக்கம் சொல்லட்டும்? இதற்காகத்தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லியிருக்காளோன்னு தப்பா நினைப்பாங்களோ? இப்படிப்பட்ட கேள்விகள் மனதில் உதிக்கவும், தயங்கித் தயங்கி அங்கே வந்த நளிராவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.