03. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ.!

4.7
(36)

அமிலம் – 03

குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த சாஷ்வதனோ தலையில் கை வைத்தவாறு குழப்பத்தோடு அமர்ந்திருந்தவள் அருகே நெருங்கி வந்தான்.

“என்னாச்சு வைதேகி ஆர் யூ ஓகே..?” என அவன் அக்கறையாக விசாரிக்க,

“எஸ் ஐ அம் ஓகே..” என்றவள் அவனைப் பார்த்து “சாரி ரொம்ப லேட்டா எழுந்துட்டேன்..” என்க,

“இட்ஸ் ஓகே.. அதெல்லாம் ப்ராப்ளம் கிடையாது..” என்றவன் இன்டர்காமை எடுத்து அவளுக்கு காபியை எடுத்து வரும்படி கட்டளையிட சங்கடத்தோடு எழுந்து கொண்டவள்,

“நான் பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வந்துடுறேன்..” எனக் கூறிவிட்டு வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அதற்குள் அவனும் அலுவலகத்திற்கு செல்வதற்கு ஏற்றவாறு தயாராகி நிற்க ஈரத்தலையோடு வெளியே வந்தவளை இரசனைப் பொங்கப் பார்த்தவன்,

“நீ ரொம்ப அழகா இருக்க வைதேகி..” என்றான்.

“நீங்களும்..” என மென் புன்னகையோடு கூறினாள் அவள்.

“உன்னோட காபி வந்திருச்சு எடுத்துக்கோ..” என அவன் கூற “தேங்க்ஸ்..” என்றவாறு அதனை எடுத்துப் பருகியவள் குடித்து முடித்துவிட்டு காலி கப்பை டீபாய் மீது வைத்தாள்.

“சரி வா கீழ நமக்காக அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க..” என அவன் கூற அப்போதுதான் சற்றே பதற்றமாகி தன்னுடைய கரங்களை உதறியவள்,

“அச்சோ இவ்வளவு லேட்டா போனா எதுவும் சொல்ல மாட்டாங்களா..? எப்பவுமே சீக்கிரமா எந்திரிச்சிடுவேன்.. இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டா எழுந்தேன்னு சத்தியமா புரியல..” என அவள் பதறியவாறே கூற,

“புதுசா கல்யாணம் ஆனவங்க சின்னஞ்சிறுசுங்க லேட்டா எந்திரிச்சா… அவங்க தப்பா நினைக்கலைன்னாதான் தப்பு..” என அவன் சிரித்தவாறு கூற அவளுக்கு முகம் சிவந்து போனது.

“ஹையோ நமக்குள்ள அப்படி எதுவும் நடக்கலைன்னு சொல்லிடலாமா..?” என அவள் வேகமாகக் கேட்க,

“அடிப்பாவி அப்படி எல்லாம் எதையாவது உளறி வச்சிடாத.. அப்புறம் நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லைன்னு நினைச்சு ஒவ்வொருத்தரா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க… அவங்க நினைக்கிறத நினைக்கட்டும்.. யாரும் உன்கிட்ட ஓபனா எதுவும் கேட்க மாட்டாங்க.. கேட்டாலும் லைட்டா வெக்கப்பட்டுக்கோ.. அது போதும்..” என அவன் கூறிவிட்டு முன்னே நடக்கத் தொடங்க இவளுக்குத்தான் கன்னங்கள் சிவந்து போயின.

அவர்கள் கீழே வந்ததும் ஓடிவந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டாள் காயத்ரி.

“ஹாய் அண்ணி வாங்க வாங்க.. குட் மார்னிங்..”

“குட் மார்னிங் காயத்ரி..” என சிரிப்போடு கூறினாள் வைதேகி.

“ஹேய் காயூ உனக்கு காலேஜுக்கு டைம் ஆச்சு.. நீ இன்னும் கிளம்பலையா..?” எனக் கேட்டான் சாஷ்வதன்.

“வாட்… நோஓஓ.. எங்க அண்ணாக்கு கல்யாணம் நடந்திருக்கு..‌ புதுசா அண்ணி வேற வந்திருக்காங்க.. அதனால காலேஜுக்கு லீவு போட்டுட்டேன்… நேத்து தானே கல்யாணம் முடிஞ்சுது… இன்னிக்கே காலேஜுக்கு போய் நான் என்ன பண்ணப் போறேன்..?” என்ற தங்கையை முறைத்துப் பார்த்தான் அவன்.

“ஏதோ கல்யாணம் உனக்கு நடந்த மாதிரி சொல்லிக்கிற… எனக்குத் தானே கல்யாணம் நடந்திச்சு.. நானே ஆபீஸ் போகப் போறேன்… காலேஜ் போறதுல உனக்கு என்னடி கஷ்டம்..?” எனக் கேட்டவாறு டைனிங் டேபிளில் அமர்ந்தான் சாஷ்வதன்.

“நீங்கதான் எப்ப பார்த்தாலும் ஆபீஸ் ஆபீஸ்னு ஆபீஸே கதின்னு கிடக்கிறீங்க.. என்னால எல்லாம் அப்படி இருக்க முடியாது பா..” என்ற காயத்ரியோ அண்ணியை அழைத்துக்கொண்டு வந்து அவள் அருகே அமர வைக்க அவர்களின் உரையாடலில் அவளுக்கோ சிரிப்பு முகிழ்த்தது.

“ஏய் வாலு.. ஒழுங்கா காலேஜ் கட் பண்ணாம காலேஜுக்கு ரெடி ஆகு.. நானே உன்னை ட்ராப் பண்றேன்..” என்றவாறு அங்கே வந்தான் கஜன்.

சாஷ்வதனின் பெரியப்பாவின் மகன்.

தொழிலை கற்றுக் கொள்வதற்காக கடந்த இரண்டு வருடங்களாக சாஷ்வதனின் வீட்டில்தான் வசிக்கின்றான்.

சாஷ்வதனுக்கும் கஜனுக்கும் ஒரே வயதுதான். காயத்ரியின் மீது கஜனுக்கோ கொள்ளைப் பாசம்.

“ஐயோ கஜி அண்ணா இன்னைக்கு காலேஜ் வேணாம்… எனக்கு பிராக்டிகல் கிளாஸ் கூட இல்லை.. வெறும் தியரிதான்.. நாளைக்கு போறேனே..” எனக் கூற,

அக்கணம் அனைவருக்கும் உணவை எடுத்தவாறு அங்கே வந்தார் சாஷ்வதனின் அன்னை கலா.

அவர் அங்கே வந்ததும் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட வைதேகி அவருடைய கரங்களில் இருந்த உணவை வாங்கி மற்றவர்களுக்குப் பரிமாறத் தொடங்க மருமகளை பார்வையால் மெச்சியவர்,

“நீயும் உட்காருமா.. நானே எடுத்து வைக்கிறேன்..” என அன்பாகக் கூற அந்த வார்த்தைகளில்தான் எத்தனை மென்மை.

வைதேகிக்கோ அவரை அக்கணமே மிகவும் பிடித்துக் கொண்டது.

“இல்லத்த நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்..” என்றவள் அவர் கொண்டு வந்திருந்த தோசையை அனைவருக்கும் பரிமாறி விட்டு தனக்கும் எடுத்து வைத்தவள் அனைவருடன் இணைந்து உணவை உண்ணத் தொடங்கினாள்‌.

அவள் பயந்ததைப் போல திருமண வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல என்றே அவளுக்குத் தோன்றியது.

தன்னைப் புரிந்து கொள்ளும் கணவன்.

தோழி போல நடந்து கொள்ளும் கணவனின் சகோதரி.

அன்பும் அக்கறையுமாக கவனித்துக் கொள்ளும் மாமியார்..

அவளுக்கு இது போதுமே.

“ஹேய் இவன உனக்குத் தெரியும் தானே..? இல்ல தெரியாதா..?” என கஜனைக் காட்டி வினவினான் சாஷ்வதன்.

“உங்களோட பிரதர்தானே நல்லாவே தெரியும்..” என புன்னகைத்தாள் அவள்.

அக்கணம் அவளை நிமிர்ந்து பார்த்த கஜனோ “ஹாய் சிஸ்டர்..” என்க,

“ஹாய் பிரதர்..” என பதிலுக்கு கூறியவள் அங்கிருந்த அனைவருடனும் இயல்பாகி பேசத் தொடங்க பொழுது நன்றாகவே கழிந்தது.

“டேய் இன்னைக்கு எதுக்குடா வேலைக்குப் போற..? நேத்து தானே உனக்கு கல்யாணமே ஆச்சு.. ஒரு நாலு நாள் லீவு எடுத்துக்க கூடாதா..?” என கண்டிப்புடன் கலா கேட்க,

“முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கும்மா.. அத மட்டும் முடிச்சிட்டு வந்துடுறேன்..” என்றவன் சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைய அவன் பின்னாலேயே அறைக்குள் செல்வதா இல்லை இங்கே இருந்து தன்னுடைய மாமியாருக்கு உதவி செய்வதா எனத் தடுமாறி ஹாலிலேயே நின்றிருந்தாள் அவள்.

“அம்மாடி அவன் ஆபீஸ் கிளம்பப் போறான்.. நீ போய் அவன அனுப்பி வச்சுட்டு வாம்மா..” என கலா கூற,

“சரி அத்த..” என்றவள் தங்களுடைய அறைக்குள் மீண்டும் நுழைந்தாள்.

அங்கே ஏதோ கோப்புகளை பிரித்துப் பார்த்தபடி நடந்து வந்தவன் திடீரென கதவைத் திறந்து உள்ளே வந்தவளைப் பார்க்காது மோதி விட,

அவன் மோதிய வேகத்தில் அவளோ தடுமாறி தரையில் சரிய சட்டென தன் கரத்தில் இருந்த கோப்புகளை கைவிட்டு விட்டு தன் மனைவியைக் கீழே விழாதபடி இறுகப் பிடித்துக் கொண்டான் சாஷ்வதன்.

அவனுடைய ஒற்றைக் கரம் அவளுடைய இடையில் அழுத்தமாகப் பதிய எங்கே கீழே விழுந்து விடுவோமோ என அஞ்சியவள் அவனுடைய கழுத்தை தன்னுடைய இரண்டு கைகளாலும் மாலை போல கோர்த்துப் பிடித்துக் கொண்டாள்.

“நல்லவேளை கீழ விழலை..” என பெருமூச்சோடு அவனைப் பார்த்தவளுக்கு அப்போதுதான் இருவரின் நெருக்கமும் புத்தியில் உரைத்தது.

அவனுடைய உள்ளங் கையின் வெப்பம் அவளுடைய இடையில் தெரிய பதறி வேகமாக விலக முயன்று மீண்டும் அவள் தடுமாற அவளை இன்னும் இறுக்கமாக பிடித்தவன் “ரிலாக்ஸ்..” என்றான்.

தன்னுடைய முகத்துக்கு மிக அருகாமையில் இருந்த கணவனின் முகத்தைப் பார்க்க சங்கடம் கொண்டவளாய் அவள் தன்னுடைய விழிகளைத் தாழ்த்தி நிதானமாக நிற்க முயற்சித்து வெற்றியும் பெற்றுவிட,

மெல்ல தன்னுடைய கரங்களை அவளுடைய உடலில் இருந்து விலக்கியவன்,

“சாரிடி இந்த பைலை பார்த்துட்டே வந்ததால நீ உள்ள வந்தத நான் பார்க்கலை..” என்றவன் தன்னுடைய வலது கரத்தை உயர்த்தி அவளுடைய மென்மையான கன்னத்தை பெரு விரலால் வருடி விட படபடத்துப் போனாள் வைதேகி.

அவளைத் தொட்ட அவனுடைய விரலோ தித்திப்பதைப் போலத்தான் இருந்தது.

அவளோ அவனை விட்டு விலகுகியவள்,

“நீ.. நீங்க ஆபீஸ்க்கு போகலையா..?” எனக் கேட்க,

“அட ஆமால்ல அதை மறந்தே போய்ட்டேன்… ஓகே நீ பத்திரமா இரு.. நான் கிளம்புறேன்..” என்றவன் அந்த அறையை விட்டு வெளியே செல்ல முயற்சிக்க,

“என்னங்க..” என அவனை அழைத்தாள் வைதேகி.

“என்ன வைதேகி..?” என்றவாறு அவளை அவன் திரும்பிப் பார்க்க தன்னுடைய கரத்தை அவனை நோக்கி நீட்டியவள்,

“இப்போ நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆகிக்கலாம்..” என்க, அவனுடைய விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன.

“மேடத்தோட ஃப்ரண்ட்ஷிப் எல்லாம் அவ்வளவு ஈஸியா கிடைக்காதுன்னு யாரோ சொன்ன மாதிரி இருந்துச்சே..” என கேலியாகக் கூறினான் அவன்.

“இப்போ நான் கீழ விழாம தடுத்துப் பிடிச்சு என்னை காப்பாத்திட்டீங்கல்ல சோ ஐ ஆம் இம்ப்ரஸ்ட்.. எனக்கு ஹெல்ப் பண்ணதால நாம பிரண்ட்ஸா இருக்கலாம்.” என அவள் சிரித்தவாறு கூற அவள் நீட்டிய கரத்தைப் பற்றிக் குலுக்கியவன் “ஓகே மை டியர் ஃப்ரெண்ட்..” என்றான்.

அவளுக்கு முகம் முழுவதும் மகிழ்ச்சிப் புன்னகை.

கீழே விழுந்து கிடந்த தாள்களை அவனுடைய கோப்புக்குள் அடுக்கி வைத்து அவள் அவனிடம் கொடுக்க அவனும் கோப்பை பார்க்காது ஆசை பார்வையை அவள் மீது அள்ளித் தெளித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட மீண்டும் முகம் சிவந்து போனது அவளுக்கு.

விரிந்த புன்னகையுடன் படிகளில் இறங்கியவனை எதிர்கொண்ட கஜனின் விழிகளோ விரிந்தன.

அவனோ பதறியவாறு சட்டென காயத்ரியைப் பார்க்க அவளும் தன்னுடைய சகோதரனைக் கண்டு அதிர்ந்து விழிகளை விரித்தாள்.

அடுத்த நொடியே அவர்கள் இருவரும் குலுங்கிக் குலுங்கி சிரிக்கத் தொடங்கி விட சாஷ்வதனின் புருவங்களோ உயர்ந்தன.

“ஹேய் என்ன ஆச்சு..? இப்ப எதுக்காக ரெண்டு பேரும் இப்படி சிரிக்கிறீங்க..?” என அவன் புரியாமல் கேட்க படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த வைதேகிக்கும் அவர்கள் எதற்காக சிரிக்கின்றனர் என்று புரியவே இல்லை.

காயத்ரியோ “இதோ அண்ணியே வந்துட்டாங்க.. அவங்க கிட்டயே கேட்டுக்கோங்க..” என்றவாறு டைனிங் டேபிளில் இருந்த ஆப்பிள் ஒன்றை எடுத்துக் கடிக்கத் தொடங்க கஜனோ சிரிப்பை அடக்க முடியாது தொடர்ந்து சிரித்த வண்ணமே இருந்தாள்.

சாஷ்வதனோ புரியாது பின்னால் வந்த வைதேகியைத் திரும்பிப் பார்த்து,

“எதுக்கு இப்படி சிரிக்கிறாங்கன்னு தெரியலடி..” எனக் கூற அப்போதுதான் அவனை முழுமையாக பார்த்தவள் அதிர்ந்து போய் தன்னுடைய வாயில் கரத்தைப் பதித்தாள்.

“அச்சோ என்னோட குங்குமம்… உங்க ஷர்ட்ல இருக்கு… அதை பாத்துதான் சிரிக்கிறாங்க போல..” எனப் பதறியவாறு கூறியவளுக்கு முகம் முழுவதும் சிவந்து போனது.

இவர்கள் என்னவெல்லாம் நினைத்து சிரிக்கிறார்களோ என எண்ணி சிவந்து போனவள் மீண்டும் அறைக்குள் ஓடிவிட சாஷ்வதனுக்குக் கூட சிரிப்பு வந்துவிட்டது.

“டேய் ஓவரா பண்ணாதடா.. ஏதோ தெரியாம பட்டுருச்சு..” எனத் திணறியவாறு கூறியவன் தன்னுடைய கோப்புகளை அங்கே வைத்துவிட்டு வேகமாக மீண்டும் தன்னுடைய அறைக்குள் நுழைய காயத்ரியும் கஜனும் மீண்டும் கொல்லென நகைத்தனர்.

😍💜💜😍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 36

No votes so far! Be the first to rate this post.

1 thought on “03. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ.!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!