விஷம் – 08
அவனுடைய ஒற்றைத் தொடுகையில் தடுமாறி தலை கவிழ்ந்தவளைப் பார்த்தவனுக்கோ அதீத வியப்பு.
“அச்சு..?” அவளை மெல்ல அழைத்தான் அவன்.
“ம்ம்..?”
“நீ இப்படி நிலத்தையே பாத்துட்டு இருந்தா என்னால எப்படி மருந்து போட முடியும்..?” என அவன் கேட்க,
சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவளுக்கு கூச்சமாக இருந்தது.
“சாரி..” என்றவள் விழிகளை மூடி நிமிர்ந்து அமர அவளுடைய இதழ்களின் ஓரத்தில் மருந்தை தடவியவனுக்கும் அவளை தீண்டிய விரல் சிலிர்க்கத்தான் செய்தது.
அதே கணம் அவளுடைய புடவை தலைப்போ தோளை விட்டு விலகி தரையைத் தொட அப்போதுதான் அவள் அணிந்திருந்த பிளவுஸ் மிகவும் பெரிதாக இருப்பதைக் கண்டு அவனுக்கோ உதடுகள் சிரிப்பில் விரிந்தன.
அவளோ பதறி முந்தானையை எடுத்து மீண்டும் தோளைச் சுற்றி போர்த்திக் கொள்ள,
“மம்மியோட பிளவுஸ் உனக்கு ரொம்ப பெருசா இருக்கே..” என்றான் அவன்.
“ம்ம்… பட் அந்த கிழிஞ்ச ட்ரெஸ்ஸ போட்டுக்கறதுக்கு இது பரவாயில்லையேன்னு போட்டுக்கிட்டேன்..” என்றாள் அவள்.
“என்னோட டி-ஷர்ட் தரவா..? அது கொஞ்சம் உனக்கு ஓகேவா இருக்கும்னு நினைக்கிறேன்..” என்றான் அவன்
அவனுடைய ஆடையை அவள் எப்படி அணிவது..?
“இல்ல இதுவே போதும்..” சட்டென மறுத்தாள் அவள்.
“ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் உன்னோட ட்ரெஸ்ஸுக்கு என்ன ஆச்சுன்னு உங்க அம்மா கேட்கத்தானே போறாங்க.. அப்போ என்ன சொல்லுவ..?”
“தெரியல.. அவங்க பயப்படாத மாதிரி ஏதாவது சொல்லி சமாளிக்கணும்..”
பெருமூச்சோடு கூறினாள் அவள்.
அதே கணம் யாழவனின் அன்னையோ அந்த அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைய “டூ மினிட்ஸ்..” என அவளிடம் கூறியவன் தன்னுடைய ஃபோனை எடுத்துக் கொண்டு சற்றே நகர்ந்து சென்றான்.
“மருந்து போட்டுட்டானாமா..?” எனக் கேட்டவாறு வந்த ரூபாவதி சூடான காபி கப்பை அவளிடம் கொடுக்க அவளுக்கோ மறுக்கத் தோன்றவில்லை.
கத்திக் கதறி அவளுடைய தொண்டை காய்ந்து போய் இருந்தது.
ஏதாவது அருந்தினால்தான் அவளுக்கு நன்றாக இருக்கும் என்று தோன்ற மறுக்காமல் காபி கப்பை வாங்கிக் கொண்டவள் அவரிடம் நன்றியைத் தெரிவித்துவிட்டு காபியை அருந்தினாள்.
“சுகர் எல்லாம் போதுமாமா..? இல்லனா ஏதாவது ஆட் பண்ணனுமா..?” எனக் கேட்டார் அவர்.
“இல்ல ஆன்ட்டி எல்லாமே சரியா இருக்கு… ரொம்ப தேங்க்ஸ்.. இந்த டைம்ல உங்க வீட்டுக்கு வந்து உங்களை சிரமப்படுத்திட்டேனா..?” எனக் கேட்டாள் அவள்.
“எங்களுக்கு ஒரு சிரமமும் இல்ல.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா..?” என இரகசியமான குரலில் அவர் அவளிடம் கேட்க அவளோ புரியாமல் அவரைப் பார்த்தவள்,
“நானா..? என்னால என்ன ஹெல்ப் உங்களுக்கு பண்ண முடியும்..?” எனக் கேட்டாள்.
“இல்லம்மா ஒரு பொண்ணைக் கண்டு பிடிக்கணும்.. நீ இவனோட ஹாஸ்பிடல்லதானே வேலை பாக்குற.. நான் சொல்ற பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சு சொல்றியா..?” என அவர் கேட்க,
“சரிமா சொல்லுங்க.. எனக்குத் தெரிஞ்சுதுன்னா கண்டிப்பா சொல்றேன்…” என்றாள் அவள்.
“என் பையன இத்தன வருஷமா கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்றேன்.. கல்யாணமே வேண்டாம்னு இருந்தவன் இன்னைக்குத்தான் ஒரு பொண்ண பத்தி ரொம்ப நல்லா பேசினான்.. ஃபர்ஸ்ட் டைம் என்கிட்ட ஒரு பொண்ண பத்தி பேசி இருக்கான்னா பார்த்துக்கோயேன்.. இதுவரைக்கும் அவன் என்கிட்ட எந்த பொண்ணைப் பத்தியும் பேசினதே கிடையாது..”
அவளுக்கோ புருவங்கள் வியப்பால் உயர்ந்தன.
பல்கனியில் நின்று அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த யாழவனின் முதுகைப் பார்த்துவிட்டு அவனுடைய அன்னையைப் பார்த்தவள்,
“அந்த பொண்ணோட பேரு என்னன்னு தெரியுமா..?” எனக் கேட்டாள்.
“இல்லையேம்மா.. என்கிட்ட அதெல்லாம் இவன் சொல்லலையே..”
“அந்தப் பொண்ண பத்தி வேற ஏதாவது சொன்னாரா..?” எனக் கேட்டாள் அர்ச்சனா.
“இந்த ஹாஸ்பிடலோட ஓனர் நான்தான்னு தெரிஞ்சும் எனக்கே ட்ரீட்மென்ட் கொடுக்க மாட்டேன்னு சொன்னாம்மா.. செம்ம தில்லுமா அந்தப் பொண்ணுக்கு… அப்படின்னு சொன்னான்..” என யாழவன் கூறியதை ரூபாவதி அர்ச்சனாவிடம் கூறியதும் அவளுக்கோ உடல் விதிர்விதிர்த்துப் போனது.
“என் பையனுக்கு ட்ரீட்மென்ட் பாக்க மாட்டேன்னு சொன்ன அந்த பொண்ணுதான் யாருன்னு எனக்குத் தெரியணும்.. உன்னால முடிஞ்சா நாளைக்கு விசாரிச்சு சொல்றியா..? என்னோட ஃபோன் நம்பர் தரேன்..” என்றதும் அவளுக்கு புரையேறிவிட்டது.
அவன் தன்னைத்தான் கூறியிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டவளுக்கு சட்டென கன்னங்கள் சிவந்து விட தடுமாறியவாறு காபி கப்பை இறுகப் பற்றிக் கொண்டாள் அவள்.
“என்னம்மா ஆச்சு..?”
“ஒ.. ஒன்னும் இ…ல்ல ஆன்ட்டி..”
“அப்போ நாளைக்கு அந்த பொண்ணு யாருன்னு விசாரிச்சு சொல்றியா..?”
அவளோ பேச முடியாது தடுமாற அக்கணம் அந்த இடத்திற்கு வந்த யாழவனோ அவள் தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டு புருவம் சுருக்கியவன்,
“அவகிட்ட என்னம்மா கேட்டீங்க..?” எனக் கேட்டான்.
அவரோ “நான் எதுவுமே கேட்கலையே..” என்று விட இப்போது அர்ச்சனாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“மாம் ஒழுங்கா உண்மைய சொல்லுங்க.. ஏதோ எக்குத் தப்பா கேட்டுருக்கீங்க.. என்ன கேட்டீங்கன்னு சொல்லுங்க..” என அவன் பிடிவாதமாகக் கேட்க,
“இல்லடா இன்னைக்கு ஒரு திமிர் புடிச்சவ உனக்கு டிரீட்மென்ட் பாக்க மாட்டேன்னு சொன்னான்னு சொன்னியே.. அந்தப் பொண்ணு யாருன்னு நம்ம அர்ச்சனாகிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்..” என ரூபாவதி கூறியதும் இவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“ஓ மை காட் மாம்.. உஷ்.” என அவரை அடக்க முயன்றான் அவன்.
அவரோ அணை உடைந்த வெள்ளமாக அனைத்தையும் கட்டுப்பாடு இன்றி கூறி முடித்திருக்க இவனுக்கோ அசடு வழிந்தது.
“சொல்லுங்க யாழவன் சார்.. யாரு அந்த திமிர் பிடிச்ச பொண்ணு..? அவ பேரு உங்களுக்கு தெரியுமில்ல..?” என அர்ச்சனா கேட்க,
“ஊப்ஸ்… சாரி அர்ச்சனா… தப்பா எடுத்துக்காத..” என்றவன்,
“மாம் அந்த பொண்ணே இவதான்..” என்றான் யாழவன்.
இப்போது அதிர்வது ரூபாவதியின் முறையாகிப் போயிற்று.
“அய்யய்யோ என்னடா சொல்ற..?” சன்னமாக அலறினார் அவர்.
“என்ன எங்க சொல்ல விட்டீங்க..?”
“ஹி.. ஹி.. அந்தப் பொண்ணு நீயாம்மா..? சாரிமா.. அது நீன்னு தெரியாம திமிர் புடிச்ச பொண்ணுன்னு சொல்லிட்டேன்..” என்றவர் அசடு வழிய சிரித்தபடி கூற,
“வாய் விட்டுச் சிரித்தவள்,
“இட்ஸ் ஓகே ஆன்ட்டி.. இருந்தாலும் உங்க பையனுக்கு நான்தான் ட்ரீட்மெண்ட் பார்த்தேன்.. அதை உங்ககிட்ட இவர் சொல்லலையா..?” என அவள் சிரித்தவாறு கேட்க இல்லை என்றார் அவர்.
அவனோ பேச முடியாது சிகையை அழுத்தமாகக் கோதி விட்டுக் கொண்டான்.
சற்று நேரம் யாழவனின் அன்னையும் அர்ச்சனாவும் இடைவிடாமல் பேசி சிரித்துக்கொண்டே இருந்தனர்.
ரூபாவதியுடன் பேசியதில் அவளுக்கோ மனதில் இருந்த அச்சமும் கலக்கமும் முற்றிலுமாக மறைந்தே போயிருந்தது.
அவருடைய வெளிப்படையான பேச்சு அவளை கவரவும் செய்தது.
அப்போதுதான் நேரம் சென்று கொண்டே இருக்கிறது என்பதை உணர்ந்து யாழவனைப் பார்த்தவள், “என்னை எங்க வீட்டுல ட்ராப் பண்றீங்களா..?” எனக் கேட்டாள்.
“போகலாமே.. ஜஸ்ட் 5 மினிட்ஸ் மட்டும் வெயிட் பண்ணு வந்துடுறேன்..” என்றவன் கீழே சென்றுவிட மீண்டும் ரூபாவதியுடன் பேசத் தொடங்கிவிட்டாள் அவள்.
ஐந்து நிமிடம் என்றவன் 15 நிமிடங்கள் கழித்தே மேலே வந்தான்.
வந்தவனின் கரத்தில் ஒரு பை இருந்தது.
“அச்சு இத போட்டுக்கோ.. ட்ரெஸ்ஸிங் ரூம் அங்க இருக்கு…” என அவன் கூற,
அவனைப் புரியாமல் பார்த்தவள் அவன் கொடுத்த பையை வாங்கி அதனைத் திறந்து பார்த்தாள்.
அதற்குள் அவளுக்கென அளவெடுத்து தைத்தாற் போல தாதி அணியும் ஆடை இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள்.
“இ.. இது எப்படி..?” என அவள் அதிர்ச்சியாகக் கேட்க,
“நான்தான் இங்க இருக்க டிசைனர்கிட்ட சொல்லி ட்ரெஸ் ஸ்டிச் பண்ண சொன்னேன்.. ஒன் ஹவர்ல ஸ்டிச் பண்ணிக் கொடுத்துட்டாங்க.. இப்போ நீ உங்க அம்மாகிட்ட ஈஸியா ரீசன் சொல்லித் தப்பிக்கலாம்ல..” என்றதும் அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
நெகிழ்ந்து விட்டாள்.
இன்றுதான் இவனைப் பார்த்தேன். எனக்காக ஏன் இவ்வளவு செய்கின்றான்..?
அவளுக்கு காரணம் புரியவில்லை.
நெஞ்சு நிறைய நன்றி முட்டியது.
அந்தத் தாதியாடையை எடுத்து வருடிப் பார்த்தவளுக்கு இன்னும் வியப்பு கூடியது.
மிகவும் மென்மையான துணியில் தைக்கப்பட்டு இருந்தது அந்தத் தாதி ஆடை.
ஆனால் அவள் அணிந்த அதே நிறத்தில் சரியான அளவில் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தைத்திருப்பதைக் கண்டு வியந்தவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.
அவள் ஒரு ஆடை தைக்கக் கொடுத்தால் அதை அந்த டெய்லரிடமிருந்து வாங்கி எடுப்பதற்குள் அவளுக்கு போதும் போதும் என்று ஆகிவிடும்.
இதோ இவன் துணியைக் கூடக் கொடுக்காமல் ஒரு மணி நேரத்தில் ஆடையை தைத்து எடுத்து வந்து விட்டானே.
பணம் இருந்தால் அனைத்தும் சாத்தியம்தான் போலும் என எண்ணிக் கொண்டவள் அவனை நன்றியோடு பார்த்துவிட்டு அந்த ஆடையுடன் அவன் காட்டிய அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அந்தப் புடவையை அவிழ்த்துவிட்டு தாதி ஆடையை அணிந்து வெளியே வந்தவளுக்கு முகத்தில் புன்னகை விரிந்திருந்தது.
‘எல்லாத்துக்கும் சேர்த்து தேங்க்ஸ் சொல்லணும்..’ என மனதிற்குள் நினைத்தவாறு அவனை நெருங்க,
“நர்ஸ் யூனிஃபார்ம்ல கூட நீ ரொம்ப அழகா இருக்கமா..” என்றார் ரூபாவதி.
“தேங்க்ஸ் ஆன்ட்டி..”
“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?”
“இல்ல ஆன்ட்டி..”
“அப்போ யாரையாவது லவ் பண்றியாம்மா..?”
“மாம் வாட் இஸ் திஸ்..? இப்ப எதுக்கு இதெல்லாம் அவகிட்ட கேக்குறீங்க..?”
“நீ கொஞ்சம் சும்மா இருடா.. நீ சொல்லுமா.. நீ யாரையாவது லவ் பண்றியா..?”
“லவ் பண்ற ஐடியா எல்லாம் கிடையாது.. அம்மா பார்க்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..” என்றாள் அவள்.
“அப்போ என்னோட பையன கல்யாணம் பண்ணிக்கிறியா..?” என ரூபாவதி கேட்டதும் அவளுக்கோ அதிர்ச்சியில் விழிகள் விரிந்து விட்டன.
“மாம் ஸ்டாப் இட்..” அதட்டினான் அவன்.
“சும்மா இருடா.. உண்மைய சொல்லு… உனக்கு இந்தப் பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு தானே..? இன்னைக்கு ஹாஸ்பிடல் போனதுல இருந்து வீட்டுப் பக்கமே வரல.. இந்தப் பொண்ண பத்திதான் ஃபோன்ல கூட பேசின… இப்போ வரும்போது இவ கூடவே வந்திருக்க.. ஒரு நாள்தான் பார்த்த.. அதுக்குள்ள இவள அச்சுன்னு கூப்பிடுற..?
இந்தப் பொண்ணுக்கு யூனிஃபார்ம் எல்லாம் தைச்சு எடுத்துட்டு வந்திருக்க… இதுவரைக்கும் எனக்காக ஒரு சாரி பிளவுஸ் தைச்சு எடுத்து வந்து கொடுத்துருப்பியா..? அம்மாவை பார்க்க இந்தியாவுக்கே வராத பையன் ஒரு பொண்ணுக்காக இவ்வளவு விழுந்து விழுந்து பண்றேன்னா அதுக்கு பேரு லவ் தானே….?” என அவர் மூச்சு விடாமல் கூற அதிர்ந்து நின்று விட்டான் அவன்.
அவளுக்குமே அதிர்ச்சிதான் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
பெருமூச்சை உள்ளே இழுத்தவன் “இப்போ வரைக்கும் லவ் பண்ணத் தோணல மாம்.. இனி தோணும்னு தோணுது… அப்படி தோணிச்சுன்னா கண்டிப்பா சொல்றேன்..” என அழுத்தமாகக் கூறியவன் அர்ச்சனாவைப் பார்க்க அவளுக்கோ மேனி படபடத்து விட்டது.
“ஆ.. ஆ..ஆன்ட்டி நான் கி.. கிளம்புறேன்..” என்றவள் வேகமாக முன்னே நடக்க சிறு புன்னகையோடு அவளுடன் இணைந்து நடக்கத் தொடங்கினான் யாழவன்.
ஒன்றாக நடந்து செல்லும் இருவருடைய ஜோடிப் பொருத்தத்தையும் கண்டு ரூபாவதியின் உள்ளமோ பரவசம் கொண்டது.
‘நம்ம பையன் காதல்ல விழுந்துட்டான்.. யாஹூஊஊஊ’ மனதிற்குள் ஆர்ப்பரித்தார் அவர்.
அதானே. இந்த வினிமா கதைகளில் ஹீரோ லவ் பண்ணலனா தான் ஆச்சரியம். சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👌👏👏👏👏👏👏😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️❤️
Supero super vini sis