விஷம் – 12
யாழவனோ இன்றோடு மருத்துவமனைக்குச் சென்று மூன்று நாட்கள் ஆகியிருந்தன.
அனைத்து வேலைகளையும் வீட்டில் இருந்தே பார்த்துக் கொண்டான் அவன்.
அங்கே சென்றால் மனதைப் பிசையும் உணர்வு தோன்றுவதை அவனால் தவிர்க்க இயலாமல் போனதன் காரணமாக மருத்துவமனைக்குச் செல்வதையே நிறுத்தி விட்டான் அவன்.
அனைத்துப் பெண்களையும் போல அர்ச்சனாவையும் கடந்து விட முடியவில்லையே என அவனுடைய மனம் அக்கணமும் அங்கலாய்த்துக் கொண்டுதான் இருந்தது.
அதே கணம் அவனுடைய அறைக் கதவு தட்டப்பட “எஸ் கம் இன்..” என்றான் அவன்.
உள்ளே வந்த ரூபாவதியோ அவன் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருப்பதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவர்,
“என்னடா நீ இன்னும் ரெடி ஆகலையா..? இந்த கோலத்துல இருக்க.. குளிச்சிட்டு ரெடி ஆகு.. பொண்ணு பார்க்கப் போகணும்ல..?”
“வாட்..?” என அதிர்ந்தான் அவன்.
“என்ன வாட்..? நீதானே கல்யாணம் பண்ணிக்கிறேன் நல்ல இந்தியப் பொண்ணா பாருங்கன்னு சொன்ன.. பொண்ணு எல்லாம் பாத்தாச்சு.. நீயும் வா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்.. இன்னும் பத்து நிமிஷத்துல அப்பாவும் வீட்டுக்கு வந்துருவாரு..” என ரூபாவதி கூற அவனுக்கோ எரிச்சலாக இருந்தது.
“மூனே நாள்ல பொண்ணு தேடி கண்டுபிடிச்சிட்டீங்களா..? வாட் இஸ் திஸ் மா..? என்கிட்ட போட்டோ கூட காமிக்கலையே.. ஃபர்ஸ்ட் பொண்ணை இங்க வரச் சொல்லுங்க.. எனக்குப் பேசிப் பார்த்துப் புடிச்சதுன்னா ஓகே சொல்றேன்.. புடிக்கலைன்னா என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. பிடிச்சா மட்டும்தான் பண்ணிப்பேன்..” என்றான் அவன்.
“டேய் என்ன விளையாடுறியா..? இதென்ன நீ இருக்க லண்டன்னு நினைச்சியா..? தமிழ்நாடுடா.. இங்க அப்படியெல்லாம் பொண்ண வீட்டுக்கு வர சொல்ல முடியாது..”
“மாம் ப்ளீஸ்.. முடியாதுன்னா விடுங்க.. நான் லண்டன்லேயே பொண்ணு பார்த்துக்கிறேன்..” என அவன் கூற,
அவருக்கோ சிறு மாரடைப்பே வந்துவிட்டுச் சென்றது.
“பாவி ஏன்டா என் உயிரை வாங்குற..? இப்ப என்ன அந்தப் பொண்ண நீ மீட் பண்ணனும் அவ்வளவுதானே..? எங்க கூட வா.. அந்தப் பொண்ண பாரு.. பிடிச்சதுன்னா ஓகே சொல்லு.. இல்லன்னா வேற பொண்ண பாத்துக்கலாம்..” என்றார் அவர்.
“எனக்கு என்னவோ அந்தப் பொண்ணை பிடிக்கும்னு தோணல மாம்..” என பெண்ணைப் பார்க்க முதலே அவன் கூற ரூபாவதிக்கோ கோபம் வந்துவிட்டது.
“டேய்.. என்ன டென்ஷன் பண்ணாத.. பொண்ணு போட்டோ கூட பாக்காம பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்..? அப்போ நீ நிஜமாகவே அர்ச்சனாவதான் லவ் பண்றியா..? நான் வேணும்னா அர்ச்சனாவோட அம்மாகிட்ட பேசட்டுமா..?” என அவர் கேட்க,
“டாமிட்… ப்ச்… நான் அவள காதலிக்கிறேன்னு உங்ககிட்ட சொன்னேனா..?”
“இல்லதான்.. சரி இப்ப நான் என்னதான்டா பண்ணனும்..?”
“நீங்க எதுவும் பண்ண வேணாம்.. நான் வரேன்.. வந்து நீங்க பார்த்து வெச்ச பொண்ண பாக்குறேன்.. எனக்குப் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிப்பேன்.. இல்லைன்னா நோதான்..” எனக் கண்டிப்பான குரலில் கூற அவன் வருவதற்கு சம்மதித்ததே போதும் என நினைத்தவர்,
“ரொம்ப நன்றிப்பா.. கிளம்பு..” எனக் கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.
சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த யாழவனின் தந்தையோ,
“ரூபா உன் பையன் ரெடி ஆயிட்டானா..?” என ரூபாவதியிடம் கேட்டார்.
“ரெடியாகுறான்ங்க.. பத்து நிமிஷத்துல வந்துருவான்..” என்றார் அவர்.
“இந்த சம்பந்தம் ஓகே ஆயிடணும்.. என்னோட பிஸ்னஸ் பார்ட்னரோட பொண்ணுதான் ஆர்த்தி. ரொம்ப அழகான பொண்ணு.. நம்ம ஸ்டேட்டஸுக்கு ஈக்குவலா இல்லைன்னாலும் நமக்குப் பிறகு அடுத்த ரிச் ஃபேமிலி லிஸ்டில் இவங்கதான் இருக்காங்க..”
“வசதியா முக்கியம்..? பொண்ணு குணமான பொண்ணா இருந்தா போதும்.. நம்மகிட்ட இல்லாத பணமா..?” என்றார் ரூபா.
“முட்டாள் தனமா பேசாத… என் பையனோட ரேஞ்ச் என்ன தெரியுமா..? அவன் எந்த நாட்டுக்குப் போனாலும் அவனுக்கு ராஜ மரியாதை.. அவனோட மெடிசின்ஸ்காக எத்தனை கன்ட்ரிஸ் லைன்ல நிக்குது தெரியுமா..? அப்படிப்பட்ட பையனுக்கு சாதாரண பொண்ணையா கட்டி வைக்கிறது..? அவனோட ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி லண்டன்லயே பொண்ணு தேடி இருப்பான்னு நினைச்சேன்.. ஆனா இந்தியப் பொண்ணு வேணும்னு கேட்டுட்டான்..” என அவர் வருத்தத்துடன் கூற ரூபாவதிக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
எப்படியும் இவருடன் இதைப் பற்றிப் பேசினால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார் என்பது புரிந்து அவர் மௌனமாகி விட,
சற்று நேரத்தில் தயாராகி வெளியே வந்தவனைப் பார்த்த ரூபாவதிக்கோ தூக்கி வாரிப் போட்டது.
கண்களில் கூலர்ஸ் அணிந்து ஆஷ் நிற டி-ஷர்ட்டும் முட்டிவரை பிளாக் நிறத்தில் இருந்த ஷார்ட்ஸ்ஸும் அதற்கேற்ற நிறத்தில் ஷூ அணிந்து வந்தவனைக் கண்டு அவருக்கோ விழிகள் பிதுங்கிவிட்டன.
“ஐயோ என்னடா ட்ரெஸ் இது..? உன்ன பொண்ணு பாக்க வரச் சொன்னா பீச்ல வாக்கிங் போற மாதிரி ரெடியாகி வந்திருக்க..” என ரூபாவதி கோபமாகக் கேட்க,
“ஏன் இந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன குறை..?” என தன்னைக் குனிந்து பார்த்துக் கேட்டான் அவன்.
“அடேய்.. ஒழுங்கு மரியாதையா போய் வேட்டி கட்டிட்டு வா..”
“வாட்..? அடிக்கிற வெயிலுக்கு வெட்டி சட்டையா..? வாட் இஸ் திஸ் மா..?”
“டேய் டேய் அது வெட்டி சட்டை இல்லடா.. வேட்டி சட்டைடா.. யாழவா என்னோட பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிற..” என ரூபாவதி திட்டத் தொடங்க,
“பன்ச்.. அவனுக்கு எது வசதியோ அவன் அதையே போட்டுக்கட்டும்.. அவன எதுக்கு போர்ஸ் பண்ற..?”
“என்னங்க நீங்களும் புரிஞ்சுக்காம பேசுறீங்களே.. இப்படியே பொண்ணு பார்க்க போக முடியுமா..?”
“அவன் ஃபாரின்ல படிச்சு ஃபாரின்ல வளர்ந்தவன்டி. அவனோட ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் இப்படித்தான் இருக்கும்.. அதெல்லாம் அவங்க புரிஞ்சுப்பாங்க.. நீங்க வா..” என்றவர் காரை நோக்கி நடக்கத் தொடங்கி விட தந்தைக்கும் மகனுக்கும் இடையே சிக்கி எரிச்சலாகிப் போனார் ரூபாவதி.
அரை மணி நேரத்தில் அந்தப் பெண்ணின் வீடும் வந்திருந்தது.
மிகப் பெரிய வீடுதான்.
அவர்கள் சென்றதும் அத்தனை வரவேற்பு அவர்களுக்காக காத்திருந்தது.
யாழவனின் ஆடையைக் கூட அவர்கள் பெரிதாக கவனத்திற் கொள்ளவே இல்லை.
மிகப்பெரிய சம்பந்தம் அல்லவா இது.
ஆடையைப் பெரிதாக எடுத்துக் கொள்வார்களா என்ன..?
யாழவன் ஜட்டியுடன் சென்றிருந்தால் கூட வரவேற்று உபசரிக்கத்தான் செய்வார்கள்.
விழுந்து விழுந்து கவனித்தார்கள்.
சற்று நேரத்தில் இரு குடும்பமும் பேசத் தொடங்கி விட தன்னுடைய அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன்,
“ஆர்த்தி காபி எடுத்துட்டு வாம்மா…” என்ற குரலில் ஃபோனை வைத்துவிட்டு காபி கப்புடன் வந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தான்.
அழகான பெண் தான்.
புடவை கட்டி இருந்தாள்.
அவனைப் பார்த்ததும் பளிச்சென சிரித்தாள்.
“ஹாய் ஐ அம் ஆர்த்தி..” அவளாகவே அறிமுகமும் செய்து கொண்டாள்.
“ஹாய் ஐ அம் யாழவன் பிரான்சிஸ்…”
“தெரியுமே.. உங்கள பத்தி நிறைய ஆர்டிகள்ஸ் படிச்சிருக்கேன்..” என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்.
பதிலுக்கு சிரித்தவன் அவள் கொடுத்த காபி கப்பை எடுத்துக் கொள்ள, இரு குடும்பத்தினருக்கும் முகத்தில் புன்னகை பரவி இருந்தது.
“எங்களுக்கு மாப்பிள்ளைய ரொம்ப பிடிச்சிருக்கு.. மாப்பிள்ளைக்கு பொண்ண புடிச்சிருக்கா..?” என ஆர்த்தியின் தந்தை கேட்க,
“நான் பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..” என்றான் யாழவன்.
“தாராளமா பேசுங்க.. ஆர்த்திமா மாப்பிள்ளையை மாடிக்கு அழைச்சுட்டுப் போய் பேசு..” என அவர் கூற யாழவனை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள் ஆர்த்தி.
அவளை ஆழ்ந்து பார்த்தான் அவன்.
ஏனோ அர்ச்சனாவின் நினைவு எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. சத்தியமா உங்களை மாதிரி ஒருத்தர் என்னோட லைஃப் பார்ட்னரா வருவார்னு நான் நினைச்சுக் கூடப் பாக்கல.. உங்க கூட ஒரு செல்பி எடுத்துக்கட்டுமா..?” என அவள் கேட்க,
“நான் இன்னும் என்னோட முடிவ சொல்லவே இல்லையே..” என்றான் அவன்.
“இட்ஸ் ஓகே.. நீங்க சொல்லும்போது சொல்லுங்க.. இப்போ ஒரு செல்பி எடுத்துக்கலாமா..? என அவள் மீண்டும் கேட்க,
“அஃப்கோர்ஸ்…” என்றான் அவன்.
அவளோ தன்னுடைய ஃபோனை கையில் எடுத்தவள் அவனை மிக மிக நெருங்கி நின்று அவனுடைய மார்பில் சாய்ந்தவாறு போஸ் கொடுக்க,
‘வாட் ஜஸ்ட் ஹக்கா..? இங்கெல்லாம் கை புடிச்சாலே தப்பு நீங்க கட்டிப்பிடிப்பீங்களா..?’ என கோபமாகக் கேட்ட அர்ச்சனாவின் முகம் அந்த நொடி அவனுடைய மனதில் தோன்றி மறைந்தது.
செல்பி எடுத்து முடித்ததும் இயல்பாக அவனை ஒட்டி நின்றவள் அவனுடைய கரத்தைப் பிடித்துக் கொள்ள அவனுடைய புருவங்கள் உயர்ந்தன.
எல்லா இந்தியப் பெண்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் போலும் என எண்ணிக் கொண்டவனுக்கு விழிகள் சிரித்தன.
“ஐ லைக் யு ஆர்த்தி.. நீ என்ன மாதிரியே ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்க..” என்றவன் ஆர்த்தியின் கரங்களைத் தானும் பற்றிக் கொண்டான்.
“இந்த லவ் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல.. என்னோட வாழ்க்கை சுவாரசியமா இருக்கணும்.. அப்படி ஒரு பார்ட்னரைத்தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன்..”
“ஓஹ்…” என்றவள் அவனுடைய மார்பில் அழுத்தமாக தன்னுடைய கரத்தைப் பதித்து,
“என் கூட உங்க வாழ்க்கை ரொம்ப சுவாரசியமாக போகும்னு தோணுது..” என அவனுடைய மார்பை வருட அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பற்றி விலக்கியவன்
“ஒரே மாதிரி கேரக்டர் இருக்கிற நாம ஒன்னு சேர்ந்தா எப்படி இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்..? சோ எனக்கு இது செட் ஆகும்னு தோணல சாரி..” என்று விட சட்டென அவளுடைய முகமோ மாறிப்போனது.
“ஏன் இப்படி சொல்றீங்க..? நான் அழகா இல்லையா..? உங்க அளவுக்கு இல்லைனாலும் நானும் கோடீஸ்வரிதான்..” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“இங்க மணி மேட்டர் கிடையாது.. உன்னோட அழகும் மேட்டர் கிடையாது.. எத்தனையோ அழகான பொண்ணுங்களையும் பில்லியனர்களையும் நான் பார்த்திருக்கேன்.. என்னோட டேஸ்ட் வேற ஆர்த்தி..” என்றவன் “சாரி..” என்ற கூற்றோடு கீழே செல்ல, அவளுக்கோ ஆத்திரமாக வந்தது.
அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இவ்வளவு பெரிய கோடீஸ்வரனை இழக்க அவள் சற்றும் தயாராக இல்லை.
எப்பாடுபட்டாவது அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியவள் சட்டென அவனுடைய வழியை மறைத்து நின்றாள்.
“நவ் வாட்..?” என்றான் அவன்.
“கொஞ்ச நாள் டைம் எடுத்து யோசிச்சு பாருங்க.. ஒன்னும் அவசரம் இல்லை.. உடனே பிடிக்கலைன்னா எப்படி..? பழகி பார்க்கலாமே..” என்றாள் அவள்.
“இந்தப் பத்து நிமிஷத்துல சில விஷயங்கள புரிஞ்சுகிட்டேன்..” என அவன் கூற,
“வெறும் பத்து நிமிஷம் போதுமா..? டைம் எடுத்துக்கோங்க..” என்றாள் அவள்.
“பார்க்கலாம்…” என்றவன் சிறு தலையசைப்போடு கீழே சென்றுவிட அவளுக்கு பெருமூச்சு வெளிவந்தது.
****
மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்த அர்ச்சனாவுக்கோ விழிகள் யாழவனைத் தேடித்தேடி சோர்ந்து போயின.
இன்றோடு மூன்று நாட்கள் அவன் வரவே இல்லையே.
பானுமதியிடம் புலம்பித் தள்ளியவள் அதற்கு மேல் தாங்க முடியாது தலைமை வைத்தியரிடம் சென்று விட்டாள்.
“சார் என்கிட்ட யாழவன் சார் சில ஃபைல் கேட்டாரு.. ஆனா மூணு நாளா அவர் வரவே இல்லையே..?” என அவள் தயக்கத்துடன் கேட்க,
“யாழவன் சாருக்கு இன்னைக்கு பொண்ணு பார்க்க போறாங்களாம்.. இப்போதான் எனக்கு விஷயம் தெரிஞ்சுது.. ஏதாவது முக்கியமான பைல் அனுப்பனும்னா என்கிட்ட கொடுத்துடுங்க.. வீட்டுக்கே அனுப்பி வெச்சிடலாம்..” என அவர் கூற நொடியில் அவளுடைய முகம் வெப்பத்தில் வாடிய மென் மலரைப் போல சுருங்கிப் போனது.
💜💜
டோன்ட் ஒரி அச்சுமா. யாழவனின் கனவுப் பெண் நீ தான். அவன் எங்கே சுத்தினாலும் கடைசியில் உன் கிட்ட தான் வரணும். ஆனால் என்ன அவனோட அப்பா தான் வில்லனா இருப்பாரோ கதைக்கு. ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️❤️
Super sis