13. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!

4.6
(68)

அமிலம் – 13

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் வழக்கம்போல தன்னுடைய அலுவலகத்திற்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான் சாஷ்வதன்.

அவன் காலையில் எழுந்திருக்கும் போதே சோபாவில் அமர்ந்திருந்தாள் வைதேகி.

திகைத்து விட்டான் அவன்.

அவள் தூங்கினாளா இல்லையா என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது.

ஆனால் அவளோடு பேசும் எண்ணத்தை அறவே கை விட்டவன் எதுவுமே கேட்காது தன்னுடைய ஷர்ட் பட்டன்களை நிதானமாக போட்டுக் கொண்டான்.

அவளோ எதுவுமே பேசவில்லை. நேற்று இரவு சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் இன்றோ தன்னுடைய கைவிரல் நகங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய முகத்தில் அதிகமாக சோர்வு தெரிந்தது.

ஒரு நொடி நின்று அவளுடைய முகத்தை அழுத்தமாகப் பார்த்தவன் எதுவும் கூறாமல் வேகமாக வெளியேறிச் சென்று விட அப்போது கூட அவளுடைய பார்வை வேறெங்கும் அசையவே இல்லை.

கீழே சென்றவன் தன்னுடைய அன்னையை நாடிச் சென்றான்.

“அம்மா எனக்கு இன்னைக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தியா இருக்கு.. நீங்க வைதேகிய பார்த்துக்கோங்க.. அவ கொஞ்சம் டயர்டா இருக்குற மாதிரி எனக்கு பீல் ஆகுது…. நம்ம வள்ளியம்மாகிட்ட சொல்லி சமைச்சதும் சாப்பாட்டை மேலே கொடுத்து விடுங்க.. அவ அங்கேயே சாப்பிடட்டும். ரெண்டு நாளைக்கு அப்புறமா அவளை கிளினிக் கூட்டிட்டுப் போகலாம்..” என்றான் அவன்.

“சரிப்பா நான் பாத்துக்குறேன்.. நீ கவலைப்படாத.. ‌ இதெல்லாம் நீ எனக்கு சொல்லணும்னு அவசியமே கிடையாது..” என்றார் கலா.

அதன் பின்னர் அவன் அலுவலகத்திற்குச் சென்று விட காலை நேர உணவைத் தானே எடுத்துச் சென்று வைதேகியை உண்ண வைத்துவிட்டு வந்தார் கலா.

கலாவுக்கோ தன்னுடைய மகனுடைய முகத்திலும் மருமகளுடைய முகத்திலும் மலர்ச்சி இல்லாததைப் போலவே அவருக்கு தோன்றலாயிற்று.

இருவருக்கும் ஏதாவது பிரச்சனையாக இருக்கக் கூடுமோ என சிந்திக்க ஆரம்பித்திருந்தார் அவர்.

அதன் பின்னர் அவருக்கு தொலைக்காட்சியில் நேரம் கழிந்து போக வைதேகியின் பொழுதோ தனிமையில் கழியத் தொடங்கியது.

எத்தனையோ வழிகளில் சிந்தித்துப் பார்த்து விட்டாள் அவள்.

எப்படிச் சிந்தித்தும் அவளுக்கு பதில்தான் கிடைக்கவே இல்லை.

மதியநேரம் நெருங்கி விட்டதை உணர்ந்தவள் இனியும் தான் கீழே செல்லாமல் இருந்தால் நிச்சயமாக அத்தை உணவோடு வந்து விடுவார் என்பதை உணர்ந்தவள் தன்னை குனிந்து பார்த்தாள்.

நேற்று அணிந்திருந்த அதே ஆடைகளைத்தான் இப்போதும் அணிந்து இருந்தாள் அவள்.

குளித்து விடலாம் என எண்ணிக்கொண்டு துவாலையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தவள் ஷவரை திறந்து விட்டு சற்று நேரம் விழிகளை மூடி குளிர்ச்சியாக வரும் நீரின் கீழே நின்றாள்.

அவள் மேல் பட்டுத் தெறிக்கும் நீரோடு சேர்ந்து அவளுடைய கண்ணீரும் அளவில்லாமல் வழிந்தது.

தன்னை மறந்து அரை மணி நேரத்திற்கு மேலே நீருக்கடியில் நின்றவள் உடல் குளிரத் தொடங்கவும் பெருமூச்சோடு வேகமாக குளித்து முடித்துவிட்டு துவாலையை மார்பில் முடிந்தவாறு வெளியே வந்தாள்.

குளியலறைக் கதவைத் திறந்து வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன. ‌

அங்கே அறைக்குள் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தவாறு அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சாஷ்வதன்.

அவனைக் கண்டதும் பதறிப் போனவள் சட்டென தன்னுடைய மார்புக்கு குறுக்கே கரங்களை மறைத்தாற் போல வைத்துக் கொண்டவள் மீண்டும் குளியலறைக்குள் வேகமாக நுழைய முட்பட,

“நில்லு…” என ஒற்றை வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுத்து சத்தமாகக் கூறினான் அவன்.

குளியலறைக்குள் சென்று விடலாம் என வேகமாகத் திரும்பி நடக்கத் தொடங்கியவளின் நடை அவனுடைய ஒற்றை வார்த்தையில் அப்படியே அசைவற்று நின்று போனது‌.

கரங்கள் நடுங்கத் தொடங்க திரும்பிக் கூடப் பார்க்காது அப்படியே அசைவற்று நின்று இருந்தாள் அவள்.

அவனோ அவளுக்கு அருகே நிதானமான கால் அடிகளுடன் வந்தவன்,

“ னலுக் அட் மீ…” எனக் கூற மெல்லத் திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் அவள்.

அவனுடைய பார்வையோ அவளின் வெற்றுத் தோள்களின் மீது படிந்து சிறு சிறு துளிகளாக நீர் வடிந்து கொண்டிருந்த இடங்கள் மீதும் படரத் தொடங்க திணறிப் போனாள் வைதேகி.

மாலை நேரத்தில்தானே இவன் வந்திருக்க வேண்டும். இப்போது எதற்காக வந்தான் எனக் குழம்பியவள் எதற்கு தன்னை இப்படியே நிக்க வைத்திருக்கிறான் என எரிச்சல் அடைந்தவளாய் அவனுடைய பார்வையை சந்திக்க,

அவனுடைய பார்வையின் ஆழத்தில் அவளுக்கோ கரங்கள் மயிர்க் கூச்செறிந்தன.

“எதுக்காக என்னைக் கண்டதும் உன்னை மறைச்சுக்குற…? ஏன் நான் உன்ன பாக்க கூடாதா..?” என அவன் நிதானமாகத்தான் அவளிடம் கேள்வியைத் தொடுத்தான்.

ஆனால் அவளுக்கோ உள்ளுக்குள் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியது.

தன்னுடைய மனம் நோகும்படி எதையோ கூறப் போகின்றான் என்பதை உணர்ந்து கொண்டவள் “நா…. நான் போய் ட்ரஸ் மாத்திட்டு வந்துடுறேன்…” எனத் திணறியவாறு கூற அவளுடைய வலக்கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டவன் இடது கரத்தையும் தன் கரத்தால் சிறை பிடித்துக் கொண்டான்.

அவள் மார்புக்கு குறுக்காக மறைத்து கட்டி இருந்த அவளுடைய கரங்களை கீழே இறக்கியவன்,

“தாலி கட்டாதவன் எல்லாம் உன் கூட ஒன்னா இருந்து பிள்ளை வரைக்கும் போகும்போது லைசன்ஸ் வெச்சிருக்க நான் உன்ன பாக்கக் கூடாதா..?” எனக் கேட்க,

அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்.

கோபம் தாறுமாறாக அவளுக்குள் எழுந்தது.

ஒரு கணம் விழிகளை மூடித் திறந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள்,

“என்னோட கைய விடுங்க..” என இறுக்கமான குரலில் கூறினாள்.

“விடலைன்னா என்ன பண்ணுவ..?”

“நீங்க ஏன் இப்ப இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க..? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல..”

“நான் இப்படி எல்லாம் முன்னாடியே நடந்திருந்தா நீ என் கைய விட்டுப் போயிருக்க மாட்டேன்னு தோணுது.. கல்யாணமாகி முதல் ராத்திரி அன்னைக்கே உன் கூட லவ் மேக் பண்ணி இருந்திருக்கணும்..” என வார்த்தைகளை அவன் கடித்துத் துப்ப சலிப்போடு அவனைப் பார்த்தவள்,

“தயவு செஞ்சு என்னோட கைய விடுங்க..” எனச் சீறினாள்.

அவளால் அவனுடைய மாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தன்னுடைய விருப்பத்திற்கு முக்கியம் கொடுத்து இத்தனை மாதங்கள் விலகி நின்றவன் இப்போது கையைப் பிடித்து ரோட்டோர ரோமியோவைப் போல வம்பு செய்வதை சகிக்க இயலாது அவனை முறைத்துப் பார்த்தாள்.

“கமான் வைதேகி.. இன்னும் எதுக்கு இந்த நாடகம்.. எனக்குத்தான் இப்போ எல்லாம் உண்மையும் தெரிஞ்சு போயிடுச்சே… நீ இனி என்கூடவும் ஜாலியா இருக்கலாம்… தப்பில்லை..” என்றவனின் விரல் அவளுடைய கழுத்து வளைவை வருடி அப்படியே கழுத்துக்கு கீழே இறங்க பதறிப் போய் அவனுடைய கரத்தை பிடித்துக் கொண்டவளுக்கு விழிகள் கலங்கின.

வார்த்தைகள் வர மறுத்தன.

நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாகி நரகமாகிப் போனதைப் போல இருந்தது அவளுக்கு.

அவனுக்கு முன்பு அழுது விடக்கூடாது என கண்ணீரை இமைகளை சிமிட்டி உள்ளே இழுத்துக் கொண்டவள் அவனுடைய கரத்தை தட்டி விட்டு வேகமாக மீண்டும் குளியலறைக்குள் நுழைய முயன்ற கணம் அவளுடைய துவாலையை இறுகப் பிடித்துக் கொண்டான் சாஷ்வதன்.

நொடியில் அவிழ்ந்து விழ இருந்ததை பதறிப் பிடித்துக் கொண்டவளுக்கு இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்கத் தொடங்கியது.

“ஐயோ… நீங்க என்ன பண்றீங்கன்னு உங்களுக்குப் புரியுதா இல்லையா..?” என்ன அதட்டலாகக் கேட்க முயன்றவளுக்கு வார்த்தைகள் என்னவோ நடுங்கித்தான் வெளியே வந்தன.

“எனக்கு நல்லாவே புரியுது…. அப்போ புரியாதது எல்லாம் இப்போ தானே புரியுது..” என்றவன் மேலும் அந்தத் துவாலையை இறுக்கமாகப் பற்ற,

அவ்வளவுதான் அடக்கி வைத்த கண்ணீர் முழுவதும் பொலபொலவென வழியலாயிற்று அவளுக்கு.

“யூ ஹர்ட்டிங் மீ சாஷ்வதன்…. யூ ஹர்ட்டிங் மீ…” என்றவள் இதழ்கள் துடிக்க அழுதவாறு கூற அடுத்த நொடி அவளை விடு வித்தவன் “போடி…” என்றிருந்தான்.

பதறி அவிழ்ந்த துவாலையை இறுக மார்பில் முடிந்தவள் ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டாள்.

இதயம் பந்தயக் குதிரையைப் போலத் தடதடத்தது.

என்ன ஒரு இழிநிலை இது..?

இப்படி ஒரு வாழ்க்கை வேண்டும்தானா எனச் சிந்திக்கத் தொடங்கியது அவளுடைய மூளை.

சில நொடிகளுக்குள் நடந்து முடிந்த செயல்களில் விக்கித்துதான் போனாள் அவள்.

அவள் ஆடை மாற்றும் அறைக்குள் ஓடிச் சென்று கதவைப் பூட்டியதும் அடக்கி வைத்திருந்த பெரு மூச்சை வெளி விட்டவன் அவளை அத்துமீறித் தொட்ட கரங்கள் நடுங்குவதை உணர்ந்தான்.

“ஏன்டி இப்படி எனக்கு துரோகம் பண்ணின..?” என வலியோடு முணுமுணுத்தன அவனுடைய அதரங்கள்.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 68

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “13. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!”

  1. Enadhaa nadakuthuuu edhavadhu clue kudubga siss ❤️❤️❤️❤️❤️❤️ lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!