16. நேசம் கூடிய நெஞ்சம்

4.8
(22)

நெஞ்சம் – 16    

மூன்று மாதம் கழித்து,

குடும்ப நல கோர்ட்,

நிவேதாவிற்கும் அர்விந்திற்கும் பரஸ்பர ஒத்துழைப்பில் விவாகரத்து கொடுத்தது கோர்ட். வெளியில் வந்து அவரவர் கிளம்பும் முன், அர்விந்திடம் வந்த நிவேதா,

“தேங்க்ஸ் அர்வி, என்னை புரிஞ்சுகிட்டு, என் மேல கோபப்படாம நான் கேட்ட உடனே டைவர்ஸுக்கு ஒத்துகிட்டே!” என்றாள். மருத்துவமனையில் பார்த்ததோடு, அவனை இன்று தான் பார்க்கிறாள் நிவேதா. கன்னத்தில் தையல் போட்ட வடு, அதை மறைக்க தாடி, வாக்கிங் ஸ்டிக் என ஆளே மாறி போய் இருந்தான்.

“இட்ஸ் ஒக்கே நிவேதா.” என்று கிளம்ப போனவனிடம்,

“டேக் கேர்!” என்றாள்.

“ம்ம்….!” என்றவன் மெதுவாக காரை நோக்கி வாக்கிங் ஸ்டிக் ஊனி நடந்தான் அர்விந்த். அவனை பார்த்து பெருமூச்சு விட்டபடி அவள் காரில் ஏறினாள் நிவேதா.

அவள் மனதில், அவளின் திருமண நாள் படமாக ஓடியது. அர்விந்த் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய சிறிது நேரத்திலேயே தியாகு மகனை காணோம் என்று உணர்ந்தார். அவன் வெளியில் சென்றிருப்பதாக அவன் நண்பன் தயங்கி தயங்கி சொன்ன உடனேயே அவருக்கு பகீரென்றது. அவன் தொலைபேசிக்கு முயன்றால் அதில் லைனே போகவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் முயன்றனர். லைன் டெட். அப்போதே பயம் பிடித்து விட்டது அவருக்கு. என்னவோ தவறாக தோன்ற, யோசிக்காமல் அவரின் போலீஸ் நண்பரை தொடர்பு கொண்டு விட்டார் தியாகு. அவர் அவர்களின் கார் நம்பர் வைத்து விசாரிக்க, அப்போது தான் ஆக்சிடென்ட் பத்தி இவர்களுக்கு தெரியவந்தது. அங்கே ஸ்பாட்டில் இருந்த போலீசும், சரியாக இவர்களை தொடர்பு கொண்டனர். அனைவரும் பதறி அடித்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். மிக மிக பலத்த அடி வாங்கி இருந்தான் அர்விந்த். காலில் எலும்புமுறிவு, முகத்தில் பெரிய காயம், தாடை எலும்பில் அடி என அவன் நிலைமை கொஞ்சம் அபாயமாக இருந்தது. உள்ளுறுப்புகளின் நிலை, நரம்பு பிரச்சனை எல்லாம் இனிமேல் தான் தெரியும் என்று வேறு கூறி விட்டனர். காலில் ப்ளேட் வைத்து ஆப்ரேஷன், தாடை எலும்பில் ஆப்ரேஷன், முகத்தில் தையல் என ஒரு வாரம் ஐசியூவில் இருந்தான் அர்விந்த். நாளின் முக்கால்வாசி நேரம் அவன் மயக்க நிலையில் தான் இருந்தான். அதன் பின் வீடு வர மூன்று வாரம் ஆகி விட்டது. ஆக மொத்தம் ஒரு மாதம் கழித்து தான் வீடு வந்தான் அர்விந்த். அந்த ஒரு மாதம் கூட முழுதாக நிவேதா அர்விந்துடன் இல்லை. அர்விந்த் ஐசியூவில் இருந்து நார்மல் அறைக்கு வந்த உடனேயே, ஜனனியிடம் சென்ற நிவேதா,

“என்னால் உங்ககிட்ட மட்டும் தான் பேச முடியும். அதனால் தான் சொல்றேன்” என்று பீடிகை போட்டு, “இந்த கல்யாணத்தை என்னால தொடர முடியாது! ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுது எனக்கு…. இதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை, எனக்கு இதெல்லாம் வேண்டாம்” என்றாள்.

ஜனனிக்கு மிகுந்த கோபம் வர, “நீ அவனை லவ் பண்ணித் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டே? இப்போ அவனுக்கு ஒரு கஷ்டம்னா ஓடுற? என்ன பொண்ணு நீ?” என்றாள்.

“இப்படி எல்லாம் என்கிட்ட பேச உங்களுக்கு ரைட்ஸ் இல்லை! பர்ஸ்ட், நாங்க ஒன்னும் லவ் எல்லாம் பண்ணலை, எங்க ரெண்டு பேர் வேலை, ஜோடி பொருத்தம், குணம் எல்லாம் நல்லா இருந்துச்சு, அர்விந்த் ஓகேவானு கேட்டார், நானும் நோ சொல்ல எதுவும் இல்லைனு எஸ் சொன்னேன்! ஆனா எனக்கு இந்த கஷ்டம் எல்லாம் தேவையில்லாதது! ஐ டோன்ட் டிசர்வ் திஸ்! நான் சொல்லாம போயிட்டேன்னு நீங்க எல்லாம் நினைக்க கூடாதுனு தான் நான் இன்பார்ம் பண்றேன்” என்றவள் ஜனனியின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அன்றே கிளம்பி விட்டாள்.

விஷயத்தை கேள்விப்பட்ட அருணாவிற்கும் தியாகுவிற்கும் அப்படி ஒரு மனக்கஷ்டம். என்ன பெண் இவள்? கஷ்டம் நஷ்டம் இல்லாத வாழ்க்கை எங்கேயும் இல்லையே! இவர்கள் எல்லாம் பிரச்சனையை சந்திக்க தெரியாத கோழைகள், படித்து என்ன பயன்? போனால் போகட்டும், எங்கள் பிள்ளை எங்களுக்கு நல்லபடியாக வந்தால் போதும் என்று நினைத்து கொண்டார்கள்.

ஒரு மாதம் கழித்து அர்விந்த், வீடு வந்து விட்டான் என்பதை அவன் நண்பன் மூலமாக தெரிந்துக் கொண்ட நிவேதா, அவனிடம் தொலைபேசியில் பேசினாள்.

அவள் சொன்ன காரணத்தை விட, அவனுக்கும் இந்த டைவர்சில் விருப்பம் என்பதால் அவளிடம் எந்த வாதமும் செய்யாமல் அவள் விருப்பபடி அவர்கள் திருமணத்தை ரத்து செய்ய உதவினான் அர்விந்த். அவர்கள் வாழ்க்கையை தொடங்கவே இல்லை என்பதால் எளிதாக விவாகரத்து கிடைத்து விட்டது.

அர்விந்தை காண வருபவர்கள் மருமகளை பற்றி கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தனர் அருணாவும் தியாகுவும். ஆனால் அர்விந்த் கொஞ்சமும் யோசிக்காமல், நாங்க பிரிஞ்சாச்சு, அது அவ்ளோதான் என்று முடித்து விடுவான்.

வீடு வந்தவனை அனைவரும் ஆராய்ச்சியாக நோக்கினர்.

“யாரும் எனக்காக கவலைப்பட வேண்டாம், நான் நல்லா தான் இருக்கேன்…. எனக்கு எந்த வருத்தமும் இல்லை, நிவேதா பத்தி நாம யாரும் இனி நினைக்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம்!” என்று சத்தமாக அறிவித்தான்.

அவன் என்ன தான் சொன்னாலும், அனைவருக்கும் அவனை குறித்து கவலையாக இருந்தது. தனித்தனியே அவனிடம் சென்று பேசினர். அவர்களின் கவலையை புரிந்து கொண்டவன் பொறுமையாக அனைவருக்கும் பதில் சொன்னான்.

“ஏண்டா அர்விந்த், உன் மனத் திருப்திக்கு அவளை நல்லா நாலு கேள்வி கேட்டுட்டு அப்பறம் டைவர்ஸுக்கு ஓகே சொல்லி இருக்கலாம் நீ” என்றாள் ஜனனி ஆதங்கமாக.

“நான் கஷ்டப்படுறேன் ஏன் நினைக்கிற? ஐயம் குட்!” என்றான் அலட்டி கொள்ளாமல்.

“எப்போதும் தான் எதுவும் சொல்ல மாட்டே, இப்போ கூடவா? எதாவது ஷேர் பண்ணுடா!”

“ஹேய் நிஜமா, ஐயம் குட். உண்மையை சொல்லணும்னா, நிவேதா உண்மையை சொல்லிப் போனது எனக்கு பிடிச்சுது. என்கூட இருந்து சண்டை போட்டு, வாழ்க்கையை நரகமாக்கி எல்லாரும் வருத்தப்பட்டு விலகி போகாம, இப்படி போனது ரொம்ப நல்லது. சில விஷயத்தில, நம்ம வாழ்க்கையை வாழ அவ மாதிரி செல்பிஷ்ஷா யாரை பத்தியும் கவலைப்படாம, மனசை மட்டும் கேட்டு முடிவு எடுக்கணும்னு நானும் நினைச்சுக்கிட்டேன்!” உணர்ந்து கூறினான் அர்விந்த்.

“உண்மையிலேயே நீ ஓகேனா எனக்கு ஹாப்பி தான் டா” என்று தம்பியை அணைத்துக் கொண்டாள் ஜனனி.

“அர்விந்த், கால் பழையபடி ஆக ஆறு மாசம் ஆகும்னு சொல்றாரே டாக்டர், அதுவரை ஒர்க் ப்ரம் ஹோம் தருவாங்களா? இல்லை ப்ரேக் எடுத்திட்டு வேற வேலை தேடுறியா?” யோசனையாய் இழுத்தார் தியாகு.

“வேற ஏதோ கேட்க நினைக்கிறீங்க! அதை கேளுங்க பா!”

“இல்லை, இதே ஆபிஸ்னா, உனக்கு நிவேதா விஷயம்னால எதாவது கஷ்டமா இருக்குமோனு….”

“அப்பா, அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க விருப்பபடி வாழ எல்லாருக்கும் உரிமை இருக்கு! நாங்க எந்த தப்பும் பண்ணலை பா! மோர் ஓவர் புது விஷயம் வர வரை நம்ம விஷயம் கொஞ்சம் நாளைக்கு ஓடும், அவ்ளோதான் பா. நீங்க இவ்ளோ எல்லாம் யோசிக்க வேண்டாம்!”

“உனக்கு மனசு எப்போ ஒரு மாதிரி இருந்தாலும் அப்பா கிட்ட சொல்லு பா, எங்களுக்கு நீ ரொம்ப முக்கியம் பா!” கண் கலங்கினர் தியாகு. அப்பாவை அணைத்துக் கொண்டான் அரவிந்தன். கடந்த மூன்று மாதமாக, அவர் மனம் கலங்கினாலும் யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மகனை மீட்டு கொண்டு வந்தவர் அல்லவா!

அன்று இரவு அர்விந்தை பார்க்க பாட்டியுடன் வந்தார் அருணா.

“ஆரும்மா! எனக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கலை டா, கிடைச்சு இருந்தா உங்க தாத்தாவை டைவர்ஸ் பண்ணிட்டு என் லவ்வரை கல்யாணம் பண்ணி இருப்பேன்!” என்றார் சீரியசாக.

“நீங்களே தாத்தாவை எங்கேயாவது தள்ளி விட்ருக்கலாமே!” அர்விந்தும் சீரியசாக ஐடியா கொடுத்தான் இப்போது.

“அத்தை!!!” பேச வந்ததை விட்டு விட்டு வேறு ஏதோ பேசுகிறார் என்று டென்ஷன் ஆனார் அருணா. அவருக்கு பேசினாலே அழுகையாய் வருகிறது என்று மாமியாரை துணைக்கு அழைத்து வந்தார்.

“இப்போ போனதை விட என் பேரனைத் தேடி சிறப்பான பொண்ணு வரும்டி, உன்னை மாதிரி மாமியார் கிட்ட அன்பா இருக்க பொண்ணு தாண்டி உனக்கு மருமகளா வருவா! நீ தேவையில்லாம கவலைப்படாதே, என் பேரனையும் கவலைப்பட வைக்காதே! என்ன ஆரும்மா, நான் சொன்னது கரெக்ட் தானே?”

தன் முகத்தில் பாதி விரல் நீளம் இருந்த வடுவை வருடி, “இந்த முகத்தை பார்த்து அம்மாவுக்கு மருமக வர்றது கொஞ்சம் கஷ்டம் பாட்டி” என்றான் அர்விந்த் சிரித்தபடி.

“புதுசா உனக்கு பொண்ணு பிறக்க போறதில்லை, எங்கேயாவது இருப்பா, தேடி வருவா!”

“வர்றப்போ பார்போம் பாட்டி!”

“உன்னை பிடிச்சு ஒரு பொண்ணு வந்தா, நீ கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும்! சரியா?” அருணா வேகமாக மகனிடம் உறுதி கேட்டார்.

“பொண்ணு வந்தா பார்போம் மா!”

அவன் சொல்லி முடிக்கவில்லை, அங்கே அவனை மிகவும் பிடித்த பொண்ணு, அவனுக்கும் பிடித்த பொண்ணு அழுதுக்கொண்டே திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு பஸ் ஏறியது!

கடந்த மூன்று மாதமாக அவள் கவனத்தை முழுதுவதுமாக தையலின் பக்கம் திருப்பி இருந்தாள் மலர். அர்விந்தை நினைக்கவே கூடாது என்று  நாளெல்லாம் வேலை வேலை என்றிருக்க, கணிசமாக கஸ்டமர் எண்ணிக்கை உயர்ந்தது அவளுக்கு. விலை குறைவாக, அழகாக பேட்ச் ஒர்க், திரட் ஒர்க், ஆரி என போட்டு கொடுத்து ஜாக்கெட், சுடி, டாப்ஸ் எல்லாம் தைக்க நல்ல வருமானமும் பேரும் கிடைத்தது அவளுக்கு.

எவ்வளவு களைப்பாக இருந்தாலும், படுத்து கண்களை மூடியவுடன் வந்துவிடுவான் அவள் நாயகன். அதே போல் பல நேரம் வேலை நேரத்திலும் திடும் திடும் என்று அவன் நினைவு வந்துவிடும். முதலில் எல்லாம் அவன் நினைவே வேண்டாம் என்று நினைத்தவள், அவளுடனே அதை மறக்க போராடுவாள். பின் தன்னால் அவனை எக்காலத்திலும் மறக்க முடியாது என்று புரிய, அவன் நினைவை அப்படியே விட்டுவிட்டாள். நினைவு வரும் போதெல்லாம் சற்று நேரம் அவன் நினைப்பில் இருந்து விட்டு வேலையை தொடர்வாள் மலர், அவன் நினைவோடு உறங்கியும் போவாள். அவன் தான் அவளுடன் இல்லையே தவிர அவள் அவனுடன் தான் இருந்தாள்! வாழ்ந்தாள்!

அன்று காலை, மலரை அர்விந்தின் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டவர் மாணிக்கத்தை அழைத்து இருந்தார். அவர் வேறு விஷயமாக பேசி விட்டு, வைக்கும் போது அர்விந்திற்கு திருமண நாள் அன்று பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தது, பெரிய அடி, இப்போது பரவாயில்லை அவனுக்கு என்று மட்டும் சொல்லி விட்டு வைத்து விட்டார். அவனுக்கு விவாகரத்து ஆனது எல்லாம் அவருக்கு தெரியாது.

ஆக்ஸிடெண்ட் என்ற ஒற்றை வார்த்தை போதுமே நம் பெண்ணை அழ வைக்க, மாணிக்கம் விஷயத்தை சொன்ன போது, மளமள வென்று கண்ணீர் கொட்டி விட்டது அவளுக்கு. அப்போதே, பெங்களூர் கிளம்புகிறேன் என்றவளை தடுக்க முடியவில்லை யாராலும். மிகவும் கெஞ்சி, நல்ல பஸ்ஸில் இரவு டிக்கெட் வாங்கி தருகிறேன், இப்போது கிளம்பினால் நடு இரவில் போய் நிற்பாய் என்று புரியவைத்து, அவளை அமைதி படுத்தினர். மாணிக்கத்தால்  போக முடியாத சூழ்நிலை, அவர் வர வேண்டும் என்றும் அவள் எதிர்பார்க்கவில்லை! தலைவனை கூடையில் சுமந்த தலைவி கொண்ட வரலாறு அல்லவா நமது? தலைவனுக்கு ஒன்றும் என்றதும், எங்கு இருந்து தான் தைரியம் வந்ததோ, அழகிய மான்குட்டி, சிங்கமென சிங்கிளாக புறப்பட்டது!

வாம்மா வாம்மா, இப்போவாச்சும் எனக்கு ஒரு சான்ஸ் கொடுமா, இந்த ரைட்டர் சுத்த மோசம்…. மன்மதன் துள்ளி கொண்டு வந்தார்.

விடியற்காலை பெங்களூர் வந்து இறங்கியவள், தைரியமாக அட்ரஸ் சொல்லி அர்விந்தின் வீட்டிற்கு வந்து இறங்கி விட்டாள். அத்தனை கிலோமீட்டர் தைரியமாக வந்தவளுக்கு, ஒரு சில அடி எடுத்து வைத்து வீட்டிற்குள் செல்ல அவ்வளவு தயக்கம். வாசல் கேட் திறக்க இன்னும் நேரம் இருக்கிறது என்பதால் ஆட்டோவை அனுப்பி விட்டு வாசலிலேயே நின்றாள்.

உள்ளே அறையில் உறங்கி கொண்டு இருந்தவனின் தூக்கம் சட்டென்று  கலைந்தது. ஒரு பத்து நிமிடம் புரண்டு புரண்டு படுத்தவன், மெதுவாக கட்டிலை விட்டு இறங்கி, வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். (வேவ்ஸ் வருது வேவ்ஸ் வருது)

வீட்டின் கதவு திறக்கப்பட்டதும் பரப்பரப்பானாள் மலர். சற்று பெரிய கேட் என்பதால் இவள் காம்பவுண்ட் வெளியே நிற்பது தெரியாது என்பதால் அங்கிருந்து கதவை ஆட்டி சத்தம் செய்தாள்.

யார் அங்கே என்று கன்னடத்தில் கேட்டபடி வந்து கதவை திறந்தான் அரவிந்தன். தியாகு தான் வருவார் என்று நினைத்து கொண்டு நின்றவள், அர்விந்தனே வரவும் பரபரப்பானாள். அதிகமாக உணர்ச்சிவசப்பட்டதில் உதடு துடித்தது. உடம்பு நடுங்கியது.

யாரோ எவரோ என்று வந்தவன், ஒரு சதவிகிதம் கூட மலரை அங்கே எதிர்பார்க்கவில்லை! அவளை கண்டதும், அவன் உடலும் உள்ளமும் அதிக ரத்த ஓட்டத்தில் சிலிர்த்தது. அதே சமயம், மனசுக்கு நெருக்கமானவரை கண்டால், உடைந்து போவோமே அது போல் அவன் கண்கள் அவன் பட்ட கஷ்டத்தை எல்லாம் அவளிடம் கண்ணீராக காட்டத் துடித்தது. உடனே சுதாரித்து கொண்ட அரவிந்தன், அவனை நிலைப்படுத்திக் கொள்ள சட்டென்று அவளுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டான்.

இன்றும் அவன் அவளை புறக்கணிக்கிறான் என்று முகம் வாடி நின்றாள் மலர்!

 

ஹாய் மக்களே, கமெண்ட்ஸ் போட்டு நீங்க என்னை வேகமாக இன்னொரு எபி எழுத வைச்சுட்டீங்க, ஹாப்பி ரீடிங். கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

6 thoughts on “16. நேசம் கூடிய நெஞ்சம்”

Leave a Reply to ArundathiPosalan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!