18. தொடட்டுமா தொல்லை நீக்க..!

4.8
(111)

தொல்லை – 18

அஞ்சலியோ தன்னுடைய இரவு ஆடையை எடுத்து வந்தவள் சுதாலட்சுமி கூறிய அறையில் படுத்துக் கொண்டாள்.

கதிரோடு உறங்கும் போது இப்படியான ஆடைகளை தவிர்த்து விடுவாள் அவள்.

இன்று தனியாக படுப்பதனால் தயக்கமின்றி அந்த மெல்லிய சீத்ரு நைட்டியை அணிந்து படுத்துக் கொண்டவளுக்கு உறங்க முடியவில்லை.

அவளுடைய மனம் வித்தியாசமான உணர்வுகளின் பிடியில் அகப்பட்டிருந்தது.

கதிரின் அன்பு வார்த்தைகளும் அவனுடைய மென்மையான முத்தமும் அவளுடைய மனதில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தன.

‘என்னோட வாழ்க்கை இப்படி மாறும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல.. என்ன மன்னிச்சு என்ன வாழ்க்கைத் துணையா ஏத்துக்கிட்ட மாமாவுக்கு நான் எவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கேன்…’ என எண்ணி மனம் கலங்கினாள் அவள்.

அதே நேரம் “நீதான் என்னோட பொண்டாட்டி…” என கதிர் கூறிய வார்த்தைகள் அவளுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்து அவளுடைய கலங்கிய மனதை சமன் செய்தது.

மெல்ல புன்னகைத்துக் கொண்டாள் அவள்.

அவனுடைய காதல் அவளை சிலிர்க்கச் செய்தது.

கதிரோ தன் அறையில் தனியாகப் படுத்திருந்தான். உறக்கம் அவனையும் நெருங்கவே இல்லை. அவனுடைய மனமோ அஞ்சலியைச் சுற்றியே சுழன்றது.

‘இவ்வளவு அன்பு இவ மேல எப்படி வந்துச்சு?’ என எண்ணியவன் வியந்து போனான்.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவனுக்கோ சுதாலட்சுமியின் “முறைப்படி எல்லாம் நடந்த பிறகு ஒரே அறையில் தங்கிக்கோங்க…” என்ற வார்த்தைகள் எரிச்சலை உண்டாக்கின.

“இத்தனை நாளா ஒன்னாதானே தங்கினோம்… இப்போ மட்டும் என்ன புதுசா?” என முனகியவன் சட்டென எழுந்தான்.

“இப்படி தனியா படுத்துக்கிடந்து தூங்க முடியாம புலம்புறதுக்கு அஞ்சலிகிட்ட போயிடலாம்…” என முடிவு செய்தவன் அஞ்சலி இருக்கும் அறை நோக்கி மெதுவாக நடந்தான்.

முதல் முறையாக சற்றே படபடப்பு உண்டானது அவனுக்கு.

அறைக் கதவை மெல்லத் திறந்து உள்ளே நுழைந்தவன் அஞ்சலியைப் பார்த்தான்.

அவளோ படுக்கையில் படுத்திருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் சட்டென எழுந்து அமர,

“ஹேய் அம்மு… நீ இன்னும் தூங்கலையா?” என மெல்லக் கேட்டவாறு அவளை நெருங்கினான் அவன்.

அஞ்சலியோ திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள் “மாமா… நீங்க எங்க இங்க..?” எனத் தயங்கியவாறு கேட்டாள்.

அவனோ இரவு விளக்கை அணைத்து விட்டு பிரகாசமான மின் குமிழை ஒளிரச் செய்ய, சட்டென அந்த அறை முழுவதும் ஒளி வெள்ளம் பரவியது.

“தனியா படுத்தா தூக்கம் வரலைடி… உன்கூட கொஞ்ச நேரம் பேசலாம்னு வந்தேன்…” என்றவன் வெளிச்சத்தில் அவளைப் பார்த்ததும் திணறிப் போனான்.

அவளுடைய மெல்லிய ஆடையோ அவளுடைய உடல் வளைவுகளை அவனுக்கு எடுத்துக் காட்டின.

கட்டுப் படுத்த முடியாமல் பெரு மூச்சை வெளியேற்றினான் அவன்.

அஞ்சலியின் முகமோ வெட்கத்தில் சிவந்தது.

அவனுடைய பார்வை பாயும் இடங்களை உணர்ந்து படபடத்துப் போனவள் படுக்கை விரிப்பை இறுகப் பற்றிக் கொண்டாள்.

‘ஐயோ அவசரப்பட்டு இங்க வந்துட்டோமோ..? இவ பக்கத்துல போனா கன்ட்ரோல் போயிரும் போலயே..’ என மனதிற்குள் தகித்தவன் கட்டிலை விட்டு தள்ளியே நின்றான்.

“மா… மாமா… அத்தை நம்ம ரெண்டு பேரையும் தனித் தனி ரூம்லதானே தூங்க சொன்னாங்க…” என மெல்ல முனகினாள்.

“நீ இல்லாம தூக்கமே வரலைடி..” என்றவனின் குரல் கரகரப்பாக ஒலித்தது.

“ம்ம்… ஏன் மாமா நின்னுகிட்டே இருக்கீங்க..? உக்காருங்க…” என அவள் கூறியதும் அவளின் அருகே வந்து அமர்ந்து கொண்டான் அவன்.

“அம்மு..?”

“என்ன மாமா..?”

“நிஜமாவே உனக்கு என்ன பிடிச்சிருக்கா..?”

“பிடிக்காமதான் உங்களை இவ்ளோ பக்கத்துல உக்கார வெச்சு பேசிட்டு இருக்கேனா..?” என அவள் கேட்டதும் அவனுக்கோ புன்னகை விரிந்தது.

“பிடிச்சிருக்குன்னா ப்ரூஃப் பண்ணுடி..” என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க,

அந்தப் பார்வையில் தடுமாறியவள் “ப்ரூஃப் பண்ணணுமா..? அதுக்கு என்ன பண்ணனும்..?” எனக் கேட்டாள்.

“ஹக் பண்ணலாம்.. கிஸ் பண்ணலாம்.. என்னை என்ன வேணும்னாலும் பண்ணலாம்..” என அவன் இமை சிமிட்ட,

“ஐயோ நான் மாட்டேன்..” என படபடத்தாள் அவள்.

“அடியேய் ஏன்டி..? என்னப் பார்த்தா உனக்கு பாவமா தெரியலையா..?” எனக் கேட்டான் அவன்.

“ம்ஹூம் பாவமா தெரியலை..” என பட்டென பதில் கூறியவளின் பட்டு இதழ்களில் பத்து முத்தம் பதிக்க ஆசை கொண்டது அந்த ஆண் மனம்.

“அடிப்பாவி.. சரி விடு.. நான் கிஸ் பண்ணவா..?” என அவன் கேட்க,

“அச்சோ வேணாம்.. அத்தைக்கு தெரிஞ்சா என்ன ஆகும்..? முதல்ல நீங்க உங்க ரூமுக்குப் போங்க மாமா..” என்றாள் அஞ்சலி.

“அதெல்லாம் அம்மாக்குத் தெரியாது… நீ என் பொண்டாட்டிடி… உன்கூட இருக்கிறதுக்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு…” என்றவன் இல்லாத சட்டைக் காலரைத் தூக்கி விட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான்.

அவனுடைய கள்ளம் கபடமற்ற சிரிப்பைப் பார்த்தவளுக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது.

“நீங்க ரொம்ப நல்லவரு மாமா.. இவ்வளவு நாளும் என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. எப்படி இந்த உண்மைய சொல்றது எப்படி ரெண்டு வீட்டுப் பெரியவங்கள சமாளிக்கிறதுன்னு ரொம்பவே பயமா இருந்துச்சு.. ஆனா உங்ககிட்ட உண்மைய சொன்ன அன்னைக்கே என்னோட எல்லா பிரச்சனையையும் தீர்த்து வச்சிட்டீங்க… ரொம்ப நன்றி மாமா..” என்றாள் அவள் நெகிழ்ச்சியாக.

அவளுடைய கரத்தைப் பற்றியவன் “அம்மு… இனி எந்தக் குற்ற உணர்ச்சியையும் உன் மனசுல தூக்கி வச்சு சுமக்காத… இனி உன் புருஷனைப் பத்தி மட்டும் யோசி..” என்றான் கதிர்.

அவனுடைய அன்பில் அஞ்சலியின் கண்கள் கலங்கின.

“ப்ச்.. நோ அம்மு.. இனி நீ என் முன்னாடி அழவே கூடாது..” என்றவன் அவளை இழுத்து தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்.

கதிரின் அணைப்பில் அஞ்சலியின் உடல் சிலிர்த்துப் போனது.

அவனுடைய மார்பில் அவள் முகம் புதைத்திருக்க அவனுடைய இதயத் துடிப்பு அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

“லவ் யூ அம்மு..” என்றான் அவன்.

“மாமா…” என மெல்ல முனகியவள் அவனைத் தானும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அவளுடைய மெல்லிய சீத்ரு நைட்டி அவனுடைய உடலில் உரச அவனுக்கோ உள்ளம் தடுமாறியது.

மெல்ல அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான் அவன்.

அவனுடைய உதடுகள் அவளுடைய கழுத்தில் அழுத்தமாகப் பதிந்தன.

அவளுக்கோ தேகம் நடுங்கியது.

அவளுடைய நடுக்கத்தை அவனும் உணர்ந்து கொண்டான்.

கழுத்தில் புதைந்த அவனுடைய உதடுகள் மெல்ல நகர்ந்து அவளுடைய கன்னக் கதுப்பில் பதிந்த போது அவளுக்கோ கால்கள் தொய்ந்தன.

“அம்மு… இந்த ட்ரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்குடி.. நீ இப்படியே என் முன்னாடி நின்னா எனக்கு என்னென்னவோ தோணுது.. என்னால என்னையே கன்ட்ரோல் பண்ணிக்க முடியல…” என கரகரப்பான குரலில் கூறினான் அவன்.

அஞ்சலியோ அதீத வெட்கத்தில் தன் முகத்தை அவனுடைய மார்பில் மறைத்தவள் “மாமா… இப்படிலாம் பேசாதீங்க…” என முனகினாள்.

“ஏய் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலடி..”

“ஐயோ… தனியா தூங்கப் போறேன்னு நினைச்சுத்தான் இத போட்டேன்… நீங்க வருவீங்கன்னு நான் சத்தியமா எதிர் பார்க்கல…” என்றவள் தடுமாறினாள்.

“உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியலைடி..” என்றான் அவன்.

“ஏன் மாமா..? என்னை அவ்ளோ பிடிச்சிருக்கா..?”

“பிடிச்சிருக்கான்னு கேட்டா? நீ இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது அம்மு…” என்றவன் அவளுடைய கையைப் பற்றி தன் உதடுகளில் வைத்து மென்மையாக முத்தமிட்டான்.

அந்த முத்தத்தில் அஞ்சலியின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.

அவனோ அவளுடைய இடையை அழுத்தமாகப் பிடித்தவன் அதிர்ந்து விழித்தவளின் உதடுகளைக் கவ்விக் கொண்டான்.

ஆழிப் பேரலைக்குள் சிக்கிக்கொண்டதைப் போல இருந்தது அவளுக்கு.

கிட்டத்தட்ட அவளுடைய உதடுகளை விழுங்கி விடுவது போல அவன் கொடுத்த முத்தத்தில் அவளுக்கோ உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது.

அவனுடைய நீண்ட நெடிய முத்தத்தை சமாளிக்க முடியாமல் தொய்ந்து சரிந்தவளை அப்படியே தூக்கி அருகே இருந்த மேசை மீது அமர வைத்தவன் அவளைத் தொடர் இதழ் முத்தத்தில் திணறடித்தான்.

உணர்வுகளோ கட்டவிழ்த்தன.

பெண்ணவளோ அவனுடைய காதல் ஆதிக்கத்தில் திணறித் திண்டாடி கரைந்து கொண்டிருந்தாள்.

அவளுடைய மெல்லிய சீத்ரு ஆடையோ அவனுடைய அழுத்தங்களில் ஆங்காங்கே கசங்கிப் போனது.

தடுக்கவும் முடியாமல் அவனுடைய வேகத்தை தாங்கவும் முடியாமல் அவள்தான் தத்தளித்து அமர்ந்திருந்த மேசை மீதே சரிந்து விட,

அவளை அள்ளி அணைத்து படுக்கையில் கிடத்தியவன் அடுத்து செய்ததெல்லாம் சற்று அதிகப்படியே.

ஸ்பரிசம் கடந்து

முத்தம் தொடர்ந்து

ஆடை களைந்து

வெற்றுடல் தீண்டி

எல்லை தாண்டியவன்

இறுதிக் கூடலுக்கு மட்டும் அவளுடைய சம்மதம் வேண்டி அவள் முகம் பார்க்க, சிவந்து செங்கொழுந்தாகிப் போனவள் வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள்.

“அம்மூஊஊ.. உனக்கு ஓகே தானே..?” என்ற அவனுடைய ஹஸ்கி குரல் அவளின் உணர்ச்சிகளை இன்னும் அதிகமாக தூண்டியது.

அவளுக்கோ மறுக்கத் தோன்றவில்லை.

இனி மறுத்தாலும் அவன் நிறுத்தும் நிலையில் இல்லை.

“ம்ம்..” என்றாள் அவள் சம்மதமாக.

அடுத்த நொடி அந்த ஆண் மகனின் வேட்கை மொத்தமும் அவள் மீது கவிழ்ந்தது.

மொத்தமாக அவளைத் தன்னவளாக மாற்றிக் கொண்டவன் அப்படியே அவள் மீது பெருமூச்சோடு கவிழ்ந்தான்.

இருவருடைய சுவாசக் காற்றும் போர் புரிவது போல மோதிக் கொண்டன.

மௌனமாக அவனைத் தாங்கிக் கொண்டவளுக்கு ஏனோ விழிகள் கலங்கின.

அவனோ மெல்ல விலகிப் படுத்தவன் அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டான்.

அவளுடைய கண்ணீர் அவனுடைய மார்பைச் சுட்டது.

பதறி அவளுடைய முகம் பார்த்தவன், “என்னம்மா வலிக்குதா..?” எனக் கேட்டான் குற்ற உணர்வோடு.

“ம்ஹூம்..”

“அப்போ என்னடி..? எதுக்கு இந்த அழுகை..?”

“எ.. எப்பவும் நான் எதுக்குமே ரொம்ப ஆசப் பட்டது இல்ல மாமா.. எனக்கு கிடைச்சத சந்தோஷமா ஏத்துப்பேன்.. ஆ.. ஆனா இப்போ உங்க மேல ரொம்ப அன்பு வெச்சிட்டேன்… உங்கள இழந்துடக் கூடாதுன்னு நினைக்கிறேன்.. என்ன விட்டுட மாட்டீங்களே..?” என பரிதவிப்போடு கேட்டவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,

“ஏய் பைத்தியம்.. உன்ன விட்டுட்டு என்னால வாழ முடியுமாடி..? நீ என் உசுருடி தங்கம்..” என்றான்.

அவனுடைய வார்த்தைகளில் மீண்டும் உயிர்த்தாள் அந்த தேவதை.

அந்த தேவதையை பொக்கிஷமாக தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டான் கதிர்வேலன்.

(ஃபைனலி நம்ம தலைவன் காஜி கதிருக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சுது.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..)

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 111

No votes so far! Be the first to rate this post.

1 thought on “18. தொடட்டுமா தொல்லை நீக்க..!”

  1. Happy 😍😍😍😍❣️❣️❣️❣️❣️
    Super super super super super super super super super super super super

Leave a Reply to Nirmala devi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!