விஷம் – 35
முதல் நாள்..
இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக் கிடந்து தன் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டான் அவன்.
அர்ச்சனாவோ அவனைப் பார்க்கவே விரும்பவில்லை. குழந்தைக்காக சரியான நேரத்திற்கு உணவை உண்ணுவாள்.. டாக்டர் கொடுத்த மாத்திரைகளை விழுங்கி விட்டு மீண்டும் அந்த அறைக்குள் அடைந்து கொள்வாள்.
அவளைப் பார்க்க முடியாது போக அதற்கும் வருந்தினான் யாழவன்.
தூக்கம் அவனுக்குத் தொலைதூரம் ஆகிப்போனது.
இரண்டாம் நாள்…
அவனுடைய அலுவலகத்தில் கூட அவன் மனம் அமைதி கொள்ளவில்லை.
மற்றவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் பதில் அளிக்கும் போது கூட அவனது விழிகள் கடிகாரத்தையே நோக்கின.
ரிப்போர்ட் வரப் போகும் நாளை எண்ணிக்கொண்டு ஓர் அவசரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.
மூன்றாம் நாள்…
அர்ச்சனாவிடம் இருந்து “ஐ ஹேட் யு யாழவன்..” என்ற குறுஞ்செய்தி அவனுக்கு வந்திருந்தது.
அந்த ஒற்றை வரியில் உயிரோடு மரித்துப் போனான் அவன்.
அவளுக்கு பதில் குறுஞ்செய்தியைக் கூட அவன் அனுப்பவேயில்லை.
அவன் வலிக்க வலிக்க தூக்கம் தொலைத்த இரவாக அந்த இரவு மாறிப் போனது.
நான்காம் நாள்…
வெளியே போகலாம் என அவனுடைய நெருங்கிய தோழர்கள் அவனை அழைத்தனர்.
மறுத்துவிட்டான் அவன்.
மருந்து ஏற்றுமதிகளை பற்றிய வியாபார பேச்சு எழுந்தது. அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிட்டு விழிகளை மூடிக்கொண்டவனுக்கு பரிசோதனைக்குச் சென்ற மருத்துவமனை மாத்திரமே கண் முன் எழுந்து வதைத்தது.
ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால் என்ற ஒற்றைக் கேள்வி அவனுக்குள் எழுந்து அவனுடைய மூளையை சிதைக்க துவண்டு போனான் யாழவன்.
அவன் கனவுகள் கூட மரபணு சோதனையைப் பற்றியே இருந்தன.
ஐந்தாம் நாள்…
தலையில் வலி.
கண்களில் தூக்கம் இல்லை.
விழிகள் சிவந்து என்னவோ போல இருந்தான் அவன்.
காத்திருப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா..?
மருத்துவர் அழைத்தபோது, அவன் கை நடுங்கியது.
அவன் இதயம் எகிறிக் துடித்தது.
மிகச் சிரமப்பட்டு தன்னை நிதானமாக்கிக் கொண்டவன் அறைக்குள் நுழைந்தபோது,
“ஹாய் மிஸ்டர் யாழவன்.. இன்னும் 10 மினிட்ஸ்ல ரிப்போர்ட்ஸ் வந்துரும்.. வெயிட் பண்ணுங்க…” என அங்கே இருந்த வைத்தியர் கூற, அவனுக்கோ அந்த பத்து நிமிடங்கள் 10 யுகங்களைப் போலத்தான் தோன்றின.
மீள முடியாத காத்திருப்பு எப்போது முடியும் எனப் போராடி கடந்த நாட்களை கடந்து வந்தவனுக்கு இன்னும் பத்து நிமிடங்கள் என்றதும் பொறுமை இழந்து கோபத்தில் கை முஷ்டிகள் இறுகின.
ஆனால் அவனுடைய அவசரத்திற்கு அங்கே எதுவும் நடைபெறாது அல்லவா..?
இதென்ன நூடுல்ஸா..?
இரண்டு நிமிடத்தில் தயாரித்து முடிப்பதற்கு..?
மீண்டும் அமைதியை கடைப்பிடித்துக் கொண்டு விழிகளை மூடி அமர்ந்திருந்தான் அவன்.
அவனுடைய வலி புரிந்ததோ என்னவோ ஐந்தாவது நிமிடத்திலேயே ரிப்போர்ட்டுடன் வந்த வைத்தியர் “அது உங்களோட குழந்தைதான்…” என அவனுடைய தலையில் இடியை இறக்கி விட இறுகிப் போனான் யாழவன்.
இருக்கையில் இருந்து எழுந்தவன் அந்த ரிப்போர்ட்டை கரங்கள் நடுங்க வாங்கிக் கொண்டான்.
அதைப் பிரித்துப் படித்தவனுக்கு வைத்தியர் சொன்னதுதான் அங்கேயும் இருப்பது புரிந்தது.
கிளாரா… தன் வாழ்வில் இவ்வளவு பெரிய சிக்கலாக மாறுவாள் என அவன் ஒருபோதும் நினைக்கவில்லை.
இடிந்து போய் விட்டான்.
தன்னவள் இதைத் தாங்கிக் கொள்ள மாட்டாளே..
உடல் முழுவதும் விஷம் பரவுவது போல வலி அவனுடைய உச்சிக்கு ஏறியது.
“மிஸ்டர் யாழவன்..? ஆர் யு ஓகே..?” என அவனுடைய முகத்திற்கு முன்பு தன்னுடைய கரத்தை அசைத்து அவனுடைய கவனத்தை ஈர்த்தவாறு கேட்டார் வைத்தியர்.
“ஹாங்..?” அவர் கேட்டது புரியாமல் அவரைப் பார்த்தான் அவன்.
“நீங்க ஓகே தானே..?” மீண்டும் கேட்டார் அவர்.
“எஸ் தேங்க்ஸ்..” என்றவன் ஒரு தலையசைப்போடு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி தன்னுடைய காரில் ஏறிக்கொண்டான்.
தலை மிகவும் வலித்தது.
அடுத்த நொடியே கிளாராவிற்கு அழைப்பை எடுத்தவன் அவள் ஏற்றதும் “இப்போ நீ எங்க இருக்க..? நான் உன்னை மீட் பண்ணனும்..” என்றான்.
“ரிப்போர்ட் எடுத்துட்டியா..?” எனக் கேட்டாள் அவள்.
“எஸ்..”
“ரிசல்ட் என்ன…? நீதானே அப்பா..”
“எஸ்..”
“ஆர் யு ஓகே டார்லிங்..”
“ஷட் அப் யூ ஃப******* இடியட்…” என தன்னுடைய அத்தனை கட்டுப்பாடுகளையும் இழந்து கர்ஜித்து விட்டான் அவன்.
“ஓஹ் காட்.. எதுக்கு இவ்வளவு டென்ஷன்..?” எனக் கேட்டாள் கிளாரா.
“இது எல்லாமே உன்னோட தப்புதான் கிளாரா.. நான் ஆல்ரெடி உன்கிட்ட தெளிவாதான் சொன்னேன்.. பிடிச்சா மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. பேபி எதுவுமே நமக்குள்ள இருக்கக் கூடாது.. ப்ரொடக்ஷன் கண்டிப்பா வேணும்னு நான் உன்கிட்ட சொல்லி இருந்தேன்.. டேப்லெட்டும் கொடுத்து இருந்தேன்.. அப்படி இருந்தும் நீ பில்ஸ் எடுக்காம விட்டதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினைல வந்து முடிஞ்சு இருக்கு..”
“ஜஸ்ட் ஒரே ஒரு நாள் மறந்துட்டேன்.. இப்படி ஆகும்னு எனக்கு எப்படித் தெரியும்..? இந்தக் குழந்தைய பெத்துகிறதால எனக்கு எந்த யூசும் கிடையாது.. என்னோட ஸ்ட்ரக்சர் வேற ஸ்பாயில் ஆயிடும்.. ஏதோ நான் வேணும்னே பண்ண மாதிரி எனக்குத் திட்டுற..” என்றாள் அவள்.
“லிசன் கிளாரா.. என்னோட வைஃப் இப்போ பிரக்னண்டா இருக்கா..”
“சோ வாட்..? ஓஹ் அவ இந்த குழந்தையை ஏத்துக்க மாட்டாளா..? இட்ஸ் ஓகே, உன்னால வளர்க்க முடியாதுன்னா ஏதாவது ஹோம்ல சேர்த்து விட்றலாம்.. நான் இந்தியன் டிபிகல் பொண்டாட்டி மாதிரி எல்லாம் சென்டிமென்ட் எமோஷனல் இடியட்டா நடந்துக்க மாட்டேன்.. உன்னால முடிஞ்சா நீ குழந்தைய வளத்துக்கோ.. இல்லன்னா ஏதாவது ஹோம்ல சேர்த்து விட்ரு..” என்றாள் அவள்.
அவனுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.
பிறந்த குழந்தையை இல்லத்தில் சேர்க்க சொல்கின்றாளே..
அவர்கள் பண்ணிய பாவத்திற்கு அந்தக் குழந்தை ஏன் பலியாக வேண்டும்..?
“சரி விடு டார்லிங்.. இதனால நமக்குள்ள சண்டை வேண்டாம்.. எங்க மீட் பண்ணலாம்னு சொல்லு அங்க நானே வரேன்..” என்றாள் கிளாரா.
“நோ நீட் கிளாரா.. இப்போ பேசினதே போதும்னு நினைக்கிறேன்.. டெலிவரி வரைக்கும் மெடிக்கல் செலவு எக்ஸ்ட்ரா எல்லாத்துக்கும் நானே பணம் அனுப்பிடுறேன்.. குழந்தை பிறந்ததும் என்கிட்ட கொடுத்திடு.. அத ஹோம்ல சேக்கணுமா இல்ல நானே பாத்துக்கணுமா என்றத நான் பாத்துக்குறேன்… இனி என்ன டார்லிங்னு சொல்லாத.. இட்ஸ் இரிடேட்டிங்…” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு அப்படியே அந்தக் காரின் ஸ்டேரிங்கில் தன் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டான்.
வீட்டிற்குச் செல்வதற்கே அவனுக்குப் பயமாக இருந்தது.
அர்ச்சனா இதை தாங்கிக் கொள்ள மாட்டாளே.
அது என் குழந்தைதான் என்றால் அவள் நிச்சயம் உடைந்து போய் விடுவாள்.
கடவுளே ஏன் எனக்கு இந்த சோதனை என எண்ணிக் கொண்டவனுக்கு விழிகள் சிவந்து கலங்கின.
அவன் செய்த தவறுக்கு குழந்தையை வஞ்சிக்க கூடாது..
அதே நேரம் எந்தத் தவறும் செய்யாத அர்ச்சனாவும் வேதனையை அனுபவிக்க கூடாது..
இருவருக்கும் எந்த தீமையும் இல்லாத வகையில் அவன் முடிவை எடுக்க வேண்டும் என நினைத்தான்.
சற்று நேரத்தில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தவன் காரை நிறுத்திவிட்டு தளர்ந்த நடையுடன் அர்ச்சனாவின் அறைக்குச் சென்று கதவைத் திறக்க,
அந்த அறையோ இருளில் மூழ்கி இருந்தது.
தடுமாற்றத்தோடு மின் விளக்கை ஒளிரச் செய்துவிட்டு ஜன்னல்களின் கேர்ட்டினை இழுத்து விட்டவன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளை நெருங்கினான்.
அவளுடைய முகம் வீங்கிச் சிவந்திருந்தது.
இரவு முழுவதும் தூங்காமல் விழித்து கஷ்டப்பட்டாளோ என்னவோ அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய உறக்கத்தை குழப்ப விருப்பமின்றி அப்படியே அவளுடைய முகத்தைப் பார்த்தவாறு வேதனையுடன் அமர்ந்திருந்தான் யாழவன்.
கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் அவள் அசைந்து மெல்ல விழிகளைத் திறக்க அவளுடைய ஒற்றைக் கரத்தை மெல்லப் பற்றிக் கொண்டான் அவன்.
சட்டென தன்னுடைய கையை உருவி எடுத்துக் கொண்டவள் அவனை விட்டு விலகி படுக்கையில் அமர்ந்து கொள்ள அவனுக்கோ இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.
“ரிப்போர்ட் வந்திருச்சா.??”
ஆம் என தலை அசைத்தான் அவன்.
வாயைத் திறந்தால் வார்த்தைகள் வரும் என்று அவனுக்கு தோன்றவே இல்லை.
மௌனமாக தலையசைத்தவனை பார்த்து அவளுக்கோ பயமாக இருந்தது.
“ப்ளீஸ் யாழன்… தயவு செஞ்சு அது உங்களோட குழந்தைதான்னு என்கிட்ட சொல்லிடாதீங்க…” என்றாள் அவள் நடுக்கத்துடன்.
“சா… சாரி அர்ச்சனா..” என்றவனுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் வழிய,
விக்கித்துப் போய் அவனை வெறித்துப் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
வேதனையையும் தாண்டிய கோபம் அவளுக்குள் எழுந்து நர்த்தனம் புரிய,
“வாவ் கிரேட் மிஸ்டர் யாழவன்.. கிரேட்.. கங்கிராஜுலேஷன்ஸ்..” என்றாள் அவள் குத்தலாக.
“சோ என்ன பண்ணப் போறீங்க..? உங்க எக்ஸ் லவ்வரையும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா..? இல்லனா அவளை கூட்டிட்டு வந்து இங்கேயே தங்க வைக்க போறீங்களா..?”
“பேபி ப்ளீஸ்..” என்றான் அவன் உடைந்து போன குரலில்.
பளார் என ஓங்கி அவனுடைய கன்னத்தில் அறைந்து விட்டாள் அர்ச்சனா.
“ஹவ் டார் யூ யாழவன்..? என்ன இந்த நிலமைல நிறுத்திட்டு எப்படி உங்களால என்ன பேபின்னு கூப்பிட முடியுது..? வாய் கூசலையா..?” சீறினாள் அவள்.
அமைதியாக இருந்தான் அவன்.
எதிர்த்துப் பேசும் இடத்தில் அவன் இல்லையே.
அவளுடைய வலி தீருமாக இருந்தால் அவள் எவ்வளவு வேண்டுமானாலும் தன்னை அடிக்கட்டும் என அவன் அமைதியாக இருக்க அவளுக்கோ அவனுடைய முகத்தைப் பார்க்கப் பார்க்க வெறுப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.
“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையே.. அடுத்து என்ன பண்ண போறீங்க.? அவளை இங்க கூட்டிட்டு வரப் போறீங்களா..?”
“இல்லடி.. என்னோட வாழ்க்கைல உன்னத் தவிர இனி எந்த பொண்ணுக்கும் இடம் கிடையவே கிடையாது அச்சு… ஐ ப்ரோ மிஸ் யூ.. குழந்தையை மட்டும் நாம வளர்க்கலாம்..” என அவன் கூறியதும் அவனை வெறித்துப் பார்த்தவள்,
“யாரோ பெத்த குழந்தைய நான் எதுக்கு வளர்க்கணும்..? உங்கள கல்யாணம் பண்ணிட்டு உங்க கூட வாழ்றதுக்காக வந்தேனா..? இல்ல நீங்க கண்டவங்க கூட வாழ்ந்து பெத்து கொடுக்கிற குழந்தைக்கு ஆயா வேலை பார்க்க வந்தேனா..? இட்ஸ் ஓவர் யாழவன்.. ஐ அம் டன் வித் யூ.. எனக்கு டிவோர்ஸ் வேணும்..” என்றாள் அவள் உறுதியாக.
💔💔
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். 👌👌👌👌👌👏👏👏👏🥰🥰🥰🥰🤩🤩🤩😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️