லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 1
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
ஜெய் ஆஞ்சநேயா..!!
ஆஞ்சநேயர் படம் முன்னால் நின்று கண்ணை மூடி துதித்துக்கொண்டிருந்த ரணதீரன் இருந்த அறைக்குள் “அண்ணே அண்ணே..!!” என்று கத்திக்கொண்டு வந்த சின்னாவின் குரல் கேட்டு கண்ணை திறந்து அவனை முறைத்து பார்த்தான் தீரன்..
“ஏன்டா உனக்கு எம்மாம் தடவ சொல்றது நான் ஆஞ்சநேயர் சாமியை கும்பிடும் போது ஊடால பூந்து என் தவத்தை கலைக்காதன்னு.. உனுக்கு எத்தினி தபா சொன்னாலும் அறிவு வராதா டா..? கரடிக்கு பொறந்தவனே..”
ஏக வசனத்தில் அவனை சரமாரியாய் வசை பாடினான் ரணதீரன்..
“ஐயோ அண்ணே.. அங்க ஷாட்டுக்கு டைம் ஆயிடுச்சுன்னு டைரக்டர் கத்திக்கிட்டே இருக்கிறாருண்ணே.. உனக்காக அந்த ஹீரோ ஹீரோயின் எல்லாரும் வெயிட்டிங்ல இருக்குறாங்கண்ணே.. அந்த ஆள் டென்ஷன்ல எல்லாரையும் உண்டு இல்லைன்னு பண்ணிக்கினு இருக்கிறாருண்ணே..”
“ஆஹான்.. டேய்.. எவனா இருந்தாலும் என் ஆஞ்சநேயருக்கு அப்புறம் தான் டா.. சரி சரி.. இன்னும் அஞ்சே நிமிட்ல இந்த தீரன் அங்க இருப்பான்னு போய் சொல்லு போ..”
அவனிடம் சொல்லி அனுப்பிவிட்டு ஆஞ்சநேயர் படத்திற்கு முன்னால் இருந்த செந்தூரத்தை எடுத்து தன் நெற்றியில் இட்டுக்கொண்டு அந்த ஷாட்டுக்கு தேவையான உடுப்பை மாட்டிக்கொண்டு படபிடிப்பு தளத்துக்கு தன் அறையில் இருந்து கிளம்பி சென்றான் ஸ்டண்ட் மாஸ்டர் ரணதீரன்..
அதுவரை அந்தப் படப்பிடிப்பு தளத்தையே மிரட்டி கொண்டிருந்த டைரக்டர் தூரத்திலிருந்து அதிரடியாக இடிகளாக அடிகளை வைத்து மதயானை போல் நடந்து வரும் தீரனை கண்ட நொடி அப்படியே அடங்கி போனார்..
“வா தீரா.. எனக்கு தெரியும் தீரா.. நீ சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்துருவேன்னு.. இருந்தாலும் ஆர்டிஸ்ட் எல்லாம் வந்துட்டாங்களா..? அதான்..”
அசிஸ்டன்ட் டைரக்டர் பாண்டி அவன் அருகில் வந்து அவனை இளித்தபடி பவ்யமாய் வரவேற்க “அதெல்லாம் வுடு.. நேத்து நீ என் கிட்ட இன்னா டைம்க்கு வர சொன்ன..?”
“அது.. பத்து மணிக்கு..”
“ம்ம்.. இப்ப டைம் இன்னா ஆவுது..?”
“அது.. ஒன்பதே முக்கா தான் ஆவுது..”
“அப்படியே அந்த ஆளு அதான் அந்த டைரடக்கரு என்னமோ ரொம்ப தான் ரவுஸூ வுட்டுன்னு இருக்கிறானாம்.. சின்னா பய சொன்னான்.. என் ஆஞ்சநேயரை சரியா கும்பிட கூட விடாம இப்படி அந்த டங்காமாரி டைரக்டரு.. என்னை இஸ்துக்கினு வர சொல்லி பேஜாரு பண்ணிட்டானாமே..”
அவன் சத்தமாய் பேச அந்த அசிஸ்டன்ட் டைரக்டருக்கோ மண்டையே வெடித்தது.. “ஏதோ தப்பு நடந்து போச்சு தீரா.. தயவு செஞ்சு எனக்காக டென்ஷன் ஆகாத.. கொஞ்சம் அமைதியா இரு.. அந்த ஆளு செய்யறதெல்லாம் பார்க்கும்போது எனக்கே அந்த ஆளை கிழிச்சு தொங்க விடனும் போல தான் கோவம் வருது.. ஆனா என்ன செய்ய..? இப்ப நீ பேசறது காதுல விழுந்தா உன்னை வேணாம்னு சொல்லிட்டு வேற ஆளை பார்க்க சொல்லிடுவாரு.. எனக்கு தெரியும்.. இந்த படம் இல்லைன்னா உனக்கு நூறு படம் வரிசை கட்டி நிக்குது.. உன் வேலை அப்படி.. ஆனா எனக்கு அப்படி இல்லை.. உன்னை அனுப்பிட்டு உன்னை மாதிரியே இன்னொரு ஆளை பார்க்க சொன்னாருன்னா அந்த அளவுக்கு பர்ஃபெக்ட்டா வேலை செய்ற ஆளை தேடறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிடும்.. எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தீரா..”
அவனிடம் ரகசியமாக கெஞ்சினார் அந்த அசிஸ்டன்ட் டைரக்டர்.. “சரி சரி.. ரொம்ப ஆக்ட்டு வுடாத.. நீ அந்த பக்கம் போனின்னா என்னை பத்தி இன்னா இன்னா பேசுவேன்னு ஆல் டீடைல்ஸ் ஐ நோ.. சரி சரி இன்னிக்கு இன்னா ஸ்டன்டு பண்ணனும்னு டீடீலா சொல்லு.. இங்க வேலையை முடிச்சுட்டு 12 மணிக்கு அந்த பரணி ஸ்டூடியோக்கு போவணும்..”
“சரி சரி.. டென்ஷனாகாத தீரா..” என்று அன்று அவன் செய்ய வேண்டிய சாகசத்தை விளக்கி கூறிக் கொண்டிருந்தார் அவர்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரே டேக்கில் அவர் சொன்ன அத்தனை சாகசங்களையும் செய்து முடித்திருந்தான் தீரன்.. ஒரு சிறு கீறல் கூட மேலே படாது லாவகமாக செய்து முடித்துவிட்டு அந்த அசிஸ்டன்ட் டைரக்டரிடம் வந்தான்.. அவன் டூப்பாக இருந்து செய்து கொடுத்த காட்சிகளை இறுதியில் அந்த ஹீரோவின் முகத்தை காட்டி முடித்திருந்தார் டைரக்டர்..
அவருக்கு அந்த காட்சிகளில் படு திருப்தி.. அந்த ஹீரோ சண்டை முடித்தது போல் போஸ் கொடுப்பதற்கு பத்து டேக்குகள் எடுத்து கொண்டான் ..அதில் தான் அந்த டைரக்டர் கொஞ்சம் கடுப்பாகி கொண்டிருந்தார்..
“இன்னா பாண்டி.. எல்லாம் சரியா வந்திருக்குதா? நான் ஜகா வாங்கிக்கவா..”
தீரன் கேட்க “எல்லாம் பர்ஃபெக்ட்டா செஞ்சிருக்க தீரா.. அதுதான் நீ.. ஒரு நிமிஷம் இரு.. நான் டைரக்டர் கிட்ட சொல்லிட்டு உனக்கு இன்னைக்கு குடுக்க வேண்டிய பேமெண்ட்டை கொடுத்துடுறேன்..” என்றவர் நேராக டைரக்டர் இடம் சென்று விஷயத்தை சொல்லி பக்கத்திலேயே அமர்ந்து இருந்த புரொடியூசரிடம் பணத்தை வாங்கி எடுத்துக் கொண்டு வந்து தீரன் இடம் கொடுத்தான்..
அங்கே அந்த ப்ரொடியூஸரும் தீரன் செய்த சாகசங்களை எல்லாம் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவர் “ஏன்யா டைரக்டரு.. இந்த பையன் பார்க்கவும் நல்லா இருக்கான்.. நல்ல வாட்டசாட்டமா ஹீரோ மாதிரி இருக்கான்.. பேசாம இவனையே இந்த படத்துக்கு ஹீரோவா போட்டு இருக்கலாமே.. கொஞ்சம் இவனோட உடுப்பு எல்லாம் ஸ்டைலா மாத்திட்டா இப்ப நடிக்கிறானே அந்த சொத்தை ஹீரோ. அவன் எல்லாம் இவன் கிட்ட பிச்சை வாங்கணுமேயா.. அவன் உடம்பை பாருடா.. சும்மா தேக்குல செஞ்சு வச்ச மாதிரி அப்படியே தெனவெடுத்து இருக்கு.. அனாவசியமா இந்த சொத்தை ஆளுக்கு எதுக்கு இவ்வளவு பணத்தை கொட்டி கால்ஷீட் வாங்கி வேஸ்ட் பண்ணனும்..”
“ம்ம்.. ஆமா சார்.. நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. அவன் நல்ல ஹீரோ மெட்டீரியல் தான்.. ஆனா அவன் மூஞ்சியை பாத்தீங்களா.. அந்த மூஞ்சில வந்ததிலிருந்து ஒரு இஞ்ச் சிரிப்பை பார்க்க முடிஞ்சுதா? சிரிக்கிறதுன்னா என்னன்னே தெரியாது அந்த பயலுக்கு.. அவனை சிரிக்க வெக்கற ஒரே ஆளு அவன் தம்பி மட்டும் தான்.. அவன் தம்பி வந்தா மட்டும் தான் அவன் முகத்தில கொஞ்சமா சிரிப்பை பார்க்கலாம்.. மத்தபடி எப்பவும் முகத்தை உர்ருன்னு ஒன்னு கோவமா இல்லன்னா யாரையாவது முறைச்சு பார்த்துட்டு இருப்பான்.. நான் காதல் கவிதைன்னு ஒரு படம் எடுத்தேன்.. ஞாபகம் இருக்குதா..? அந்த படத்துல இவனை ஹீரோவா போடலாம்னு எனக்கும் தோணிச்சு.. சரின்னு ஹீரோவா போட்டேன்.. இந்த மாதிரி ஸ்டண்ட் சீனு பைட்டு சீனு இதெல்லாம் செமையா பிச்சு உதறிட்டான்.. அதெல்லாம் பார்த்தப்போ நான் கூட படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னு சந்தோஷப்பட்டேன்.. ஆனா படத்துக்கு காதல் கவிதைன்னு பேரை வெச்சுட்டு ஒரு ரொமான்டிக் சீன் கூட இல்லைன்னா எப்படி? இவனை வச்சு அப்படி ஒரு சீன் கூட பண்ண முடியல.. ரொமான்ஸ்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பான்.. அந்த பொண்ணை காதலா பாருடான்னு சொன்னா அடுத்த நிமிஷம் அந்த பொண்ணு மண்டைய பொளந்து கொலை செய்ய போற மாதிரியே பார்த்துக்கிட்டு இருந்தான்.. அப்புறம் எங்க அவனை ஹீரோவா போடுறது..? அதான் எப்பா சாமி.. நீ ஸ்டண்ட் பார்ட்டியாவே இரு.. உனக்கு நடிப்பு எல்லாம் ஒத்து வராதுன்னு சொல்லி வேற ஹீரோவை போட்டு படத்தை எடுத்தேன்.. இவனுக்கு மட்டும் கொஞ்சம் ரொமான்ஸ் வந்திருந்துச்சுன்னா படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆயிருக்கும்.. ஆனா அந்த ஹீரோவை போட்டு படம் சுமாரா தான் வந்துச்சு.. என்ன செய்ய..? கடவுள் அழகை குடுத்து இருக்கான்.. ஆனா அவனுக்கு அந்த அழகுக்கேத்த ஃபீலிங்ஸை கொடுக்கலையே.. கோபத்தை மட்டும் தான் கொடுத்து இருக்கான்..”
“அது சரி.. மொத்தத்தில என் பணம் எல்லாம் நஷ்டம் ஆகணும்னு என் தலையில எழுதி இருக்கு.. இந்த ஹீரோ நடிக்கிற நடிப்பை பார்த்தா அப்படி ஒன்னும் படம் ஓடும்னு தோணல.. பேசாம நடிப்பு வரலன்னாலும் அவனையே போட்டு இருக்கலாம்.. அவன் சும்மா வந்து நின்னாலே அவனை பாக்குறதுக்காக பொண்ணுங்க கயூல வந்து நிப்பாங்க போல”
“படத்துக்கு பொண்ணுங்க வருவாங்க.. ஆனா இவனோட நடிக்கறதுக்கு ஹீரோயின் ஒத்துக்கனும் இல்ல..? அவங்க படத்துல இவன் ஸ்டண்ட் பண்ணா இவனோட அழகை பார்த்து மயங்கி நிக்கிறாங்களே தவிர இவனோட நடிக்கறதுக்கு எந்த ஹீரோயினும் ம்ஹூம் சான்சே இல்ல.. ஏன்னா சாருக்கு அவ்வளவு கோவம் வரும்.. பொண்ணுங்களை கண்டாலே ஆகாது..”
“ஆமா.. அவன் தம்பியை பார்த்தா மட்டும் சிரிப்பான்னு சொல்றே.. அப்படி என்னய்யா அவன் தம்பி மட்டும் அவ்வளவு ஸ்பெஷல்..?”
“ஸ்பெஷல் தான். சின்ன வயதிலேயே அவங்க அப்பா இறந்துட்டாரு.. அவங்க அம்மா கிட்ட தான் ரெண்டு பிள்ளைகளும் வளர்ந்தாங்க.. அவங்க அம்மா கஷ்டப்பட்டு வேலை செஞ்சு அவங்க ரெண்டு பேருக்கும் வயறு நெறைய சாப்பாடு போட முடிஞ்சதே தவிர அவங்களுக்கு அவங்களை படிக்க வைக்க முடியல.. அதனால தன்னோட படிப்பை நிறுத்திட்டு நிறைய சின்ன சின்ன வேலைகளை பார்த்து தான் தம்பியை படிக்க வச்சான்.. இன்னிக்கு அவன் தம்பி இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்ந்து படிக்கறான்.. இவனுக்கு அப்படியே நேர் எதிர் அவன்.. நல்லா டிரஸ் பண்ணறது.. தன்னோட காலேஜ் பசங்களோட ஊர் சுத்துறது..ன்னு கஷ்டப்பட்டு எந்த வேலையும் செய்யாம அண்ணன் முதுகல சவாரி செஞ்சுக்கிட்டு இருக்கான்.. அவனும் இவனை மாதிரியே தான் பார்க்க நல்லா இருப்பான்.. ஆனா இவனை விட கொஞ்சம் ஹைட்டு வெயிட் எல்லாம் கம்மி.. பொண்ணுங்க அவன் காலேஜ்ல அவன் பின்னாடியும் சுத்துதுங்க.. ஆனா அண்ணன் மனசு கஷ்டப்படக்கூடாதுங்கறதுக்காக கொஞ்சம் படிக்கவும் செய்யறான்.. இவன் மேல பெரிய மதிப்பு வெச்சிருக்கிறான்.. தம்பிக்கு அண்ணன்னா உயிர்.. அண்ணனுக்கு தம்பி தான் உலகமே.. அவனுக்கு ஒன்னுனா துடிச்சு போயிடுவான் தீரன்.. ஆனா அந்த புள்ள உருப்படனும்னா கொஞ்சமாவது அவனுக்கு கஷ்டம் தெரியணும்ன்னு ஒவ்வொரு நாளும் அவங்க அம்மா சொல்லிக்கிட்டு தான் இருந்தாங்க.. பெரிய புள்ள கல்யாணத்தையாவது பாக்கணும்னு நினைச்சிட்டு இருந்தாங்க.. இவன் எங்க..? கல்யாணம் பண்ணாமயே பெறாத புள்ளையா தம்பியை நினைச்சுக்கிட்டு அவனுக்காகவே வாழ்ந்து காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கான்.. இப்பதான் ரெண்டு வருஷம் முன்னாடி இவனுக்கு கல்யாணம் ஆகலையே.. புள்ளைங்க வாழ்க்கை என்ன ஆகுமோன்ற கவலையிலயே அவங்களும் போய் சேர்ந்துட்டாங்க.. இவன் எங்க புரிஞ்சுக்கிறான்..? அந்த புள்ளையை செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்குறான்..”
ஒரு பெருமூச்சோடு சொல்லி முடித்தார் அந்த டைரக்டர்..
“இவனை பார்த்தா ஒரு 28 வயசு கிட்ட சொல்லலாம் போலயே.. இவனுக்கு இன்னும் கல்யாணம் ஏன் ஆகலை? இவ்வளவு அழகா இருக்குறவனுக்கு இன்னுமா எந்த பொண்ணும் அமையல? இவனை எல்லாம் 20 வயசுலேயே பொண்ணுங்க சுத்த ஆரம்பிச்சு இருப்பாங்களே”
“அதை ஏன் கேக்குறீங்க? இவன் செட்டுக்கு வந்தான்னா ஹீரோவை விட இவன் பின்னாடி சுத்துற பொண்ணுங்க தான் ஜாஸ்தி.. ஆனா இவனுக்கு தான் பொண்ணுங்கனாலே அலர்ஜி.. தீவிர ஆஞ்சநேயர் பக்தன்.. வாழ்க்கையில தன் அம்மாவை தவிர எந்த பொண்ணும் கிடையாதுன்னு தீர்மானமா இருக்கான்.. இவன் தம்பி அப்படியே உல்டா.. ஊர்ல இருக்குற அத்தனை பொண்ணுங்களோடையும் சுத்துறான்.. இப்படியும் ஒரு அண்ணன் தம்பிங்க..”
“எப்படியும் ஏதாவது ஒரு பொண்ணு அவன் வாழ்க்கைல வரத்தானே வேணும்? அப்படி யாராவது வந்தா இவன் மாறிடுவான்னு தோணுதுயா..”
“அதுக்கு இவன் தன் வாழ்க்கையில அந்த மாதிரி ஒரு பொண்ணை வர விடனும் இல்ல..? அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை..” சத்தியம் செய்யாத குறையாக சொன்னார் அந்த டைரக்டர்.. “அது மட்டும் இல்லை அவனுக்கு இப்ப வயசு 28 இல்ல 30..”
“30 ஆ.. நானே இருபத்தெட்டுன்னு ரொம்ப அதிகமா சொல்லிட்டனோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. என்னயா பார்க்க இவ்ளோ சின்ன பையனா இருக்கான்..?”
“ஆமா.. அவன் ஃபிட்னஸ் அப்படி.. அவன் உடம்பை கவனிச்சுக்கறதுக்காக அப்படி பாடுபடுவான்.. நம்மளால எல்லாம் அப்படி ஒரு வொர்க் அவுட் பத்தி எல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது..”
அவர் சொல்ல சொல்ல அந்த ப்ரொடியூசர் தன் தொப்பையை குனிந்து தடவிப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டார்..
அப்போது தீரன் கிளம்பிவிட
பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரு பெண் தீரனை நோக்கி ஓடி வந்தாள்.. அவனோ அவள் பக்கம் பார்வையை கூட திருப்பாமல் நாலே எட்டில் தன் பைக்கை அடைந்து ஸ்டைலாக வண்டியில் ஏறி அமர்ந்து ஒரு வட்டமடித்து கிளப்பி போய் இருந்தான்..
அவன் செல்லும் அழகை அப்படியே பார்த்து மெய் மறந்து போய் நின்றிருந்தாள் அந்த பெண்.. அவளோடு வந்திருந்த அவளுடைய மற்ற தோழிகள் எல்லாரும் ஹீரோவிடமும் ஹீரோயின் இடமும் கையெழுத்து வாங்குவதில் மும்முரமாக இருந்தார்கள்..
கையெழுத்து வாங்கி அவர்களுடன் புகைப்படம் பிடித்துக் கொண்டு அந்தப் பெண்ணின் அருகில் வந்து “ஏய் மலரு.. என்னடி.. அங்கே பார்த்துக்கிட்டு இருக்க? நீ ஹீரோ கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கல..”
“ஆமா.. அந்த டப்பா ஹீரோ கிட்ட யாருக்கு ஆட்டோகிராஃப் வேணும்.. இதோ போறானே என்னோட ஹீரோ.. இவன்கிட்ட தான் எனக்கு ஆட்டோகிராஃப் வேணும்.. அதுவும் இங்கே..” தன் இதயத்தில் கை வைத்து ஒரு ஏக்கப் பார்வையோடு சொன்னவள் “எப்படியும் ஒரு நாள் இந்த தீரன் கிட்ட நான் ஆட்டோகிராஃப் வாங்குவேன்..”
அவள் அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டு சொல்ல அவளுடைய தோழி நவீனா “காலேஜ்ல முக்கியமான லெக்சர் இருக்கு.. என்னைக்கும் இல்லாத அதிசயமா காலேஜ்ல ஒரு ஹவர் கூட மிஸ் பண்ணாம.. உடம்பு முடியலன்னா கூட கஷ்டப்பட்டு காலேஜுக்கு வர்றவ.. இப்படி முக்கியமான கிளாஸை கட் பண்ணிட்டு காலேஜ் பக்கத்தில ஷூட்டிங்க்னு தெரிஞ்சுக்கிட்டு இங்க வந்து இருக்கே.. நான் கூட நீ ஹீரோவை பார்க்க தான் வந்துருக்கன்னு நினைச்சேன்.. கடைசில இந்த ஸ்டண்ட் பார்ட்டி தான் உன்னோட கனவு கண்ணனா..”
“ஆமா டி.. இவன் தான்டி என் ட்ரீம் பாய்.. இவனை ஒரு டிவி இன்டர்வியூல பார்த்தேன்.. பார்த்ததிலிருந்து என் கண்ணில இருந்து போகவே மாட்டேங்குறான் டி.. என் மனசு முழுக்க நிறைஞ்சிருக்கான்.. எப்படியும் அவன் கூட பேசி அவனோட பெஸ்ட் ஃபிரென்ட் ஆகி காட்டுவேன்.. இந்த அழகன் இந்த மலரழகிக்கு மட்டும் தான்..”
உறுதியாக அவன் போன திசையையே பார்த்தபடி சொன்னாள் அவள்.. அவளுடைய தோழி நவீனா “அவனை பார்த்தா எப்பவும் உர்ருன்னு இருக்குற மாதிரி இருக்கு.. அவனுக்கு வயசு கூட ரொம்ப அதிகமா இருக்கும் போல.. அவன் கூட நீ எப்படிடி ஃப்ரெண்டாக முடியும்.. பொண்ணுங்க பக்கம் கூட திரும்ப மாட்டேன்கிறான் அந்த ஆளு..”
“ஏய்.. ஆளு கீளுன்ன.. பல்லு உடைஞ்சுடும்.. அவர் எனக்கு மட்டும்தான் ஆளு.. உங்களுக்கெல்லாம் அண்ணன்.. புரிஞ்சுதா?” மிரட்டியவள் தன் கனவுக்கண்ணனின் நினைவிலேயே தன் கழுத்திலிருந்த சங்கிலியை வாயில் வைத்து மென்மையாய் தன் முத்து பற்களால் கடித்தபடி புன்னகை பூத்த முகத்தோடு வேறு உலகத்தில் சஞ்சரிக்க தொடங்க.. இவளுக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையோடு அவளை பார்த்து விழித்து கொண்டு இருந்தார்கள் அவளுடைய தோழிகள்..
மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஒரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்..
போதும் என்று தோன்றும்..
காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன..
கடிகாரம் காட்டும் நேரம்..
அதை நம்ப மாட்டேன் நானும்…!!
தொடரும்..