உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

3.8
(5)

அத்தியாயம் 18

திவ்யா பாப்பாக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா. அப்படியே எனக்கும் காஃபி..

அம்மா காஃபி குடிச்சீங்களா?

அதெல்லாம் குடிச்சாச்சு..

நீயாவது என்கிட்ட கேக்குற..

வேற யார் இருக்கா என்னை கேக்குறதுக்கு..

ஒருத்தரும் என் பேச்சை மதிக்கறது இல்லை இந்த வீட்ல..

திவ்யா எதுவும் சொன்னாளா?

இல்லை ப்பா..

அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் திவ்யா..

ஒண்ணுமே இல்லாத பிரச்சனையும் பெருசா மாத்திடுவாங்க இந்த அத்தை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்…

அரவிந்த் கீழே வா என்று கூறி விட்டுத்தான் வந்தான்..

அவனும் வந்துவிட தேவகி எழுந்து போய் வாசற்படியில் அமர்ந்து கொண்டார்…

திவ்யா அரவிந்துக்கும் சேர்த்து காஃபி எடுத்துட்டு வா..

அவள் அனைவருக்கும் கொடுத்தாள்…

டேய் என்னடா ஆச்சு?

அவனும் ஸ்டேசனில் நடந்ததை கூற..

அப்போ பிரகதி மேல தப்பு இல்ல கரெக்டா?

ஆமா! ஆனா  அவ தான் விட்னஸ்..

என்ன நடந்துச்சுன்னு அம்மா இந்த கல்யாணத்தை கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றாங்க..

அவ  மேல தப்பே கிடையாது?

வேகமாக உள்ளே நுழைந்தவர்! அவ தப்பு பண்ணலோ இல்லையோ இந்த கல்யாணம் வேண்டாம்…

ஒரு கொலை நடந்திருக்கிறது பார்த்து இருக்கா..

அதனால நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றது? 

அப்படியெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது.. வந்தாலும் பாத்துக்கலாம் என்றான் அரவிந்த்..

ஏம்மா இன்னும் மூனு நாள்ல கல்யாணத்தை வெச்சுகிட்டு இருக்க சொன்னா நல்லாவா இருக்கு என்றான் அபிஷேக்?

நான் ஒன்னும் தாலி கட்ட முன்னாடி சொல்லல தான..

அம்மா நம்ம வீட்டுல ஒரு பொண்ணு இருந்தா இப்படி பேசுவீங்களா என்று சொன்னது தான் தாமதம்..

போதும் அபி ! நான் எதுவும் பேசலை..

உன் கல்யாணத்த தான் உன் விருப்பம் ன்னு பார்த்தா..அவனும் இப்படி தான் இருக்கான்..

மண்டபத்துல பார்த்தாராம் உடனே புடிச்சு போச்சு ன்னு சொல்றான்.. 

எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு…

அமைதியா இருந்துட்டே என் பையன மயக்கி வெச்சிட்டா..

அம்மா திவ்யா நான் லவ் பண்ணி  தான் கல்யாணம் செய்தேன்.. ஆனா உங்க சம்மதம் கிடைச்சு தானே செய்தேன்..

ஆனா அரவிந்த் அப்படி இல்லை தான.. உங்க கிட்ட தான் முதல்ல சொன்னான்..

இந்த கல்யாணத்த நிறுத்திட்டு என் கூட பேசுங்க என்று அறைக்கு சென்று கோபமாக கதவடைத்து விட்டார்..

டேய் ஏண்டா அம்மா இப்படி இருக்காங்க .. அவ பாவம் டா.. என்னை  ரொம்பவே பிடிஞ்சிருக்கு‌‌‌ அவளுக்கு…

சரி விடு அப்பா வரட்டும்..

திவ்யா வேற கோவிச்சுக்கிட்டு ரூம் போயிட்ட; நான் போய் சமாதானம் பண்ணனும்…

சாரி டா என்னால அம்மா உங்களையும் பேசிட்டாங்க..

டேய் பரவால்ல நான் ரூம்க்கு போறேன் என்று சென்று விட்டான்..

அவளோ குழந்தையுடன் படுத்து இருந்தாள்..

டார்லிங் கோவமா?

இல்லை பெருமையா இருக்கு..

அம்மா ஏதோ கோபத்தில சொல்லி இருப்பாங்க டி..

லவ் மேரேஜ் தான்.ஆனா வீட்டுக்கு பிடிச்சு தானே செய்தோம்..இப்ப வந்து உங்க அம்மா இப்படி பேசுறாங்க..

நான் நல்ல மருமகளா இல்லையா?

பேபி அப்படி இல்லை மா..

என்று கெஞ்சி கொஞ்சி சாமாதானம் செய்தான்…

ஏண்டி டல்லா இருக்க..

தெரியல டா இந்த வீக் ஃபுல்லா இப்படி தான் இருக்கு என்றாள்..

கொஞ்சம் ரிலாக்ஸா இரு..

அலைச்சல் அதிகமா இருந்துச்சு அதனால அப்படி இருக்கும்…

ஹாஸ்பிடல் போலாமா?

வேண்டாம், மறுபடியும் 

போய்க் கலாம்..

இப்ப அரவிந்த் விஷயம் சால்வ் பண்ணுங்க என்றாள்..

பேபி உன்னை மாதிரி லைஃப் பார்ட்னர் கிடைக்க நான் ரொம்ப லக்கி என்றான்..

போதும் ரொம்ப ஐஸ் வைக்காதிங்க ; எனக்கு குளிருது…

பேபி ஒரே ஒரு  கிஸ் குடு டி..

போடா தர முடியாது..

சரி நானே தரேன்‌ என்று இதழில் ஆழமாக முத்தம் கொடுத்தான்..

இருவருக்குமே இது தேவை பட்டது போல…

டேய் பாப்பா கீழ இருக்கா..

அரவிந்த் இருக்கான்…

மாமா வர டைம் ஆச்சு..

வாங்க போகலாம் என்று இருவரும் கீழே வந்தனர்..

அம்மாடி திவ்யா கொஞ்சம் தண்ணி குடிக்க கொடு மா என்றார் சுகுமார்..

அவள் சோர்வாக இருப்பதை பார்த்து அரவிந்த் அண்ணி நீங்க இருங்க; நான் எடுத்து வரேன் என்று அவன் தான் தண்ணீர் கொடுத்தான்..

என்னவாம் உன் அம்மாவுக்கு..கல்யாணத்த நிறுத்த சொல்றா…

அவ பேசறது தான் சரி! அவ சொல்லறது தான் நாம கேக்கனும் ன்னு சொல்லிட்டு இருக்கா…

அப்பா பொறுமையா பேசலாம் அபிஷேக் கூற..

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தார் தேவகி..

தேவகி வெளியே வா ;

இப்பவே எல்லாம் பேசலாம்…

அவர் வெளியே வந்து “நான் என்னோட முடிவு சொல்லிட்டேன்” நீங்க தான் முடிவு எடுக்கனும் என்று சொல்லிவிட்டார்…

அவன் தான் கல்யாணம் பண்ணா அந்த பொண்ண தான் செய்வேன்னு முடிவா சொல்லிட்டான்.

அப்ப நாளைக்கு அவளால பிரச்சினை வந்தா என்ன பண்றது..

இப்படி பேசுபவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தது…

அத்தை என்று திவ்யா ஏதோ கூறப் போக..

திவ்யா ” நீ எதுவும் பேச வேண்டாம் ” என்று விட்டான்.

தேவகிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.. நான் ஏதாவது பேசிடுவேன்னு தான் பேச வேண்டாம்னு சொல்லி இருப்பான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்…

அம்மா ப்ளீஸ் அவள எனக்கு ரொம்பவே பிடிஞ்சிருக்கு‌‌‌.. அது மாதிரி தான் அவளுக்கும்…

அப்படி என்னப்பா பார்த்த உடனே காதல்..நீ வேற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ என்றார்…

அம்மா இதெல்லாம் ரொம்பவே தப்பு.. மூனு நாள்ல கல்யாணத்தை வெச்சுகிட்டு எப்படி மா ..

இதே எனக்கு இப்படி பிரச்சினை வந்தா என்ன பண்ணி இருப்பீங்க என்று கேட்டான் அரவிந்த்…

என்ன சொன்னாலும் எனக்கு இதுல விருப்பம் இல்லை அவ்ளோதான் தேவகி கூற..

அப்ப இந்த குடும்பத்துல நான் எதுக்கு இருக்கணும்.. என் பேச்சை மதிக்கறது இல்லை…

உன் விருப்பப்படி நிறுத்திடலாம்..

நான் மறுபடியும் துபாய்க்கு வேலைக்கு போறேன்..

இங்க இருந்து எனக்கு மரியாதை இல்லை..

அபிஷேக் நீ வேலைக்கு ரிசைன் பண்ணிட்டு கடைய பாத்துக்கோ..

இது தான் என் முடிவு என்று கோபமாக கூறி முடித்தார்…

அப்பா இப்படி எல்லாம் பேசாதீங்க என்று இரு மகன்கள் கூற..

இது தான் என் முடிவு யாருக்காகவும் நான் மாத்திக்க மாட்டேன் பிடிவாதமாக சொல்லி விட்டார்…

ஏங்க நான் எதுக்கு சொல்றேன் நீங்க கூட புரிஞ்சுக்கல..

பையன் சந்தோசத்த விட உன் பிடிவாதம் பெரிசா இருக்கு தான சுகுமாரன் கேட்க..

தேவகியாள் எதுவுமே கூற முடியவில்லை..

அவர் கணவனே இப்படி கூறும் போது அவர் என்ன செய்து விட முடியும்..

சரிங்க நான் உங்களுக்காக மட்டும் ஒத்துக்கறேன்..

எனக்கு இப்பவும் விருப்பம் இல்லை..

என்னை யாரும் எதுக்கும் கலந்துக்க வேண்டாம்..

அது சரி. போய் ரெடி ஆகு சம்பந்தி வீட்டுக்கு போய் வரலாம் என்று கிளம்பச் சென்றார்..

திவ்யா வரவில்லை என்று கூறி விட்டாள்…

சரி மா நாங்க சீக்கிரம் போயிட்டு வரோம்.. நீ சேஃப்டி யா இரு என்றார்…

சிறிது நேரத்தில் பிரகதி வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 3.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!