பாகம் 6
முதல் இரவை பற்றி எல்லாம் விஷ்ணு இதுவரை யோசிக்க கூட இல்லை.. இவர்கள் வந்து பேசியபின் தான் அந்த நினைவே வந்தது.. முதல் இரவா நினைக்கும் போதே கண்ணை கட்டி கொண்டு வந்தது விஷ்ணுவுக்கு,
பொதுவாக திருமணம் என்றாலே தாம்பத்தியம் எதார்த்தமான ஒன்று தான் என்பது அவளுக்கும் தெரியும்.. ஆனால் இவர்கள் திருமணமோ இருவருக்குமே அதில் பிடித்தம் இல்லை.. இந்நிலையில் முதல் இரவா அது எப்புடி ஒரு புரிதல் பிடித்தம் காதல் இது எல்லாம் இல்லாமல் அதை மட்டும் ஏற்க முடியும்..
“கல்யாணமான அதிர்ச்சியிலிருந்தே நான் இன்னும் வெளிவரல, அதற்குள்ள பர்ஸ்ட் நைட்டா, என்னால்ல முடியாது”.. என்ன பண்ணலாம்.. இதை எப்புடி அவாய்ட் பண்றது என யோசிக்க,
அவர்கிட்ட டைம் கேட்டு பார்க்கலாமா என்ற எண்ணம் தோன்ற, போச்சு வேற வினையே வேண்டாம்.. பர்ஸ்ட் நைட்டு வேணுமா வேண்டாம்ங்கிறதை எல்லாம் நான் தான் முடிவு பண்ணுவேன்.. நீ எப்புடி வேண்டாம் சொல்லுவ, நீ வேண்டாம்ன்னு சொன்னதால் எனக்கு வேணும்னு எடக்கு மடக்கா பேச ஆரம்பிச்சிடுவார்.. அவர்க்கு தான் ஈகோ ஏக்கர் கணக்குல இருக்கே என்று சலித்து கொண்டவள், மேலும் என்ன பண்ணலாம் என்று யோசிக்க ஒன்றுமே தோன்றவில்லை தூக்கம் தான் வந்தது அப்புடியே தூங்கியும் போனாள்..
எவ்வளவு நேரம் தூங்கினாளோ அவளுக்கே தெரியவில்லை.. அவளை வந்து யாரோ பிடித்து பயங்கரமாக உலுக்கவும் தான் பதறி கண் விழித்தாள் விஷ்ணு..
“என்ன பொண்ணு நீ கல்யாணம் பண்ணி வந்த முதல் நாளே இப்புடி தூங்கற, எவ்வளவு நேரம் உன்னை எழுப்புறது”என்று தேவகி சத்தம் போட்டார்..
“சாரி” என்றாள் விஷ்ணு..
அவளை முறைத்தவர் “சரி சரி சீக்கிரம் குளிச்சு ரெடி ஆகி வா” என்று சொல்ல,
“எங்காவது வெளிய போகனுமா” என்று கேட்ட விஷ்ணுவை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு வெளியேறினார் தேவகி..
“இப்ப எதுக்கு இவங்க இப்புடி பார்த்துட்டு போறாங்க என்று விஷ்ணு யோசிக்க அப்போது தான் அவர் எதற்காக குளிக்க சொன்னார் என்பது புரிந்தது.. என்ன மாமியார் இவங்க, சீரியல் வர மாமியாருங்க மாதிரி நல்லா மூளையை கசக்கி ப்ளான் போட்டு மகன் மருமக பர்ஸ்ட் நைட்டை நடக்க விடமா பண்றதை விட்டுட்டு,இப்புடி ரெடியாகுனு சொல்லிட்டு போறாங்க ச்சே” என்றவள் மீண்டும் மெத்தையில் அமர்ந்து இப்ப என்ன பண்றது என்று கண்ணை மூட,
அப்போதும் தான் காலை மண்டபத்திலிருந்து இங்கு வருவதற்கு முன்பு தனியே அழைத்த அவள் தாய் கல்யாணி ப்ரியா உன்னை ரொம்ப போட்டு குழப்பிக்காத, இதை மட்டும் நியாபகத்தில் வச்சுக்கோ, உனக்கு கல்யாணம் நடந்துருச்சு, இனிமே இது தான் உன் வாழ்க்கை, மாப்பிள்ளை தான் உனக்கு எல்லாமே, கஷ்டமோ நஷ்டமோ நீ தான் அனுசரிச்சு வாழ்ந்துக்கனும்.. எதற்கும் பயப்படாத உனக்கு நல்லது மட்டும் தான்டா நடக்கும் என்று கூறியது நினைவு வந்தது.. கண்ணை திறந்தவன் அம்மா சொன்ன மாதிரி இனி இது தான் என் வாழ்க்கை, ரொம்ப யோசிச்சு குழப்பிக்காம வாழ்க்கை போற போக்கில் போவோம் என்று தன்னை தானே சமாதானம் சொல்லி கொண்டு குளிக்க செல்ல துணியை எடுக்க, அப்போது இவ்வளவு நேரம் இவள் கழுத்தை அறுத்த ப்ரதாப் உறவு முறை பெண்கள் உள்ளே வந்தனர்..
“நீ இன்னுமா குளிக்கலை சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா, நாங்களே உனக்கு புடவை கட்டி விட்டு அலங்காரம் பண்றோம்” என்றனர்..
அவளுக்கு புடவை சரியாக கட்ட தெரியாது தான் அவர்களிடம் அதை காட்டி கொள்ள விரும்பாது “பரவாயில்லை நானே பார்த்துக்கிறேன்” என்றாள்..
ஆனால் அங்கு இருந்த பெண்களோ “நாங்க தான் உன்னை ரெடி பண்ணுவோம்.. சீக்கிரமா போய் குளிச்சு வா” என அவளை பாத்ரூம் நோக்கி தள்ளி விட்டனர்.. சரியான லூசு குடும்பம் என பெருமூச்சு விட்டவள் குளிக்க சென்றாள்..
அதே சமயம் விஷ்ணு வீட்டிலோ பார்த்திபன் தன்னுடைய அறையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அறையில் பவித்ராவுக்காக காத்து கொண்டு இருக்க, அவனை பெரிதும் ஏங்க விடாது பவித்ராவும் கதவை திறந்து கொண்டு வந்தாள்.. அவளை கை பிடித்து மெத்தையில் அமர வைத்தவன் விரல் கொண்டு நெற்றியை வருட அந்த விரலை பிடித்தாள் பவித்ரா.. “என்னடி “என்று பார்த்திபன் எரிச்சல் பட,
“கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்” பார்த்தி..
“மூணு வருஷம் பேசுனது பத்தலையாடி, இப்பவும் பேசிக்கிட்டா இருக்கனுமா” என்று சலித்து கொண்டான்..
அவனை பார்த்து சிரித்தவள் “ஏன் இப்புடி சலிச்சுக்கிற” என்றவள் அவனின் தோள் சாய்ந்தபடி “நான் இப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா, நம்ம கல்யாணம் எந்த ப்ராப்ளமும் இல்லமா இரண்டு வீட்டு சம்மதத்தோட நடக்கம்னு” நினைக்கவே இல்லை..
“வேற எப்புடி நடக்கும்னு நினைச்சேன” என்று கேட்டான்..
“நிறைய ப்ராப்ளம் வரும் யாரும் ஒத்துக்கவே மாட்டாங்கனு ரொம்ப பயமா இருந்துச்சு” என்றதும்,
“ஏன் பவி நீ சொன்ன மாதிரி உன் வீட்டுல நம்ம மேரேஜ்க்கு ஒத்துக்காமலே இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப”,
“ஒத்துக்கற வரை சண்டை போட்டு போராடி இருப்பேன்”..
“நீ எவ்வளவு போராடுனாலும் முடியவே முடியாது.. நீ அந்த பார்த்திபனை மறந்திட்டு நாங்க சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கோ இல்லைன்னா நாங்க சூசைட் பண்ணிக்குவோம் அப்புடின்னு எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணி இருந்தா அப்ப என்ன பண்ணிருப்ப”என்று கேட்டான் பார்த்திபன்..
“வெரி சிம்பிள் நான் சூசைட் பண்ணி இருப்பேன் பார்த்தி” என்றதும் பதறியவன் “லூசு நல்ல நாள்ல ஏன்டி இப்படி பேசுற”
“உண்மை தான் பார்த்தி, நீ இல்லாத லைஃப் ஒன்னுமே இல்லை.. அது நான் சாகிறதுக்கு சமம் என்று பவித்ரா கூறவும், எட்டி அவளை அணைத்த பார்த்தி உச்சந்தலையில் முத்தமிட்டு “இப்புடி எல்லாம் பேசுதடி கஷ்டமா இருக்கு” என்றான்..
“உண்மையை தான் சொன்னேன் பார்த்தி”..
“நீ ஒரு ஈரவெங்காயமும் சொல்ல வேணாம்.. அதை இதை பேசி மூட ஸ்பாயில் பண்ணாத பவி என்றவன் அவளை நிமிர்ந்தி இதழோடு இதழ் அணைத்த படியே கட்டிலில் சரிந்து அவளில் தன்னுடைய தேடுதலை தொடங்கினான்..
“பர்ஸ்ட் நைட்டுக்கு போறவளுக்கு எதுக்கு இவ்ளோ சேஃப்டி பின்” என்று விஷ்ணுவுக்கு புடவை கட்டி விட்டு கொண்டு இருந்த பெண் டேபிளில் புடவையில் குத்த விஷ்ணு எடுத்து வைத்திருந்த பின்னை பார்த்து கேட்டாள்..
“குத்த தான்” என்று விஷ்ணு பதிலளித்ததும்..
“இத்தனை பின் குத்தினா, பின்ன கழட்றதுக்குள்ள விடிஞ்சிரும்” என அனைவரும் சிரித்தனர்..
“அது எல்லாம் ஒன்னும் வேணாம்” என்று பின் குத்தாமலே சாரியை கட்டி விட,
“அய்யயோ எனக்கு பின் குத்தலனா புடவை இடுப்புல நிற்காதே” என்று ஒன்றுமறியா விஷ்ணு பாப்பா கூறவும்,
“அது தான் வேணும்” என்று புடவை கட்டி விட்டு கொண்டு இருந்த பெண் கண்டிக்க மீண்டும் அனைவரும் சிரித்தனர்.. விஷ்ணுவுக்கு தான் அய்யோடா என்றிருந்தது..
கேலி கிண்டல் செய்தபடியே விஷ்ணுவை தயார் செய்தனர்.. பினிஷ்ட் உன்னை நீயே கண்ணாடியில் பாரு என்றதும் பார்த்த விஷ்ணுவிற்கு தான் மயக்கமே வரும் போல இருந்தது..
ஒன் பிலட், லோ ஹிப் என புடவை கட்டி விட்டு இருந்தனர்.. லிப் ஸ்டிக் வேறு திக் ரெட் கலர் அடித்து விட்டு இருந்தனர்.. “எனக்கே என்னை பார்க்க ஒரு மாறி இருக்கே” என விஷ்ணு வால் நொந்து கொள்ள மட்டும் தான் முடிந்தது..
ப்ரதாப் அறை வாசலை வர கொண்டு விட்டுட்டு சென்றனர்.. இது தான் வாழ்க்கை அது இது என்று அவள் தனக்கு தானே எவ்வளவு சமாதானம் கூறி கொண்டாலும், இப்போது உள்ளே செல்ல பயமாக தான் இருந்தது.. ப்ரதாப்புடன் தனியாக ஒரே அறையில் இருக்க வேண்டும் நினைக்கும் போதே குப்பென்று வேர்த்தது.. எப்புடியும் உள்ள போய் தானே ஆகனும் என்று பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு தன்னை தானே சமன்படுத்தி விட்டு கதவை திறந்து உள்ளே வந்து கதவை தாளிட்டாள்.
கட்டிலை பார்க்க அதில் எந்த வித அலங்காரமும் இல்லை.. பார்த்தவளுக்கு அதிர்ச்சி தான்..
அவள் கணவனும் இல்லை.. எங்கே என்று அறையை சுற்றி நோட்டமிட்டாள்.. எங்க ஆளையே காணோம் என்று பார்வையை சுழல விட கட்டிலின் இடது புறம் கட்டிலை விட்டு கொஞ்சம் தூரம் ஒரு ஷோபாவில் அமர்ந்தபடி எதிரில் இருந்த டீபாயில் கால் மேல் கால் போட்டு லேப்டாப்பை மடியில் வைத்து ஏதோ வேலை செய்து கொண்டு அமர்ந்து இருந்தான்.. டீசர்ட் ட்ராக்சூட் மட்டும் தான் அணிந்து இருந்தான்..
உள்ளே வந்தவளை நிமிர்ந்து ஒரு நொடி பார்த்து விட்டு மீண்டும் லேப்டாப்பில் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டான்…
என்ன இவரு ஒன்னுமே சொல்லலை என்றபடி மெதுவாக நடந்து அவனருகே வர, அப்போதும் அவன் வேலையை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான் தவிர இவளை நிமிர்ந்து பார்க்கவில்லை..
ஒன் ஃபில்ட் மட்டும் விட்டு இடுப்பு தெரியும்படி லோ கிப்பில் வேறு புடவை கட்டி விட்டு இருக்க அது வேறு விஷ்ணுவுக்கு சங்கடமாக இருந்தது..
” இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க” என்று பால் சொம்பை அவன் முகத்து முன்பு நீட்ட வேணாம் என்று தலையை மட்டும் ஆட்டினான் ப்ரதாப்..
“வாயை திறந்து சொன்னா அப்புடியே முத்து உதிர்ந்திடும்” என்று மனதிற்குள் திட்டியவளுக்கு அடுத்து செய்வது என்றே தெரியவில்லை.. இப்புடியே நிற்பதா இல்லை கட்டிலின் அந்த பக்கம் இருந்த இன்னோரு ஷோபாவில் அமருவதா, என்று தெரியவில்லை.. அவளாக ஏதாவது செய்ய போய் அதற்கு ப்ரதாப் கோவப்பட்டு திட்டி விடுவானோ என்ற பயமாக இருந்தது..
தூக்கம் வேறு வந்தது.. பத்து நிமிடம் அப்புடியே நின்றவளுக்கு ஒரே இடத்தில் நின்றதால் கால் வலி எடுக்க,
ப்ரதாப்பை எப்புடி கூப்பிடுவது என்றும் தெரியவில்லை அதனால் குரலை க்கும் என்று செரும,
அவள் கணவன் அசைய கூட இல்லை.. இரண்டு மூன்று முறை மீண்டும் அதே போல் செய்ய, ப்ரதாப் அசைய கூட இல்லை..
“வச்சு இருக்கிறது ஊறுகாய் கம்பெனி இதில்ல ஐடி கம்பெனி வச்சு இருக்கிற போல பக்கத்தில் நின்னுட்டு இருக்கிறவளை என்ன ஏதுன்னு கேட்காம லேப்டாப்பை தட்டி இருக்கிறது பாரு குரங்கு” என்று திட்டினாள்.. அவன் லேப்டாப்பை பார்த்து கொண்டு இருக்கும் தைரியத்தில், இது வேலைக்கு ஆகாது என்பது புரிந்தவள்,
“என்னங்க” என்று ப்ரதாப்பை காற்றுக்கும் வலிக்காத குரலில் மிக மிக மெதுவாக அழைக்க,
ம்.. என்றான் நிமிராமலே,
“கால் வலிக்குதுங்க” என்றாள்..
“நான் கூட உனக்கு தொண்டையில்ல தான் ஏதோ பிரச்சினைன்னு நினைச்சேன், கால் வலி தானா” என்று நக்கலாக கேட்டவன், லேப்டாப்பில் கண்பதித்தபடியே அங்க லேப் சைட் இருக்கிற டிராவுல பெயின் கில்லர் டேப்லெட் இருக்கும் எடுத்து போட்டுக்கோ என்றான்..
“எதே” என்று விழித்தவள் “அச்சோ அது எல்லாம் வேண்டாம் இப்புடி நின்னுட்டு இருக்கிறது தான் கால் வலிக்குது” என்றாள்..
“அப்ப உட்காரு” என்றான்..
“அவன் பதிலில் மதுரை முத்துவுக்கு மாமா பையன்னு நினைப்பு” என மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள்,
“அய்யோ அது இல்ல இப்ப என்ன பண்றதுன்னு கேட்டேங்க”..
“அதை ஏன் என்கிட்ட கேட்கிற? உனக்கு என்ன பண்ண தோணுதோ அதை பண்ணு” என்றான்..
எனக்கு தூங்க தோணுது என்றாள்..
“தூக்கம் வந்தா தூங்கு” என்றான்.
என்ன தூங்கிறதா? அப்ப வேற எதுவும் இல்லையா என்று விஷ்ணு அதிர்ச்சியாக கேட்க,
“ஏன் நீ எதையாவது எதிர்பார்க்கிறயா? என்று லேப்டாப்பில் இருந்து பார்வையை விலக்கி அவள் கண்ணை பார்த்து கேட்டான்..
அவன் பார்வை ஏதோ செய்ய தலையை குனிந்து கொண்டாள்…
“பிடிக்காத கல்யாணம் அதனால்ல நீ பர்ஸ்ட் நைட்டுக்கு எல்லாம் ப்ரிபெரா இருக்க மாட்டேன் நினைச்சேன்.. ஆனா அப்புடி இல்ல போலயே.. உனக்கு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்த சொல்லு நிறைவேத்திடலாம் என்று லேப்டாப்பை மூடி வைத்து விட்டு எழ பார்க்க,
அதில் பயந்தவள் “இல்ல இல்ல எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல.. எனக்கு இது பிடிக்கவும் இல்ல என்றவள் சட்டென நாக்கை கடித்து கொண்டாள்..
என்ன என ப்ரதாப் கேட்க,
“அச்சோ விஷ்ணு உன் வாய் தான்டி உனக்கு எதிரி இந்த மனுஷன் முன்னாடி பிடிக்கலைங்கிற வார்த்தையை சொல்லலாமா ஏற்கெனவே கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்னதற்காகவே கல்யாணம் பண்ணிக்கிட்ட ஆளு
இப்ப பர்ஸ்ட் நைட்டு பிடிக்கலைன்னு சொன்ன நடத்தி முடிச்சிட்டு தான் வேற வேலை பார்ப்பார் என்று தன்னை கடிந்து கொண்டவள்,
ஒன்னுமில்லை தூக்கம் வருது படுத்துக்கிறேன் என கட்டிலின் ஓரம் போய் நின்று கொண்டாள்..
தோளை குலுக்கிய ப்ரதாப் மீண்டும் லேப்டாப்பை திறந்து வேலை செய்ய ஆரம்பித்தான்.
கட்டிலுக்கு அருகே வந்தவளுக்கு மீண்டும் எங்கு படுப்பது என்று மீண்டும் குழப்பம் எழ, ப்ரதாப்பை திரும்பி பார்த்தவள் மீண்டும் என்னங்க நான் எங்க படுக்க என்று கேட்டாள்..
வேலை செய்ய விடாமல் தொல்லை செய்பவள் மீது கோவம் எழுந்தது ப்ரதாப்க்கு “ஏன்டி உனக்கு கண்ணு தெரியாதா அதான் அவ்ளோ பெரிய கட்டில் இருக்குல அப்புறம் என்ன, ஏதோ குழந்தை மாதிரி அப்ப இருந்து எங்க உட்கார நிற்க படுக்கன்னு கேள்வி மேல்ல கேள்வி கேட்டுட்டு இருக்க என்று கத்தினான்..
அதில் பயந்த விஷ்ணு கட்டிலில் படுத்து கண்ணை மூடி கொண்டாள்.. அவளை பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்டு சலிப்பாக இருபுறமும் தலை அசைத்தவன் சரியான வெரிவாடு என்று திட்டி விட்டு வேலையை தொடர்ந்தான்..
“ஒற்றை கண்ணை திறந்து அவனை பார்த்த விஷ்ணு சரியான சிடுமூஞ்சி சிதம்பரம் என்று திட்டியவள், பிடிச்ச போல பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணி இரூந்த இந்த டைம் இப்புடியா லேப்டாப் முன்னிடி உட்கார்ந்து இருப்பார்.. நிஜமாவே நம்மளை பிடிக்கலை போல என்ற எண்ணம் வர போனது.. மனதில் சின்ன வலியும் ஏமாற்றமும் தோன்றியது.. சிறிது நேரம் எதை எதையோ யோசித்திவள், கொஞ்சம் நேரத்தில் தூங்கியும் விட்டாள்..
கட்டிலின் வலது புறம் இருந்த ஷோபாவில் அமர்ந்து ப்ரதாப் வேலை பார்த்து கொண்டு இருக்க.. விஷ்ணு கட்டிலின் இடது புறம் படுத்து இருந்தாள்.
சிறிது நேரம் கழித்து வேலை பார்த்து கொண்டு இருந்த ப்ரதாப்க்கு அவனின் ஷோபாவிற்கு அருகே தொப்பென்று ஏதோ கீழே விழும் சத்தம் கேட்க, என்னவென்று ஏதோவென்று புருவம் சுருக்கி பார்க்க, விஷ்ணு தான் கட்டிலிருந்து உருண்டு கீழே விழுந்து இருந்தாள்.. அவளுக்கு தூக்கத்தில் உருளும் பழக்கம் உள்ளது..
அய்யோ அம்மா என் இடுப்பு என்று வாய்விட்டு அலறியபடி எழுந்து அவள் அமர, அதை பார்த்தவனுக்கு சட்டென்று சிரிப்பு தான் எழுந்தது.. கீழுதட்டை கடித்து சிரிப்பை அடக்கி கொண்டவன், அவள் எழ கையை நீட்ட,
தூக்க கலக்கத்திலும் விழுந்ததில் உண்டான அதிர்ச்சியிலும் சுற்று புறம் உணராமல் இருந்தவளுக்கு, ப்ரதாப் நீட்டிய கையை பார்த்ததும் தான் உணர்ந்தாள்..
அய்யோ மானமே போச்சு போச்சு என விஷ்ணு அவசரமாக எழ கீழே விழுந்ததில் பின் குத்தாமல் கட்டிய புடவை மடிப்பு அவிழ்ந்தது அதை குனிந்து பிடிக்க போக மாராப்பும் சரிந்தது.. அவளோ அதிர்ச்சியோடே ப்ரதாப்பை பார்த்தாள்..