என் நெஞ்சில் நீ தந்த காயம்…(4)

5
(5)

என்ன செல்லம் நீ நேத்து மெசேஜ் அனுப்பவே இல்லை நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் நீ மெசேஜ் அனுப்ப வில்லை என்ற கனிஷ்காவின் தலையில் நங்கு நங்கு என்று கொட்டி இருந்தாள் நிலவேனில் .

 

பைத்தியக்காரி என்னடி பண்ணுற வலிக்குது என்ற கனிஷ்காவிடம் யாருடி பைத்தியக்காரி நீதான் பைத்தியக்காரி குரங்கு, குரங்கு தப்பான நம்பர் சொல்லி நேத்து எவனோ ஒரு பரதேசிக்கு ஐ லவ் யூ என்று சொல்லி ஹூம் என்று தலையில் அடித்துக் கொண்டாள் நிலவேனில்.

 

 

ஐ லவ் யூ அனுப்பினியா? யாருக்குடி அனுப்புன என்ற கனிஷ்காவிடம் நீ கொடுத்த நம்பருக்கு தாண்டி அனுப்பினேன் குரங்கு, குரங்கு என்று கூறினாள் நிலவேனில். நான் என் நம்பர் தானடி எழுதி வெச்சேன் என்ற கனிஷ்காவிடம் என்னது உன் நம்பர் எழுதி வச்சியா அப்புறம் எதுக்குடி எவனோ ஒருத்தன் பேசுகிறான் யாருடீ அவன் என்ற நிலவேனில்  யாரோ பாண்டியாம் அவன் என்னை மட்டும் லூசு இல்லை என் குடும்பத்தையே  லூசுனு சொல்லி லூசு குடும்பத்தில் பிறந்த லூசுங்கிறான்.

 

 

என் குடும்பத்தையே லூசுன்னு சொல்லிட்டான் யாருடி எவன் நம்பரை நீ என் கிட்ட கொடுத்த என்றாள் நிலா.

 

சத்தியமா நான் என்னோட நம்பர் தான் செல்லம் எழுதுனேன். நீ வேண்டும் என்றால் நோட்டை பாரு என்றாள் கனிஷ்கா.

 

இது தான் உன் நம்பரா பார்த்து சொல்லுடி நாயே என்று தனது நோட்புக்கை காட்டிட  என்னடி ஏழுக்கு பதிலா லாஸ்ட் நம்பர் ஒன்று இருக்கு நான் ஏழு தானே எழுதினேன்  என்ற கனிஷ்கா அந்த நோட்டினை  நன்றாக உத்து பார்த்திட லூசு தண்ணி பட்டு ஏழு அழிந்து போயிடுச்சுடி அதனால தான் நீ ஒன்றுனு நினைத்து தப்பான நம்பருக்கு மெசேஜ் அனுப்பிட்ட.

 

ஆமா மெசேஜ் அனுப்புறதுக்கு முன்னாடி யார், என்ன என்றுலாம் கேட்க மாட்டியா எடுத்த எடுப்புல ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்புற லூசு என்றாள் கனிஷ்கா.

 

எருமை, எருமை மாட்டு நாயே நீதான சொன்ன ஐ லவ் யூ என்கிறது நம்மளோட கோடுவேடு உன் நம்பர் நான் ஐடென்டிஃபை பண்றதுக்காக எனக்கு நீ ஐ லவ் யூ அனுப்புனு  நீ தான சொன்ன என்றாள் நிலா.

 

ஐயோ நல்லா  மாட்டிக்கிட்டேனே என்று நினைத்த கனிஷ்கா நான் தான் சொன்னேன் இருந்தாலும் எவனோ ஒருத்தனுக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கீயே மச்சி என்று சிரித்தாள் கனிஷ்கா. உன்னை கொன்றுவேண்டி என்று கோபமாக கூறினாள் நிலவேனில்.

 

 

சரி என்ன நடந்துச்சு சொல்லு ஐ லவ் யூ சொன்னதுக்கு  அவன் என்ன சொன்னான்  என்ற கனிஷ்காவிடம் ஐ லவ் யூ டூ பேபி சொல்றான் டீ என்றாள் நிலா.

 

அப்பறம் நீ என்ன சொன்ன என்றவளிடம் நாளைக்கு முருகன் கோயில்ல ஐயர் ஃப்ரீயா தான் இருக்காராம் நம்ம போய் கல்யாணம் பண்ணிக்கலாமா ன்னு கேட்டேன் போதுமா என்றாள் நிலவேனில்.

 

முருகன் கோயில்ல கல்யாணம் பண்ணனும்னா உனக்கு 18 வயசு கம்ப்ளீட் ஆயிருக்கனும்டீ இல்லை என்றால் பால்ய விவாகம் சட்டம் படி குற்றம் உன் வூட்டுக்காரரை அப்பறம் கம்பி எண்ண வச்சுருவாங்க என்ற கனிஷ்காவின் தலையில் நங்கு நங்கென்று கொட்டியவள் ஏன் டீ குரங்கு என்னை பார்த்தால் நாளைக்கே எவனையாவது கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணுற ஆள் மாதிரி உனக்கு தெரியுதா என்றாள் நிலா.

 

 

நீ தான சொன்ன முருகன் கோவில் ஐயர் சும்மா இருக்காரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவன் கிட்ட சொன்னேன்னு என்ற கனிஷ்காவிடம் குரங்கு குரங்கு என்று தோழியை திட்டி விட்டு நேற்று இரவு நடந்த நிகழ்வினை கூறினாள் .

 

அதைக் கேட்ட கனிஷ்கா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள் .அடிப்பாவி ஒரே நாளில் காதல் கோட்டை படம் எல்லாம் ஓட்டி இருக்கீங்களா என்ற கனிஷ்காவிடம் காதல் கோட்டை படமா உன்னைய என்று புத்தகத்தை எடுத்து அவளை அடி அடி என்று அடித்துக் கொண்டிருக்க அந்த நேரம் அந்த வகுப்பில் அவர்களது ஆங்கில ஆசிரியை செல்வி நுழைந்தார்.

 

பீட்டிஃபுல் வந்துருச்சு என்று கனிஷ்காவிடம் இரு அவங்க கிட்ட சொல்லி தரேன் என்றாள் நிலவேனில்.

 

தயவு செஞ்சு அப்படி எதுவும் பண்ணிராதே நிலா நான் பாவம் அப்புறம் என்னை வாசிக்க சொல்லி நான் சரியா வாசித்தாலும் அந்த அம்மா தப்பு தப்பா வாசிச்சு தப்பு தப்பா மீனிங் சொல்லி கொன்று எடுத்துவிடும் என்றாள் கனிஷ்கா.

 

 

என்னடி வீட்டுக்கு கிளம்பாமல் இருக்க என்ற கனிஷ்காவிடம் இன்னைக்கும் சாவி எடுத்துட்டு வர மறந்துட்டேன் டி மம்மி வந்தால் தான் வீட்டுக்குள்ள போக முடியும் அதனால மெதுவா போகலாம் ஒன்றும் அவசரம் இல்லை என்று கூறினாள் நிலவேனில்.

 

 

ஏண்டி உன் மம்மி தான் ஆபீஸ் போயிட்டு வர லேட்டாகுதே நீ‌ ஏன் தினம் சாவியை மறந்துட்டு வர . உனக்கும் ஒரு சாவியை எடுத்து பேக்ல போட்டுக்கிட்டா உனக்கு என்ன பிரச்சனை என்றாள் கனிஷ்கா.

 

 

அது என்ன கிரகமோ தெரியலை எப்போ பார்த்தாலும் மறந்து தொலைஞ்சிடுவேன் என்ற நிலவேனில் சரி நாளைக்கு மேத்ஸ் டெஸ்ட் இருக்கு ஃபார்முலா எல்லாம் பிட்டு எழுதிட்டு வந்துரு என்றாள் நிலா.

 

 

என்ன பிட்டா அந்த பானர்ஜி என்னை பிச்சு எடுத்துடும் என்றாள் கனிஷ்கா. ரொம்ப பண்ணாதடி அவங்க நம்ம பேசிட்டு இருந்தால் தான் பிடிப்பாங்க இதெல்லாம் தெரியாமல் அடிச்சு எழுதிடலாம் என்றாள் நிலா.

 

 

ஃபார்முலா மட்டும் தானே நீ எழுதிட்டு வா என்ற கனிஷ்காவிடம் என் அம்மா பற்றி உனக்கு தெரியும்ல பிட்டு எழுதிட்டு இருக்கிறதை எங்க அம்மா பார்த்துச்சுனு வை செருப்பாலயே அடிக்கும் என்றாள் நிலா. என் அம்மா மட்டும் என்னை கொஞ்சி முத்தம் கொடுக்குமா டீ என்றாள் கனிஷ்கா. செல்ல குட்டி நீ வந்து எமகாதிக்கு எப்படியாச்சும் மறைச்சிருவ பட் என்னால முடியாது என்றாள் நிலவேனில்.

 

 

நிஜமாகவே உன்னால முடியாது இதை நான் நம்ப ஏண்டி எவனோ ஒருத்தன் கிட்ட என் பேரை சொல்லி நைட்டு போன்லயே சண்டை போட்டு இருக்க ஒரு பிட்டு எழுதினால் மட்டும் உங்க மம்மி கிட்ட மாட்டிக்குவியா என்றாள் கனிஷ்கா.

 

அவன் கூட சண்டை போடணும்னு எனக்கு என்ன ஆசையா அந்த நேரத்துல இந்த மாதிரி ஒருத்தன் கூட சண்டை போடுற அப்படின்னு எங்க அம்மா கிட்ட சொல்ல முடியுமா. ஐ லவ் யூ என்று அனுப்பினேன். அவன் திருப்பி ஐ லவ் யூ டூனு அனுப்பினான். இப்படி எல்லாத்தையும் சொன்னா என் வீட்ல இருக்குற ஒரு கட்டு விளக்கமாரும் என்னை அடிச்சே பிஞ்சிடும் தேவையா பிட் அடிச்சா கூட தப்பிச்சுக்கலாம் ஒரு ஆம்பள பையன் கிட்ட பேசினேன்னு தெரிஞ்சுச்சு வெண்மதி வெளுக்கிற வெளுவில் மூன்ஃபையர் அப்பறம் பியூஸ் போன கூண்டு பல்பா மாறிடுவேன் என்றாள் நிலவேனில்.

 

 

நிஜமாவே மூன்ஃபையர் என்று தான் அனுப்பினாயாடி என்ற கனிஷ்காவிடம் அது தானடி என் பெயர் அப்போ அப்படித் தானே அனுப்ப முடியும் என்றாள் நிலவேனில்.

 

பேசாமல் நிலா என்று அனுப்பி இருக்கலாம்ல என்ற கனிஷ்காவிடம் மூன்ஃபயர் என்று அனுப்புனதுக்கே என்னை இந்த பேச்சு பேசுறான் என்னோட ஒரிஜினல் பெயரை தெரிஞ்சா அவ்வளவுதான் மூன்ஃபயர் என்றே இருக்கட்டும் என்ற நிலா சரி பாய் கனி என்று கூறிவிட்டு தனது வீட்டிற்கு பயணப்பட்டாள்.

 

தனது மொபைல் போனை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் துருவநேத்ரன் . நேற்றைய தினம் அவளுடன் பேசிய நிகழ்வுகள் ஏனோ அவனுக்கு சிரிப்பாக இருந்தது. பைத்தியம் சரியான பைத்தியமா இருக்கும் போல எடுத்த‌ எடுப்பில் ஐ லவ் யூ என்று சிரித்தவனை பார்த்து அவனது மனசாட்சி கேட்டது அந்த பிள்ளை தான் யாருன்னு தெரியாமல் உனக்கு ஐ லவ் யூ என்று சொல்லுச்சு பதிலுக்கு சார் எதுக்காக ஐ லவ் யூ சொன்னிங்க என்ற மனசாட்சியிடம் நான் எதோ பசங்க தான் விளையாடுறாங்கன்னு நினைச்சேன் பார்த்தால் நெஜமாவே ஒரு பொண்ணு சொல்லி இருக்கு சிரிக்க தான் வேண்டும் என்றான் .

 

 

மனசுல இல்லாமல் எப்படி ஒருத்தருக்கு ஐ லவ் யூ சொல்ல முடியும் அது ஒரு பொண்ணுனு தெரிஞ்ச பிறகு உனக்கு எப்படி இருந்துச்சு என்ற மனசாட்சியிடம் எப்படி இருந்துச்சு இந்த முகத்தையே பாக்காமல் காதலிக்கிறது யாருனே தெரியாமல் காதலிக்கிறது இதெல்லாம் 90ஸ் ஸ்டார்டிங்ல முடிஞ்சு போச்சு காதல் கோட்டை படத்தோட சரி இங்கே என்ன காதல் கோட்டையும் ,காதலர் தினம் படமுமா ஓடிக்கொண்டிருக்கும் போன்ல லவ் பண்றது எல்லாம் சுத்த வேஸ்ட்.

 

அது ஏதோ ஒரு ராங்கால் அவ்வளவுதான் என்று மனசாட்சியை அடக்கி வைத்தவன் தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

 

நிலவேனில் வாசலில் நின்று இருக்க என்ன பாப்பா வாசலில் நின்னுட்டு இருக்க என்றார் எதிர் வீட்டிற்கு புதிதாக குடிவந்திருந்த சாந்தி .

 

இல்லைங்க அம்மா இன்னும் ஆபீஸ் விட்டு வரவில்லை அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சாவி எடுத்துட்டு போக மறந்துட்டேன் என்ற நிலவேனிலிடம் அப்படியா சரி அம்மா வரும் வரைக்கும் எங்க வீட்ல வந்து இருக்கலாமே ஏன் இப்படி வாசலில் நின்னுட்டு இருக்க பாப்பா என்றார் சாந்தி.

 

இல்லைங்க பரவாயில்ல அம்மா இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவாங்க என்றாள் நிலா.

 

 

பரவாயில்ல பாப்பா என்று அவளை அழைத்துச் சென்றார் சாந்தி. உன் பேர் என்ன என்ற சாந்தியிடம் முன் என்று சொல்ல வந்தவள் நிலா என்று கூறினாள் .

 

 

ஏதாவது சாப்பிடறியா என்ற சாந்தியிடம் இல்லைங்க வேண்டாம் என்றாள் நிலா. சாந்தி இங்கே புதுசா குடி வந்திருக்கோம் என்றிட நேற்று தானே குடி வந்தீங்க என்றாள் நிலவேனில் .ஆமா பாப்பா என்றவர் உங்க அம்மா என்ன பண்ணுறாங்க என்றார்.

 

கவர்மென்ட் ஆபிஸில் க்ளார்க் என்றாள் நிலவேனில் .அப்பா என்ற சாந்தியிடம் இல்லை அப்பா இறந்துட்டாங்க நானும், அம்மாவும் மட்டும் தான் என்றாள் நிலா.

 

 

சாரி பாப்பா என்ற சாந்தியிடம் இல்லைங்க பரவாயில்லங்கஸ இதில் என்ன இருக்கு என்றாள் நிலவேனில்.

 

 

காபி குடி பாப்பா என்றவரிடம் மறுக்க முடியாமல் வாங்கி குடித்தாள் நிலவேனில். அம்மா வந்துட்டாங்க என்றவளிடம் சரி பாப்பா பாய் என்று அவளை அனுப்பி வைத்தார் சாந்தி.

 

 

எங்க போயிட்டு வர அம்மு என்ற வெண்மதியிடம் சாரி மம்மி இன்னைக்கும் சாவியை மறந்துட்டேன் . நான் இங்கே வெளியில் நிற்கிறதை பார்த்துட்டு எதிர்த்த வீட்டுக்கு புதுசா வந்திருக்க அக்கா, அம்மா வரவரைக்கும் ரோட்ல நிற்க வேணாம் எங்க வீட்ல வந்து இருப்பாப்பான்னு சொன்னாங்க அதனாலதான் போனேன். என்றாள் நிலா.

 

 

 

சரி டி உன்கிட்ட தினமும் சொல்லிக்கிட்டு இருக்கேன் மறக்காமல் சாவி எடுத்துட்டு போ என்று நீ கேட்கிறியா சரி உள்ளே வா என்று மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார் வெண்மதி.

 

வீட்டிற்குள் வந்தவள் தனது மொபைல் போனை எடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தால்ங. சரியா இந்த பக்கிக்கு மெசேஜ் அனுப்பவும் என்று நினைத்து கனிஷ்காவின் எண்ணிற்கு சரியாக மெசேஜ் அனுப்பினாள் .அவளும் பதில் அனுப்பினாள் .அப்பாடி இன்னைக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்த அவளின் மனதில் இயல்பாகவே அவளுக்கு இருந்த குறும்புத்தனம் எட்டிப் பார்க்க அவனை சீண்ட நினைத்து மெசேஜை தட்டி விட்டாள். லூசு என்ன பண்ணுற என்று அவள் மெசேஜ் அனுப்ப அதை பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது.

 

 

எவ்வளவு கொழுப்பு இருந்தால் என்னை பார்த்து லூசு என்று சொல்லுவாள் இவள என்று பற்களை கடித்தான் துருவநேத்ரன்.

 

 

 

….. தொடரும்….

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!