தனது அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் தேவசூரன். அவனைப் பார்த்ததும், அவனுக்காக காத்திருந்தவர்கள் அவர்களை அறியாமலேயே எழுந்து நின்றனர். ஆறடிக்கும் மேலான உயரம். தீட்சண்யமான விழிகள், பார்ப்போரை எளிதில் புரிந்து கொள்ளும். புகைப் பிடிப்பதால் கறுப்பான இதழ்கள், கருகருவென்று வளர்ந்து நிற்கும் அடர்த்தியான தலைமுடி. என்று அனைவரையும் கவரும் ஆணழகன். ஆனால் இவனை பார்த்து இரசிக்க யாரும் இல்லை. அவனைப் பார்த்தாலே எல்லோரும் பயந்து ஓடுவார்கள். பிறகு எப்படி அவனை இரசிப்பது?
நீலநிற பேண்ட், வெள்ளை நிற ஷர்ட் போட்டுக் கொண்டு, ஒரு கையில் சிகரெட்டையும் மறுகையில் துப்பாக்கியுடனும் வந்து, அங்கிருந்த அவனின் சிம்மாசனத்தில் வலது காலின் மீது இடது காலைப் போட்டு அமர்ந்தான். அவன் அமர்ந்த பின்னர் துப்பாக்கியை அசைத்தான், அதன் பின்னரே அங்கிருந்தவர்கள் அமர்ந்தனர்.
முதலில் அங்கு வந்திருந்த போலீஸ் ஆபிஸர் பேசினார். “என்ன சூரன் இது…? நாங்க குற்றவாளிகளாக சந்தேகப்படுற எல்லோரையும், நீங்க கொன்னுட்டு இருக்கிறீங்க…. இது நல்லதுக்கு இல்லை….” என்று சத்தம் போட்டார். அதற்கு சூரன் சிரித்துக் கொண்டு, “ஊர்ல இருக்கிற யாரு செத்தாலும் நான்தான் கொலை பண்ணினேன்னு சொல்லிட்டு இருக்கிறீங்க…. எனக்கு என்ன வேற வேலை இல்லையா…?” என்றான்.
போலீஸ் ஆபிஸருக்கு கோபம் வர அவர் இருந்த கதிரையை எட்டி உதைத்து விட்டு எழுந்து நின்றார். அவரைப் பார்த்த சூரன், “எதுக்கு இப்போ இப்பிடி கத்திக்கிட்டு இருக்கிறீங்க சார்…. நீங்க அந்த எம்எல்ஏவோட பையனை காப்பாத்த வேற ஊருக்கு அனுப்ப பார்த்தீங்க… ஆனால் நான் என்ன பண்ணேன் அவனை வேற உலகத்துக்கு அனுப்பி வச்சிட்டேன்…. அவனை இனிமேல் யாராலும் அரெஸ்ட் பண்ண முடியாது….” என்று நக்கலாக சிரித்தான்.
அவன் தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டான் என்பதை அறிந்த போலீஸ் ஆபிஸருக்கு வியர்த்தது. அதைப் பார்த்த சூரன், “இங்க பாருங்கடா சாருக்கு வேர்க்குது… அவரை கூட்டிட்டு போய் ஏசியில உட்கார வைச்சிட்டு வீட்டுக்கு அனுப்புங்க…” என்றான். அவனது அடியாட்கள் வந்து போலீஸ் ஆபிஸரை இழுத்துக் கொண்டு சென்றனர்.
மீதி இருந்தவர்களின் பிரச்சனைகளை கேட்டு அவர்களை அனுப்பி வைத்தவன், வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் அவன் வளர்க்கும் வேட்டை நாய்கள் இரண்டும் ஓடி வந்தன. அவற்றை கொஞ்சி விட்டு தனது ஜீப்பில் ஏறினான். அவன் பின்னே நான்கு ஜீப்களில் அவனது ஆட்கள் முன்னாலும் பின்னாலும் வந்தனர்.
இயற்கை அன்னையை இரசித்துக் கொண்டு கான்வென்ட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் அகமித்ரா. சூரியன் வந்தாலும் குளிர் சற்றும் குறையவில்லை. அதனால் தான் போட்டிருந்த ஸ்வெட்டரை நன்றாக இழுத்துப் போட்டுக் கொண்டு நடந்தாள்.
அப்போது தெருவின் ஓரத்தில் இருந்த ஒரு கடைக்கு வெளியே கூட்டமாக இருந்தது. என்ன காலையிலேயே இப்படி கூட்டமா இருக்கு என்று நினைத்து, அந்த இடத்திற்கு வந்து பார்த்தாள். அங்கே சூரன், அந்த கடை முதலாளியை போட்டு அடித்துக் கொண்டு இருந்தான். அவனது அடியாட்கள் சுற்றி நின்றனர். எவரும் எதுவும் பேசவில்லை.
அடிவாங்கிய கடையின் முதலாளியின் முகத்தில் இரத்தம் வடிந்தது. சூரனின் வெள்ளை நிற ஷர்ட்டிலும் இரத்தத்தின் கறைகள் இருந்தது. அவனது முகம் கோபத்தில் சிவந்தது இருந்தது. அங்கே கூடி இருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்தனரே தவிர யாரும் அந்த கடை முதலாளிக்கு உதவ வரவில்லை.
‘இப்படி ஒருத்தரை போட்டு காட்டு மிராண்டித் தனமாக அடிச்சிட்டு இருக்கிறான்… இதை இத்தனை பேரு கையைக் கட்டிக் கொண்டு நின்னு வேடிக்கை பார்க்கிறாங்களே…’ என்று மனசுக்குள் திட்டிக் கொண்டவள், சூரனின் அருகில் சென்றாள். “ஏய் உனக்கு அறிவில்லை…. பனைமரம் மாதிரி வளர்ந்திருக்கிற, இந்த மனுஷனை போட்டு இப்படி அடிச்சிட்டு இருக்க…. உனக்கு மனசாட்சியே இல்லையா….?” என்று சத்தம் போட்டாள்.
யார்டா அது நம்மகிட்டையே சத்தம் போடுறது என்று திரும்பினான் சூரன். அகமித்ரா சாதாரணமா பெண்களை விட உயரம். ஆனால் இவனின் அருகில் அவள் சற்று குள்ளமாக தெரிந்தாள். தனது கூலிங்கிளாஸை இறக்கி அவளை ஒரு பார்வை பார்த்தான்.
அவளை அங்கிருந்து நகர்த்த வந்த தனது ஆட்களை நிறுத்தினான். “இங்க பாரு, இது உனக்கு தேவை இல்லாதது…. ஒண்ணு கூட்டத்தோட கூட்டமா நின்னு வேடிக்கை பாரு…. இல்லனா வாயமூடிட்டு இங்க இருந்து போயிடு….. காலங்காத்தால மனுசனை கடுப்பேத்தாத….” என்றான்.
அதற்கு அவனை முறைத்து பார்த்தவள், “நீ சொன்னா நான் கேட்கணுமா….? என்று அவனுடன் சண்டைக்கு சென்றாள். சூரனுக்கு கோபம் வர அவளது கையைப் பிடித்து தள்ளி விட்டான். கீழே விழச் சென்றவளை தாங்கிப் பிடித்தாள் அகமித்ராவின் தோழியும் சக ஆசிரியையுமான அமிர்தா. ஆம், அமிர்தமாகவும் கூட்டமாக நிற்பதை பார்த்து, என்னவாக இருக்கும் என்று பார்க்க வந்தாள்.
அப்போது சூரனுடன் சண்டை போடும் அகமித்ராவைப் பார்த்தவள், “ஐயோ இன்னைக்கு செத்தாள் மித்து….” என்று நினைத்துக் கொண்டு அவள் அருகில் வரவும் சூரன் தள்ளி விடவும் சரியாக இருந்தது. அவளை விழாமல் பிடித்துக் கொண்டவள், “சார்… சார்.. ஏதோ தெரியாம பண்ணிட்டா…. ப்ளீஸ் இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்க….” என்றாள். சூரனும் அகமித்ராவைப் பார்த்து விட்டு அமிர்தாவிடம் தலையசைக்க, அமிர்தா அங்கிருந்து மித்ராவை வெளியே இழுத்து வந்தாள்.
“எதுக்கு என்னை இழுத்துட்டு வர்ற..? என்னை விடுடி இன்னைக்கு நானா அவனானு பார்க்கணும்….” என்றாள். அதற்கு அமிர்தா,”அடியே அவரோட மோதுறதுக்கு போலீஸே பயப்படும்…. நீ என்னனா சண்டைக்கு போற…? ஏதோ அவரு நல்ல மூட்ல இருந்ததால நீ தப்பிச்ச…. வா பேசாம…” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.
அகமித்ரா உம்மென்று அமிர்தாவுடன் ஸ்கூலுக்கு வந்தாள். அவளை பார்த்ததும் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் ஓடி வந்து விஷ் பண்ணினர். அவளும் பதிலுக்கு சிரித்த முகமாக விஷ் பண்ணினாள். பின்னர் ஃப்ரின்சிப்பால் அறைக்குச் சென்று அன்றைய வரவினை கையெழுத்து போட்டு பதிந்து விட்டு அவளது வகுப்பறைக்குச் செல்லும் வழியில், இருந்த ஒரு பெஞ்சில் சின்ன வாண்டு ஒன்று முகத்தில் கையை வைத்துக் கொண்டு சோகமாக இருந்துது. அந்த சின்னப் பிள்ளையை பார்த்ததும் வேதாக்கு சிரிப்பு வந்தது. மெல்ல அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.
“பாப்பா… என்ன பண்ணீறீங்க…?” என்றாள். அதற்கு அந்தக் சின்னப் பொண்ணு, “என்னோட பேரு பாப்பா இல்ல அதிதி…”
“அதுவா இன்னும் மிஸ் வரலை… அதுதான் வெளியே இருக்கிறன்…” பின்னர் அதிதியோடு பேசிக் கொண்டு இருந்தாள். அதிதியின் ஆசிரியர் வந்ததும் அவள் முன்பள்ளிக்குச் சென்று விட்டாள். அதிதியின் ஆசிரியர் பத்மாவோடு பேசினாள் அகமித்ரா.
“பத்மா மிஸ் அதிதிக்கு எத்தனை வயசு…?”
“நாலு வயசு மித்ரா…”
“என்ன நாலு வயசா…? ஆனால் அவ ரொம்ப நல்லா பேசுறா…”
“ஆமா அவ இங்க முதல் முறையாக வரும்போதே நல்லா பேசினா… நான்கூட ஆச்சரியப்பட்டேன்… அப்புறம் அதிதியோட பாட்டி சொன்னாங்க அதிதியோட அம்மாவும் சின்ன வயசுல இப்படித்தான் ரொம்ப நல்லா பேசுவாங்கனு…”
“ஓகே மிஸ்… டைமாச்சு நான் க்ளாஸ்கு போறேன்….”
“ஓகே மித்ரா…”
தேவசூரன் கடை முதலாளிக்கு அடித்த அடியில் அவர் எழும்ப முடியால் கீழே கிடக்க அவரின் அருகில் ஒரு காலை ஊன்றி, அதில் தனது கையை வைத்தவன், மறு கையால் அவரின் ஷர்ட்டின் காலரை பிடித்தான்.
“இந்த ஒரு தடவை மட்டும் உன்னை மன்னிச்சு விடுறன்… இனஇன்னொரு தடவை இந்த கடையில காலவதியான ஏதாவது ஒரு பொருள் இருந்திச்சு உன்னை கடையோட கொழுத்திடுவன்… இங்க பாரு உன்னோட கடையில வாங்கிற பொருள் தரம் இல்லனா அது உன்னோட பொறுப்பு.. அதுக்கு நீதான் பதில் சொல்லணும்… அதை விட்டுட்டு நீ பண்ற தப்பை உங்கிட்ட சொன்னா நீ அடிப்பயா…? கொன்னுடுவன்… இங்க வா ரவி.. இவனால உனக்கு ஏதாவது பிரச்சினை வந்தா உடனே எனக்கு கால் பண்ணு…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
Super and intresting sis
💙💙💙 திவி குட்டி கதை சுவாரசியமாக இருந்தது டா 💙💙💙💙😘😘😘😘😘