என் செல்ல நரகமே 3

4.7
(16)

செல்லம் – 3

போட்டோவில் இருந்த அர்ஜுனை பார்த்தவளுக்கு அவன் மீது கோவம், இல்லை இல்லை கொலைவெறியே வந்தது..

‘இந்த கடன்காரனுக்கு இன்னுமா கல்யாணம் ஆகலை?’ ஆச்சரியப்பட்டாள்.. அவனுக்கு ஆனா என்ன ஆகலைன்னா என்ன 

எப்புடி இவன் எனக்கு மேரேஜ்

ப்ரோபஷல் அனுப்பலாம் என கோவம் வந்தது..

அர்ஜுன் இவனை ஹாசினிக்கு முன்னரே தெரியும்.. அர்ஜுனுக்கும் ஹாசினியை தெரியும்.. அவளுக்கும் ஹரிஷ்க்குமான காதல் தெரியும்.. அப்புடி இருந்தும் கல்யாணத்திற்கு பெண் கேட்டு இருக்கானா, பல்லை கடித்தாள்..

அர்ஜுன் ஹாசினி இருவரும்  முதுநிலை பட்டப்படிப்பை ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.. வேறு வேறு டிபார்ட்மெண்ட்.. அவன் எம்.பி.ஏ இவள் எம்.எஸ்.சி.. 

கல்லூரியில் ஹாசினிக்கு பிடிக்காத ஒரே ஆள் அர்ஜுன் என சொல்லலாம்.. முதல் சந்திப்பே அவர்களுக்குள் நல்ல விதமாக அமையவில்லை.. அர்ஜுன் குணமும் ஆஹா ஓஹோ என ஹாஸ்டலில் இருக்கும் மற்ற பெண்கள் சொல்லும்   அளவுக்கு ஹாசினிக்கு பிடித்தம் இல்லை.. அவளை பொறுத்தவரை அவன் எப்போதும் கோபியர்கள் புடை சூழ உலா வரும் ப்ளே பாய்… 

அப்புடி சொல்லி விட்டால் போதும் அவனின் பெண் தோழிகள் ஹாசினியை உண்டு இல்லை என ஆக்கி விடுவார்கள்…. அது மட்டுமா அர்ஜுன் எனக்கு தான் உனக்கு தான் என விடுதியில் சீனியர் ஜுனியர் பெண்கள் எல்லாம் அடித்து கொள்ளும் இந்த ஆணழகனுக்கு, 

அது இன்னுமே ஹாசினிக்கு இந்த பொண்ணுங்களை எல்லாம் ஏதேதோ சொல்லி ஏமாத்தி வச்சு இருக்கான் என அர்ஜுன் மீது கோவத்தை வரவழைக்கும்.. சமயம் கிடைக்கும் போது அந்த கோவத்தை எல்லாம் அர்ஜுன் மீது கொட்டியும் விடுவாள்..

அதற்காக இந்து அர்ஜுன்கிட்ட ஏன் சண்டை போடுற என  ஹாசினியிடம் கோவித்து கொள்வாள்… கல்லூரியோடு அவன் அத்தியாயம் முடியவில்லை..

கல்லூரி முடிந்த பின்பும் அவனை அடிக்கடி பார்க்க வேண்டிய சூழ்நிலை.. அதுக்கும் இந்த இந்து தான் காரணம்.. அவள் அர்ஜுன் நண்பன் சிவாவை தான் காதலித்தாள்.. அவனையே திருமணம் செய்து கொண்டாள்.. அவர்கள் திருமணத்தின் போதும், ஒன்றிரண்டு தடவை இந்து வீட்டிற்கு செல்லும் போது பார்த்து இருக்கிறாள்.. 

அதுவும் கடைசியாக பார்த்த போது உங்க கல்யாணம் எப்ப  என கேட்டவனை கோவத்தில் நன்றாக வைத்து வாங்கி விட்டாள்..  அதற்காக கூட இந்து ஹாசினியிடம் அர்ஜுன் கிட்ட ஏன் இப்புடி பேசுற என கோபித்து கொண்டாள்.. நேத்து வந்த அவனுக்காக என்கிட்ட சண்டை போடுறியா என ஹாசினிக்கு கோவம் வர, ஒரு ஒரு மாத காலத்திற்கு இந்துவிடம் பேசவில்லை.. 

அதற்கும் அந்த ஒரு மாத காலம் அர்ஜுன் ஹாசினி வாயில் நீ தான்டா எல்லாத்துக்கும் காரணம் என அரைப்பட்டு கொண்டு தான் இருந்தான்..

அன்று தான் அர்ஜுனை அவள்  கடைசியாக பார்த்தது.. அதன் பின்பு இதோ ஆறு ஏழு மாதம் ஆகப்போகிறது பார்க்கவில்லை.. 

அப்போத அழுத்திருத்தமாக கூறி இருந்தாளே, என் வாழ்க்கையில் கல்யாணம்ங்கிற பேச்சுக்கே இடமில்லை, ஹரிஷ் தான் எல்லாமே, அவன் தான் என் வாழ்வு முழுமைக்கும் என, அப்புடி இருக்கையில் இவள் வீட்டிற்கே இவளுக்கே மேரேஜ் ப்ரோப்சல் அனுப்பி இருக்கானே இந்த அர்ஜுன் மண்டைக்கு சுர்ரென ஏறியது..

தன்னை பற்றி தெரியாத நபர் யாரையாவது மாப்பிள்ளை என முன் நிறுத்தி இருந்தால், ஹரிஷ்ஷை பற்றியும் தன் காதலை பற்றி  யும் எடுத்து சொல்லி என்னை பிடிக்கலைன்னு சொல்லிடுங்கன்னு கைல்ல கால்ல விழுந்து கூட  கெஞ்சலாம்.. ஆனால் இவனோ எல்லாம் தெரிந்ததும் அனுப்பி இருக்கான் என்றால், எவ்வளவு திமிர் இவனுக்கு,

இவனுக்கு மனதிற்குள் தன்னை பற்றி இப்புடி ஒரு ஆசை  இருக்கின்றது என்று தான் அர்த்தம், ‘அர்ஜுன் பொறுக்கி ராஸ்கல் உன்னை’ போட்டோவை பார்த்து மனதிற்குள் அர்ஜுனை தாளித்து கொண்டு இருக்க,

“என்னடி இவ்வளோ நேரம் மாப்பிள்ளையை உத்து உத்து பார்க்கிறயே உனக்கு பிடிச்சிருக்கா?”,  கோமதி கேட்க,

நிமிர்ந்து அவரை முறைத்த ஹாசினி, “யார் இவனையா”? என எரிச்சலாக கேட்க,

“வாய்லயே போடுவேன் மாப்பிள்ளையை அவன் இவன்னு சொல்ற” கோமதி கோவப்பட,

“அவன் இவன் என்ன, டா கூட போடலாம், ஏன்னா இவன் என்ன விட ஏழு மாசம் சின்ன பையன்மா”..

“உனக்கு எப்புடி தெரியும்”..

“என்னோட தான் இவன் காலேஜ் படிச்சான்.. சரியான ப்ளேபாய்மா இவன்” ஹாசினி முகத்தை சுழித்து சொல்ல

“ப்ளேபாய்ன்னா  விளையாட்டு பையன் தானே அர்த்தம்.. காலேஜ் படிக்கிற டைம் எல்லாரும் விளையாடுவாங்க தானேடி, நீயும் தானே நிறைய விளையாட்டுக்கு போய் கப் எல்லாம் வாங்கிட்டு வந்து வச்சு இருக்க, இதை போய் ஒரு குறையா சொல்லிக்கிட்டு” என நொடித்து கொண்ட கோமதியை பார்த்து,

“ம்மா”…  என பல்லை கடித்த ஹாசினிக்கு இந்த கல்யாண பேச்சை நிறுத்த  ப்ளேபாய் விஷயம் கை கொடுக்காது என தெரிந்தது..  

அதனால்  அம்மா “அவன் என்னை விட சின்ன பையன்மா, எப்புடி கல்யாணம் பண்றது? அது நல்லா இருக்காதே”..‌ அர்ஜுன் ஏழு மாதம் சின்னவன் தான்.. இந்த விஷயத்தை சொல்லி கல்யாண பேச்சை நிறுத்தி விடலாம் என எண்ணி ஹாசினி இதை சொல்ல,

“ஹும் வெறும் ஏழு மாசம் தானடி கம்மி.. உங்கப்பாவை விட எனக்கு  ஏழு வயசே கம்மி.. உங்கப்பாவை விட நான் ஏழு வயசு சின்ன பொண்ணு.. நீ யோசிக்கிற போல அவர் ஏழு வயசு சின்ன பொண்ணை எப்புடி கல்யாணம் பண்றதுன்னு தயங்கி இருந்தா, நீ உன் தங்கச்சி எல்லாம் வந்து இருப்பீங்களா? இந்த காலத்தில் போய் வயசு எல்லாம் ஒரு விஷயமா பேசிக்கிட்டு”, என மகள் வீசிய பந்தையே அவளை நோக்கி வீசி வாயடைக்க வைத்த கோமதி,

“அப்புறம் இன்னோரு விஷயம்டி, இந்த வாரகடைசியில் ஞாயிற்று கிழமை பொண்ணு பார்க்க வர சொல்லி இருக்கேன்டி ”  என இன்னுமொரு குண்டை தூக்கி போட்டுவிட்டு சென்றார்.. 

“ச்சே” என கால்லை தரையில் உதைத்தாள் ஹாசினி எதுவுமே செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில், 

பள்ளி செல்ல வீட்டை விட்டு வெளியேறியதும் முதலில் போனை எடுத்து அழைத்தது இந்துவுக்கு தான், 

இந்து போனை எடுத்து ஹலோ என்பதற்குள், “நீ எப்புடி இதை பண்ணலாம், நீ எல்லாம் ஒரு ஃப்ரெண்ட்டா” என ஹாசினி திட்ட ஆரம்பிக்க,

“ஏய் நிறுத்து நிறுத்துடி, திட்றது ஓகே, ஆனா எதுக்கு திட்றன்னு விஷயத்தை சொல்லிட்டு திட்டு டி எருமை”, என மறுமுனையில் இருந்த இந்து கோவப்பட,

“என்ன விஷயமா? ஏன் உனக்கு தெரியாதா? நடிக்காத” என்ற ஹாசினி, சற்று முன்பு வீட்டில் நடந்ததை சொல்லி முடிக்க,

“என்னது அர்ஜுன் வீட்டிலிருந்து உன்னை கேட்டு இருக்காங்களா?” இந்து குரலில் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒரு சேர வெளிப்பட,

“நடிக்காதடி, ஏதோ ஒன்னுமே தெரியாத போல, நீ தானே அர்ஜுன் போட்டோ எங்க அம்மா கிட்ட கொடுத்தது.. எனக்கு தெரியும் உன்னை தவிர யாரும் இதை பண்ண மாட்டாங்க” ஹாசினி மீண்டும் கோவப்பட,

“ஏய் நிஜமாவே எனக்கு தெரியாது டி, அர்ஜுன் வீட்டில் அவனுக்கு தரகர் மூலமாக வரன் பார்த்ததுட்டு இருக்காங்க அது மட்டும் தான் தெரியும்.. ஆனா இந்த விஷயம் நீ சொல்லி தான் எனக்கு தெரியும்.. ஆனா இது நடந்தா நல்லா தான் இருக்கும்… நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்”..

“நடந்தா தானே சந்தோஷம் படுவ. நடக்காதுடி, அந்த அர்ஜுனோட ஆபிஸ் அட்ரஸ் போன் நம்பர் இரண்டையும் அனுப்பி விடு” என்றவள், “ஹாசினி அர்ஜுனுக்கு ஏதும்” என இந்து சொல்ல வருவதை கேட்காது போனை வைத்தாள்..

திருந்தாத ஜென்மம் என தலையில் அடித்து கொண்ட இந்துவும் அவள் கேட்டதை அனுப்பி வைக்க, அர்ஜுன் நம்பர்க்கு அழைத்தாள்.. அவன் எடுக்கவே இல்லை.. 

“போன் கூட எடுக்காமல் அப்புடி என்னத கிழிக்கிறான் இவன்” கோவத்தில் வார்த்தை தாறுமாறாக விழுந்தது.. சாயங்காலம் ஆபிஸ்க்கு போய் அவனை திட்ற திட்டில் இனி என் பக்கம் தலை வைத்து படுக்க கூடாது, என்ற எண்ணியபடி பள்ளிக்கு வந்தவள், கையில் பாவப்பட்ட இந்த வகுப்பு மாணவர்கள் சிக்கி கொண்டார்கள்.. 

சாயங்காலம் மாலை 4 மணிக்கு பள்ளியிலிருந்து கிளம்பியவள், நேரே வந்தது இந்து அனுப்பிய அர்ஜுன் ஆபிஸ் அட்ரஸ்க்கு தான்..

‘மங்கை ப்ரோமோட்டர்ஸ்’ என்ற பெயர் பலகையே அண்ணார்ந்து பார்க்குமளவு ஆபிஸ் ஐந்து அடுக்கு கட்டிடமாக உயர்ந்து நின்றது..

அர்ஜுன் ராஜா வீட்டு கன்னுக்குட்டி என கல்லூரி காலத்திலே கேள்விபட்டு இருக்கிறாள்.. அதனால் தான் அவனுக்கு இவ்வளோ சப்போர்ட் பசங்க பொண்ணுங்க பண்றாங்க என்ற எண்ணமும் எழும்… 

ஆனால் அலுவலகமே சொன்னது ஹாசினி நினைத்ததை விட அர்ஜுன் வசதி படைத்தவன் என, வெளியே இருந்த பிரம்மாண்டத்தை விட ஆபிஸ்க்குள் இரண்டு மடங்காக இருந்தது.. அதிலும் வேலை செய்பவர்களின் நேர்த்தியான உடை நடைமுறை பேச்சு கூட வெளிநாட்டு தரத்திற்கு இருந்தது..  ஹாசினியே ஒரு நொடி இந்த பிரம்மாண்டத்தை பார்த்து மிரண்டு தான் போனாள்.. 

ஆனால் அதை உள்ளுக்குள் மறைத்தவள் அம்பானிக்கு அத்தை பையனாவே இருக்கட்டும்.. ஏன் என் வாழ்க்கைக்குள்ள வர பார்க்கிறான் மீண்டும் கோவம் எழ, நேரே ரிசப்ஷன் சென்றவள் “உங்க எம்.டி தேவ் அர்ஜுனாவை பார்க்கனும்” என ஆங்கிலத்தில் கேட்க,

ரிசப்ஷனில் இருந்த பெண் “அப்பாயிண்ட் மெண்ட் இருக்கா மேம்” என கேட்டதும், எழுந்த கடுப்பை அடக்கியவள், “இந்து ஃப்ரெண்ட் சுஹாசினின்னு சொல்லுங்க உங்க சார்க்கு தெரியும்” என்றதும்,

அந்த பெண் போனில் அழைத்து ஹாசினி சொன்ன விஷயத்தை சொல்லி விட்டு ஓகே சார் ஓகே சார் என போனை வைத்தவள்,

ஹாசினியிடம்,”மேடம் சார் உங்களை வர சொன்னாங்க என்றதும்.. அர்ஜுன் அறை எங்கு என கேட்டு சென்றாள்.. 

‘தேவ அர்ஜுனா’ மேனேஜிங் டைரக்டர் என்ற போடப்பட்டு இருந்த கதவு முன்பு வந்து நின்ற ஹாசினி,

இவனுக்கு கதவை தட்டி எக்ஸ்க்யூஸ் கேட்கிறது ஒன்னு தான் குறைச்சல் என கோவத்தில்  படாரென வேகமாக கதவை திறந்தாள்.. 

அறைக்குள் இருந்த அர்ஜூன் கதவை திறந்த வேகத்தில் நிமிர்ந்து பார்த்தவன், “ஹாய் ஹாசினி” என சிநேகமாக சிரிக்க,

அந்த சிரிப்பு எரிகிறதில் மேலும் எண்ணெய் ஊற்றியது போன்று இருந்தது ஹாசினிக்கு,

“உன் ஹாய் யாருக்கு வேணும், அதை தூக்கி குப்பையில் போடு , உன் மனசில்ல என்ன நினைச்சிட்டு இருக்க” என எண்ணெயில் இட்ட கடுகாய் பொரிய ஆரம்பித்தாள்… 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!