ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுற அளவுக்கு நான் என்ன உங்க லைஃப்ல அவ்வளவு இம்பார்ட்டனான பர்சனா என்று அவள் மெசேஜ் அனுப்பி விட அவனோ கால் செய்து விட்டான்.
அவளும் அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தாள். இப்போ எதுக்கு கால் பண்ணுனீங்க என்ற நிலவேனிலிடம் ஒரு நாளைக்கு பத்து மெசேஜ் தான் ஹச் காரன் ஃப்ரீயா கொடுக்கிறான். நீ பாட்டுக்கு வண்டி வண்டியா மெசேஜ் அனுப்பினால் யாரு ரிப்ளை பண்ணுறதாம். ஒவ்வொரு ரிப்ளைக்கும் பத்து பைசா பிடிச்சுக்குவான். அதனால தான் கால் பண்ணேன் என்றான் துருவ நேத்ரன்.
கால் பண்ணினால் மட்டும் காசு போகாதா என்ன என்ற நிலவேனிலிடம் கால் பேசினால் கொஞ்சம் தெளிவா பேசலாம் மெசேஜ் டைப் பண்ணிட்டு இருக்கிறது எரிச்சலா வேற இருக்கு சரி என்ன உனக்கு பிரச்சனை ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுற அளவுக்கு நீ என்ன அவ்ளோ இம்பார்ட்டான பர்சனானு கேட்டே நீ தானே என்னை லவ் பண்ணுறியே.
லவ் பண்ணுற பொண்ணுக்கு தானே ஃபர்ஸ்ட் யாரும் விஷ் பண்ணுவாங்க என்றான் துருவன். ஹலோ என்ன திரும்பத் திரும்ப அதே இடத்தில் வந்து நிக்கிறீங்க நான் ஒன்னும் உங்களை லவ் பண்ண வில்லை நான் அந்த ஐ லவ் யூ மெசேஜ் வேற ஒருத்தவங்களுங்கு அனுப்பினேன். நீங்க எப்படி இப்போ யாருக்கோ அனுப்ப வேண்டிய பர்த்டே மெசேஜ் எனக்கு அனுப்புனீங்களோ அதே மாதிரி நானும் யாருக்கோ அனுப்ப வேண்டிய ஐ லவ் யூ மெசேஜ் உங்களுக்கு அனுப்பிட்டேன் உடனே நான் உங்களை லவ் பண்ணுகிறேன்னு அர்த்தமா என்றாள் நிலவேனில் .
யாருக்கோ ஐ லவ் யூ அனுப்பினியா அப்போ யாரு அந்த லக்கி பாய் என்றான் துருவன். சத்தியமா நீங்கள் இல்லை மிஸ்டர் பாண்டி முனீஸ்வரன் என்றாள் நிலவேனில்.
அதுதான் தெரியுமே நான் இல்லைன்னு சரி யாரை லவ் பண்ணுற சொல்லு என்றான் அவன். உங்ககிட்ட நான் எதுக்கு சொல்லணும் நான் யாரையோ லவ் பண்ணுகிறேன் ,யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறேன் அதெல்லாம் நான் ஏன் உங்க கிட்ட சொல்லணும் .நீங்க எனக்கு பர்த்டே விஷ் பண்றேன்னு சொன்னீங்க மறக்காமல் விஷ் பண்ணுங்க அப்புறமா பார்க்கலாம் என்றாள் நிலா.
அப்புறமா என்ன பார்க்க போற என்றவனிடம் ஒன்னும் இல்லை என்றாள் நிலா .
ஒருவேளை நான் உனக்கு நடு ராத்திரி 12 மணிக்கு போன் பண்ணி விஷ் பண்ணிட்டேனா நீ என்ன எனக்கு ஐ லவ் யூ சொல்ல போறியா என்றான் அவன்.
ஹலோ என்ன நீங்க சுத்தி சுத்தி அந்த ஐ லவ் யூ ளே வந்து நிக்கிறீங்க இப்போ என்ன நான் உங்கள லவ் பண்ணனுமா என்றாள் நிலவேனில் .
அச்சச்சோ மூன்ஃபையர் நான் ஏன் மா உன்னை லவ் பண்ண எல்லாம் சொல்ல போகிறேன் எனக்கு லவ் பண்றதில் எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் கிடையாது என்றான் அவன் .
இன்ட்ரஸ்ட் இல்லைனா அப்புறம் எதுக்கு எனக்கு ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புனீங்க என்றாள் அவள். இப்போ உனக்கு என்ன தெரிஞ்சாகணும் எதுக்கு உனக்கு பதிலுக்கு ஐ லவ் யூ அனுப்பினேன். அதானே என்னை பார்த்து நீ ஐ லவ் யூ என்று சொன்ன சரி யாரோ ஒருத்தவங்க பாசமா நம்ம மேல ஏதோ ஒரு பீலிங்ஸ் வந்து ஐ லவ் யூ ன்னு சொல்றாங்க நம்மளும் ஐ லவ் யூ சொன்னோம் அப்படின்னா அவங்க மனசு கொஞ்சம் சந்தோஷப்படுமே அப்படின்னு தான் உனக்கு ஐ லவ் யூ நான் அனுப்பினேன் போதுமா திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் வந்து நிக்காத எனக்கு உன்னை லவ் பண்ணுற ஐடியா இல்லை ஆனா ஒரு விஷயம் உன்கிட்ட பேசுறது புடிச்சிருக்கு அன்னைக்கு உன்னை பெரிய தலைவலியா நினைச்சேன் நீ தலைவலி எல்லாம் இல்ல ஜஸ்ட் ஒரு என்ன சொல்றது சுகமான இம்சை என்றான் துருவநேத்ரன்.
நான் இம்சையா என்றவளிடம் ஆமாம் அதான் சொல்லி விட்டேனே நீ சுகமான இம்ஸைனு அப்புறம் என்ன என்றான் அவன் .
நல்லா பேசுறீங்க என்றவள் சரி ஓகே நான் போனை வைக்கட்டுமா என்றாள் .ஏன் வைக்கிற பேசிட்டே இரு உன் கிட்ட பேசுறது எனக்கு என்னமோ நல்லா இருக்கு என்றான் அவன்.
நல்லா இருக்கும் ரொம்ப யோக்கியம் மாதிரி பேசிட்டு இப்ப பேசிட்டு இருன்னு சொல்றீங்க என்ற நிலாவிடம் இதோ பாரு மூன்ஃபையர் உன் பெயர் அதுதானே எனக்கு தெரியலை ஆனால் உன்னை நான் அப்படி கூப்பிட தான் எனக்கும் பிடிச்சிருக்கு என்றவனிடம் மூன்ஃபையர் தான் அப்படியே கூப்பிடலாம் என்றாள். நிலவேனில்.
சரி எங்க விட்டோம் என்று அவன் கேட்டிட யோக்கியம் மாதிரி பேசினீங்க இப்போ எதுக்கு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க என்றாள் அவள். இப்பவும் நான் யோக்கியன் தான் அயோக்கியனா இருந்தால் உன்கிட்ட வேற மாதிரி பேசி இருப்பேன் எனக்கு உன்கிட்ட பேசறது பிடிச்சிருக்கு நல்லா இருக்கு புதுவிதமான ஒரு பீலிங்ஸ் எப்பவுமே புதுசா ஒரு விஷயத்தை ரசிக்கிறவன் நான் அது மாதிரி தான் உன்கிட்ட பேசறதும் என்றான்.
நீங்க என்னிடம் மட்டும் தான் பேசி இருக்கீங்களா இல்லை வேற பொண்ணுங்க கிட்டயும் பேசி இருக்கீங்களா என்று அவள் கேட்டிட டெய்லி பத்து பொண்ணுங்க கிட்ட பேசுறது தான் எனக்கு வேலை பாரு ஏன் எனக்கு என்ன பத்து பேரா மெசேஜ்ல ஐ லவ் யூ என்று அனுப்புனாங்க நீ ஒரு ஆளு தான் அனுப்புன இப்போதைக்கு நீ ஒருத்தி தான் பியூச்சர்ல வேண்டும் என்றால் பார்த்துக்கலாம் என்று அவன் கூறிட சரியான ஆளுதான் என்றாள் அவள்.
நான் ரொம்ப சரியான ஆளுதான் என் கூட பழகி பாரு உனக்கே தெரியும் என்றவனது கூற்றில் சிரித்தவள் சரி உங்களுடைய டேட் ஆப் பர்த் சொல்லுங்க என்றாள் . டேட் ஆப் பர்த் சொல்லனுமா அதாவது வருஷத்தோடவா இல்லை பிறந்த தேதி மட்டும் சொன்னால் போதுமா என்றவனிடம் தேதி மட்டும் சொன்னா போதும் வருஷம் எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒருவேளை நீங்க என்னை விடபெரிய பையனா இருக்கலாம், சின்ன பையனா இருக்கலாம் என்றாள் நிலா.
அவனும் தனது பிறந்த தேதியை சொல்ல நீங்கள் என்னை விட இரண்டு மாதம் தான் பெரியவரா என்றாள் நிலா.
அக்கா வருசம் தெரியாமல் எப்படி என்னை பெரிய பையன் என்று சொல்லுவிங்க என்றவன் சிரித்திட சரி ஓகே போதும் போனை வைக்கட்டுமா என்றாள் .
ஏன் பாட்டி அம்மா உங்களோட பேரன், பேத்தியை தொட்டிலாட்டணுமா ஓடுறதுலே குறியா இருக்கீங்க என்ற துருவனிடம் இல்லை உங்களை மாதிரி ஒரு வயசான தாத்தா எங்க வீட்டில் இருக்காரு. அவருக்கு நெஞ்சில் தைலம் தேய்த்து விட்டு மாத்திரை கொடுத்து தூங்க வைக்கணும் என்றாள் நிலவேனில்.
ஓ என்ன மாதிரி ஒரு தாத்தாவா சரிதான் தாத்தாவை பத்திரமா பாத்துக்கோங்க பாட்டியம்மா என்று அவனும் கூறிட சரிங்க தாத்தா நான் பத்திரமா பாத்துக்கறேன் இப்போ நீங்க போன வைக்கிறீங்களா என்று கூறிவிட்டு அவளும் போனை கட் செய்தாள் .
போனை வைத்தவன் சிரித்துக்கொண்டிருக்கவும்ம் என்னப்பா பாண்டி சிரிச்சுக்கிட்டே இருக்க என்றார் அவனது அம்மா சுடர்விழி .
ஒன்றும் இல்லைம்மா என்றவன் ஏதோ சொல்ல சரிப்பா அக்கா வீடு வரைக்கும் போயிட்டு வரியா என்று கேட்டார் சுடர்விழி .சரிங்கம்மா என்றவனும் தனது சகோதரியின் வீட்டிற்கு கிளம்பினான் .
வீட்டின் அழைப்பு மணி ஒலித்திட கதவை திறந்தாள் நிலவேனில் . வாசலில் கனிஷ்கா நின்றிருக்க ஏய் என்னடி புதிதாக வீட்டுக்கு எல்லாம் வந்திருக்க என்றாள் நிலவேனில் .
எருமை மாடு ஏன் வந்தாய் என்று கேட்கிறாயா நான் உங்க வீட்டுக்கு வரவே கூடாதுன்னு ஏன் வந்தேன் கேக்குறியா என்றாள் . லூசு அப்படிலாம் கேட்பேனா நான் ஆமாம் சொல்லு எதுக்கு வந்த என்றாள் நிலவேனில்.
நீயெல்லாம் ஒரு பிரண்டுனு நம்பி வீட்டுக்கு வந்ததுக்கு எதுக்கு வந்தேன்னு கேட்கிற எருமை மாடு என்று அவளது தலையில் கொட்டு வைத்தாள் கனிஷ்கா.
ஆ ஆ எருமை என்றவள் சரி உட்காரு உனக்கு என்ன வேணும் மோரா ,ஜூஸா என்றிட ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா என்றாள் கனிஷ்கா .
ஜூஸ் எல்லாம் போட்டு எடுத்துட்டு வர முடியாது உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு அதை ஊத்தி கொண்டு வந்து கொடுக்கிறேன் . உனக்காக எல்லாம் ஜூஸ் போட்டு கொண்டு வருவாங்க மூஞ்சிய பாரு என்றாள் நிலவேனில்.
அதான்டி நீயெல்லாம் ஒரு பிரெண்டுனு நம்பி உன் வீட்டுக்கு ஒரு ஜூஸ் குடிக்கலாம்னு வந்தால் பாட்டில் ஜூஸ்ஸை வாங்கி கொடுக்கிற இது எனக்கே வாங்கி குடிக்க தெரியாதா என்றாள் கனிஷ்கா.
வாங்கி குடிக்க வக்கில்லாமல் தானே நீ ஏன் வீட்டுக்கு வந்து இருக்கேன் என்று நிலவேனில் கூறிட அசிங்கப்படுத்துறடி ரொம்ப அசிங்கப்படுத்துற ஆமாடி இப்போ என்ன ஜூஸ் வாங்கி குடிக்க என்கிட்ட வக்கில்லை அதனால தான் உன் வீட்டுக்கு வந்து இருக்கேன் ஜூஸ் தர முடியுமா முடியாதா என்று அவள் கேட்டிட சிரித்த நிலவேனில் என் செல்ல குட்டிக்கு இல்லாத ஜூஸா. என்று அவளுக்கு ஃபேன்டாவில் ஒரு டம்ளர் ,மிரன்டாவில் ஒரு டம்ளர் , பவண்டாவில் ஒரு டம்ளர் ,மாசாவில் ஒரு டம்ளர் கொண்டு வந்து கொடுக்க எருமை மாடு ஒருத்திக்கு எதுக்குடி நான்கு வகை ஜூஸ் என்று கேட்டிட ஆமாம் இல்லைனா மட்டும் இப்ப குடிக்க மாட்டா பாரு என்றாள் நிலா.
இன்னைக்கு என்னை சுகர் பேசன்ட் மாதிரி பாத்ரூமே கதின்னு சுத்தவிடாமல் விடமாட்ட போல என்றாள் கனிஷ்கா.
ஆமாம், ஆமாம் கண்டிப்பா என்ற நிலவேனில் சிரித்திட கனிஷ்காவோ ஜூஸை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள் .
கனி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று துருவனுடன் நடந்த உரையாடலை பற்றி கூறினாள் நிலவேனில் .
பாருடா பிறந்தநாள் விஷ் அனுப்பி உன்ன கரெக்ட் பண்ணிட்டான் போலயே என்று சிரித்தாள் கனிஷ்கா .என்னது கரெக்ட் பண்ணினானா என்ற நிலவேனிலிடம் பின்னே நீயாவே உன் பர்த்டே டேட் சொல்லிருக்கு அவனோட பர்த்டே டேட் வாங்கி இருக்க மோதலுக்கு பின் காதல் இதுதானா செல்லம் என்றால் கனிஷ்கா.
யாருனே தெரியாத ஒருத்தனை எப்படி லவ் பண்ண முடியும். அவனுக்கும் பொழுது போக வில்லை ,எனக்கும் பொழுது போக வில்லை அதனால் பேசிட்டு இருக்கோம். டைம் பாசுக்கு பேசுறவன் எல்லாம் லைஃப் பார்ட்னர் ஆயிட முடியுமா என்ன என்றாள் நிலவேனில்.
உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் நீயே ஒரு நாள் வந்து அவனை லவ் பண்றேன்னு என்கிட்ட சொன்னாலும் சொல்லுவ அன்னைக்கு
வச்சிக்கிறேன் உன்னையை என்று சிரித்தாள் கனிஷ்கா.
… தொடரும்…